என் மலர்
மகரம் - வார பலன்கள்
மகரம்
12.01.2025 முதல் 18.01.2025 வரை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகமாகும் வாரம். ராசியில் அஷ்டமாதிபதி சூரியன் குருப் பார்வையில் சஞ்சாரம் விபரீத ராஜயோகம். ஏழரைச் சனியின் தாக்கமும், பயமும் குறையும். மறை முக லாபம் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள், ஊழல், வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும்.
சொந்தவீடு, மனை, வாகனம் வாங்கும் சிந்தனை மேலோங்கும். பல வங்கி ஏறியும் கிடைக்காத வீட்டுக் கடன், தொழில் கடன் இப்பொழுது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கிய குறைபாட்டிற்கு வைத்தியம் செய்ய நேரும். இதுவரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள்.
16.1.2025 அன்று காலை 11.16 மணி முதல் 18.1.2025 அன்று இரவு 9.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையாட்களால் செலவும், பிரச்சனையும் தோன்றும். தொழிலில் இதுவரை ஜாதகர் காட்டி வந்த வீரம், வேகம், விவேகம் மட்டுப்படும். சிந்தனை தடுமாற்றம், மன சஞ்சலம் அதிகமாகும். பவுர்ணமியன்று காவல் தெய்வங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை
5.1.2025 முதல் 11.1.2025 வரை
திருப்புமுனையான வாரம். ராசிக்கு 2-ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி, சுக்ரன் சேர்க்கை. பெண்களுக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்சியும் உண்டாகும். வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரலாம். தடை பட்ட வாடகை வருமானங்கள், சம்பள பாக்கிகள் கிடைக்கும்.கலை ஆர்வம், அரசுப் பணி, அரசியல் வெற்றி உண்டு. இழந்த வேலை, மீண்டும் கிடைக்கும். பணக் கஷ்டம் ஏற்படாது.
கடன் பாதிப்பு இருக்காது. விரும்பிய பதவி உயர்வு தேடி வந்தாலும் பணிச் சுமை உங்களை வாட்டும். சிரமமான கடுமையான காரியங்கள் கூட எளிமையாக நடந்து முடியும். இஷ்ட தெய்வ வழிபாடு, குல தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். நீண்டகால பிரார்த்தனைகள், வேண்டு தல்களை நிறைவேற்ற ஏற்ற நேரம். குடும்பத்தில் சுப மங்கள நிகழ்வுகளும், சுப மங்கள விரயச் செலவுகளும் ஏற்படும். சுவாமி ஐயப்பனை ஆத்மார்த்தமாக வழிபட்டால் யோகம் ராஜயோகமாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 29.12.2024 முதல் 4.1.2025 வரை
29.12.2024 முதல் 4.1.2025 வரை
சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் அதிகரிக்கும். தடைபட்ட உரிமைகள் துளிர் விடும். குலத் தொழில் செழித்து வளரும்.உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். தம்பதி களுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். சுப கடன் வாங்கி பூமி, வீடு,வாகன, வசதியை பெருக்குவீர்கள். சிறிய வாடகை வீட்டில் இருக்கும் சிலர் வசதியான வாடகை வீட்டிற்கு செல்வார்கள். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும்.
சிலருக்கு குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை மேலோங்கும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு. சகோதரர்களுடன் இணைந்து முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த காலம். வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி ஆட்சி பலம் பெறப் போவதால் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். தாய், தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சீராக இருக்கும். அமாவாசை யன்று வயோதிகர்களின் தேவையறிந்து உதவவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை
22.12.2024 முதல் 28.12.2024 வரை
நீண்ட கால கனவுகள், திட்டங்கள் நிறைவேறும் வாரம். விரைவில் ஏழரைச் சனி முடியப் போகிறது. திருமணம், குழந்தை பேறு, உத்தியோகம், தொழில் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் மன நிறைவாக நடந்து முடியும். அடிமைத் தனத்துடன் நாடோடிபோல் வாழ்ந்தவர்களுக்கு நிரந்தரமான தொழில், அதிர்ஷ்டம், முன்னேற்றம், புகழ் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அடிப்படை தேவைக்கு தடுமாறியவர்களுக்கு கூட தாராளமான பணப் புழக்கம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய போட்டி,பொறாமைகள் விலகும்.மனதிற்கு மகிழ்ச்சிகரமான சம்பவங்களை சந்திப்பதால் நிம்மதியாக இருப்பீர்கள்.
