என் மலர்
மகரம் - வார பலன்கள்
மகரம்
வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை
22.6.2025 முதல் 28.6.2025 வரை
இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும் வாரம்.ராசிக்கு புதன் பார்வை இருப்பதால் தடை தாமதமான முயற்சிகள் காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும். சொத்து, சுகம், தடையில்லாத வருமானம் என வாழ்வில் புது விதமான மாற்றங்கள் அதிகரிக்கும்.
இடப்பெயர்ச்சி செய்ய நேரும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். செய்தி, தகவல் தொடர்பு, ஊடகங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியைவிட வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபாடு உண்டாகும். சிலர் மைத்துனருடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். பெண்கள், அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல வாரம். அமாவாசையன்று உடல் ஊனம் உள்ளவர்களின் தேவையறிந்து உதவவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை
15.6.2025 முதல் 21.6.2025 வரை
தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சனி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கவுரவமான தோற்றம் உண்டாகும். கடமை தவறாமல் நீதி, நேர்மையுடன் வாழ்வதில் விருப்பம் ஏற்படும். வேற்று மொழிப் புலமை உண்டாகும். இடப் பெயர்ச்சி, வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் வரலாம். இளைய சகோதர, சகோதரிகளால் சிறு பொருள் இழப்பு உண்டாகலாம். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும்.
அவர்களின் அன்பும், ஆசிர்வாதமும் கிடைக்கும். சிலருக்கு புதிய நிலம் வாங்கும் அமைப்பு உள்ளது. தாமதமான நிலுவையில் உள்ள பணம் வசூலாகும். சிறிய அளவிலான தொழில்களைச் செய்பவர்கள். அதிக முதலீட்டில் தொழிலை விரிவு படுத்தலாம். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு சொந்த தொழில் துவங்கலாம்.
சிலர் வீட்டை பழுது பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சிலர் வாகனத்தை மாற்றலாம். வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை ஏற்படும். தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
08.06.2025 முதல் 14.06.2025 வரை
புதிய முயற்சிகள் மேற்கொள்ள சாதகமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன். முடிவெடுக்க முடியாமல் திணறிய முக்கிய செயல்களுக்கு இந்த வாரத்தில் தெளிவான முடிவு எடுப்பீர்கள். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவு செய்வீர்கள். குல கெளரவமும் வாழ்வா தாரமும் உயரும். தாய், தந்தையால் ஆதாயம் உண்டு. குடும்ப பெரியவர்களின் ஆலோசனைக்கு செவிசாய்ப்பீர்கள்.
தாய்மாமாவுடன் இணைந்து கூட்டுத் தொழில் துவங்கும் வாய்ப்பு உள்ளது. வீடு, வாகனம், அதிகார பதவி என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் அகலும். குடும்பத்தை, குழந்தைகளை காப்பது பற்றியும் சிந்தனை கூடும். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் மனைவி மூலம் அதிர்ஷ்ட பணம், சொத்து கிடைக்கும் அல்லது வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகம் உண்டு.
வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறலாம். சிலர் வாகனத்தை மாற்றலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. மூத்த சகோதர ஆதாயமும் உண்டு. பொருள் வரவில் நிலவிய ஏற்ற இறக்கம் சமன்படும். நவகிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
01.06.2025 முதல் 07.06.2025 வரை
சுபிட்சமான வாரம். சுக ஸ்தானத்தில் சுக்ரன். சுகமான வாழ்க்கையை அனுபவிக்க கூடிய வகையில் வாழ்வாதாரம் உயரும். அழகு ஆடம்பர பொருட்கள் சேர்ப்பதில் இன்பம் கூடும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சாமர்த்தியமான இனிமையான பேச்சால் அனைவரையும் விரும்பச் செய்வீர்கள்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். சம்பாதித்த பணத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற ஞானம், மென்மேலும் அதிகமாகும். உங்கள் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் உங்கள் மறைமுக எதிரிகளே காரணமாக அமைவார்கள். சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். வீடு கட்டும் பணி துரிதமடையும். பங்கு பத்திர ஆதாயம் உண்டு.
தந்தைக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். அரசியல் ஆதாயம் உண்டு. 1.6.2025 அன்று இரவு 9.36 முதல் 4.6.2025 காலை 7.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சை குறைத்து அமைதி காப்பது நல்லது. பண உதவி செய்வது, பண உதவி பெறுவது ஆகியவற்றை தவிர்க்கவும். பொறுப்புடன் நடந்து கொண்டால் இந்த வாரம் சிரமங்களைத் தவிர்க்கலாம். ஸ்ரீ வித்யா லட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை
25.05.2025 முதல் 31.05.2025 வரை
சுமாரான வாரம். ராசிக்கு செவ்வாய் பார்வை. வீடு, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்ட வக்கீல்கள், ஆசிரியர்கள், விற்பனை பிரதிநிதிகள் ஏற்றம் பெறுவார்கள். பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான நிலை நீடிக்கும்.
