search icon
என் மலர்tooltip icon

    மிதுனம் - வார பலன்கள்

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    10.7.2023 முதல் 16.7.2023

    சுபவிரயம், சுப மங்கலச் செலவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சொத்தை வாடகை்கு விட்டு வருமானம் சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். குடும்பத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

    நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். தேக ஆரோக்கியம், மன அமைதி, பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். மன நிம்மதியை குறைத்த கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.

    நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். சிலகுழந்தைகள் பள்ளி மாறலாம். ஆடி மாதத்தில் சிவ சக்தியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    3.7.2023 முதல் 9.7.2023 வரை

    எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் தன ஸ்தானம் செல்லுவதால் பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். பிரிந்த உறவுகள் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 5,12-ம் அதிபதி சுக்ரனும், 6,11-ம் அதிபதி செவ்வாயும் குருவின் பார்வையில் செல்வதால் உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

    தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலை பார்ப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். திருமண முயற்சி வெற்றி தரும். புத்திர பிராப்தம் உண்டாகும்.பெண்கள் நகை பட்டுப் புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள்.

    4.7.2023 பகல் 1.43 மணி முதல் 6.7.2023 பகல் 1.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மீனாட்சியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    26.6.2023 முதல் 2.7.2023 வரை

    சாதகமான வாரம். ராசி அதிபதி புதன் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் ராசியில் இணைவதால் ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். லாட்டரி பந்தயம் போன்றவை உங்களின் வருமானத்தை பெருக்கும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து பொருள் வரவு அதிகரிக்கும்.

    இடமாற்றங்கள் சாதகமான நிலையில் உள்ளது. பெரிய மனிதர்களின் ஆதரவால் புதிய தொழிலை தொடங்குவீர்கள். மனைவி ஆசைப்பட்டு கேட்ட நகையை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும்.

    சமுதாய அந்தஸ்து அதிகரிக்கும். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் உயர்ரக வாகனங்கள் வாங்குவீர்கள். உயர்கல்வி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு பிள்ளைகளால் பெற்றோருக்கு ஆதாயம் உண்டு. குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் நிலவும்.புதிய வேற்று மத நண்பர்கள் கிடைப்பார்கள். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். புதன் கிழமை ஸ்ரீ வராகரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    19.6.2023 முதல் 25.6.2023 வரை

    விவேகத்துடன் செயல்பட வேண்டிய வாரம். விரய ஸ்தானத்தில் நிற்கும் ராசி அதிபதி புதன் வார இறுதி நாளில் ராசிக்குள் நுழைவதால் இழப்புகள், மருத்துவச் செலவுகள், வீண் விரயங்கள் குறையும். குடும்பத்தில் சந்தோஷமும், மனமகிழ்ச்சியும் நிலைத்து இருக்கும். ஒரு சிலர் வீடு, வேலை மாற்றம் செய்ய நேரும்.பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் வக்ரம் பெறுவதால் அஷ்டமாதிபத்திய பலன் சற்று அதிகரிக்கும்.

    சுய ஜாதக தசா புத்தி அசுபத் தன்மையுடன் இயங்கினால் வம்பு, வழக்கு, சிறை தண்டனை, விபத்து, கண்டம் அறுவை சிகிச்சை, தீராத கடன், தீர்க்க முடியாத நோய், கண் திருஷ்டி பாதிப்பு போன்ற அசுப பலன்கள் நடக்கும்.

    தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும். சிலருக்கு பல் தொந்தரவு ஏற்படலாம். சிலருக்கு மறு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் நடைபெறும். சனிக்கிழமை சரபேஸ்வரரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    12.6.2023 முதல் 18.6.2023 வரை

    திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் உண்டாகும் வாரம். 3-ம் அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் குண மேன்மை, செயல்திறன், தன்னம்பிக்கை கூடும். உடன் பிறந்தவர்களுடன் நிலவிய பனிப்போர் விலகும். 5,12-ம் அதிபதி சுக்ரன் 6,11-ம் அதிபதி செவ்வாயுடன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாமல் வேலைப்பளு இருக்கும்.

