என் மலர்
மகரம் - வார பலன்கள்
மகரம்
வார ராசிபலன்
25.9.2023 முதல் 1.10.2023 வரை
பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும் வாரம்.5,10-ம் அதிபதி சுக்ரன் ராசியைப் பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது.அழகு ஆடம்பர பொருட்கள் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான நேரம். தொழில் அபிவிருத்தி செய்யும் எண்ணம் மிகும். ஏழரை சனியின் காலம் என்பதால் சுய ஜாதகம் அறிந்து புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.அதிர்ஷ்ட பொருள் வரவு ஏற்படும். உங்களை அவமானப்ப டுத்திய வழக்குகளின் தீர்ப்பு சாதக மாகும். மகர ராசி விவசாயிகள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் பெரும் லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் சூழல் உருவாகும். தவறான நட்பு வலையில் மாட்டிய பிள்ளைகள் மனம் திருந்துவார்கள். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். காதல் திருமணம் நடைபெறும். பிள்ளைப் பேறு ஏற்படும்.சில்லரை கடன்கள் அடைபடும். உடல் நலம் சீராகும். மகாளய பட்ச காலத்தில் அசைவ உணவை தவிர்த்து முன்னோர்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
18.9.2023 முதல் 24.9.2023 வரை
மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் வாரம். ராசியை 5,10-ம் அதிபதி சுக்ரன் பார்ப்பதால் திறமை களின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நன்மைகளே மிகுதியாக நடக்கும், எனினும் 2ல் சனி பகவான் வக்ரமாக இருப்பதால் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். குழந்தை இல்லா தவர்களுக்கு வாரிசு உண்டாகும். திரு மணப் பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.சத்ருக்கள் தொல்லை அகலும். கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு இது ஏழரைச் சனியின் காலம் என்பதால் புதிய தொழில் முதலீடுகளில் நிதானித்து செயல்பட வேண்டும். வாகன வசதிகள் மேம்படும். புதிய பொருட்சேர்க்கை மகிழ்ச்சி தரும். உற வினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். திருமணத்தடை அகலும். ராகு மூன்றாமிடத்தை நெருங்கிக் கொண்டு இருப்பதால் இலாகா மாற்றம் மற்றும் இடமாற்றம் கவலையைத் தரும். மேலும் பல பாக்கி யங்களை அடைய மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
11.9.2023 முதல் 17.9.2023 வரை
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடையும் வாரம். 5,10ம் அதிபதி சுக்ரன் ராசியைப் பார்ப்பதால் வாக்கு வன்மை பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சி களில் சாதகமான பலன் உண்டு. அடிமைத் தொழிலில் இருக்கும் சிலருக்கு சொந்தத் தொழில் ஆர்வம் பிறக்கும். திரைப்பட கலை ஞர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி உண்டு. பழைய வழக்குகள் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தலைதூக்கும். சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். சிலர் வீட்டை புதுப்பிக்கலாம். காது,மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும். பெண்க ளுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும்.12.9.2023 இரவு11 மணிமுதல் 15.9.2023 பகல் 11.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். பொறுமை, நிதானத்துடன் இருக்கவேண்டும். பிரதோஷத்தன்று இளநீர் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
4.9.2023 முதல் 10.9.2023 வரை
ஆரவாரமான வாரம்.ராசிக்கு 5, 10-ம் அதிபதி சுக்ரனின் சமசப்தம பார்வை இருப்பதால் கூட்டுத் தொழில் சிறப்படையும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். அலுவலகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை விஷயத்தில் நல்லவை நடை பெறும். தம்பதிகளிடம் நெருக்கம் கூடும். காதல் துளிர்க்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் விரைவில் நீங்கும். கடன்கள் படிப்படியாக குறையும். தன் நம்பிக்கை தைரியம் கூடும். ஏழரைச்சனியின் ஆதிக்கம் குறையும். கோட்சார கிரக நிலை மெதுமெதுவாக மாறிக்கொண்டு வருவதால் வெகு விரைவில் நிலைமை சீராகும். 4-ம்மிடத்தில் நிற்கும் குரு வக்ரம் அடைவதால் வெளிநாட்டுப் பயணம், சொத்துக்கள் மீதான பத்திரப் பதிவு ஒத்திப்போகலாம். பணம் கொடுக்கல், வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.நண்பர்களுக்காக கடன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். குடும்ப நிர்வாக செலவு மற்றும் உறவுகளின் இல்ல சுபச்செலவு என செலவுகளின் பட்டியல் கூடும். நவகிரக சுக்ரனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிபலன்