மேலும் குருபகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் ஜாதக தசா புக்தி ரீதியான பரிகாரங்கள் செய்து கொண்டால் நன்மைகள் அதிகமாகும். 22.12.2024 அன்று பகல் 12.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் தொல்லை தரும் என்பதால் கவனம் தேவை.சாத்தியமற்ற வாக்குறுதியை யாருக்கும் தர வேண்டாம். எதிர்பார்த்த விஷயங்கள் நடப்பதில் காலதாமதமாகும். மன சஞ்சலம் ஏற்படும். விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை
15.12.2024 முதல் 21.12.2024 வரை
மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகம் நடைபெறும் வாரம். ஏழரைச் சனி விலகும் காலம் என்பதால் அற்புதங்கள் நிகழப்போகிறது. சனிபகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரப்போகிறது. கஷ்ட காலம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது. மிகப்பெரிய பாரம் நீங்கப்போகிறது.தடைகளைத் தாண்டி வெற்றிகள் தேடி வரும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். திருமணம் முடிந்து சண்டை போட்டு பிரிந்தவர்கள் இனி சந்தோஷமாக இணையப் போகிறார்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவி மக்கள் மனதிற்கு இதமாக நடந்து கொள்வார்கள். பிள்ளைகள் பற்றிய நல்ல செய்திகள் தேடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு பொன் ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும்.உயர் கல்விக்கு வாய்ப்பு கிடைக்கும். 20.12.2024 அன்று 1.59 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பேச்சில் கவனம் தேவை.கோபத்தை கட்டுப்படுத்தவும்.திடீர் விரைய செலவுகளும் வரலாம் என்பதால் நிதானம் தேவை.குல, இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை கவசமாக காத்தருளும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை
8.12.2024 முதல் 14.12.2024 வரை
அதிர்ஷ்டமான வாரம். அஷ்டம அதிபதி . சூரியன் லாப ஸ்தானத்தில் குருவின் பார்வையில் சஞ்சாரம் விபரீத ராஜ யோகம் உங்களை வழிநடத்தப் போகிறது. பல வருடங்களாக சொத்தில் ஆக்கிரப்பு செய்தவர்கள் தாமாகவே வெளியேறுவார்கள். சிலரின் குடியிருப்பில் உள்ள வாடகைதாரர்கள் மாறலாம். வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் என அவரவர் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து அதனை தீர்க்க முயல்வது நிறுவனத்தை வளரச் செய்யும்.
சில தம்பதிகள் தொழில், வேலை நிமித்தமாக அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழலாம். பணம் கொடுத்து அரசு வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. வேலை பார்க்கும் இடத்தில் பிறர் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இரண்டாம் திருமண முயற்சி பலிதமாகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு என்பதால் கவலையின்றி இருக்கவும். விண்ணப்பித்த கடன் கிடைக்கும். சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை
1.12.2024 முதல் 7.12.2024 வரை
சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் வாரம். 5, 10-ம் அதிபதி சுக்ரன் ராசிக்குள் நுழைகிறார். முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும். உங்களின் கற்பனைகள் கனவுகள் நனவாகும். வெகு விரைவில் ஏழரைச் சனி முடிவிற்கு வரப்போகிறது. இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுப் பெறப் போகிறீர்கள்.நீங்கள் எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும்.
பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். குல தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. சொத்துக்கள், அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விரும்பிய சலுகைகள் கிடைக்கும். காதல் கனியும்.லலிதா பரமேஸ்வரியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை
24.11.2024 முதல் 30.11.2024 வரை
ஏற்றமான பலன்கள் உண்டாகும் வாரம். ராசியில் குரு மற்றும் செவ்வா யின் பார்வை பதிகிறது. தைரியசாலியாக இருப்பீர்கள். பயம் என்பதே இருக்காது. கடுமையாக உழைப்பீர்கள். பழைய சிக்கல்கள், சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர்கள். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சீராகும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். தடைபட்ட குல தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும்.
