என் மலர்tooltip icon

    சிம்மம் - வார பலன்கள்

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    18-7-2022 முதல் 24-7-2022 வரை

    மனோதைரியம் அதிகரிக்கும்வாரம். ராசி அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் தன லாப அதிபதி புதனுடன் சஞ்சரிப்பதால்வெளிநாட்டு வேலைக்கான முயற்சி வெற்றி தரும். சிலர் தொழில் நிமித்தமாக குறுகிய காலம் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம்.6ம் அதிபதி சனி 6ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால்மனோதைரியம் அதிகரித்துஎதையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகமாகும்.

    புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் விரைவில் கனிந்து வரும். அடுத்தவர்களுக்குஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படும். நிம்மதியான உறக்கம் உண்டாகும்.

    18.7.2022 காலை 6.34 முதல் 20.7.2022 பகல் 12.50 மணி வரை வரை சந்திராஷ்டமம்இருப்பதால்தொழில், உத்தியோகத்தில் சோம்பேறித்தனத்தால் சில தடுமாற்றம் ஏற்படலாம். சிவன் கோவிலில் உலவாரப் பணிகளில் ஈடுபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    11.7.2022 முதல் 17.7.2022 வரை

    அனைத்து இடையூறுகளும் விலகி, காரிய சித்தி உண்டாகும் வாரம்.அதிசாரமாக கும்பத்தில் நின்று ராசியை பார்த்த சனி பகவான் வக்ரகதியில் மீண்டும் மகரம் சென்றதால் உங்கள் காரியங்களை தெளிவான மனநிலையோடு செய்வீர்கள். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நடக்கும். உத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிக்கல்கள் விலகும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இட மாற்றங்கள் உண்டாகலாம்.வியாபாரிகள் முன் பின் தெரியாதவர்களிடம் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்குவதை தவிர்க்க வேண்டும். வேலைப்பளுவால் நேரம் தவறிய உணவு, தூக்கமின்மை, உடல் அசவுகரியம் அல்லதுஉஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும்.

    கல்லூரி உயர் படிப்பிற்கான முயற்சிகள் அனுகூலமாகும். பெண்களுக்கு உயர் ரக ஆடை ஆபரண சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய எதிர்பாலின நட்பால் ஏற்பட்ட சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். வீண்பழிகள் அகலும். வரவை விட செலவு அதிகமாகும். நவகிரக சூரிய பகவானை வழிபட்டால் இது மனதிற்கு இதமளிக்கும் வாரமாக அமையும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசி பலன்கள்

    4-7-2022 முதல் 10-7-2022 வரை

    லாபகரமான வாரம். ராசி அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் லாப அதிபதி புதனுடன் இணைந்து நிற்பதால் சில காரியங்கள் ஆரம்பிக்கும் போது தோல்வி தருவது போல் இருந்தாலும் முடிவில் வெற்றியைக் கொடுக்கும். தொட்டது துலங்கும்.வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் அல்லது வாபஸ் பெறப்படும்.தந்தை வழிச் சொத்துப்பிரச்சினைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும்.

    குடிப்பழக்கம், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மருத்துவத்தில் சீராக வாய்ப்பு உள்ளது. கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் சில பொருள் வரவுகள் ஏற்படும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

    ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சினை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.அரசியல் ஆர்வலர்கள் கட்சிக்காகவும், பொது மக்களுக்காவும் மிகுதியான பொருள் விரயத்தை சந்திப்பார்கள். தினமும் நடராஜரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசி பலன்கள்

    27-6-2022 முதல் 03-7-2022 வரை

    சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறும் வாரம். ராசி அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் இதுவரை இருந்த பயம் அகலும்.வராக்கடன்கள் வசூலாகும்.

    உற்சாகமான மன நிலையில் இருப்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். திடீர் அதிர்ஷ்டம், லாபம் உங்களை மகிழ்விக்கும். வேலையில் இருந்த விரக்தி தன்மை மாறும். வேலையில் நல்ல சம்பளத்துடன் கூடியஇடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

    சிறிய அளவில் தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்தலாம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள்.திருமணமான இளம் பெண்கள் கருத்தரிப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்க முயற்சி செய்யலாம். விலகிச் சென்ற உறவுகள்வலிய வந்து பேசுவார்கள். இதுவரை இருந்து வந்த சகோதர,சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வாடகை வீட்டில் இருந்தவர்கள்சொந்த வீட்டிற்கு மாறுவார்கள். வெள்ளி, சனிக் கிழமைகளில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை

    மனதிற்கினிய சம்பவங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தன, லாப ஸ்தான அதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி சுக்ரனுடன் கூடுவதால்தொ ழில் மூலம் செல்வநிலை உயரும். சொல்வாக்கால் குடும்ப உறவுகளை வசப்படுத்துவீர்கள்.குடும்பத்தில் சலசலப்பு குறைந்துகலகலப்பு மிகுதியாகும்.

    உத்தியோகத்தினால் உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் அகலும்.தொழில் வளர்ச்சிக்கு அனுபவஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். இனிமையான இல்லறம் அமையும். நிலம் வாங்கும் முயற்சிகள் கை கூடும். அரசினால் வருமானம் உண்டு. நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் வரலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது. தந்தையின் அன்பும், ஆசிர்வாதமும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    20.6.2022 இரவு 10.35 முதல் 23.6.2022 காலை 6.15வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய முயற்சிகள் இழுபறியாகும்.வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் சாற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை

    ராசி அதிபதி சூரியன்லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகம் தொடர்பான அனைத்து சூழ்நிலையும் சாதகமாக அமையும். தொழில் அபி விருத்தி மூலம் வளர்ச்சி உண்டாகும். தொழில் போட்டிகள் நீங்கும். கடன் தொல்லை குறைந்து சேமிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.கொடுத்த தொகை விரைவில் வசூலாகும்.

