என் மலர்
சிம்மம் - வார பலன்கள்
சிம்மம்
இந்தவார ராசிபலன்
4.9.2023 முதல் 10.9.2023 வரை
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் வாரம். ஏக யோகாதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமா னத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை இல்லை. சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சீராகும். பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் 5,8-ம் அதிபதி குரு வக்ரமடை வதால் மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக நன்மைகள் நடைபெறும். வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரும். ஆன்மீக பயணம் அதிகரிக்கும். தந்தை, தந்தை வழி உறவுகளால் நன்மைகள் கூடும். தொழிலில் மன நிம்மதி, மன நிறைவு அடைவீர்கள் திருமணமாகாமல் ஏக்கத்தோடு இருந்த இளம் பருவத்தினருக்கு திருமணம் நடக்கும். காதல் விவகாரங்கள் சாதகமான நிலையை எட்டி கைகூடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சி யான செய்தி கிடைக்கும். புதிய சொத்துக்கள் சேரும். ஆரோக்கியம் அதிகரிக்கும். தினமும் கருடாழ்வாரை மனதார வழிபட வம்பு, வழக்குகளில் இருந்து மீள்வீர்கள்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிபலன்
28.8.2023 முதல் 3.9.2023 வரை
மன சஞ்சலம் அகலும் வாரம்.ராசி அதிபதி சூரியன் குருபார்வையில் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் புகழ், அந்தஸ்து, கவுரவம், நம்பிக்கை, நாணயம் உயரும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பய உணர்வு நீங்கும்.எதிரிகளிடம் இருந்து வந்த போட்டி, பொறாமைகள் மறையும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்த சர்ச்சைகள் விலகும். குழந்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்யும் ஆர்வம் உண்டாகும்.குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.கடன் சுமை குறையும். பெண்களுக்கு சகோதரர் வகையில் வரவு உண்டு. கணவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகமாகும்.சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.தம்பதிகளிடையே சுமூக உறவு நிலவும்.1.9.2023 காலை 9.35 முதல் 3.9.2023 காலை 10.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். பிரதோஷத்தன்று சிவபுராணம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிபலன்
21.8.2023 முதல் 27.8.2023 வரை
நினைத்தது நிறைவேறும் வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி சூரியன் தன லாபாதிபதி புதனுடன் குரு, சனி பார்வையில் சஞ்சரிப்பதால் தடைகள் விலகும். உங்கள் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் மகிழ்சியுடன் இருப்பார்கள். ஆன்ம பலம் பெருகும். பணத்தை எவ்வாறு சம்பாதித்து சேமிப்பது என்ற கலையை கற்றுக் கொள்வீர்கள். தெளிவான திறமையான பேச்சால் நல்ல வியாபார வாய்ப்புகளை அடைவீர்கள்.தொழிலுக்கு புதிய பங்குதாரர் கிடைப்பார். நியாயமான கோரிக்கைக்கு உயர் அதிகாரி செவி சாய்ப்பார்.அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.பங்கு பத்திர ஆதாயம் உண்டு. தந்தைக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு அரசு வகை ஆதாயம் கிடைக்கும். அறுவை சிகிச்சை சுமூகமாகும். திருமணத்தடை அகலும்.மறுமண முயற்சி வெற்றி தரும். உயர் கல்விக்காக இடம் பெயரலாம். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். கருட பஞ்சமியன்று கருடரை தயிர் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
14.08.2023 முதல் 20.8.2023 வரை
அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன, லாப அதிபதி புதனுடன் ராசியில் சஞ்சரிப்பதால் நினைப்பதொன்று, நடப்பதொன்றுமாக இருந்த நிலை மாறும். சில்லரை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு தொழிலில் இயல்பு நிலை நீடிக்கும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். சிலர் முன்னர் வேலை பார்த்து விலகிய வேலைக்கே மீண்டும் செல்வார்கள்.
பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் சுமை குறையும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். உபரி பணத்தை பூமி, வயலில் முதலீடு செய்வீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் அனுமதி கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். ராசியை சனி பார்ப்பதால் சித்தப்பாவுடன் சிறு மோதல் மன அழுத்தம் மற்றும் டென்சன் ஏற்படலாம். வசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பிள்ளைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஆடி அமாவாசையன்று சிவனுக்கு பசும்பால் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
07.08.2023 முதல் 13.8.2023 வரை
மனதில் இருந்த கவலைகள் மாறும் வாரம். 4,9-ம் அதிபதி செவ்வாய் தன லாப அதிபதி புதனுடன் ராசியில் சஞ்சரிப்பதால் பய உணர்வு, நோய் தாக்கம், சொத்துக்களால் பயனற்ற நிலை, வறுமை, மனவேதனை போன்ற பாதிப்புகள் விலகும். மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். கடந்த ஒரு வருடமாக வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் நிலை மாறும். 3-ம் அதிபதி சுக்ரன் வக்ரமடைந்து 3-ல் கேது சாதகமற்ற நிலையுடன் இருப்பதால் நீங்கள் எவ்வளவு உதவி செய்தாலும் உடன் பிறந்தவர்களுக்கு மன நிறைவு இருக்காது. சனி வக்ர நிவர்த்திக்கு பிறகு திருமண முயற்சி வெற்றி தரும்.
ராசி அதிபதி சூரியன் ராகு, கேதுவின் மையப்புள்ளியில் இருப்பதால் அரசு உத்தியோகம் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கண்டகச் சனியின் தாக்கம் இருப்பதால் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிப்பது முக்கியம். வீண் செலவுகளை குறைத்து சிக்னத்தை கடைபிடிக்க வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை சிவசக்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
விரயங்களை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தடைபட்ட நீண்ட நாள் முயற்சிகள் பேச்சுவார்த்தையில் சுமூகமாகலாம். ராசி அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடன் பெறுவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களின் திருமணம் அல்லது அவர்களின் குடும்பத்தை பராமரிப்பது, அவரின் கடனை ஏற்பது அல்லது அவருக்கு கடன் கொடுப்பது என விரயங்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.
கருத்து வேறுபாட்டால் பிரிக்காமல் கிடந்த முன்னோர்களின் பூர்வீகச் சொத்துக்கள் பிரிக்கப்படலாம். ராசியை சனி பார்ப்பதால் உங்களின் சித்தப்பா நல்லவராக நடித்து உங்களை ஏமாற்றுவார். அலைச்சல்கள் குறையும். தேக ஆரோக்கியம் சிறக்கும். சிலருக்கு சுப விரயமாக சொத்து சேரும். 4.8 .2023 இரவு 11.17 மணி வரை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பிறருக்கு ஆலோசனை வழங்குவதால் மனக்கசப்பு உண்டாகும். ஆடிப்பெருக்கு அன்று சிவசக்தியை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
24.7.2023 முதல் 30.7.2023 வரை
சுபசெய்திகளால் மனம் மகிழும் வாரம். ராசியில் புதன் செவ்வாய், சுக்ரனுடன் சேர்க்கை பெற்று இருப்பதால் அரசின் நலத்திட்டங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.புதிய வியாபார யுக்திகளால் அதிக லாபம் அடைவீர்கள்.வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வார்கள். புத்திர பிராப்தம் ஏற்படும்.
3-ல் கேது இருப்பதால் பூர்வீகச் சொத்து தொடர்பாக சித்தப்பா உங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார். பேச்சில் நிதானத்துடன் இருந்து உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் சென்றால் நிம்மதி நீடிக்கும். திருட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள்.நிலுவையில் உள்ள சம்பளபாக்கி கணிசமான தொகையாகச் சேர்ந்து கிடைக்கும்.
தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகமாகும். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும். ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும். கண்டகச் சனியை மீறிய நல்ல பலன்கள் நடக்கும்.தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சப்த மாதர்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
17.7.2023 முதல் 23.7.2023 வரை
நன்மையும், தீமையும் கலந்த வாரம். ராசியை குரு, சனி பார்ப்பதால் அதிகார வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும். அரசுப் பணியாளர்க ளுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள், அரச மரியாதை கிடைக்கும். ராசி அதிபதி சூரியன் தன லாபாதிபதி புதனுடன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.
உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். வியாபாரம் ரீதியான கொள்முதலில் சிந்தித்துச் செயல்படவும்.அலுவலகப் பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். தொழில், உத்தியோக ரீதியான இடப்பெயர்ச்சியை சந்திக்கலாம்.
