என் மலர்tooltip icon

    சிம்மம் - வார பலன்கள்

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    20.3.2023 முதல் 26.3.2023 வரை

    யோகமான வாரம். சில வாரங்களில் நிகழப் போகும் குருப் பெயர்ச்சியால் நல்ல மாற்றங்கள் இப்பொழுதே தெரியத் துவங்கும். சிம்ம ராசிக்கு யோகத்தை அதிகரிக்க கூடிய குரு, புதன், சூரியன், செவ்வாய் ஆகிய 4 கிரகங்களும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்ப உறவுகளின் ஒற்றுமை நிம்மதியை அதிகரிக்கும். வாக்கு வன்மை பெறும். குடும்பத்தினர் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படு வார்கள். அதிர்ஷ்டம், தொழில் மூலம் பணவரவு, லாபம் கிடைக்கும்.

    வராக்கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். சிம்ம ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். உங்கள் முன்னேற்றம் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்ப டுவார்கள். பிள்ளைப் பேறு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. ஆரோக்கியம் சீராகும். மாணவர்கள் காலத்தின் அருமை உணர்ந்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்த வெற்றி கரம் கொடுக்கும்.

    21.3.2023 அன்று காலை 11.57 முதல் 23.3.2023 மதியம் 2.08 வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் முக்கிய பணிகளை ஓரிரு நாள் ஒத்தி வைக்க வும். ஞாயிற்றுக்கிழமை சிவனையும், சக்தியையும் வழிபட்டால் அர்தாஷ்டமச் சனியின் தாக்கம் குறையும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    13.3.2023 முதல் 19.3.2023வரை

    ஆரவாரமான வாரம். ராசி அதிபதி சூரியன் நீச பங்க ராஜயோகம் பெற்ற தன, லாபஅதிபதி புதன் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குருவுடன் சேர்க்கை பெறுவது சிறப்பான கிரகச் சேர்க்கை. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் அதிகமாகும். தன வரவு மும்மடங்காகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கடனுக்கு பயந்து ஒளிந்த நிலை நீங்கும்.

    உறவுகளிடம் நிலவிய சண்டை, சச்சரவு மாறும். போட்ட முதலீட்டை எடுக்க முடியாத நிலை குறையத் துவங்கும். மனச் சுமை குறையும். குல தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். புதன் ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கற்கும் ஆர்வம் கூடும். கற்ற கல்வி மூலம் நிறைந்த வருமானமும் திரண்ட சொத்துக்களும் சேரும். இது மட்டுமா? ஏப்ரல் கடைசியில் குரு அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானம் செல்கிறார்.

    இதனால் கண்டகச் சனியின் பாதிப்பு முற்றிலும் நீங்கும்.குழந்தை பேறு, திருமணம், வீடு, வாகன யோகம் என சிம்ம ராசிக்கு ஓராண்டு காலம் அடை மழைதான். தினமும் ஆதித்திய ஹ்ருதயம் கேட்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    6.3.2023 முதல் 12.3.2023 வரை

    லாபகரமான வாரம்.ராசி அதிபதி சூரியனும் தன லாப அபதி புதனும் ராசியை பார்ப்பதால் சிறிய உழைப்பில் நல்ல வருமானம் கிடைக்கும். நிலையான வருமானத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

    யோகாதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் பிடிவாதமாக எந்தக் காரியத்தையும் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். அரசுத் துறை வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் உண்டாகும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். பாக்கிய ஸ்தான ராகுவால் லவுகீக விசயங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் சங்கடங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். மாசி மகத்தன்று சிவனுக்கு பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    27.2.2023 முதல் 5.3.2023 வரை

    மகிழ்ச்சியான வாரம். விரைவில் அஷ்டம குருவின் பாதிப்பு விலகப் போவதால் இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். அவப்பெயர்கள், சங்கடங்கள் விலகும். கடன் பிரச்சினையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவீர்கள்.

    லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள். இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும்.புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். யோக அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் சீருடைப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். பெண்களுக்கு மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். கணவன்-மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். உடல், மன ரீதியான சங்கடங்கள் அகலும்.

    திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். தந்தை-மகன் கருத்து வேறுபாடு அகலும். காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவார்கள். தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    20.2.2023 முதல் 26.2.2023 வரை

    அனுகூலமான வாரம். தனலாப அதிபதி புதன் ராசிக்கு 6-ம்மிடம் செல்வதால் இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடி யாக கிடைக்கும். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை அமையும். திருமண வயதினரின் வீட்டில் கெட்டி மேளம் ஒலிக்கும். ராசி அதிபதி சூரியன் அஷ்ட மாதிபதி சனியுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் வேலைப்பளு மிகுதியாகும். உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

    மறைமுக எதிரிகள் உருவாகலாம். நெருக்கமான வர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தை தவிர்க்கவும். மாசி மாதம் முடியும் வரை வழக்குகள் மற்றும் அறுவை சிகிச்சைகளைத் தவிர்த்தல் நலம். ராசிக்கு செவ்வாய், சனி பார்வை இருப்பதால் விற்க முடியாமல் இருந்த சொத்துக்களை விற்று முழுப்பணமும் வீடு வந்து சேரும்.

    22.2.2023 அன்று காலை 1.10 முதல் 24.2.2023 அன்று காலை 3.43 வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பேச்சை யும், வாக்குக் கொடுப்ப தையும் தவிர்ப்பது நல்லது. அமாவாசையன்று சிவ வழிபாடு செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    13.2.2023 முதல் 19.2.2023 வரை

    கொள்கை பிடிப்போடு செயல்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும். தொழிலில் நினைப்பதொன்று, நடப்பதொன்றுமாக இருந்த நிலை மாறும். ஏழாம் அதிபதி சனியுடன் சூரியன்இணைவதால் கணவன்-மனைவி ஒற்றுமை பெருகும்.கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன்-மனைவி மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள்.

    திருமண வயதில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்தது போன்று சிறப்பான நல்ல வரன்கள் தேடி வரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தி யோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு சாதகமான பதில் உண்டு.

    மனதிற்கு இனிமை தரும் இடமாற்றங்கள் கிடைக்கும்.தோல் அலர்ஜி, அரிப்பு போன்ற சிறிய உடல் உபாதைகள் இருக்கும்.பெண்களுக்கு குழந்தைகள் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் மனமறிந்து நடந்து கொள்வார்கள். சிவராத்திரியன்று பஞ்சாமிர்த அபிசேகம் செய்து சிவனை வழிபடுவது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    மகிழ்ச்சியான வாரம். தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும்.

    பேச்சாற்றலால் சிக்கலான காரியங்களை எளிதாக சாதிப்பீர்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்க்கை ஏற்படும். அந்த புது வரவு களத்திரமாகவோ குழந்தையாகவோ இருக்கலாம். ராசியை சனி, செவ்வாய் பார்ப்பதால் சகோதர வழியில் சொத்து தொடர்பான வில்லங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அஷ்டம குருவின் ஆதிக்கத்தால் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

    அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவதாக மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அதிர்ஷ்டப் பொருட்களை வாங்கி குவித்து ஏமாறுவீர்கள். அநாவசிய ஆடம்பர செலவு செய்விட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர் பூர்வீகத்திற்கு வந்து செல்வார். வாராகி அம்மனை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பாக்கிய அதிபதி செவ்வாயின் பார்வையில் இருப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உள்ளது. கடந்த கால நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். அரசு வழி ஆதரவு கிடைக்கும். திறமையான வேலையாட்கள் இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.

