என் மலர்
சிம்மம் - வார பலன்கள்
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
12.6.2023 முதல் 18.6.2023 வரை
சுபமான வாரம்.ராசி அதிபதி சூரியன் லாப ஸ்தானம் செல்வதால் செல்வாக்கு மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திறமை மற்றும் புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைவீர்கள். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். பொருளாதாரம் சீராக இருக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு. வீடு, வாகன வசதிகள் மேம்படும். புதிய பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சி தரும்.
சிலர் வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். மருமகனால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். திருமணப் பேச்சு வார்த்தை சுபமாக முடியும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். சத்ருக்கள் தொல்லை அகலும். வேலைக்கு அடிக்கடி விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
13.6.2023 அன்று பகல் 1.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சில மனசஞ்சலங்கள், இனம் புரியாத கவலை ஏற்படலாம்.மேலும் பல பாக்கியங்களை அடைய பிரம்மாவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
5.6.2023 முதல் 11.6.2023 வரை
புதிய முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் கட்டுப்பாடற்ற சுக வாழ்க்கை கிடைக்கும். உடலில் புத்தொளியும், பொலிவும் உண்டாகும். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். தன லாபாதிபதி புதன் 10ம்மிடமான தொழில் ஸ்தானம் செல்வதால் தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும்.
தன வரவு அதிகரிக்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனையால் எதிர்கால கல்வி பற்றிய நல்ல முடிவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் நன்மை தரும். புதிய பதவிகளால் மதிப்பு, கவுரவம் கூடும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சலால் ஆதாயம் அதிகரிக்கும். மன அமைதி தரும் புண்ணிய யாத்திரைகள் சென்று வருவீர்கள். திருமணம் கைகூடும். பெண்களுக்கு சுப செலவுகள் அதிகரிக்கும்.
11.6.2023 அன்று காலை 8.46 -க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மனஉளைச்சல் ஏற்படலாம். சிவனடியார்களுக்கு உதவவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
29.5.2023 முதல் 4.6.2023 வரை
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் குரு தன, லாபாதிபதி புதனுடன் சஞ்சரிப்பதால் தொழில் வளம் சிறக்கும் காலம். வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக டென்ஷன் குறையும்.உங்கள் மீது போடப்பட்டவழக்கில் தீர்ப்பு சாதகமாகும் அல்லது தண்டனைக் காலம் குறையும்.
தாய்மாமனுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெறுவார்கள். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத பண வரவு உண்டு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள்.
புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் நடக்கும்.பவுர்ணமியன்று அண்ணாமலையாரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
22.5.2023 முதல் 28.5.2023 வரை
கடன் சுமை குறையும் வாரம்.ராசி அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தான அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் நிற்கிறார். பலவிதமான கிரகங்கள் சிம்ம ராசிக்கு சாதகமாக இருப்பதால் தடைபட்ட எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
மனதில் தைரியம் கூடும். சுயநம்பிக்கை உண்டாகும். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். உத்தியோகஸ்தர் களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.புதிய முதலீடுகள் செய்யும் ஆர்வம் அதிகரிக்கும்.
பொருளாதார நிலை மிக மிகச் சிறப்பாக இருக்கும். கடன் சுமை குறைந்ததால் வீட்டில் இன்பம் நிலைத் திருக்கும். குடும்பத்தில் வீண் செலவுகளை குறைத்து பணத்தை சேமிப்பது பற்றிய முயற்சிகள் எடுக்கப்படும். கல்வியில் பிள்ளைகளின் தேர்ச்சி உங்களை பெருமை கொள்ளச் செய்யும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். ஞாயிற்றுக்கிழமை நெய் தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
15.5.2023 முதல் 21.5.2023 வரை
வருமானப் பற்றாக்குறை அகலும் வாரம். ராசி அதிபதி சூரியன் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தன லாப அதிபதி புதன் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் நிற்கிறார். 3,10-ம் அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில், ராசிக்கு குருப் பார்வை என பலவிதமான கிரக நிலைகள் சிம்ம ராசிக்கு சாதகமாக உள்ளதால் தொட்டது துலங்கும்.
பல சவாலான சூழ்நிலைகளையும் இலகுவாக எதிர்கொள்வீர்கள். தொழில், உத்தியோகத்தில் சாதகமான பலன் உண்டு. சகோதரர்களால் பயனடைவீர்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வருங்கா லத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும்.
