என் மலர்tooltip icon

    சிம்மம் - வார பலன்கள்

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    19.12.2022 முதல் 25.12.2022 வரை

    எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தன லாப அதிபதி புதன் மற்றும் 3,10ம் அதிபதி சுக்ரனுடன் சேர்ந்து நிற்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது.புத்திர பிராப்தம் உண்டா கும். பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவம் நடைபெறும்.குல தெய்வ கடாட்சம் கிடைக்கும்.

    தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். உத்தியோகஸ்தர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கவுரவமாக பணியாற்றுவீர்கள். சில தம்பதிகள் இணைந்து கூட்டுத் தொழில் முயற்சி செய்யலாம். மாமனார், சகோதரர் மூலம் தன வரவு உண்டாகும். எதிர்பாராத வரவுகளால் கையிருப்பு சேமிப்பு உயரும்.

    வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் அலைச்ச லைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் கண வரின் உண்மையான அன்பை உணர்வீர்கள். அமாவாசை யன்று வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    12.12.2022 முதல் 18.12.2022 வரை

    நீண்ட கால கனவுகள், திட்டங்கள் நிறைவேறும் வாரம். சகாய ஸ்தான அதிபதி, தொழில் ஸ்தான அதிபதி சுக்ரன் தன, லாப ஸ்தான அதிபதி புதனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இணைந்துள்ளதால் திருமணம், குழந்தை பேறு, உத்தியோகம், தொழில் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் மன நிறைவாக நடந்து முடியும்.

    அடிமைத்தனத்துடன் நாடோடிபோல் வாழ்ந்தவர்களுக்கு நிரந்தரமான தொழில், அதிர்ஷ்டம், முன்னேற்றம், புகழ் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அடிப்படை தேவைக்கு தடுமாறியவர்களுக்கு கூட தாராளமான பணப் புழக்கம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய போட்டி,பொறாமைகள் விலகும்.

    பங்காளிகள் பிரச்சினை, கோர்ட் , கேஸ் வாய்தாக்கள் என அலைந்த நிலை மறையும். ஆறாமிடச் சனியாலும், எட்டாமிட குருவாலும் அனுபவித்த எண்ணிலடங்கா துயரம் தீரும். தற்கொலை வரைச் சென்றவர்களுக்கும் வாழ்க்கையில் பிடிப்பு, தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளுக்கும், திட்டமிடுதலுக்கும் குடும்ப உறவுகள் உதவியாக, ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார்கள். சிவ வழிபாடு செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    5.12.2022 முதல் 11.12.2022 வரை

    உங்களின் அறிவும் திறமையும் பளிச்சிடும் வாரம். ராசி அதிபதி சூரியன் நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் இருப்பதால் நவீன ஆடம்பர பொருட்கள், வீடு, வாகன யோகம் ஏற்படும். சிலருக்கு தாய் வழிச் சீதனங்களாக பணம், நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன லாப அதிபதி புதனும் மூன்று, பத்தாம் அதிபதி சுக்ரனும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, உயர் கல்வி என சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும்.

     பாக்கிய அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய சிந்தனை அதிகரிக்கும்.அஷ்டமத்து குருவால் மறைமுக ஆதாயம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். நல்ல வேலையும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிரமங்கள் நீங்கும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.  தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. 

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    28.11.2022 முதல் 4.12.2022 வரை

    பண பிரச்சினை நீங்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன லாப ஸ்தான அதிபதி புதனுடன் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் காரியத் தடை நீங்கும்.  முயற்சிகளுக்கான பலன்களை உடனடியாக காண முடியும். ஆரோக்கிய குறைபாடு அகலும். விண்ணப்பித்த வீட்டு, வாகன கடன் இந்த வாரத்திற்குள் கிடைத்து விடும். வேலையாளர்களுக்கு  திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும்.

    நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு வருமானம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும்.தந்தை, மகன் கருத்து வேறுபாடு அகலும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். 