சிலருக்கு வீடு, வாகன யோகம் போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். சிலர் வெளிநாடு செல்லலாம். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். ஆடி வெள்ளிக்கிழமை சிவ, சக்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
லாபகரமான வாரம். ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் குருவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.ராசியில் செவ்வாய் சுக்ரன்சேர்க்கை இருப்பதால் வசீகரமான தோற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும்.
பற்றாக் =குறை வருமானத்தில் குடும்பம் நடத்தியவர்களுக்குகடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். தாய், தந்தைவழி தாத்தா மூலம்உங்களுக்கு நிதி உதவி கிடைக்கலாம். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. பெற்றோர்களால் ஏற்பட்ட மனபாரம் குறையும். ஆரோக்கிய குறைபாடு அகலும். 10.7.2023 அன்று மாலை 6.59 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை ஒத்தி வைக்கவும். கால பைரவரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
3.7.2023 முதல் 9.7.2023 வரை
ஆரவாரமான வாரம். ராசி அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம்.4,9-ம் அதிபதி செவ்வாய் குரு பார்வை பெற்று ராசியில் சஞ்சாரம் என முக்கிய கிரகங்களின் நிலவரம் சிம்ம ராசிக்கு மிக மிக சாதகமாக உள்ளது. கிரகங்களின் சஞ்சாரம் உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. சுப கிரகங்கள் மிகச் சாதகமாக இருப்பதால் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதம் விலகும். எதிர்பார்த்த தொகை உடனே கைக்கு வந்து சேரும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்சியை தரும்.சிலர் சொந்த தொழில் தொடங்கலாம்.
வேலையில் இருந்த பிரச்சிினைகள் முடிவுக்கு வரும், சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணத் தடை அகலும். 8.7.2023 பகல் 2.57- மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வாழ்க்கைத் துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். தினமும் ஹயக்கிரீவர் வழிபாடு செய்வது நன்மையாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
26.6.2023 முதல் 2.7.2023 வரை
காரிய வெற்றி கிட்டும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன லாபஅதிபதி புதனுடன் லாப ஸ்தானத்தில் சேர்க்கை பெறுகிறார்.எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்த பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள் பய உணர்வு நீங்கும். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள்.
உண்மையான உழைப்பு, உற்சாகமான வேலை, மனதிற்கு நிம்மதியை தரும். புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு திறமைக்கும், தகுதிக்கும் பொருத்தமான வேலை கிடைக்கும். திருமணமாகாத பல ஆண்கள், பெண்களுக்கும் திருமணம் நடக்கும். மாமியார், மருமகள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வளமான நிலையான செல்வம் சேரும்.
நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். ஸ்திர சொத்துக்களின் சேர்க்கையால் எதிர்காலம் பற்றிய பயம் விலகும். நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடல் நிலை தெளிவாக இருக்கும். பவுர்ணமி கிரிவலம் செல்வது சிறப்பு.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
19.6.2023 முதல் 25.6.2023 வரை
தொட்டது துலங்கும் வாரம்.ராசி அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்ல தோற்றம், நிறைந்த ஆரோக்கியம், சிந்தித்து செயல்படும் திறன், ஒரு கூட்டத்தை வழிநடத்தும் திறமை ஆகியவை ஏற்படும். எதிர்மறை சிந்தனைகள் விலகும். தொட்டது துலங்கும். அரசுப் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. மூத்த சகோதரம் மற்றும் சித்தப்பா உங்களின் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள்.
6, 7-ம் அதிபதி சனி வக்ரம் அடைவதால் கடன் பிரச்சினையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். சிலர் கடன் வாங்கி சுய தொழில் நடத்தி முன்னேறுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிலையான, நிரந்தரமான உத்தியோகம் கிடைக்கும்.
கூட்டுத் தொழில் புரிபவர்களிடம் சிறு மன பேதம் ஏற்படலாம்.பருவ வயதினருக்கு உரிய வயதில் திருமணம் நடைபெற்று நல்ல குடும்பம் அமையும். பெண்கள் கணவரிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும்.வெள்ளிக்கிழமை வீட்டில் நெய் தீபம் ஏற்றி லலிதா சகஸ்ஹர நாமம் படித்து வர பொருளாதார குற்றம் அகலும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