அரசு வழியில் உயர் பதவிகள் வகிக்கும் யோகம் உண்டாகும். 15.5.2023 அன்று காலை 3.24 மணி முதல் 17.5.2023 அன்று காலை 7.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அமாவாசையன்று சிவ வழிபாடு செய்யவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
8.5.2023 முதல் 14.5.2023 வரை
நினைத்த காரியங்கள் வெற்றியடையும் வாரம். ராசியை குரு பார்ப்பதால் இறை வழிபாட்டில் மகிழ்ச்சி அடைவீர்கள். சுயமுயற்சி, உழைப்பினால் தேவையானதை அடைவீர்கள். திறமையால் உங்களைச் சார்ந்தவர்களை நல்வழிப்படுத்துவீர்கள்.வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனை களை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள்.
எதிலும் உங்கள் கை ஓங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், தொழில் முன்னேற்றம் போன்ற எல்லாவிதமான நன்மைகளையும் இக்காலத்தில் அடைய முடியும்.சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது.
குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேருவார்கள். உடல் நலக் கோளாறுகள் சீராகும். சங்கட ஹர சதுர்த்தியன்று மஞ்சள் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
1.5.2023 முதல் 7.5.2023 வரை
சந்தோஷமும் வெற்றியும் தேடி வரும் வாரம்.4,9-ம் அதிபதி செவ்வாய் 3,10-ம் அதிபதி சுக்ரனுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை அடையாத லாபங்களை அடைந்து புதிய சாதனை படைப்பீர்கள். புத்தி தெளிவும் தைரியமும் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு.குடும்ப உறுப்பினர்களிடம் சகஜ நிலை திரும்பி மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கல்வி மற்றும் ஆரோக்கி யம் மேம்படும்.
அரசுத்துறையால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பதவி உயர் வுக்காக உங்கள் பெயர் சிபாரிசு செய்யப்படும்.வீடு, சொத்து வாங்குபவர்களுக்கு இந்த வாரத்தில் பத்திரத் பதிவு நடந்து விடும். கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கல்வி நிறுவனங்கள், தர்மஸ்தாபனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு உதவி செய்து பாக்கிய பலனை அதிகரிக்க முயல்வீர்கள்.
சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். தினமும் சிவ வழிபாடு செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
24.4.2023 முதல் 30.4.2023 வரை
மனக்கவலைகள் அகலும் வாரம். ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் ராசி அதிபதி சூரியன் ராகு, புதன், குருவுடன் இணைகிறார்.உங்களின் ஆற்றல், நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மனச் சங்கடங்கள் மறையும். புதிய சொகுசு வாகனம் மற்றும் சொத்து வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.
வேற்று மதத்தவரின் ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்கும்.தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கு, பேச்சு வார்த்தை இழுபறியாகும். தொழிலில் வியாபாரம் பெருகும். வருமானம் அதிகரிக்கும். அரசு, தனியார் பணியில் உள்ளவர்களுக்கு உபரி வருமானம் மகிழ்ச்சியைத் தரும்.கடனால் பாதித்த கவுரவம், மரியாதை குறைவு மறையும்.
சமாளிக்க முடியாமல் இருந்த பல பிரச்சினைகளுக்கு இனி சுலபமாக தீர்வுகாண முடியும். போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. சில சுப விரயங்கள் உண்டு. ஆன்மீக பணிகளில் மனம் ஈடுபடும். வெளிநாட்டு பயணம் நன்மை தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஸ்ரீ அரவிந்தரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
17.4.2023 முதல் 23.4.2023 வரை
எண்ணம் போல் வாழ்க்கை அமையப் போகும் வாரம். ராசிக்கு குருப்பார்வை கிடைப்பதால் எதிர்காலம் பற்றிய பயம் அகலும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களை சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். தொழில் தொடர்பான புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேறும்.
