என் மலர்tooltip icon

    மிதுனம் - வார பலன்கள்

    மிதுனம்

    வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை

    15.12.2024 முதல் 21.12.2024 வரை

    தெய்வீக எண்ணம் மேலோங்கும் வாரம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி. ராசிக்கு சூரியன் பார்வை. ஆன்ம பலம் பெருகும்.சிவ வழிபாடு மற்று சிவ தலங்களுக்கு சென்று வருவதில் மனம் லயிக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். போட்டிகளில் பங்கேற்று பாராட்டுப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம், புத்திர பிராப்த்தம் போன்ற மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

    மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.உடல் ஆரோக்கியம், தேக வலிமை பெறும். எதிர்மறை சிந்தனைகள் நேர்மறை சிந்தனையாக மாறும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயலில் ஆர்வம் கூடும். நண்பர்களின் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு களை பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கால பைரவரை வழிபட சிறப்பான எதிர்காலம் அமையும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை

    8.12.2024 முதல் 14.12.2024 வரை

    தடைகள் தகறும் வாரம் . தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் நிற்கும் வக்ர செவ்வாயை சுக்ரன் பார்க்கிறார். தடைபட்ட பணிகள் மளமளவென்று நிறைவேறும். மதிப்பு, மரியாதை கூடும். தன்னம்பிக்கையும், அதிகமாகும். எந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் பூர்வீகச் சொத்தில் நிலவிய மன உளைச்சல் குறையும். மேலதிகாரி, முதலாளிகள், சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு அகலும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.

    வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். செய்தி, தகவல் தொடர்பு, ஊடகங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். உயில் எழுத, திருத்தம் செய்ய உகந்த நேரம்.ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு உண்டாகும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். சேமிப்பு மற்றும் , சிக்கனத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிசேகம் செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை

    1.12.2024 முதல் 7.12.2024 வரை

    எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மகிழும் வரும். 5-ம் அதிபதி சுக்ரன் குரு மற்றும் செவ்வாயின் பார்வையில் அஷ்டம ஸ்தானத்தில் மறைகிறார். சிலர் தொழில், உத்தியோகம் அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம். அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். வேலை பார்த்த இடத்தில் எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை ஓங்கும்.வேலை இல்லாதவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    ஆரோக்கியத்தில் சிறிய முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். திருமணத் தடைகள் அகலும்.தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். அரசியல் பிரமுகர்களுக்கு மிக சாதகமான நேரம். 4.12.2024 அன்று இரவு 11.19 மணி முதல் 7.12.2024 அன்று காலை 5.06 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையை ஒத்தி வைப்பது நல்லது. பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். இறைவழிபாட்டால் மகிழ்ச்சியை அதிகரிக்க அஷ்டலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை

    24.11.2024 முதல் 30.11.2024 வரை

    நம்பிக்கைகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 6-ல் வக்ரம் பெறுவதால் குடும்பத்தில் நிலவிய குழப்பம் சண்டை, சச்சரவு நீங்கும். உறவுகள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். கடனால் ஏற்பட்ட கவலை மன சஞ்சலம் சீராகும். இதுவரை நீடித்த பகையும், வருத்தமும் மாறும். பொறுப்பு மிக்க பதவிகள் தேடி வரும். ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும் விவசாயிகள் உயர் ரக கறவை மாடு வாங்கி பயன் பெறுவீர்கள். கடன் தொல்லை ஒரு பக்கம் இருத்தாலும் மீளும் வகையான மார்க்கம் தென்படும். தடைபட்ட திருமணம் நடந்து முடியும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும்.