    1.12.2022 இரவு 11.47. முதல் 4.12.2022 காலை 6.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது பொறுமையுடன் பேசுவது நல்லது சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் கூடுதல் நற்பலன்கள் நடைபெறும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    21.11.2022 முதல் 27.11.2022 வரை

    அதிர்ஷ்டமான வாரம். அஷ்டமாதிபதி குரு வக்ர நிவர்த்தி பெறுவதால் விபரீத ராஜ யோகம் உங்களை வழிநடத்தப் போகிறது. வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். ராசி அதிபதி சூரியன் தன லாபாதிபதி புதனுடன் நான்காம் இடத்தில் சேர்ந்து இருப்பதால் பல வருடங்களாக சொத்தில் ஆக்கிரப்பு செய்தவர்கள் தாமாகவே வெளியேறுவார்கள்.

    சிலரின் குடியிருப்பில் உள்ள வாடகை தாரர்கள் மாறலாம். தாயின் ஆரோக்கிய குறைபாடு அகலும். பல வருடங்களாக பயன்படாமல், பயிரிட முடியாமல் கிடந்த தரிசு நிலங்களில் போதியமழைப் பொழிவால் விவசாயம் செய்யலாம். அடமான நிலங்களை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் என அவரவர் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும்.

    பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப செலவிற்காக ஒரு தொகையை செலவு செய்ய நேரும். திருமணத்தடைகள் அகலும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சியை அதிகரிக்க அஷ்டலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    14.11.2022 முதல் 20.11.2022 வரை

    அனைத்து விதமான செயல்களிலும் அனுகூலமான பலன் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சூரியன், தன, லாப ஸ்தான அதிபதி புதன், சகாய, தொழில் ஸ்தான அதிபதி சுக்ரன் ஆகியோர் சுக ஸ்தானத்தில் இணைந்து தொழில் ஸ்தானதில் நிற்கும் செவ்வாயை பார்க்கிறார்கள். இது சிம்ம ராசியினருக்கு மிக மிக யோகமான காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.

    இளைய சகோதர, சகோதரி மூலம் நிலவிய குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குலத் தொழில் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பல மடங்காகும்.

    பணவரத்து திருப்தி தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், சொத்து மதிப்பு உயர்தல், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு என்று எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள். இரண்டாம் திருமணத்தால் ஏற்பட்ட மனச் சங்கடம் நீங்கும். நோய் தொல்லை குறையும். சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்வில் நாட்டம் அதிகரிக்கும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிப்பலன்

    7.11.2022 முதல் 13.11.2022 வரை

    எண்ணங்கள் ஈடேறும் வாரம். விரய ஸ்தானத்தை சனி மற்றும் குரு பார்ப்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி பணவரவும் சேமிப்பும் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். விவசாயிகளுக்கு கிணறு வெட்டக் கடன் கிடைத்து வாழ்வாதாரம் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுதியாகும். வீடு மாற்றும் எண்ணம் நிறைவேறும். ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் கிரகணம் ஏற்படவுள்ளது.

    குழந்தை பாக்கியத்தில் தடை இருப்பவர்கள் அன்றைய தினம் குல தெய்வத்தை வழிபட்டால் பாக்கிய பலம் அதிகரிக்கும். உயர் கல்வி தொடர்பான முயற்சிகளை அன்று தவிர்க்கவும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் விலை உயர்ந்த பொருளை ஆன்லைனில் வாங்கி ஏமாறுவார்கள். அந்தணர்களுக்கு இயன்ற தானம் தர நல்ல வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் கூடி வரும். தந்தையின் ஆசிர்வாதம் பெறுவது மிக முக்கியம்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிப்பலன்

    31.10.2022 முதல் 06.11.2022 வரை

    எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். அஷ்டம குருவால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற உறவுகள் வந்து இணைவார்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் விலகி நன்மை உண்டாகும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள்.அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமும் வருமானமும் அதிகரிக்கும்.

    வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும். சிலருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். ஓய்வு, நிம்மதியான தூக்கம், சந்தோஷம் என இந்த வாரத்தை மகிழ்ச்சியாக கடப்பீர்கள். 4.11.2022 மாலை 6.20 முதல் 6.11.2022 அன்று காலை 12.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தால் நல்ல நட்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே பொறுப்போடு செயலாற்றுவது நல்லது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    24.10.2022 முதல் 30.10.2022 வரை

    உள்ளம் மகிழும் சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும் வாரம். யோக அதிபதி செவ்வாய் தனம் வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

    ராசி அதிபதி சூரியன் 3,10-ம் அதிபதி சுக்ரனுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் அடைவதால் சகோதர சகோதரிகளிடையே நிலவிய மனப் போராட்டம் அகலும். பாகப் பிரிவினையில் நல்ல முடிவு எடுக்கப்படும். புதிய திட்டங்கள், முயற்சிகள் செயல் வடிவம் பெறும்.நினைத்தது நிறைவேறி நிம்மதி பிறக்கும்.

