என் மலர்
மகரம் - வார பலன்கள்
மகரம்
வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை
30.3.2025 முதல் 5.4.2025 வரை
மகிழ்ச்சியான வாரம்.ராசிக்கு குரு மற்றும் செவ்வாய் பார்வை இருப்பதால் பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். பேச்சாற்றலால் சிக்கலான காரியங்களைக் எளிதாக சாதிப்பீர்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள் .குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்க்கை ஏற்படும்.அந்த புது வரவு களத்தி ரமாகவோ குழந்தையாகவோ இருக்கலாம். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலை அகலும். மாற்றம் ஒன்றே மாறாது என்பது போல் மாற்றக் கூடிய அனைத்தையும் மாற்றும் ஆர்வம் ஏற்படும்.
சிலர் தொழிலை மாற்றுவார்கள் அல்லது தொழில் முறையை மாற்றுவார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையால் விரயங்களை சந்திக்க நேரும். அவ்வப்போது சிற்சில வாக்குவாதங்கள் பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை பாதிக்காது. வாகன வகையில் செலவுகள், விரயங்கள் உண்டாகலாம்.பிள்ளைகளின் கடமைகளை செய்து முடிப்பீர்கள். திருமணத்திற்கான வரன்கள் தேடி வரும். லஷ்மி நரசிம்மரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
30.3.2025 முதல் 05.4.2025 வரை
மகிழ்ச்சியான வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாய் பார்வை இருப்பதால் பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். பேச்சாற்றலால் சிக்கலான காரியங்களைக் எளிதாக சாதிப்பீர்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்க்கை ஏற்படும். அந்த புது வரவு களத்திரமாகவோ குழந்தையாகவோ இருக்கலாம்.
பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலை அகலும். மாற்றம் ஒன்றே மாறாது என்பது போல் மாற்றக் கூடிய அனைத்தையும் மாற்றும் ஆர்வம் ஏற்படும். சிலர் தொழிலை மாற்றுவார்கள் அல்லது தொழில் முறையை மாற்றுவார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையால் விரயங்களை சந்திக்க நேரும். அவ்வப்போது சிற்சில வாக்குவாதங்கள் பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை பாதிக்காது. வாகன வகையில் செலவுகள், விரயங்கள் உண்டாகலாம். பிள்ளைகளின் கடமைகளை செய்து முடிப்பீர்கள். திருமணத்திற்கான வரன்கள் தேடி வரும். லஷ்மி நரசிம்மரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை
23.3.2025 முதல் 29.3.2025 வரை
கனவுகள் நனவாகும் வாரம். ஏழரைச் சனி முடிவிற்கு வருவதால் மலை போல் வந்த துன்பம் பனி போல விலகும். காரியசித்தி உண்டாகும். கடமைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். நெடுந்தூரத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள்.
தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகள் நண்பர்களிடம் அமைதிப் போக்கினை கையாள்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மைகள் நடக்கும். தம்பதிகள் தங்கள் பிரச்சி னைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்வதால் ஊடல் கூடலாகும். வீடு, வாகனம் போன்ற சுப செலவுகளுக்கு பெற்றோரிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும். உடல் தொந்தரவு அகலும்.மன அமைதியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்க அமாவாசையன்று கோவில்களில் உலவாரப் பணிகளில் ஈடுபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை
16.3.2025 முதல் 22.3.2025 வரை
விவேகத்துடன் செயல்பட்டு இலக்கை அடையும் வாரம்.ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை. ஏழரைச் சனி முடியும் தருவாயில் உள்ளது.நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள்.புதிய முயற்சிகள் பலிதமாகும். தனித் திறமைகள் மிளிரும். வேகம் குறைந்து, விவேகம் கூடும்.சிலர் வீடு, வாகனம், திருமணம் போன்ற சுப செலவிற்காக கடன் பெறலாம். பண நெருக்கடிகள் அகலும். குடும்ப உறவுகளிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும்.