    அரசின் கான்ட்ராக்ட் மற்றும் குத்தகைதாரர்களுக்கு நல்லஒப்பந்தம் கிடைக்கும்.பணம் தொடர்புடைய பிரச்சினைகளால் கூட்டாளிகளிடம் வாக்குவாதம் ஏற்பட கூடும். 7-ம் இடத்தில் சனி வக்ரமாக இருப்பதால் தம்பதிகள் ஒருவர் விஷயங்களில் பிறர் தலையிடாமல் அவரவர் வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. பிள்ளைகள் பெற்றோர் களை புரிந்து கொள்வார்கள்.

    தேவையறிந்து உதவி செய்வதால் சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும் ராசி மற்றும் 9-ம் இடத்திற்கு சனி பார்வை பதிவதால் தந்தை அல்லது தந்தை வழி உறவில் மனக்கசப்பு ஏற்படலாம். உறவினர்களின் வருகைகுடும்பத்தில் குதூகலத்தை அதிகரிக்கும்.அரசியல்வாதிகளைவிட்டு சற்று விலகி இருக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசி பலன்கள்

    6.6.2022 முதல் 12.6.2022 வரை

    அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன, லாப அதிபதி புதனுடன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வேலையில் இருந்த இழுபறி நிலை நீங்கும். பாக்கித் தொகை வசூலாகும். கடன் தொகை வசூலாகுவதால் கடன்கள் சற்று அடைபடும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் செயல் வடிவம் பெறும்.

    சக ஊழியர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கான அங்கீகாரம் உண்டு. உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ்ந்த நிலை இனி இருக்காது. ராசிக்கு சனி பார்வை இருப்பதால் கடந்த கால பால்ய நண்பர் ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். அந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நினைவில் கொள்ளும் சுப நாளாக மாறும்.

    வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். வாலிப வயதினருக்கு ஆண் குழந்தையும், சற்று வயதானவர்களுக்கு பேரனும் பிறப்பான். பிரதோஷத்தன்று சிவனுக்கு சந்தனம் அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசி பலன்கள்

    30.5.22 முதல் 5.6.22 வரை

    திட்டமிட்ட செயல்களால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். ராசி அதிபதி சூரியன் தன லாப அதிபதி புதனுடன் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் விரும்பத்தகுந்த மாற்றம் கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.

    உத்தியோகத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பொருள் வரவு அதிகரிக்கும். வராக்கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். அடமானப் பொருட்களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மன மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் இருப்பீர்கள்.

    உங்களின் உற்சாக மன நிலை உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சி யையும் அதிகரிக்கும். ஆடம்பர விருந்து உபசாரங்கள், விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சிலருக்கு வீடு, வாகன பராமரிப்பு செலவால் விரயம் உண்டாகும். கணவன் மனைவி உறவு திருப்தியாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாலிப வயதினரின் திருமணக் கனவுகள் நனவாகும்ஞாயிற்றுகிழமை ஸ்ரீ அதிர்ஷ்ட லட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22

    ராசி அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்தொ ழிலில் நல்ல முன்னேற்ற ங்கள் இருக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.உத்தியோகஸ்தர்கள் வீண் பழியில் இருந்து விடுபடுவார்கள். 5, 8-ம் அதிபதி குரு 4,9-ம் அதிபதி செவ்வாயுடன் அஷ்டம ஸ்தானத்தில் இணைந்து குருமங்கல யோகத்தை ஏற்படுத்துகிறது.

    இதனால் அதிர்ஷ்ட பணம், உயில் சொத்து, பினாமி சொத்து போன்ற எதிர்பாரத வரவு ஏற்படும். சிலருக்கு பழைய சொத்தை விற்று புதிய சொத்து வாங்கும் எண்ணம் உதயமாகும். வாடகைக்கு போகாமல் கிடக்கும் சொத்துக்களுக்கு நல்ல வாடகை தாரர் கிடைப்பார்கள். சொந்தங்களால் ஏற்பட்ட மனச்சுமை குறை யும். சிலருக்கு மனைவி வழி சொத்தில் மாமனாருடன் கருத்து வேறுபாடு தோன்றும்.

    இந்த வாரம் முழுவதும் சொத்து தொடர்பான முக்கிய நிகழ்வுகள் நடக்கும். 24.5.2022 மாலை 4.26 முதல் 27.5.2022 நள்ளிரவு 12.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படலாம். எனவே முக்கிய முடிவுகளை ஒத்தி வைக்கவும். அமாவாசையன்று தாய், தந்தையிடம் நல்லாசி பெறவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    வார ராசிப்பலன்

    இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை

    ராசி அதிபதி சூரியன் ராகுவின் பிடியிலிருந்து விடுபடு வதால் எதிர் நீச்சல் போட்டு வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். பல வருடச் குடும்ப சிக்கல்கள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதோடு உழைப்பிற்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கும். 3-ல் கேது இருப்பதால் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். திடீர் செலவுகளைச் சமாளிப்பீர்கள்.

    தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் சிறிது சிரமம் நிலவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சாதகமாகவே இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். சொத்துச் சேர்க்கை உண்டாகும். 7-ல் சனி, செவ்வாய் இருப்பதால் தம்பதிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது முக்கியம். தினமும் ஆதித்ய இருதயம் கேட்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×