என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    வார ராசி பலன்கள்

    27-6-2022 முதல் 03-7-2022 வரை

    தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் 5,12-ம் அதிபதி சுக்ரனுடன் 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு வேலை முயற்சி பலிக்கும். பிள்ளைகள் உயர் கல்வி அல்லது உத்தியோகத்திற்காக வெளியூர் செல்லலாம்.தன ஸ்தானத்தில் குரு, செவ்வாய் பார்வை பதிவதால் தாராள தனவரவு வந்து கொண்டே இருக்கும்.

    வாகனம் வாங்க, வீடு கட்டும் பணி தொடர தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். தாய் வழி பூர்வீகச் சொத்தில் தாய்மாமனுடன் சிறு மன பேதம் ஏற்படலாம்.ஊர் மாற்றம் வேலை மாற்றம், வீடு மாற்றம், பள்ளி மாற்றம் என அவரவர் வயதிற்கேற்ற மாற்றம் உண்டாகும். புதிய தொழிலுக்கான முயற்சிகள் நல்ல மாற்றத்தை தரும்.

    உடன் பிறந்தவர்களின் குடும்ப பாரத்தை சுமக்க நேரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டு.தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவதால் மன ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகள் இழுபறியாகும். சிலரின் மறு திருமண முயற்சி சித்திக்கும். தினமும் பட்சிகளுக்கு தானியம், தண்ணீர் வைக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும். பகையொன்று நட்பாகலாம். பணத்தேவைகள் பூர்த்தியாகும். சொத்து விற்பனையில் லாபம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் சந்திப்பால் ஆனந்தம் பெருகும் நாள். இல்லத்தில் சுபகாரிய பேச்சு முடிவாகும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். வரவு திருப்திகரமாக இருந்தாலும் நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. புதிய உத்தியோகத்திற்கான அழைப்பு வரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். தக்க விதத்தில் நண்பர்கள் உதவி செய்வர். நண்பர்கள் வழியிலும் உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வாங்கல்-கொடுக்கல்களில் கவனம் தேவை. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை சந்திக்க நேரிடும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.


    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வி.ஐ.பி.க்களை விரோதித்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உடன்பிறப்புகளால் இடையூறுகள் ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    காரிய வெற்றிக்கு கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். பொறுமை கடைப்பிடிப்பது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிட பணிகளை மீதியும் தொடரும்.

    ×