    பயணங்களும் சுப விரயங்களும் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். தடைபட்ட உயர் கல்வி வாய்ப்பு கூடி வரும்.பிள்ளைகளால் மகிழ்சியும் பெருமையும் உண்டாகும். சிலர் கடன் பெற்று சொந்தத் தொழில் துவங்கலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். சூரிய கிரகணத்தன்று கோதுமை தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    24.10.2022 முதல் 30.10.2022 வரை

    உள்ளம் மகிழும் சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும் வாரம். யோக அதிபதி செவ்வாய் தனம் வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ராசி அதிபதி சூரியன் 3,10-ம் அதிபதி சுக்ரனுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் அடைவதால் சகோதர சகோதரிகளிடையே நிலவிய மனப் போராட்டம் அகலும். பாகப் பிரிவினையில் நல்ல முடிவு எடுக்கப்படும். புதிய திட்டங்கள், முயற்சிகள் செயல் வடிவம் பெறும்.நினைத்தது நிறைவேறி நிம்மதி பிறக்கும். பயணங்களும் சுப விரயங்களும் ஏற்படும்.

    திருமண முயற்சிகள் கைகூடும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். தடைபட்ட உயர் கல்வி வாய்ப்பு கூடி வரும்.பிள்ளைகளால் மகிழ்சியும் பெருமையும் உண்டாகும். சிலர் கடன் பெற்று சொந்தத் தொழில் துவங்கலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். சூரிய கிரகணத்தன்று கோதுமை தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிபலன்

    17.10.2022 முதல் 23.10.2022 வரை

    ராஜயோகமான நேரம். ராசி அதிபதி சூரியன் நீச்சம் பெற்றாலும் ஆட்சி பலம் பெற்ற சுக்ரனுடன் சேர்ந்து நீச்ச பங்க ராஜ யோகம் பெறுவதால் அனுகூலமற்ற காரியங்களைக் கூட சுமூகமாக முடித்துக் காட்டுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். மன உளைச்சலைத் தந்த பணியில் இருந்து விடுபட்டு புதிய நல்ல பணியில் சேருவீர்கள்.

    உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும்.வீடு, வாகன வசதிகள் மேம்படும். பெண்களுக்கு விரும்பிய வேலையில் சேர உத்தரவு வரும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எதிர்பார்த்த குடியுரிமை கிடைக்கும். அரசு ஊழியர்கள் தடைபட்ட பதவி உயர்விற்கு முயற்சிக்கலாம். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

    தீபாவளி போனஸ் அரியர் சம்பளத்துடன் கிடைக்கும். மாமன், மைத்துனன் வழி மனக்கசப்புகள் மாறும். சுபமங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வீண் விரயங்கள் மட்டுப்படும். வைத்தியச் செலவு குறையும். பிள்ளைகளின் எதிர் காலம் குறித்த திட்டங்கள் வெற்றியில் முடியும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். நவகிரகங்களில் சூரியனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிபலன்

    17.10.2022 முதல் 23.10.2022 வரை

    சிக்கல்கள் மற்றும் சிரமங்களில் இருந்து விடுபடும் காலம். ராசி அதிபதி புதனை செவ்வாயும், குருவும் பார்ப்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும். பூமி, மனை வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பத்திரப்பதிவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும்.

    5ம் அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் வருந்தியவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும். பெண்கள் ருசியான தீபாவளி பலகாரம் செய்து குடும்பத்தினரின் பாராட்டைப்பெறுவார்கள்.

    சிலருக்கு சுய தொழில் பற்றிய ஆர்வம், எண்ணம் அதிகரிக்கும். திருமண முயற்சி சாதகமாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் அசவுகரியங்கள் ஏற்படும். நவகிரகங்களில் புதனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×