பணியாளர்களின் திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். திருமண முயற்சியில் நல்ல தகவல்கள் கிடைக்கும். சிலரின் மறுமண முயற்சி வெற்றி தரும்.புத்திர பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். படித்த படிப்புக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். பிள்ளைகள் நலனில் ஆர்வம் அதிக ரிக்கும். ஆரோக்கியம் சீராக இருப்பதால் வைத்தியச் செலவு குறையும். மாமன், மைத்துனருடன் ஏற்பட்ட விரிசல் சீராகும். சனிக்கிழமை நவ கிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை
9.3.2025 முதல் 15.3.2025 வரை
மாற்றங்களால் ஏற்றம் பெரும் வாரம். ஏழரைச் சனி முடிவிற்கு வருகிறது. சிறு தொழில் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு தொழிலில் முன்னேற்றமும் உண்டாகும். அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். மற்றவர்களின் மனதை புண்படாமல் பேசி குடும்ப உறுப்பினர்களை சமாளிப்பீர்கள். சிலருக்கு மரு மகன், மருமகள் வரும் வாய்ப்புள்ளது. தாய் தந்தை, உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். பெண்களுக்கு புதிய தொழில் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். திரைக் கலைஞர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தேடி வரும்.
சிலருக்கு வாரிசு அடிப்படையிலான தந்தையின் அரசு வேலை கிடைக்கும். 12.3.2025 அன்று காலை 2.15 மணி முதல் 14.3.2025 அன்று மதியம் 12.56 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நெருக்க மானவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கவும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். மாசி மகத்தன்று 7 முறை சிவபுராணம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை
02.03.2025 முதல் 08.03.2025 வரை
குடும்ப தேவைகள் நிறைவேறும் வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாய் பார்வை. மேலும் ஏழரைச் சனியிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கப் போகிறது. அதிர்ஷ்டம், லாட்டரி, போட்டி பந்தயங்கள் சாதகமாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவார்கள். இழந்த அரசுப் பணி மீண்டும் கிடைக்கும்.
தொழில், உத்தியோகத்தில் திட்டமிட்டு வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்துகள் வாங்கும் சிந்தனை உருவாகும். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்க திட்டமிடுவார்கள்.
சிலருக்கு கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உண்டாகும். திருமணத்திற்கு நல்ல வரன் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பெற்றோர்களின் மணிவிழா என வீட்டில் தொடர் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.
கருவுற்ற பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். முன்னோர்களுக்கு முறையான பித்ருக் கடன் தீர்க்கும் வாய்ப்புகள் உருவாகும். உயர் கல்வியில் நிலவிய மந்த நிலை மாறும். பஞ்சமி திதியில் ஸ்ரீ வாராகி அம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை
23.2.2025 முதல் 01.03.2025 வரை
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். விரைவில் ஏழரைச் சனி முடிவிற்கு வரப்போகிறது. நீண்ட காலமாக தீர்க்க முடியாத சில பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். நல்ல வேகமும், விவேகமும் உண்டாகும்.
பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவருக்கும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள், இன்னல்கள் மறையும்.
உடன் பிறந்தவர்கள் உங்கள் முயற்சிக்கு தோள் கொடுப்பார்கள். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வட்டிக்கு வட்டி கட்டி வந்த மீள முடியாத கடன் பிரச்சனைகள் கூட தீரும்.
அநாவசிய ஆடம்பர செலவு செய்து விட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். நம்பிக்கையான புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மகா சிவராத்திரியன்று பால் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை
16.2.2025 முதல் 22.2.2025 வரை
எதிர்பாராத தன லாபம் உண்டாகும் வாரம். ராசிக்கு குரு பார்வை. தன ஸ்தானத்தில் சூரியன், சனி, புதன் சேர்க்கை. ஏழரைச் சனி முடிவிற்கு வருவதால் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தவர்களுக்கு கூட நம்பிக்கையை அதிகரிக்கும் விதமான மாற்றங்கள் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருந்த நோய்கள் சாதாரண வைத்தியத்தில் குணமாகும். பூமி, மனை, வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
காணாமல் போன நகை, பணம் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சனைகள் குறையத் துவங்கும். தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும்.மேலும் சுப பலனை அதிகரிக்க கால பைரவரை அரளி மாலை அணிவித்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை
9.2.2025 முதல் 15.2.2025 வரை
திட்டமிட்ட செயல்களால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். 5,10-ம் அதிபதி சுக்ரன் உச்சம். விரும்பத்தகுந்த மாற்றம் கிடைக்கும். யோகமான பலன்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து மோதல்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.மன மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் இருப்பீர்கள். வீடு, மனை வாகனம் வாங்குவதில் மாமியாரின் பங்களிப்பு இருக்கும்.பெண்களுக்கு விலை உயர்ந்த ஆபரண, ஆடை என சுப விரயம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாலிப வயதினரின் திருமணக் கனவுகள் நனவாகும் நண்பர்கள், உறவினர்கள் நட்பு, சந்திப்பால் உற்சாகம் அதிகரிக்கும்.
