என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2024
நன்மைகள் நடைபெறும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பூமி விற்பனையால் லாபம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 19 ஆகஸ்ட் 2024
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 18 ஆகஸ்ட் 2024
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். சொத்துகளால் லாபம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 17 ஆகஸ்ட் 2024
வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்களை சந்திக்க வரலாம். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 16 ஆகஸ்ட் 2024
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். உடல்நலன் கருதி மருத்துவச் செலவுகளை செய்ய நேரிடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 15 ஆகஸ்ட் 2024
தேசப்பற்று மிக்கவர்களின் நட்பு கிட்டும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார நிலை உயரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2024
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கப் பொறுமை தேவைப்படும் நாள். ஆரோக்கியத்திற்காக செலவிடும் சூழ்நிலை உருவாகும். வழக்கமாக செய்யும் பணியை இன்று மாற்றியமைப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024
ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே நடைபெறும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடுதலாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கவனம் தேவை.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024
பயணத்தால் பலன் கிட்டும் நாள். பக்கத்திலுள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். கல்யாண முயற்சி கைகூடும். உத்தியோகத்திலிருந்து வெளிவந்து சுயதொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024
முன்னேற்றம் கூட முக்கியப் புள்ளிகளை சந்திக்கும் நாள் தொழில் வளர்ச்சி மேலோங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். திருமண முயற்சி வெற்றி தரும்.