28.8.2023 முதல் 3.9.2023 வரை
சிரத்தையுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி மற்றும் தன ஸ்தான அதிபதி சனி வக்ரம் பெற்று அஷ்டமாதிபதி சூரியனின் பார்வையில் இருப்பதால் முக்கியமான முடிவுகளில் கொடுக்கல்,வாங்கலில் சிரத்தை தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். விலகிய சொந்தங்கள் மீண்டும் வந்து சேருவார்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்சியை அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும்.பெண்கள் கணவரிடம் வீண் விவா தத்தை தவிர்க்கவும். வாழ்க்கை துணையின் வைத்தியச் செலவு குறையும். புதிய தொழில் முயற்சிகள் ஒப்பந்தங்களை ஒத்தி வைப்பது நலம். பெண்கள் புதிய ஆடம்பர ஆடைகள் நகைகள் வாங்கி மகிழ்வார்கள்.திருமண முயற்சிகள் சாதகமாகும். வயோதிகர்கள் பேரக் குழந்தை களுடன் மிகுந்த ஆனந்தமாக பொழுதை கழிப்பார்கள். குடியிருப்புகளில் இருக்கும் வாடகை தாரர்கள் மாறுவார்கள்.நண்பர்களி டமிருந்து விலகி இருக்க வேண்டும். பிரதோ ஷத்தன்று சந்தன அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிபலன்
21.8.2023 முதல் 27.8.2023 வரை
சுமாரான வாரம். ராசியை வக்ரம் பெற்ற 5, 10-ம் அதிபதி சுக்ரன் பார்ப்பதால் குலத் தொழிலில் இருப்பவர்கள் தந்தையின் ஆலோச னைகளைக் கேட்டு அதன்படி நடப்பது அவசியம். சிலருக்கு தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும்.அஷ்டமாதிபதி சூரியன் வலுப்பெற்று ராசி அதிபதி சனியைப் பார்ப்பதால் ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். தள்ளி வைத்த அறுவை சிகிச்சை தற்போது செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். புதிய வழக்குகள் உருவாகும். பழைய வழக்குகள் விசாரணைக்கு வரும். அரசியல்வா திகள் தேவையற்ற விவாதத்திலிருந்து சற்று விலகிச் செல்லவும். வீண் அவமானம் தேடி வரும் என்பதால் சூரியன் சிம்மத்தைக் கடக்கும் வரை சர்ச்சைக்குரிய விசயத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. உத்தியோ கஸ்தர்களுக்கு விரும்பத்தகாத இடப்பெயர்ச்சி ஏற்படலாம். திருமணத்திற்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். இந்த வாரத்தில் சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். சில அசவுகரியம் இருந்தாலும் வாரம் முழுவதும் பல தடைகளையும் கடந்து வெற்றி உண்டாகும். கருட பஞ்சமியன்று கருட தண்டகம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
14.08.2023 முதல் 20.8.2023 வரை
விபரீத ராஜ யோகமான வாரம். அஷ்டமாதிபதி சூரியன் ஆட்சி பலம் பெறுவதால திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த வாரத்தினை பிரகாசமாக்கும். தொடர்ச்சியான லாபத்தால் அதிக முதலீடின்றி வியாபாரம் பெருகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். சிலர் அரசு வேலைக்கு முயற்சி செய்வார்கள்.
பல வழிகளில் வருமானம் வந்தாலும் உபரி பணம் கிடைக்காது. வியாபார பங்குதாரர்களுடன் வரவு, செலவு தொடர்பான மன பேதம் தோன்றும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற இடமாற்றத்தால் மன சஞ்சலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.16.8.2023 மாலை 4.58 முதல் 19.8.2023 காலை 5.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமான, பெரிய பணப் பரிவர்த்தனைகளுக்கான ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கவும். வாகனத்தை கவனமாக இயக்க வேண்டும். ஆடி அமாவாசையன்று அன்னதானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
07.08.2023 முதல் 13.8.2023 வரை
சாதாரண வாரம். 5,10-ம் அதிபதி சுக்ரன் வக்ர கதியில் அஷ்டமாதிபதி சூரியனுடன் சேர்ந்து ராசியை பார்ப்பதால் தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் நிறைவேறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்கு தாரர்கள் வெளியேறலாம்.வேலை இல்லாமல் திணறியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம். பொருளாதாரத்தில் யாருடைய கட்டுப்பாட்டிலாவது இருக்க நேரும். பொருளாதாரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும்.