அரசு வழி ஆதாயம் உண்டு. தந்தையின் கட்டளைக்கு இணங்குவீர்கள். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். திருமண முயற்சி சாதகமாகும். உயர் கல்வி தொடர்பான முயற்சிகள் பலன் தரும். 25.11.2024 அன்று அதிகாலை 5.02 வரை சந்திராஷ்டமம் உள்ளது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அன்று வெளியூர் பயணங்களையும் வெளி உணவுகளையும் தவிர்த்தல் நலம். மவுன விரதம் இருப்பது நல்லது.ஸ்ரீ விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை
17.11.2024 முதல் 23.11.2024 வரை
ஏழரை சனியின் ஆதிக்கம் குறையும் காலம். விரைவில் ஏழரைச் சனி முடிவிற்கு வரப்போகிறது.கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். விடாமுயற்சி, வைராக்கியத்துடன் செயல்படுவீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவை பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள் அடமான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். சேமிப்பு உயரும். குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும். சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.கணவன் , மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான பயம் குறையும். 22.11. 2024 அன்று மாலை 5.09-க்கு சந்திராஷ்டமம் ஏற்படுகிறது. தனிமை படுத்தப்பட்டது போன்ற ஒரு மனநிலையே இருக்கும். மனவருத்தம், சங்கடம் பேசாமல் இருத்தல் போன்ற நிலைகளை சந்திக்கலாம். தேய்பிறை அஷ்டமியன்று காவல் தெய்வத்தை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை
முன்னேற்றங்கள் உண்டாகும் வாரம். ராசி மற்றும் தன அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தி ஆவதால் பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்பாகும். சனி பகவான் மார்ச் 29-ல் 3-ம்மிடம் செல்கிறார். ஏழரைச் சனியிலிருந்து முழுமையாக விடுபடப் போகிறீர்கள். எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றிக்கனியை பறிக்காமல் விடமாட்டீர்கள். கடன் தொல்லை குறையும். வெளிநாட்டு பணம் வந்து குவியும். மனம் நிம்மதியாக இருக்கும். உங்களின் முயற்சியால் தொழில் உத்தியோகத்தில் சாதகமான பலன் உண்டாகும். மூட்டு அறுவை சிகிச்சை நல்ல பலன் தரும். தாய், தந்தை உங்களை புரிந்து கொண்டு உதவுவார்கள். மறு விவாகம் நடக்கும்.
தாயாரின் சொத்துக்களைப் பிரிப்பதில் சகோதர சகோதரிகளால் இடையூறு, மன உளைச்சல் உண்டாகும். வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். நிச்சயித்த திருமணத்தை காலம் தாழ்த்தாமல் உடனே நடத்த வேண்டும். லஞ்சம் கொடுத்து அரசு வேலைக்கு முயற்சிப்பதை தவிர்க்கவும். தாய், தந்தையின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பவுர்ணமியன்று குல தெய்வத்தை வழிபடுவது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை
3.11.2024 முதல் 9.11.2024 வரை
வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படப் போகும் வாரம் . இன்னும் சில நாட்களில் ராசி மற்றும் தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும். சமூக அந்தஸ்து கூடும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு இடப்பெயர்ச்சி மனதை மகிழ்விக்கும். தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும்.
மன வேதனையைத் தந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு வாங்குவீர்கள்.திருமணத் தடை அகலும். பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கை கூடி வரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பதட்டம் விலகி நிம்மதியான சூழ்நிலை இருக்கும். கணவருடன் இருந்த ஈகோ மாறும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஸ்ரீ லட்சுமி குபேரரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை
27.10.2024 முதல் 3.11.2024 வரை
அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம். ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் 5, 10-ம் அதிபதி சுக்ரன் குரு பார்வையில் சஞ்சாரம். பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். தைரியம், தெம்பு அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். செவ்வாயின் 7ம் பார்வை ராசியில் பதிவதால் பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும். காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும்.
பெண்களுக்கு இந்த வாரம் தீபாவளி செலவுகள் அதிகரிக்கும். அதற்கு தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த வராக்கடன் பணம் வீடு தேடி வரும். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். மன வேதனையைத் தந்த மகள் உங்களைப் புரிந்து கொள்வார். 28.10.2024 அன்று இரவு 10.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகளில் தடை ஏற்படும். நெருங்கியவர்களிடையே மன வருத்தம் ஏற்படலாம். நவகிரக சனி பகவானை நீல நிற பூக்களால் வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