    காதல் விவகாரங்கள் உண்மையையும், மாயையையும் புரிய வைக்கும். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நோயால் இன்னல் அனுபவித்தவர்களுக்கு புத்தொளியும், உடல்பொலிவும் உண்டாகும். தடைப்பட்ட பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும்.

    மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. திருமணம், குழந்தைப்பேறு வீடு, வாகனம் போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். கோர்ட், கேஸ் பிரச்சினையில் இழுபறியான நிலை நிலவும். பைரவரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    5.6.2023 முதல் 11.6.2023 வரை

    திறமைகள் வெளிப்படும் வாரம். ராசி அதிபதி புதன் 12-ம்மிடத்தில் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் மறைவதால் வெளியில் தெரியாமல் புதைந்து கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும். அஞ்சாமல் தைரியமாக எல்லா முயற்சியிலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறப்புகளிடையே ஒற்றுமை உண்டாகும்.

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் கடமை உணர்வுடன் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலில் புதுமை புகுத்தி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.நண்பர்களுடன் ஏற்பட்ட விரிசல் சீராகி ஆதாயம் உண்டாகும். வியாதிகள் குறைந்து நலமடைவீர்கள்.

    7.6.2023 அன்று 4.40 காலை முதல் 9.6.2023 அன்று 6.02 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சரபேஸ்வரரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    29.5.2023 முதல் 4.6.2023 வரை

    கடன் தொல்லை குறையும் வாரம். 5,12-ம் அதிபதி சுக்ரனும் 6, 11-ம் அதிபதி செவ்வாயும் தன ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் எதிர்பார்த்த தன லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகம், வெளிநாட்டு பணம், பிள்ளைகள் வருமானம் போன்றவற்றால்உங்கள் வாழ்க்கை நிலை உயரப்போகிறது. பழைய கடன்களை செலுத்தி புதிய வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்கள். சிலர் புதிய தொழில் துவங்கலாம்.

    நீங்கள் பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். உங்கள் புகழ், பெருமையை உற்றார், உறவினர் அறியப் போகிறார்கள். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசப்போகிறது. தோற்றத்தில் மிடுக்கு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும். வீடு மாற்றும் எண்ணம் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும்.

    மாமியார், மாமனாரால்' ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். மறுதிருமண முயற்சி வெற்றி தரும். எதிரிகள் தொல்லை குறையும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். இதனால் தேவையில்லாத கெட்ட பெயர் உருவாகும். பவுர்ணமியன்று சத்திய நாராயணரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    22.5.2023 முதல் 28.5.2023 வரை

    உழைப்பிற்கான சன்மானம் கிடைக்கும் வாரம். 5,12ம் அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிப்பதால் மனத் தடுமாற்றம் நீங்கும். விவேகத்துடன் செயல்படுவீர்கள். நிதானம், தைரியம், தெம்பு குடிபுகும்.வெளியில் சொல்ல முடியாமல் தவித்த பல பிரச்சினைகள் குறையத் துவங்கும். சிறிய உழைப்பில் பெரிய லாபம் கிடைக்கும்.

    கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்வுகளில் இருந்து விடுபடுவீர்கள்.வங்கிகள், நிதி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் நடத்துபவர்களுக்கு தொழில் வளர்ச்சி இரட்டிப்பாகும். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அதிர்ஷ்ட சொத்து போன்ற பல வழிகளில் தனவரவு ஏற்படும். புதிய தொழில் துவங்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

    தந்தைவழி ஆதாயமும் அனுகூலமும், பூர்வீகச் சொத்தும், முன்னோர்களின் நல்லாசியும் நிரம்ப பெறுவீர்கள். திருமணத் தடை அகலும்.சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.பூமி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி மதுரை மீனாட்சியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    15.5.2023 முதல் 21.5.2023 வரை

    கடன் சுமை குறையும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் குருவுடன் சஞ்சரிப்பதால் மதி நுட்பமான காரியங்களால் எல்லோரது நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தனித்த அடையாளத்துடன் இருப்பீர்கள்.குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 5-ம் அதிபதி சுக்ரன் ராசியில் நிற்பதால் பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை தரும்.

    குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். 6ம் அதிபதி செவ்வாய் நீசம் பெற்றதால் அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். பழையவீட்டை விற்றுவிட்டு புதிது வாங்கத் திட்டமிடுவீர். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும்.

    நோய் தாக்கம் வெகுவாக குறையும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். குல தெய்வ, குடும்ப தெய்வ இஷ்ட தெய்வ பிரார்த்தனை களை நிறைவேற்ற உகந்த காலம். உயர்கல்வி முயற்சி கைகூடும். கலைத்துறையினரின் திறமை மிளிரும். அமாவாசைக்கு பள்ளி மாணவர்களுக்கு இயன்ற உதவிகளை வழங்கவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    8.5.2023 முதல் 14.5.2023 வரை

    புதிய அனுபவம் உண்டாகும் வாரம் ராசி மற்றும் 4-ம் அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால் வீடு,வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பத்திரப் பதிவு தாமதமாகும். புதியபொறுப்புகள், பதவிகள் தேடி வரும். 6ம் அதிபதி செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் நீசம் பெறுவதால் உங்களை தவறாகப் புரிந்துகொண்ட உறவுகள் தவறை உணருவார்கள்.

    தம்பதிகளிடம் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றக் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக நிறைவேறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

    10.5.2023 இரவு 9.50 முதல் 13.5.2023 0.19 am வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் நல்லதாக நினைத்து பேசினாலும் பிறர் தவறாக புரிந்து கொள்வதால் மன பேதம் ஏற்படும். எனவே தேவையற்ற பேச்சைத் தவிர்க்கவும். சங்கடஹர சதுர்த்தியன்று வெள்ளெருக்கு மாலை சாற்றி விநாயகரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    1.5.2023 முதல் 7.5.2023 வரை

    தெய்வ பலம் வழிநடத்தும் காலம். 5-ம் அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிப்பதால் புதிய முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். பிறருக்கு கட்டளையிடும் படியான பெரிய பதவிகள் தேடி வரும்.உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். புத்திர சோகம் அகலும். வீடு, நிலம் போன்றவை வாங்கும் யோகம் ஏற்படும். காதலுக்கு ஆதரவு கிடைக்கும்.

    வீட்டில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் சுப விசேஷம் நடக்கும்.புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அள்ள அள்ள குறையாத பொன் பொருள் சேரும். செய்தொழிலில் லாபம் அதிகரிக்கும். 6-ம் அதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் வேலை தேடி அலுத்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிக்கும் ஆர்வம் உண்டாகும். திடீர் மாற்றத்தால் மனம் ஆனந்தமடையும்.

    ஞான வழியில் மனம் செல்லும். தந்தை வழியில் உள்ள பிரச்சினைகள் அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன் பேசி சுமூகமாக தீர்க்கப்படும். பவுர்ணமியன்று மகா விஷ்ணுவை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இந்த வார ராசிப்பலன்

    24.4.2023 முதல் 30.4.2023 வரை

    பணவரவு, வருமானம் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் 4 கிரகச் சேர்க்கை இருப்பதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கடனாக கொடுத்து மாட்டிக்கொண்ட பணம் திரும்பக் கிடைக்கும். பணம் எல்லா நேரத்திலும் கிடைக்காது என்பதால் லாப குருவால் கிடைக்கும் உபரி பணத்தை சேமிப்பது நல்லது.

    உங்களது திட்டங்கள் செயல்பாடுகள், எண்ணங்கள் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சித்தப்பா, நண்பர்கள் மூலம் ஆதாயங்களும், உதவிகளும் தேடி வரும்.குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுடன் புதிய தொழில் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பங்கு சந்தையில் ஆர்வம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவார்கள்.

    குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். தடைபட்ட மூத்த சகோதர, சகோதரியின் திருமணம் நடைபெறும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஸ்ரீ ராமானுஜரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×