என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத்தேவைகள் பூர்த்தியாகும். வீடு மாற்றம், செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். லாபம் கருதி தொழிலில் புதிய பங்குதார்களை சேர்த்துக்கொள்வீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டுவந்து சேர்ப்பர்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024
இடம், பூமி வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். புதிய கூட்டாளிகளால் பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கையை கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024
சேமிப்பு உயரும் நாள். ஆரோக்கியத்திற்காக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அன்னியதேச நண்பர்கள் மூலம் ஆதாயம் தரும் தகவல் வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடும். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
இல்லாதவர்களுக்கு உதவி செய்து உள்ளம் மகிழும் நாள். வாகன பராமரிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பெற்றோர்களின் உடல் நலனில் கவனம் தேவை.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். திருமணம் சம்பந்தாக எடுத்த முயற்சி கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நண்பர்கள் எதிர்பார்த்த உதவி செய்வர். உத்தியோகத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சனை இன்று முடிவிற்கு வரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டமுன்வருவர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
குறைகள் அகல கோவில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். ஆதாயத்தை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நிதானத்துடன் செயல்படுவது நல்லது.






