என் மலர்tooltip icon

    மகரம் - வார பலன்கள்

    மகரம்

    வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை

    20.10.2024 முதல் 26.10.2024 வரை

    தடை, தாமதங்கள் விலகும் வாரம். அஷ்டமாதிபதி சூரியன் நீசம் பெற்று 6, 9-ம் அதிபதி புதனுடன் இணைந்து தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்கவும்.வேலை தொழிலில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும். தேங்கி கிடந்த பணிகள் துரிதமாக நடைபெறும். பூர்வீகத்தில் புதிய வீடு கட்டிக் குடியேறும் யோகம் உண்டாகும். குல தெய்வ அருள் கிடைக்கும். சிலருக்கு முக்கிய இயக்கம் அல்லது சங்கங்களில் கவுரவப் பதவி கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும்.

    பிள்ளைகளின் திருமணம், உயர் கல்வி, வேலைவாய்ப்பில் நிலவிய தடை தாமதங்கள் விலகும்.சிலரின் காதல் திருமணத்தில் முடியும். ஏழரைச் சனியால் எவ்வளவு இடையூறுகள் நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு ஆறுதலாக இருக்கும். தீபாவளி ஆபரில் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். 26.10.2024 அன்று காலை 9.45-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்ப தால் மேலதிகாரிகள் அதிக பணிச்சுமையை வழங்கலாம். நவகிரகங்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை

    நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். அஷ்டமாதிபதி சூரியன் நீசம் பெறுவதால் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். அழகு, ஆடம்பர பொருட்கள் விற்கும் சில்லரை வியாபாரிகளுக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும். மொத்த வியாபாரிகள் தீபாவளி விற்பனைக்கு புதியவர்களை நம்பி பண முதலீடு செய்ய வேண்டாம்.

    குடும்பத்தில் திருமணம், சடங்கு போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். பாக்கிய ஸ்தானத்தில் கேது நிற்பதால் உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். மார்ச் 29, 2025 முதல் ஏழரைச் சனியிலிருந்து முழுமையாக விடுபட போகிறீர்கள் என்பதால் மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.விரைவில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கான நல்ல பலன் கிடைக்கப் போகிறது.திருநள்ளாறு சென்று வர சுபமான திருப்பங்கள் உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை

    6.10.2024 முதல் 12.10.2024 வரை

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் வாரம். ராசிக்கு 10ல் ஆட்சி பலம் பெற்ற 5, 10-ம் அதிபதி சுக்ரனுடன் புதன் சேர்க்கை. அரசு மற்றும் வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். உயர் அதிகரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி தரும். இழந்த பழைய வேலை மீண்டும் கிடைக்கும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறையும். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். வாழ்க்கை முன்னேற்றத்தின் அடுத்த கட்டம் நோக்கி செல்வீர்கள்.

    தந்தையின் ஆதரவு கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பொறுமையாக கையளவும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நண்பர்களுக்காக கடன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும்.கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.உத்தியோக, குடும்ப பொறுப்புகளால் சோர்வு ஏற்பட்டு நீங்கும். காளியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)

    29.9.2024 முதல் 5.10.2024 வரை

    சுப விரயங்கள் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு குருவின் 9-ம் பார்வை மற்றும் செவ்வாயின் 8-ம் பார்வை பதிகிறது. பாக்கிய ஸ்தானத்தில் புத ஆதித்திய யோகம். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய பகைமை மறையும்.சிலர் வெளிநாடு அல்லது வெளி மாநிலத்திற்கு இன்பச் சுற்றுலா சென்று வரலாம். சூழ்நிலை காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணை யும் சூழ்நிலை உருவாகும். சிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நேரும். உத்தி யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்று கூடுதலாக இருக்கும். வியாபாரிகள் புதிய முதலீட்டைத் தவிர்க்கவும்.