சிலர் போலியான விளம்பரங்களை நம்பி நல்ல வேலையை தவறவிடுவார்கள். இந்த வாரத்தில் திருமணம் நிச்சயிக்க வாய்ப்பு உள்ளது. மூத்த சகோதர சகோதரிக்கு வேலை கிடைக்கும். குடும்பத் தேவைக்கு ஏற்ற சரளமான பணப்புழக்கம் உண்டு. மாமியார், மாமனார் புனித யாத்திரை செல்வார்கள். இந்த கால கட்டத்தில் புதிய வீடு, மனை வாங்கும் அமைப்பும் உள்ளது.
கண் திருஷ்டி அதிகரித்து சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். பெண்களுக்கு பிள்ளைகளால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். சிலருக்கு ஆன்மீகத் தலைவர் அல்லது ஒரு மூத்த அரசியல் வாதிகளின் நட்பு கிடைக்கும் சிலருக்கு வேற்று மொழி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். அமாவாசையன்று எள்ளுருண்டை தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
18.05.2025 முதல் 24.05.2025 வரை
மனக் கவலை தீரும் வாரம். ராசிக்கு செவ்வாயின் 7ம் பார்வை இருப்பதால் புதிய தொலைநோக்கு பார்வையுடன் செயல் படுவீர்கள். அனைத்து செயல்களிலும் உங்கள் திறமை மிளிரும். வேலையில் மெமோ வாங்கியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அன்பும், பாராட்டும் நிம்மதியை தரும். வேற்று, இன மத நண்பர்கள் அறிமுகம் உண்டாகும்.
சிலருக்கு வயல், தோட்டம் இவற்றை வாங்கும் யோகம் கிட்டும். ஞாபக சக்தி அதிகமாகும். அடிக்கடி இடப்பெயர்ச்சி நடக்கும், உடன் பிறந்தவர்களால் மிகுதியான விரயத்தை சந்திப்பீர்கள். தம்பதிகள் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறும். தொழிலை விரிவுபடுத்த, ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும்.
புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். கணவன் மனைவியிடையே புரிதல் ஏற்படும். திருமணத் தடை அகலும். மறுவிவாகம் நடக்கும். கிரகங்களின் தாக்கம் குறைய பறவைகளுக்கு தானியம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை
11.5.2025 முதல் 17.5.2025 வரை
தொட்டது துலங்கும் வாரம். ராசிக்கு செவ்வாயின் சம சப்தம பார்வை. சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினால் மேன்மையான பலன்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சொத்து வாங்குவது, விற்பது போன்ற முக்கிய பணிகள் நடக்கும்.
ரியல் எஸ்டேட் தொழில் துறையினருக்கு அபிவிருத்தி உண்டு. கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.
பெண்களுக்கு கணவரிடம் இருந்து எதிர்பாராத வெளிநாட்டு பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும். சிலர் ரிலாக்சாக மன மாற்றத்திற்காக சொந்த ஊர் சென்று உற்றார் உறவுகளைக் கண்டு வரலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் குறையும். கடன் தொல்லை குறையும். சித்ரா பவுர்ணமியன்று கூலித் தொழிலாளிகளின் தேவையறிந்து உதவவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை
4.5.2025 முதல் 10.5.2025 வரை
முன்னேற்றமான வாரம். முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் அவரவர் வயதிற்கேற்ற நல்ல விஷயங்கள் இப்போது நடக்கும். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். நீண்ட காலமாக அனுபவித்து வந்த மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. அஷ்டமாதிபதி சூரியன் உச்சம் பெற்றதால் கடின உழைப்பே லாபத்தை ஈட்டித்தரும். நன்மக்கள் பேறும் உண்டு. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு.