    கொடுக்கல், வாங்கல் சீராகும். சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள். திருமணத் தடை அகலும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். சில அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். கண்டகச் சனி துவங்கினாலும் ஏப்ரல் 22, 2023 முதல் ஒரு வருடத்திற்கு ராசியை குரு பார்ப்பதனால் எந்தவொரு செயலிலும் யோசித்து செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். ஏகாதசியன்று கல்கண்டு சாதம் படைத்து மகா விஷ்ணுவை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    23.1.2023 முதல் 29.1.2023 வரை

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ஆறில் மறைகிறார். ராசிக்கு செவ்வாய், சனி, சுக்கிரன் பார்வை மற்றும் ராசிக்கு செவ்வாய், சனி சம்பந்தம் இருப்பதாலும் ராசி அதிபதி சூரியன் மறைந்து இருப்பதாலும் தெளிவான முடிவு எடுக்கும் தன்மை குறையும். ஞாபக மறதி உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். யாருக்கும் பணம் பொருள் இவற்றிற்கு ஜாமீன் போடக்கூடாது. பங்குச் சந்தை முதலீட்டில் மிகவும் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளை ஒத்தி வைக்கவும்.

    சொத்து வாங்கும், விற்கும் முயற்சியில் தவறான விலை நிர்ணயம் உண்டாகலாம்.சிலருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும். தொழில் மற்றும் குடும்ப ரகசியங்களை வெளி நபர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும். 25.1.2023 மதியம் 2.30 முதல் 27.1.2023 மாலை 6.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிக கோபம் மற்றும் மன அழுத்த பாதிப்பு உருவாகும். விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும் .

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    16.1.2023 முதல் 22.1.2023 வரை

    எதிர்பாராத நல்ல திருப்பங்கள் நடைபெறும் வாரம். சிம்ம ராசியினருக்கு கண்டகச் சனி துவங்கினாலும் 3,10-ம் அதிபதி சுக்ரனும், 4,9-ம் அதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதாலும் எந்த பாதிப்பும் இருக்காது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கு மேல் ஒரு வருட காலத்திற்கு குரு பகவான் ராசியைப் பார்ப்பதால் நல்ல சம்பவங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படும்.

    நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், மூலம் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்கினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். பற்றாக்குறை பட்ஜெட் என்ற பேச்சிற்கே இடமில்லை.

    நீண்ட காலமாக எதிர்பார்த்த அரசு உத்தி யோகம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பு உள்ளது.அக்கம், பக்கம் உள்ளவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். பூர்வீகச் சொத்திற்கு நல்ல விலை கிடைக்கும். சுப விரயங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சனிக்கிழமை விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டால் தடைகள் தகறும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    9.1.2023 முதல் 15.1.2023 வரை

    சுப காரியங்கள் கைகூடும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தன, லாப அதிபதி புதனுடன் இணைவதால் முறையான முன்னோர்கள் வழிபாட்டால் தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீரும். ஆன்ம பலம் பெருகும். சிலருக்கு கவுரவப்பதவிகள் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த தந்தை மீண்டும் குடும்பத்துடன் இணைவார்.

    நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். விரும்பிய சலுகைகள் கிடைக்கும். தீராத கடனைத் தீர்க்கும் வழி தென்படும். எதிரி தொல்லைகள் குறையும். திருமண முயற்சிகள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். தொட்ட காரியங்கள் துலங்கும்.

    நிலுவையில் உள்ள தொகைகள் கைக்கு வந்து சேரும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தேங்கி கிடந்த பொருட்கள் விற்பனையாகும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க முடியும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. ஞாயிற்று கிழமை சிவ வழிபாடு செய்ய நன்மைகள் இரட்டிப்பாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    2.1.2023 முதல் 8.1.2023 வரை

    குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பாக்கிய அதிபதி செவ்வாயின் பார்வையில் இருப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உள்ளது. கடந்த கால நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும்.

    அரசு வழி ஆதரவு கிடைக்கும். திறமையான வேலையாட்கள் இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். கொடுக்கல், வாங்கல் சீராகும். சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள். திருமணத் தடை அகலும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும்.சில அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும்.

    கண்டகச் சனி துவங்கி னாலும் ஏப்ரல் 22, 2023 முதல் ஒரு வருடத்திற்கு ராசியை குரு பார்ப்பதனால் எந்தவொரு செயலிலும் யோசித்து செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். ஏகாதசியன்று கல்கண்டு சாதம் படைத்து மகா விஷ்ணுவை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×