    படித்து முடித்த மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன் பெறலாம். கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமண முயற்சிகள் சித்திக்கும். மாமனார் மூலம் பணம் அல்லது சொத்து கிடைக்கும். 1.10.2024 அன்று மாலை 4.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் மனக்கவலை, முக்கிய பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் தடை, தாமதம் போன்ற அசவுகரியங்கள் இருக்கும். அமாவாசையன்று விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)

    22.9.2024 முதல் 28.9.2024 வரை

    வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் அற்புதமான வாரம். பாக்கிய அதிபதி புதன் உச்சம் பெறுவதால் இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்ப வர்களுக்கு ஏற்றமான வாரம்.குலத் தொழிலில் பங்குதாரர் ஆகுவீர்கள்.அரசு வேலைக்கு அப்பாயின் மென்ட் ஆர்டர் வரும். சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். வீடு கட்டப் போட்ட பட்ஜெட் திட்டமிடுதலை விட எகிறும்.

    சிலருக்கு காது வலி, ஞாபக மறதி போன்ற அசவுகரியங்கள் தலை தூக்கும். சிலர் பக்தி மார்க்கத்தை நாடுவார்கள். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நன்மதிப்பு, பெருமை உண்டாகும்.நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்துக்கள் விற்பனையாகும். சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் மகன், மகள் வீட்டிற்குச் சென்றுவரலாம். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.கோவிலுக்கு விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)

    15.9.2024 முதல் 21.9.2024 வரை

    சுபமான வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் கர்ம ஸ்தானத்தில் ஆட்சி செய்வதால் எதை யும் சாதிக்கும் திறனும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான்.சிலருக்கு தத்து புத்திர யோகம் கிடைக்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப உறவுகளின் உறவு நிலை மேம்படும்.

    வெளி வட்டாரங்களில் மரியாதைகள் உயரும். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கவுரவப் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும். பணி நிரந்தரம் இல்லாதவர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வரும். அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளின் நலனுக்காக எடுக்கும் திருமணம் மற்றும் மேற்படிப்பு முயற்சிகள் நிறை வேறும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். பண வரவுகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் சமாளிக்க முடியும். நவகிரகங்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய வாரம். ஆட்சி பலம் பெற்ற அஷ்டமாதிபதி சூரியன் புதனுடன் இணைந்து தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். பொருளாதாரம் சீராக இருக்கும். வரவும், செலவும் உண்டு. சிலர் வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பீர்கள். ஏழரைச் சனியால் சந்தித்த சோதனைகள் சாதனைகளாக மாறும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    தொழில் உத்தியோகத்தில் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும். பூப் புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். வயோதிகர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும்.

    நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் நிறைவடையும். பூர்வீகம் தொடர்பான மன உளைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு செயற்கை கருத்தரிப்பால் குழந்தை உருவாகும். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் வளம் பெற விபூதி அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)

    1.9.2024 முதல் 7.9.2024 வரை

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு செவ்வாயின் 8-ம் பார்வை மற்றும் புதனின் சமசப்தம பார்வை. அஷ்ட மாதிபதி சூரியன் ஆட்சி என கிரக நிலவரம் உள்ளது. முறையான திட்டமிடுதல் நிரந்தர வெற்றியைக் குவிக்கும்.புதிய தொழில் முயற்சிகள் தேடி வரும். எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள் அல்லது ஒதுங்கிப் போவார்கள். செய்தொழில் விருத்தி யாகும். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும்.

    சிலருக்கு இடப் பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும்.குருபகவான் சாதகமாக நிற்பதால் பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராக்கடன்கள், சம்பள பாக்கிகள் வசூலாகும்.சேமிப்புகள் அதிகமாகும். தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும். தம்பதிகளின் கருத்து வேறுபாடு குறையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். உடல் நிலை தேறும். 4.9.2024 அன்று காலை 9.55 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். முக்கிய பணிகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது. விநாயகர் சதுர்த்தியன்று கணபதி ஹோமங்களில் கலந்து கொள்வது நல்லது.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)

    25.8.2024 முதல் 31.8.2024 வரை

    விபரீத ராஜ யோகம் உண்டாகும் வாரம்.ராசிக்கு குரு பார்வை. அஷ்டமாதிபதி சூரியன் ஆட்சி. எந்த ஒரு கடினமான வேலையையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட பணம், உயில் சொத்து, எதிர்பாராத தன லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விதவிதமான பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாக வாங்குவீர்கள். செல்வ நிலைகள் உயரும். பிற்கால நலன்கருதி சேமிப்பு க்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. தடைபட்ட திருமணம் நடக்கும்.

    குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையும், உயர்வும் ஏற்படும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். கடன் செயல்களில் பொறுமை வேண்டும்.வேலை தேடுபவர்களின் திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்கும். சுய தொழில் புரிபவர்கள் அரசு மற்றும் வங்கி மூலமான உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஆரோக்கிய குறைபாடு சீராகும். கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும். எள்ளு மிட்டாய் படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)

    19.8.2024 முதல் 25.8.2024 வரை

    நன்மைகள் நடக்கும் வாரம். ராசியில் தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சனி வக்ரம் பெறுவதால் தொழிலிலும் வருமானத்திலும் குறையில்லை என்றாலும் நிறைவு ஏற்படாது. எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். இந்த வாரம் வீடு, பூமி, வாகனம் வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும்.பணிபுரியும் பெண்களின் அறிவுத்திறன் கூடும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு சாப்பிட முடியாது.

    அரசாங்க வேலைக்கு அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். 9-ல் கேது இருப்பதால் தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள், மன சஞ்சலம் ஏற்படலாம். வெளிநாட்டு பயணம் உறுதியாகும். ராசிக்கு குரு பார்வை. திருமண வயதினருக்கு ஆவணியில் திருமணம் நிச்சயிக்கப்படும். புத்திர பிராப்தம் நிறைவேறும். ஆரோக்கிய குறைபாடு அகலும்.கண் அறுவை சிகிச்சை பலன் தரும். விவசாயிகளுக்கு விளைச்சல் லாபம் தரும். சங்கர நாராயணரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)

    12.8.2024 முதல் 18.8.2024 வரை

    சுமாரான வாரம். 3-ல் ராகு இருப்பதால் உங்களால் உயர்ந்த சகோதர, சகோதரிகள் உங்களைப் பற்றி புறம் பேசுவது உங்களின் கவனத்திற்கு வரும். இதனால் உங்கள் குடும்பத்தில் அமைதி குறைவது போன்ற இனம் புரியாத மன உணர்வு தோன்றும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனிக் குடித்தனம் சென்ற வாரிசுகள் வீடு வந்து சேருவார்கள். சிலர் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம் படிப்பு போன்ற சுபச் செலவிற்காக கடன் வாங்கலாம் அல்லது ஒரு கடன் வாங்கி பழைய கடனை சமாளிக்கலாம். பல வழிகளில் வருமானம் வந்தாலும் உபரி பணம் கிடைக்காது.

    தந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். நிச்சயித்த வரனிடம் அதிகம் பேசுவதை தவிர்க்கவும். புதிய சொத்துக்கள், வாகனம் சேரும். சொத்துக்கள் மதிப்பு உயரும். பிள்ளைகளின் நலனில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரி தொல்லைகள் இருக்கும். திருமணத்தடை அகலும். சிலருக்கு காதல் திருமணம் நடைபெறும். வரலட்சுமி நோன்பு அன்று வயதான சுமங்கலிகளுக்கு பாத பூஜை செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)

    5.8.2024 முதல் 11.8.2024 வரை

    சாதாரணமான வாரம். ராசிக்கு அஷ்டமாதிபதி சூரியன் பார்வை. இது சிலருக்கு விபரீத ராஜ யோகத்தை தரலாம். அதிர்ஷ்ட உயில் சொத்து, பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு விபத்து கண்டம், அவமானம், சர்ஜரி போன்ற அசவுகரியத்தை மிகைப்படுத்தலாம். நல்ல வாய்ப்புகள், புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி யான சில செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் மேம்படும். அடமானச், சொத்துக்கள் மற்றும் நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது.

    சிக்கனத்தை கடைபிடித்து எந்த ஒரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செயல்பட்டால் உன்னத நிலையை அடையலாம். 5-ந் தேதி அன்று மாலை 3.21 மணி முதல் 8-ந்தேதி அன்று அதிகாலை 3.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியிடங்க ளில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். வியாபாரம் நிமித்தமான செயல்பா டுகளில் சிந்தித்துச் செயல்படவும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். ஆடி பூரத்தன்று சர்க்கரை பொங்கல் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×