    கை விட்டு போன சொத்துக்கள் வீடு தேடி வர வாய்ப்புள்ளது. விற்று விட்ட பூர்வீக சொத்துக்களை திரும்ப வாங்க முயற்சி செய்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு பணி நிரந்தரமாகும். சிலரின் அரசு வேலை முயற்சி கை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுதியாகும். அதீத வேலைப்பளு வினால் சோர்வு, உடல் ரீதியான சில பாதிப்புகள் ஏற்படலாம். யாருக்கும் பணத்தை கடனாக கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம்.குழந்தை பாக்கி யத்தில் நிலவிய தடைகள் அகலும்.தினமும் விஷ்ணு காயத்திரி மந்திரம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை

    17.11.2024 முதல் 23.11.2024 வரை

    நல்ல வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் ராசியை பார்க்கிறார். அதிர்ஷ்ட பணம், பொருள் வரவுக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பணவரவால் மனம் மகிழும். அதிர்ஷ்டம் உங்களை விரும்பும் நேரம். தொழிலில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம், திருமணம், மகப்பேறு போன்றவற்றின் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்iதி வந்து சேரும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது.

    மருத்துவச் செலவுகள் குறையும்.பிள்ளைகளால் மதிப்பு, கவுரவம் அதிகரிக்கும். குல தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். அரசாங்கக் காரியங்கள் அனுகூ லமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்ய உகந்த காலம். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு.புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தேய்பிறை அஷ்டமியில் மகிஷாசுரமர்தினியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை

    அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம். மிதுன ராசிக்கு 8, 9-ம் அதிபதியான சனிபகவான் வக்ர நிவர்த்தி ஆவதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். தடைகள் அகலும். இருண்டு கிடந்த வாழ்க்கையில் மெதுவாக வெளிச்சம் பரவும். எதிர்பாராத நல்லவை நடக்கும். மாமனார் மூலம் பூமி வயல், தோட்டம் கிடைக்கும். அல்லது என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். திருட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு கல்வியில் நிலவிய தடைகள் நீங்கும். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். வெளியூரில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வார்கள். வீடு கட்டும் கனவு நினைவாகும்.நிலுவையில் உள்ள சம்பளபாக்கி கணிசமான தொகையாகச் சேர்ந்து கிடைக்கும்.

    மாணவர்கள் டிவி, மொபைலில் ஆர்வத்தை குறைத்து படிப்பில் கவனம் செலுத்துவார்கள். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பெண்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் மோகம் அதிகமாதும். திருமணத் தடை அகலும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும். அரசியல் பிரமுகர்கள் நட்பு கிடைக்கும். பவுர்ணமியன்று மகா விஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை

    3.11.2024 முதல் 9.11.2024 வரை

    தடை, தாமதங்கள் தகரும் வாரம். வார இறுதியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் ராசிக்கு 7-ம்மிடம் சென்று ராசியை பார்க்கிறார். காதல் திருமண முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் சீராகும்.தாராள தன வரவு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயரதி காரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் புதிய தொழில் துவங்கலாம். பழைய கூட்டாளி விலகலாம். திறமையான தொழில் பங்குதாரர் கிடைக்கலாம்.

    தாய்மாமன் வழி ஆதாயம் உண்டு. குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஸ்திர சொத்துக்களின் மதிப்பு உயரும். வெளி உணவுகளைத் தவிர்த்து வீட்டில் சமைத்த சூடான உணவை சாப்பிடவும். 7.11.2024 அன்று மாலை 5.53 மணி முதல் 9.11.2024 அன்று இரவு 11. 27 மணி வரை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் தூக்கமின்மை அதி கரிக்கும். வேலைப்பளு கூடும். கோபத்தை குறைப்பது நல்லது. வெளியூர் பயணத்தை தவிர்க்கவும். ஸ்ரீ ராமரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை

    27.10.2024 முதல் 3.11.2024 வரை

    வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரனுடன் உப ஜெய ஸ்தானமான 6ம் மிடத்தில் சேர்க்கை பெற்றுள்ளார். எதிரிகள் ஒதுங்குவார்கள். தொட்டது துலங்கும். விரய ஸ்தானத்தில் நிற்கும் குருவின் வக்ர பெயர்ச்சியால் வலிமையான சுப மாற்றம் நடக்கும். வீண் விரயங்கள் மருத்துவ செலவு குறையும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்த்து போராடி ஜெயிப்பீர்கள். இதுவரை வேலைக்கு செல்லாதவர்கள் கூட இனி வரக்கூடிய காலகட்டத்தில் அயராது உழைப்பார்கள். வேலையிலும் தொழிலிலும் உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது.