தேவையில்லாத எண்ணங்கள், நிறைவேறாத செயலால் மன சஞ்சலமும் அமைதியற்ற நிலையும் ஏற்படும். உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியாக மாறும். சகோதர்களிடம் ஒத்துப் போக முடியாத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மருத்துவச் செலவு குறையும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சிந்தனையில் இருந்து விடுபட ஆடி வெள்ளிக்கிழமை சமயபுரம் மாரியம்மனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
அறிவாற்றலும், திறமையும் கூடும் வாரம். ராசிக்கு சூரியன் பார்வை இருப்பதால் உங்களின் முயற்சியும் விருப்பங்களும் நிறைவேறும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுடைய புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி அனைத்தையும் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் தென்படும். நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் அமையப் போகின்றது. உங்களின் செயலில் வேகமும் மனதில் புத்துணர்ச்சியும் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் சக்தியும் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் சுமூகமான உறவு உண்டாகும்.
இதுவரை நிலவிய மந்த நிலை மாறும். எங்கு சென்றாலும் உங்களுக்கு முதலிடம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகளை இந்த வாரம் நிறைவு செய்து மகிழ்வீர்கள். ராசிக்கு எட்டில் செவ்வாய் நிற்பதால் கோட்சார ரீதியான செவ்வாய் தோஷத்தால் திருமண வாய்ப்பு தடைபடலாம். மாணவர்கள் பெற்றோர்களின் அறிவுரையை மதிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆடிப் பெருக்கன்று சலவைத் தொழிலாளிகளுக்கு உதவவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
24.7.2023 முதல் 30.7.2023 வரை
அனுகூலமான வாரம்.ராசி அதிபதி சனிக்கு சுக்ரன், செவ்வாய் பார்வை இருப்பதால் பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களை ஒத்தி வைப்பது நல்லது.வாழ்க்கைத் துணை நண்பர்களின் உதவியால் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வி.ஐ.பி.க்கள் தொடர்பால் சில பிரச்சினைகள் முடிவுக்கு வரும். என்றோ, எப்போதோ வாங்கிப் போட்ட இடத்தில் இப்பொழுது கடன் பெற்று வீடு கட்டுவீர்கள். தொழிலில் ஏற்றம் அதிகரிக்கும். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலை தேடலாம்.அஷ்டமாதிபதி சூரியன் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.
நண்பர்கள் கூட்டாளிகளிடம் கொடுக் கல், வாங்கலில் நிதானமாக செயல்பட வும். சிலருக்கு கோட்சார ரீதியான திருமணத் தடை நீடிக்கும். நோய், போட்டி பொறாமை பாதிப்பு, கண் திருஷ்டி தோஷம் கூடும். அம்மன் கோவில் சூலாயுதத்தில் எலுமிச்சைப் பழம் குத்தி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
17.7.2023 முதல் 23.7.2023 வரை
திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும் வாரம். ராசிக்கு 7-ம்மிடத்தில் 6,9-ம் புதனும் அஷ்ட மாதிபதி சூரியனும் இணைந்து ராசியைப் பார்ப்பதால் திறமையை வெளிப்படுத்து வீர்கள். கவலைகள் விலகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் ஒத்து ழைப்பு உண்டாகும். தொழில் ரீதியான தொடர்பு அதிகரிக்கும்.
மனோதைரியம் அதிகரித்து எதையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள்.பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகமாகும்.புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய தொழில் துவங்கும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் விரைவில் கனிந்து வரும். ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். திருமணப் பேச்சுக்கள் நடக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். நிம்மதியான உறக்கம் உண்டாகும்.
20.7.2023 காலை 10.55 முதல் 22.7.2023 இரவு 11.40 வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. ஆடி வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
புத்தியை தீட்ட வேண்டிய வாரம். 6,9-ம் அதிபதி புதன் சம சப்தம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்க்கிறார். அஷ்டமாதிபதி சூரியன் 6ல் மறைவு. அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சுக்ரன் சேர்க்கை என கிரக சம்பந்தங்கள் சாதகத்தையும், பாதகத்தை யும் சேர்த்து வழங்குவதால் விழிப்புடன் செயல்பட வேண்டும்.பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.
சிலர் குடும்ப உறவுகளுக்காக கடன் பட நேரும். சிலர் ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைக்கலாம்.பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தொடரும். அரசு ஊழியர்களுக்கு விரும்பத்தகாத ஊருக்கு வேலைமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள்.
காதல் விவகாரங்கள் வம்பு, வழக்கை ஏற்படுத்தலாம். வெகு சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட ஆதாயம் உண்டு. தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார்கள். உடல் நிலை சற்று மந்தமடையும். அமாவாசையன்று புனித நீர் நிலைகளில் நீராடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406