என் மலர்tooltip icon

    மகரம்

    வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை

    9.11.2025 முதல் 15.11.2025 வரை

    மகரம்

    மனச் சங்கடம் குறையும் வாரம். ராசிக்கு வக்ரகதியில் உள்ள அதிசார குருவின் பார்வை உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது புத்திசாலித்தனம். வீட்டில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும்.

    திருமணத் தடை அகலும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க முயற்சிப்பவர்களுக்கு நல் வாய்ப்பு உண்டாகும். பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். தந்தை தொழில் அல்லது உத்தியோகம் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வர். தொழிலில் பிரமாண்ட வளர்ச்சி உண்டாகும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள். 12.11.2025 அன்று மாலை 6.35 முதல் 15.11.2025 அன்று அதிகாலை 3.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்கள் மற்றும் மன சஞ்சலம் அதிகமாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×