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சுபகாரியங்களுக்கு கடன் வாங்க நேரும். பூர்வீகச் சொத்து விற்பனையைத் தள்ளிப் போடவும். உங்கள் உடன்பிறப்புகள் பண உதவி கேட்கலாம். சிலருக்கு மத மாற்ற சிந்தனை மேலோங்கும். போட்டி, பொறாமை, எதிரி, கடன் இவற்றின் பாதிப்புகள் குறையும். 5.5.2025 அன்று மதியம் 2.01 மணி முதல் 8.5.2025 அன்று நள்ளிரவு 12.57 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஜாமீன் கொடுப்பதையும், பெறுவதையும் தவிர்க்கவும். சிலருக்கு வேலையாட்களால் சிறு மன சஞ்சலம் உண்டாகும். ஸ்ரீ கருமாரியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை
27.4.2025 முதல் 03.5.2025 வரை
நிதானிக்க வேண்டிய வாரம். ராசிக்கு செவ்வாய் பார்வை. அஷ்டமாதிபதி சூரியன் 4ம் இடமான சுக ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பண பர ஸ்தானங்கள் சிறப்பாக இயங்குவதால் நல்ல வசதி வாய்ப்புகள் உருவாகும். பண வசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும்.
திருமண முயற்சியில் வெற்றி உண்டு. தம்பதிகள் அன்பாக ஒருமித்த கருத்துடன் வாழ்வார்கள். இந்த வாரத்தில் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் அற்புதமாக நிறைவாக நடக்கும். ஆனால் சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேகமான வார்த்தைகளை தவிர்த்து விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும்.
ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். முக்கிய பேச்சு வார்த்தைகளை 15 நாட்களுக்கு ஒத்திப் போடவும். பிறரின் விஷயங்களில் தேவை இல்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வீண் அவப்பெயரும், சங்கடங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஸ்ரீ கந்த குரு கவசம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை
20.4.2025 முதல் 26.4.2025 வரை
அனுகூலமான வாரம். ராசிக்கு செவ்வாயின் பார்வை இருப்பதால் ஏழரைச் சனியால் இழந்த இன்பங்களை மீட்டெடுப்பீர்கள். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மாறும். இது நாள் வரை பட்ட கடன் மற்றும் அவமானங்களில் இருந்து மீள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இழுத்தடித்த வம்பு, வழக்குகள் முடிவுக்கு வரும். சிலருக்கு பயணங்களால் அயர்ச்சியும், சோர்வும் உண்டாகும். வாழ்க்கைத் துணை உங்களை புரிந்து கொள்வார். பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என சுப செலவுகள் அதிகரிக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ஊர் மாறலாம் அல்லது வீடு மாறலாம். போலி பத்திரம், போலி கையெழுத்து போன்றவற்றால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். சிலருக்கு மாமனாருடன் மன பேதம் உண்டாகும். பெண்களுக்கு தாய் வழிச் சொத்து பிரச்சனை முடிவிற்கு வரும். சிலர் ஆடம்பர வீடு கட்டி குடியேறுவார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை, காளியை வழங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை
13.4.2025 முதல் 19.4.2025 வரை
மட்டற்ற மகிழ்ச்சியோடு நல்ல மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும் வாரம். ராசிக்கு நீச்ச செவ்வாயின் பார்வை. நல்ல செய்தி தேடி வரும். வாழ்க்கைத் துணையால் செல்வ நிலை உயரும், செல்வாக்கு மேலோங்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். நெருங்கிய உறவில் திருமண முயற்சி கைகூடும்.
வீடு, மனை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களை திக்கு முக்காடச் செய்யும். வாரிசுகள் கல்வி, வேலை விசயமாக இடம் பெயர நேரும். தொழில் துறையில் சில புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற நேரம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். முன்னோர் வழிச் சொத்துக்களில் முறையான பங்கு கிடைக்கும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். ஆரோக்கியம் சீராகும். வயது முதிர்ந்தவர்களின் தேவைக்கு உதவவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை
06.4.2025 முதல் 12.4.2025 வரை
குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் வாரம். ராசிக்கு நீச்ச செவ்வாயின் பார்வை இருப்பதால் வருமான பற்றாக்குறை அகலும். குடும்ப உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும். வாங்கிய கடனை திருப்பி கொடுப்பீர்கள். கொடுத்த கடனை வசூலிப்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதியதாக கட்டிய வீடு வாங்குவார்கள் அல்லது கட்டுவார்கள். சிலருக்கு புதிய இரண்டு, நான்கு சக்கர வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
பலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். மேலதிகாரிகள் உங்களிடம் அதிகப் பணிச்சுமையை திணிக்கலாம்.பல வருடங்களாக முறைப்படுத்த முடியாமல் கிடந்த தாய் வழிச் சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். 8.4.2025 அன்று காலை 7.54 மணி முதல் 10.4.2025 அன்று இரவு 7.04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவுகளிம் உடல் சோர்வு, அலுப்பு ஏற்படும். பணியில் சிறு தொய்வு ஏற்படும். வேலையில், தொழிலில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். வீட்டில் துளசிச்செடி வைத்து வணங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






