என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025
ஆதாயம் அதிகரிக்கும் நாள். உற்றார் உறவினர்களின் உதவி உண்டு. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய சேமிப்பில் சிறிது கரையலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025
ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும் நாள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் சிறு விரயம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025
விடியும்பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2025
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவ முன்வருவர். உடன்பிறப்புகளால் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். வியாபார விரோதம் விலகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 18 ஜனவரி 2025
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வியாபார விரோதம் விலகும். சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைப்பீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025
தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். நண்பர்கள் நம்பிக்கைகுரியவர்களாக நடந்து கொள்வர். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025
பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். பொதுநல ஈடுபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 14 ஜனவரி 2025
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மறக்கமுடியாத சம்பவமொன்று நடைபெறலாம். திடீர் செலவுக ளால் கையிருப்புக் கரையும். குடும்பத்தினர்களிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025
விரயங்களைச் சமாளிக்க வேண்டிய நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 12 ஜனவரி 2025
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையலாம். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் வெற்றிநடை போடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025
கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். பழைய பிரச்சனைகளை தீர்க்க முழுமூச்சுடன் பாடுபடுவீர்கள்.






