என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்குவர். வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024
ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். செல்வநிலை உயரும். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டிய நாள். நீண்ட நாட்களாக நிறைவேறாத பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். அடகு வைத்த நகைகளை மீட்கும் எண்ணம் உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024
தடைகள் விலகும் நாள். தன வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு பெற்று மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. அரசியல்வாதிகளால் சில காரியங்களை சாதிப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024
குறைசொல்லியவர்கள் பாராட்டும் நாள். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். பழைய பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024
சச்சரவுகள் விலகிச் சாதனை படைக்கும் நாள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024
யோகமான நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். வெளியூர் பயணத்தால் விருப்பங்கள் நிறைவேறும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024
மலைபோல் வந்த துயர் பனி போல் விலகும் நாள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கடன் சுமை குறையும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024
சர்ச்சைகளிலிருந்து விடுபடும் நாள். தடைகள் தானாக விலகும். தொலைபேசி வழித்தகவல் உத்தியோக முன்னேற்றதிற்கு உறுதுணை புரியும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். தொழில் சீராகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024
வருமானம் திருப்தி தரும் நாள். மறதியால் விட்டுப்போன காரியங்களை துரிதமாக செய்வீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.






