என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். நீங்கள் தேடிச்சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களை தேடி வரலாம். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முயற்சி கைகூடும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணம் பலன் தருவதாக அமையும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
காலையில் சலசலப்பும், மதியத்திற்கு மேல் கலகலப்பும் ஏற்படும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். எதிர்காலம் இனிமையாக அமையத் திட்டங்கள் தீட்டுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வீண் விரோதங்கள் வரலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளிவட்டாரப் பழக்கத்தில் பகை ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு குறையும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சகோதர வழியில் அனுகூலம் கிட்டும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனக்கலக்கங்கள் அகலும். நீங்கள் எதிர்பாராத காரியம் எளிதில் முடிவடையும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையும். சொத்துகளால் லாபம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பிரச்சினைகள் தீரும் நாள் . பிரியமானவர்களுக்காகச் செலவிடுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் ரீதியான பயணமொன்று பலன் தரும். உணவு கட்டுப்பாட்டால் உடல்நலம் சீராகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். புதிய பாதை புலப்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பொதுநலத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.






