என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025

    கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். பழைய பிரச்சனைகளை தீர்க்க முழுமூச்சுடன் பாடுபடுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜனவரி 2025

    லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். ஆதாயம் தரும் காரியமொன்றில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 9 ஜனவரி 2025

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவால் நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள். சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிட்டும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025

    கவலைகள் தீரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடியே வந்தாலும் திடீர் செலவு உண்டு. தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும். 

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள்வது நல்லது. தொழிலில் உங்கள் கருத்துகளை கூட்டாளிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பர். உடல்நலனில் கவனம் தேவை.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வாங்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 5 ஜனவரி 2025

    எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாக தெரியும். வரவைவிடச் செலவு அதிகரிக்கும். வழக்குகள் புதிதாக தேடிவரும். தடைகள் அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025

    இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மற்றவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதால் உங் கள் மதிப்பு உயரும். அன்னிய தேசத்தொடர்பு அனுகூலம் தரும். முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜனவரி 2025

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். தொழிலில் உதிரி வருமானங்கள் உண்டு. புதிய மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். தொழிலில் ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 2 ஜனவரி 2025

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். விட்டுப்போன பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024

    பொன்னான நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்காகலாம். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

    ×