உயர் ஆராய்ச்சி கல்வி பயில்வோருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். சிலரின் மறுமண முயற்சி கை கொடுக்கும். முதலாளிகளுக்கு வேலை யாட்களால் அனுகூலம் உண்டு. 12.2.2025 அன்று மாலை 7.35 மணி முதல் 15.2.2025 அன்று காலை 5.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு கண், காது சார்ந்த பிரச்சினைக்கு மருத்துவம் செய்ய நேரும். அதிக கோபம் மற்றும் மன அழுத்த பாதிப்பு உருவாகும். தைப் பூசத்தன்று முருகனுக்கு விபூதி அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை
2.2.2025 முதல் 8.2.2025 வரை
தடைகள் விலகும் வாரம்.ராசிக்கு குரு மற்றும் வக்ர செவ்வாயின் 8-ம் பார்வை.நல்ல சம்பவங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படும். பரிபூரண வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டா கும். கடந்த ஏழரை ஆண்டுக ளாக உடலாலும், உள்ளத்தாலும் வேதனைப்பட்டு வந்த உங்களுக்கு இனி வெற்றிக்கனியை சுவைக்கும் வாய்ப்பு வரப்போகிறது. எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஆர்வம் மிகுதியாகும். துணிந்து சில முடிவுகளை எடுத்து முன்னேறுவீர்கள். பூர்வீகச் சொத்தை கொடுத்து விட்டு புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.சொத்து விற்பனையில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.
சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் உள்ளது. புத்திர பிராப்தம் உண்டாகும். உடல் நிலை தேறும்.ஆன்மீகம் சம்பந்தமான சுற்றுப் பயணம் செய்வீர்கள். புனித தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். குடும்ப உறவுகளிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்க வேண்டும். சனிக்கிழமை கால பைரவரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை
26.1.2025 முதல் 1.2.2025 வரை
தடைகள், தாமதங்கள், மனக்குழப்பம் விலகும் வாரம். ராசியில் சூரியன், புதன் சேர்க்கை. இது புத ஆதித்ய யோகம் என்றாலும் அஷ்டமாதிபதி சூரியனுடன் 6,9ம் அதிபதி புதன் சேருவது சற்று ஏற்ற இறக்கமான பலனை ஏற்படுத்தலாம்.தந்தையுடன் கருத்து வேறுபாடு அல்லது தந்தையால் நஷ்டம் உண்டாகும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் தலைக்கு வந்த துன்பம் தலைப்பா கையோடு சென்று விடும். ஆன்ம பலம் உண்டாகும். நினைத்ததை நினைத்தபடியே முடிப்பீர்கள்.சில நல்ல மாற்றங்கள் வரலாம். தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சீராகும்.
உறவுகளின் பகை மறையும். கர்ப்பிணி களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமண முயற்சிகள் சித்திக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். சகோதர, சகோதரிகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள். அரசு ஊழியர்களுக்கு சாதகமான இடப்பெயர்ச்சி உண்டு. சிறு வைத்தியச் செலவுகள் ஏற்படும். வழக்குகளில் புதிய திருப்பங்கள் உண்டாகும். தை அமாவாசையன்று பித்ருக்கள் நல்லாசி பெறவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை
19.1.2025 முதல் 25.1.2025 வரை
பொருளாதார மேன்மை உண்டா கும் வாரம். ராசிக்கு 2-ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி, சுக்ரன் சேர்க்கை.தன ஸ்தானத்தில் சனியும் சுக்ரனும் சேரும் இந்த கிரக அமைப்பு இனி 30 வருடம் கழித்து தான் மகர ராசியினருக்கு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், மூத்த சகோதரர் வகையில் ஆதரவும், அன்பும் கிடைக்கும். தந்தை வழி உறவு மேம்படும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து எண்ணிய பலனை அடைவீர்கள்.
வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரைஎதிர்பாராத தனவரவும், அதற்கேற்ப செலவும் உண்டாகும். வட்டிக்கடையில் அடமானம் வைத்த பொருளை மீட்பீர்கள்.சொத்துக்களின் மதிப்பு உயரும்.வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். பெண்களுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தம்பதியிடையே அந்நி யோன்னியம் அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்த்தால் ஆரோக்கியம் சிறக்கும். ஸ்ரீ ரங்கநாதரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






