என் மலர்
மகரம் - வார பலன்கள்
மகரம்
வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை
7.9.2025 முதல் 13.9.2025 வரை
திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும் வாரம். ராசிக்கு சுக்கிரன் பார்வை உள்ளது. இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். கையிருப்பு கணிசமாக உயரும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம், அழகிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளுக்கான கல்விச் செலவு அதிகரிக்கும். ஆண்களுக்கு மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.
சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் தொல்லைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. சுய ஜாதக ரீதியான தோஷங்களால் ஏற்பட்ட திருமண தடை விலகும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கையுடன் சந்திர கிரகண தோஷம் ஏற்படுகிறது. உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். தினமும் சிவபுராணம் படித்து நவகிரகங்களை வழிபடுவது சிறப்பாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை
31.8.2025 முதல் 6.9.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். அஷ்டம ஸ்தானத்தில் கிரகணச் சேர்க்கை ஏற்படுகிறது. பிறர் பிரச்சினைக்காக வீண் பழிகளைச் சுமக்க வேண்டிய நேரம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் செய்வதை தவிர்க்கவும். சேமிப்பு கரையும். ஆரோக்கிய தொல்லை ஏற்படும். உரிய மருத்துவ ஆலோச னைகளை மேற்கொள்வது நல்லது.
கடின வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். நிதானமாக பேசினால் நன்மை உண்டு. பணமுடைய மற்றும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிலருக்கு அதிக செலவு காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சிலருக்கு மறுமணத்திற்கு வரன் அமையும். பிரதோஷ நாட்களில் கரும்புச்சாறு அபிஷேகம் செய்து நந்தி பகவானை வழிபட்டால் மனதிற்கு மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் அதிகமாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை
தடைகள் தகர்த்து வெற்றி நடைபோடும் வாரம்.ராசிக்கு புதன் சுக்கிரன் பார்வை உள்ளது. புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதில் புதிய தெம்பு, தைரியம் குடிபுகும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.உங்களை அலங்கரித்துக் கொள்வதி லும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கு வதிலும் விருப்பம் கூடும். குடும்ப உறவுகளின் செயல்களில் நன்மை இருக்கும். கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனிபோல் விலகும்.துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் ஆர்வம் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு கூடும் 25.8.2025 அன்று காலை 8.29 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணிச் சுமை அதிகரிக்கும். உத்தி யோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னே ற்றத்துக்கு உதவும் விநாயகர் சதுர்த்தி அன்று பால் கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபடவும்.
மகரம்
வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை
17.8.2025 முதல் 23.8.2025 வரை
திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும் வாரம். ராசிக்கு புதன், சுக்ரன் பார்வை உள்ளது. அனைத்து முயற்சிகளும் வெற்றியாக அமையும். மனதில் தைரியம் குடிபுகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் நட்பு கரம் நீட்டுவார்கள். வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பீர்கள். பொருளாதார பற்றாகுறை அகலும் பூர்வீகச் சொத்துக்களின் மூலம் வருமானம் கிடைக்கும்.
தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். தடை, தாமதம், இன்னல்கள் நீங்கி அற்புதமான சுப பலன்கள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஆன்லைன் சாதனங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். 22.8.2025 அன்று காலை 12.16 மணிக்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். ஸ்ரீ கால பைரவரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை
10.8.2025 முதல் 16.8.2025 வரை
வெற்றிமேல் வெற்றி கிடைக்கும் வாரம். உப ஜெய ஸ்தானமான 3ம் இடத்திற்கு சனி, செவ்வாய் சம்மந்தம் உள்ளது. மனதில் நிறைவும், நெகிழ்சியும் உண்டாகும். பூர்வீக சொத்தை பிரிப்பதில் உடன் பிறந்தவர்களுடன் நிலவிய சர்ச்சைகள் விலகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள்.
திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும். பங்குச் சந்தையில் புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பட்ட வேதனைகளும் சோதனைகளும், சாதனைகளாக மாறும். தந்தையின் ஆலோசனை பயன் தரும்.
பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். திருமணத் தடை அகலும். அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். வழக்குகளில் வெற்றி உறுதி. அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறையினரும் பிரபலமடைவார்கள். பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை
3.8.2025 முதல் 9.8.2025 வரை
முத்தாய்பான முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசிக்கு சூரியன் புதன் பார்வை உள்ளதால் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். ஆன்ம பலம் பெருகும். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான சாதகமான பலன்களும் நடக்கும். வேற்று இனத்தவரின் ஆதரவு கிடைக்கும்.
பண வரவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் சாதனை படைப்பார்கள். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். அரசாங்க வேலைக்கு அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். வீடு, வாகன யோகம் சிறப்பாக அமையும்.
சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு புத்திக் கூர்மை கூடும். அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். வரலட்சுமி நோன்பு நாட்களில் அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை
20.7.2025 முதல் 26.7.2025 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி மற்றும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதியான சனிபகவான் முயற்சி ஸ்தானத்தில் வக்ரமடைகிறார். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகமாகும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி பெறும் காலம் விரைவில் கனிந்து வரும்.
வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். கையிருப்புப் பொருள்களைப் பத்திரப்படுத்தவும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். தன ஸ்தானத்திற்கு குருப்பார்வை இருப்பதால் இயல்பான பணியில் விழிப்புணர்வுடன் செயல் பட்டால் பெரிய இழப்புகள் ஏற்படாது.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் குறையும். துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயல வேண்டும். தினமும் சரபேஸ்வரர் மூல மந்திரம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை
13.7.2025 முதல் 19.7.2025 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி மற்றும் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதியான சனிபகவான் முயற்சி ஸ்தானத்தில் வக்ர மடைகிறார். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகமாகும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி பெறும் காலம் விரைவில் கனிந்து வரும்.
அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்காதீர்கள். வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். கையிருப்புப் பொருள்களைப் பத்திரப்படுத்தவும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் இயல்பான பணியில் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் பெரிய இழப்புகள் ஏற்படாது.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் குறையும். துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயல வேண்டும். தினமும் சரபேஸ்வரர் மூல மந்திரம் பழக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை
6.7.2025 முதல் 12.7.2025 வரை
மனதிற்கு இதமளிக்கும் வாரம். ராசி அதிபதி சனி முயற்சி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். உங்களின் செயல்பாடுகள் தனித்துவம் மிளிரும். இடப் பெயர்ச்சி எண்ணம் மிகுதியாகும்.வெளிநாடு சென்றவர்கள் பூர்வீகம் திரும்பலாம். சிலருக்கு ஞாபக குறைவு ஏற்படலாம். வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும்.
புதிய வியாபார யுக்திகளால் விற்பனை அதிகமாகும். சிலருக்கு புதிய தொழில் கிளைகள் துவங்கும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும். கடன்களால் பாதிப்பு ஏற்படாது.
அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாகவே அமையும். முக்கிய ஆவணங்கள் இல்லாத சொத்திற்கு உரிய ஆவணங்கள் கிடைக்கும். பெண்களுக்கு கணவரின் ஒற்றுமை மகிழ்ச்சியை அதிகரிக்கும். சிலர் காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. சுபமங்கல காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். பவுர்ணமி அன்று காலபைரவரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 29.6.2025 முதல் 5.7.2025 வரை
29.6.2025 முதல் 5.7.2025 வரை
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். மகர ராசிக்கு அஷ்டமாதி பதியான சூரிய பகவான் மற்றொரு மறைவு ஸ்தானமான 6ம் இடத்தில் மறைந்திருப்பது விபரீத ராஜயோக அமைப்பாகும். பெருந்தன்மையான செயல்களால் உங்கள் மதிப்பு உயரும்.
கூடுதல் பணத்தை வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய பங்கு பத்திரத்தில் சேமிப்பீர்கள். நீண்ட காலமாக அனுபவித்து வந்த கடன் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடுவீர்கள். தொழில் ரீதியான லட்சியங்களை அடைவதற்கான சிந்தனையில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கூடும். அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். திருமணம், குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும்.
1.7.2025 அன்று மாலை 3.24 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தீய சிந்தனைகள், டென்ஷன் ஏற்படும். தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனதை ஒரு நிலைப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத் தொல்லையில் இருந்து விடுபட முடியும். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை
22.6.2025 முதல் 28.6.2025 வரை
இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும் வாரம்.ராசிக்கு புதன் பார்வை இருப்பதால் தடை தாமதமான முயற்சிகள் காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும். சொத்து, சுகம், தடையில்லாத வருமானம் என வாழ்வில் புது விதமான மாற்றங்கள் அதிகரிக்கும்.
இடப்பெயர்ச்சி செய்ய நேரும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். செய்தி, தகவல் தொடர்பு, ஊடகங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியைவிட வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபாடு உண்டாகும். சிலர் மைத்துனருடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். பெண்கள், அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல வாரம். அமாவாசையன்று உடல் ஊனம் உள்ளவர்களின் தேவையறிந்து உதவவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை
15.6.2025 முதல் 21.6.2025 வரை
தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சனி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கவுரவமான தோற்றம் உண்டாகும். கடமை தவறாமல் நீதி, நேர்மையுடன் வாழ்வதில் விருப்பம் ஏற்படும். வேற்று மொழிப் புலமை உண்டாகும். இடப் பெயர்ச்சி, வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் வரலாம். இளைய சகோதர, சகோதரிகளால் சிறு பொருள் இழப்பு உண்டாகலாம். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும்.
அவர்களின் அன்பும், ஆசிர்வாதமும் கிடைக்கும். சிலருக்கு புதிய நிலம் வாங்கும் அமைப்பு உள்ளது. தாமதமான நிலுவையில் உள்ள பணம் வசூலாகும். சிறிய அளவிலான தொழில்களைச் செய்பவர்கள். அதிக முதலீட்டில் தொழிலை விரிவு படுத்தலாம். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு சொந்த தொழில் துவங்கலாம்.
சிலர் வீட்டை பழுது பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சிலர் வாகனத்தை மாற்றலாம். வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை ஏற்படும். தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