சிலர் கிடைக்கும் லாபத்தை மறு முதலீடு செய்வார்கள். இழந்த அனைத்து இன்பங்களும் மீண்டும் கிடைக்கப் போகிறது. ராசியை சனி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் சற்று குறையும். ராசி அதிபதி சூரியன் தன லாபஅதிபதி புதன் மற்றும் ராகுவுடன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது.சுப செலவுகள் உண்டாகும். வீட்டை புதிப்பது, புதிய மனை, வீடு, தங்க ஆபரணம் வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் உண்டாகும்.திருமண முயற்சி நிறைவேறும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
17.4.2023 இரவு 8.52 மணி முதல் 19.4.2023 இரவு 11.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடன் பிறந்தவர்களுடன் சொத்துக்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை தவிர்க்கவும். கிரகணத்தன்று தாய், தந்தையின் நல்லாசி பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிப்பலன்
10.4.2023 முதல் 16.4.2023 வரை
தொழில் விருத்தி பெறும் வாரம். தொழில் ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் அழகு ஆடம்பரப் பொருட்கள், உணவுத் தொழில் புரிபவர்களுக்கு நன்மைகள் கூடுதலாகும். திரைப்பட கலைஞர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி உண்டு.வார இறுதியில் ராசி அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானம் சென்று உச்சமடைவது சிறப்பு. ஆனால் ராகுவுடன் சேருவதால் கிரகண தோஷம் ஏற்படுகிறது. கட்டுபாடற்ற சுதந்திர சுக வாழ்க்கையை மனம் தேடும்.
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதால் தந்தை வழி உறவுகளை அனுசரித்து செல்வது நல்லது. சூரியன் ராகுவின் பிடியிலிருந்து விடுபடும் வரை பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்தி வைப்பது நல்லது.
இந்த காலகட்டத்தில் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. திருமண ஏற்படுகள் நல்ல முறையில் நடக்கும். வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகளை கவனத்துடன் அணுகவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. முன்னோர்களின் நல்லாசியை பெற்றுத் தரும் பித்ருக்கள் பூஜையும், குலம் காக்கும் குல தெய்வ வழிபாடும் அவசியம்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
3.4.2023 முதல் 9.4.2023 வரை
நன்மைக்கு மேல் நன்மை நடக்கும் வாரம். தன லாப அதிபதி புதன் நான்கு ஒன்பதாம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்றதால் உங்கள் குடும்பத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகப் போகிறது. உங்கள் உடல் நிலையில் மன நிலையில் மாற்றம் எற்படும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்த நிலை மாறும்.
அஷ்டம ஸ்தானத்தில் இருந்து அவமானம், வம்பு, வழக்கு மண வாழ்க்கையில் பிரிவினையைத் தந்த குருபகவான் தற்போது பாக்கிய ஸ்தானத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறார். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். சனி மற்றும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருந்த தொழில் கூட விறுவிறுப்பு அடையும்.
தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்ச்சிப்பீர்கள். நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாகிக் கொண்டு இருந்தால் இப்பொழுது வசூலாகும்.திருமண முயற்சிகள் நிறைவேறும். ஏழாமிடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் எந்த தடையும் இன்றி பெரியோர்களின் நல்லாசியுடன் திருமணம் நடைபெறும். ஆயுள் பயம் அகன்று ஆரோக்கியம் அதிகரிக்கும். பங்குனி உத்திரத்தன்று சுவாமி அயப்பனை வணங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
27.3.2023 முதல் 2.4.2023 வரை
விபரீத ராஜயோகமான வாரம். ராசி அதிபதி சூரியன் 5,8-ம் அதிபதி குருவுடன் அஷ்டம ஸ்தானத்தில் இணைந்து ராசியைப் பார்ப்பதால் வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைபாடு, எதிர்மறை சிந்தனைகள் விலகி சாதகமான சூழ்நிலை உண்டாகும்.நேர்வழி, குறுக்குவழி என பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும்.
பணிகளை மேற்கொள்ளும் போதுதடை தாமதங்கள்வந்தாலும்துணிச்சலுடன்செயல்பட்டுவெற்றி வாகை சூடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற் றுவீர்கள். உங்களின் பேச்சுக்கும், கருத்துக்கும் எல்லோரும் மதிப்பு கொடுப்பார்கள். உங்கள் சொந்த பந்தங்கள், அண்டை அயலார் என அனைவரும் உங்களின் ஆலோசனையின் பெயரில் வழி நடப்பார்கள். தொழில், உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் அகலும்.
பயணங்கள் அதிகரிக்கும்.சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யவும் நேரும். உடலில் இடது கண், பாதங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். மறுமண முயற்சி வெற்றி தரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






