என் மலர்
மிதுனம் - வார பலன்கள்
மிதுனம்
வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை
06.4.2025 முதல் 12.4.2025 வரை
பல புதிய மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசி மற்றும் சுக ஸ்தான அதிபதி புதன் வக்ர நிவர்த்தி ஆவதால் எண்ணங்கள், யோசனைகள், சிந்தனைகள் அனைத்தும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.புத்தி தெளிவு ஏற்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.மலை போல் வந்த துயர்கள் பனி போல் விலகும்.தொழில் வகையில் அரசு அதிகாரிகளை அனுசரித்து ஆதாயம் பெறுவீர்கள். மன உளைச்சலான பணியிலிருந்து விடுபட்டு புதிய நல்ல பணியில் சேருவீர்கள். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும்.வீடு, வாகன வசதிகள் மேம்படும். அழகு, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு விரும்பிய வேலையில் சேர உத்தரவு வரும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எதிர்பார்த்த குடியுரிமை கிடைக்கும். வீட்டில் திருமணம் மற்றும் சுப வைபவங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். தம்பதி களுக்குள் ஒற்றுமை உணர்வு அதிக மாகும். மகா விஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை
30.3.2025 முதல் 5.4.2025 வரை
உற்சாகமான வாரம். ராசிக்கு 4,7,12ம் மிடத்திற்கு சனி பார்வை உள்ளது.எதிர்காலம் குறித்து சில தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான இடங்களுக்கு பயணம் செய்து சந்தோஷமாக இருப்பீர்கள்.பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் முன்னேற்றங்கள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்களில் கவனம் வேண்டும். கால்நடை விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
மனதிற்குப் பிடித்த செயல்களை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள்.அலுவலக பணிகளை வழக்கத்தை விட குறைவான நேரத்தில் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். தொழில் நிறுவனத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள். திருமணத்தடை அகலும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். கருட வழிபாடு செய்வதால் இன்னல்கள் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
30.3.2025 முதல் 05.4.2025 வரை
உற்சாகமான வாரம். ராசிக்கு 4,7,12ம் மிடத்திற்கு சனி பார்வை உள்ளது. எதிர்காலம் குறித்து சில தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான இடங்களுக்கு பயணம் செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் முன்னேற்றங்கள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்களில் கவனம் வேண்டும். கால்நடை விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள்.
அலுவலக பணிகளை வழக்கத்தை விட குறைவான நேரத்தில் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். தொழில் நிறுவனத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள். திருமணத்தடை அகலும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். கருட வழிபாடு செய்வதால் இன்னல்கள் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை
23.3.2025 முதல் 29.3.2025 வரை
மகிழ்ச்சியான வாரம். 10-ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். இந்த வாரம் 10-ம்மிடத்தில் 6 கிரகங்கள் சேருகிறது. மாமியாரை அனுசரித்து செல்லுங்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் கடனாக கொடுத்த பணம் வசூலாகும். மற்றவர்களின் உதவி, குறுக்கீடு இல்லாமல் முக்கியமான வேலைகளை நீங்களே கையாள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேலை மாற்றம், இடமாற்றம் பற்றிய சாதகமான தகவல் வந்து சேரும்.
குடும்பத்துடன் பொழுது போக்கு சுற்றுலா மையங்களுக்குச் சென்று நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கிய தொல்லைகள் அகலும். திருமணத் தடைகள் அகலும்.24.3.2025 அன்று காலை 10.25 முதல் 26.3.2025 அன்று மாலை 3.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். வாக்கு வாதங்கள், விவாதங்களைத் தவிர்க்கவும். அதுதான் எல்லா பிரச்சிினைகளுக்கும் அருமருந்து.பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வர கர்ம வினைத் தாக்கம் குறைந்து தடைக் கற்கள் படிக் கற்களாக மாறும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை
16.3.2025 முதல் 22.3.2025 வரை
முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம்.சகாய ஸ்தான அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம். ராசி அதிபதி புதன் சூரியனுடன் சேருவது புத ஆதித்ய யோகம்.கல்வி ஆர்வம் அதிகரிக்கும். ஞாபக சக்தி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். அமைதியான சிந்தனைகளுடன் இருப்பீர்கள். முன்னோர்களின் நல்லாசி கிட்டும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ஆழ்ந்த தொழில் ஞானமும், தெளிவான உள்ளுணர்வும் உண்டாகும். தாராள தன வரவால் உடலும், உள்ளமும் குளிரும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை கூடும்.