    பாகப் பிரிவினை சுமூகமாக முடியும். வீடு, வாகன பிராப்த்தம் உள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும்.வாழ்க்கைத் துணையால் செல்வ நிலை உயரும், செல்வாக்கு மேலோங்கும்.நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்.பிறரின் பணப் பிரச்சனையில் தலையிடக்கூடாது. தீபாவளி ஆபரில் புதிய வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.விஷ்ணு சகஸ்ஹர நாமம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை

    20.10.2024 முதல் 26.10.2024 வரை

    கடன் தொல்லை குறையும் வாரம். 6, 11-ம் அதிபதி செவ்வாய் நீசம் பெறுவதால் சிரமமான காரியங்களைக் கூட சுமூகமாக முடித்துக் காட்டு வீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். தன வரவு திருப்தி தரும். வராக்கடன்கள் வசூலாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படி யாக குறையும். இழப்புகளை ஈடுகட்டும் விதத்தில் வருமானம் உயரும். மன உளைச்சலைத் தந்த பணியிலிருந்து விடுபட்டு புதிய நல்ல பணியில் சேருவீர்கள். சுய தொழில் பற்றிய ஆர்வம், எண்ணம் அதிகரிக்கும்.

    சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியமும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பெண்கள் விதவிதமான தீபாவளி பலகாரம் செய்து குடும்பத்தினரின் பாராட்டைப்பெ றுவார்கள். கணவன், மனைவி கருத்து வேறுபாடு குறையும். வீண் விரயங்கள் மட்டுப்படும். வைத்தியச் செலவு குறையும். பிள்ளைகளின் எதிர் காலம் குறித்த திட்டங்கள் வெற்றியில் முடியும். திருமண முயற்சி சாதகமாகும்.சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் விவசாயிகள் பயிர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை

    ராசிக்கு 5-ல் நீச்ச சூரியனும். ராசியில் 6-ம் அதிபதி செவ்வாயும் உள்ளதால் மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களையும் சனி பகவான் பெற்றுத் தருவார். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை சற்று தள்ளிப் போடுவது நல்லது. திருமணத் தடை அகலும்.

    உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல் வாய்ப்பு உண்டாகும். பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். தந்தை தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வர். 13.10.2024 அன்று மாலை 3.44 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணவால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம்.கடமை யில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. மீனாட்சி வழிபாடு உயர்வு தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை

    6.10.2024 முதல் 12.10.2024 வரை

    செல்வாக்கு மேம்படும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குல தெய்வ அனுகிரகமும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்தும் காலம் என்றால் அது மிகையாகாது. என்றைக்கோ வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயரும். பங்கு பத்திரங்கள் நல்ல லாபம் பெற்றுத் தரும்.

    இது வரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அந்தஸ்தான வீடு, ஆடம்பர வாகனம் என வாழ்வாதாரம் உயரும். உயர்கல்வி முயற்சி சித்திக்கும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். தொழில், உத்தியோகம் அனுகூலம் என அனைத்து சுப பலன்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்.11.10.2024 அன்று பகல் 11.40 க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்ப தால் குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். பாலாம்பிகையை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)

    29.9.2024 முதல் 5.10.2024 வரை

    எதிர்பார்த்த உதவிகள் உடனே தேடி வரும் வாரம். ராசி அதிபதி புதன் சுக ஸ்தானமான 4ம் இடத்தில் உச்சம் பெறுவதால் மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். தவறிப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை செயல்படுத்துவீர்கள்.புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.தன நெருக்கடிகள் குறையும். வருமானத்தை அதிகரிப்பது மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். வணிகம் சார்ந்த சிந்தனைகள் அதிகமாகும்.அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும்.

    உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு. வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறவுகளின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.வாரிசுகளின் திருமண முயற்சி வெற்றியாகும். குழந்தை பாக்கியம் கிட்டும்.மன வருத்தம், சங்கடங்கள் நீங்கும். அட மான நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். அமாவா சையன்று வயது முதிர்ந்தவர்களின் நல்லாசி பெறவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×