வீடு, தோட்டம், வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. தள்ளிப் போன பத்திரப் பதிவு , பாகப்பிரிவினைகள் இனிதே நடக்கும். இளைய சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு சுமூகமாகும். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பிள்ளை களின் திருமணத்திற்கு தேவையான பண வரவு கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்தப்ப டுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தினமும் விஷ்ணு சகஸ்ஹர நாமம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை
9.3.2025 முதல் 15.3.2025 வரை
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் வாரம். 10-ம்மிடமான ஜீவன ஸ்தானத்தில் நான்கு கிரகச் சேர்க்கை.செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ், கவுரவம் யாவும் உயரும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறையில் உள்ளவர்கள் மேன்மையான பலன்கள் பெறுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலரின் மேல் இருந்த வீண் பழி விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். அவரவரின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும்.
வேலைப்பளு அதிகமாகும். எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. பொருளாதாரநிலை சிறப்பாகி வாழ்க்கைத்தரம் உயரும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் யோகமும் உள்ளது. வராக்கடன்கள் வசூலாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. மாசி மகத்தன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை
02.03.2025 முதல் 08.03.2025 வரை
விரும்பிய மாற்றங்கள் கிடைக்கும் வாரம். ராசியில் 6,11-ம் அதிபதி செவ்வாய். உங்களின் திறமை வெளிப்படும். கடினமான பணிகளைக் கூட சுலபமாகச் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வீண் கவலைகள் நீங்கி துணிச்சல், தைரியம் அதிகரிக்கும்.
மனதில் தோன்றும் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியும். ஆடம்பரச் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஆயுள் ஆரோக்கியம் முன்னேற்றம் தரும். தடைபட்ட அனைத்து முயற்சிகளும் துரிதமாகும். சொந்த வீடு கட்டி குடியேறுவீர்கள்.
கவுரவப் பதவிகள் கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசியும், ஆஸ்தியும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதால் இன்னல்கள் விலகும்.
தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மன நிறைவுடன் இருப்பீர்கள். தாயும், மகனும் புரிந்து கொள்வார்கள். பெரியோர்களின் ஆசியுடன் திருமணம் நடைபெறும். மகா விஷ்ணுவை வழிபாட்டால் மங்களங்கள் பெருகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை
23.2.2025 முதல் 01.03.2025 வரை
இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறும் வாரம். ராசி அதிபதி புதன் நீச்ச பங்க ராஜ யோகம் பெறுகிறார். ராசியில் வக்ர நிவர்த்தி பெற்ற 6,11ம் அதிபதி செவ்வாய். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும்.
தந்தை வழியில் உதவி கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சாதகமான பலன் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் பூர்த்தியாகும். சிலரின் கூட்டுத் தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும்.
உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சி தரும் வேலை இல்லாதவர்களுக்கு புதிய ஆன்லைன் வேலை கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி நிச்சயம். எதிரிகள் ஒதுங்குவார்கள்.
திருமண முயற்சியில் சாதகமான பலன் உண்டு. 25.2.2025 அன்று 12.56 காலை முதல் 27.2.2025 அன்று 4.37 காலை வரை சந்திராஷ்டமம் உள்ளது. பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகள் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். சிவராத்திரியன்று வில்வ அர்ச்சனை செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை
16.2.2025 முதல் 22.2.2025 வரை
மேன்மையான வாரம். ராசி அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியா திபதி சனி மற்றும் சகாய ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை. தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும். பிறவிக் கடன் மற்றும், பொருள் கடனில் இருந்து விடுபடுவீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து, கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் அரைகுறையாக நின்ற அனைத்துப் பணிகளும் துரிதமாகும்.
அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.திட்டமிட்டபடி பாகப் பிரிவினைகள் சுமூகமாகும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும். பூர்வீகத்தில் புதிய அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. சில பிள்ளைகள் கல்விக்காக விடுதிக்கு செல்வார்கள். பெண்களுக்கு தந்தையின் பூர்வீக வீடு, பங்களா கிடைக்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். திருமண முயற்சி கைகூடும். மறுமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச் சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு அகலும்.அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு சிறப்பு.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை
9.2.2025 முதல் 15.2.2025 வரை
மாற்றங்கள் நிறைந்த வாரம். ராசிக்கு 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பூர்வ புண்ணி யாதிபதி சுக்ரன் உச்சம்.தெய்வ அனுகூலம் தற்போது கிடைக்கப் பெறுவதால் சுய ஜாதக ரீதியான அனைத்து விதமான தோஷங்களும் சாபங்களும் விலகும். தடைபட்ட அனைத்து இன்பங்களும் மீண்டும் வந்து சேரும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் ஓடி வந்து நிற்கும். மனசஞ்சலம் பயம் அகலும். புதியதாக பிறப்பெடுத்தது போன்ற உணர்வு மேலோங்கும். உங்கள் வாழ்நாள் லட்சியங்களை, எண்ணங்களை கனவுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றக் கூடிய முயற்சிகளில் ஈடுபடலாம்.
தடைபட்ட அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும். தடைபட்ட தெய்வப் பிரார்த்த னைகளை நிறைவேற்ற உகந்த காலமாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். நடந்ததை நினைத்து கொண்டே இருப்பது இயலாமை. வாழ்க்கையில் நடப்பதை எதிர்கொண்டு வாழப் பழகுவது வளர்ச்சிக்கான அறிகுறி. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். தைப்பூசத்தன்று முருகனுக்கு பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை
2.2.2025 முதல் 8.2.2025 வரை
உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம். ராசியில் வக்ர செவ்வாய்.சொத்துப் பிரச்சினை சுமூகமாகும்.குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மனக் கசப்பால் பிரிந்த சொந்தங்கள் மீண்டும் இணைவார்கள். தந்தையின் கடனாலும், வைத்தியச் செலவாலும் கலங்கியவர்களுக்கு கடன் தீர்க்கும் மார்க்கம் தென்படும். உடன் பிறந்தவர்களின் நலனுக்காக சிறிய பொருள் விரயத்தை சந்திக்க நேரும். பதவி உயர்வு, கவுரவப் பதவிகள் தேடி வரும். திருப்தியான நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடும்.
குல தெய்வ அருளால் பூர்வீகம் சம்பந்தமான விசயங்கள், வழக்குகள் முடிவிற்கு வரும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகள் போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.உயர்கல்வி முயற்சி சித்திக்கும்.கணவன் மனைவி உறவில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். ஆன்மீக தலங்களுக்குச் சென்று மன நிம்மதியை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். மகா கணபதியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை
26.1.2025 முதல் 1.2.2025 வரை
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும் வாரம். ராசியில் 6-ம் அதிபதி செவ்வாய் வக்ர கதியில் சஞ்சாரம் செய்கிறார்.5ம் அதிபதி சுக்ரன் 10-ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். வார ஆரம்பத்தில் தொழிலில் மந்த போக்கு நிலவினாலும் நிலையான முன்னேற்றத்தை எட்டி பிடிப்பீர்கள். புதிய தொழில் ,உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட சங்கடங்கள், விரயங்கள் சீராகும்.குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும்.
பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு மீண்டும் சொந்த ஊர் செல்லும் எண்ணம் உதயமாகும்..பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. 28.1.2025 அன்று மதியம் 2.52 முதல் 30.1.2025 அன்று மாலை 6.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தில் பகைமை உருவாகும். எனவே முக்கிய விஷயங்களை நீங்கள் நேரடியாக திட்டமிட்டு செயல்பட்டு சமாளிக்க வேண்டும். உடல் ஆரோக்கி யத்தில் அக்கறை தேவை.அமாவாசையன்று திருமஞ்சன அபிசேகம் செய்து மகா விஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






