என் மலர்tooltip icon

    மகரம் - வார பலன்கள்

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    29.7.2024 முதல் 4.8.2024 வரை

    சுபசெய்திகளால் மனம் மகிழும் வாரம். ராசிக்கு குரு, சூரியன் பார்வை பதிவது சிவராஜ யோகம்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.ஏழரைச் சனியையும் மீறி தடைபட்ட நல்ல விசயங்கள் தாமாகவே நடக்கும். அரசின் நலத்திட்டங்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு அரசின் இலவச வீடு, வீட்டு மனை கிடைக்கலாம்.வீடு கட்டும் பணி துரிதமாகும். தடைபடாத பண வரவு உண்டு.சுபசெலவுகள் மிகுதியாகும். திருட்டுப் போன பொருட்கள் கிடைக்கும்.சிலர் மன நிம்மதிக்காக வீடு மாறுவார்கள். கூலித் தொழிலாளி களின் நிலைமை சீராகும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கி குவிப்பார்கள். நோய் தாக்கம் குறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு எதிர்பார்க்கலாம். மாணவர்கள் கல்வி தொடர்பான முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். பராமரிப்பு இல்லாத அம்மன் கோயில்களுக்கு விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் வாங்கித் தரவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    22.7.2024 முதல் 28.7.2024 வரை

    முன்னேற்றமான வாரம். ராசிக்கு குரு, செவ்வாய் பார்வை. புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றிக் கனியை சுவைப்பீர்கள்.திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வா ர்கள். பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகள் சந்தையில் நேரடி கொள்முதலில் ஈடுபடு வார்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம், உத்தியோகம், உயர்கல்வி போன்றவற்றால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

    எதிர்காலத்திற்கான சேமிப்புகளில் கவனம் செல்லும். சிலருக்கு மறுமணம் நடக்கும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் மறையும். ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைகள் இந்த வாரத்தில் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது.எந்தவகையில் பார்த்தாலும் சாதகமான பலன்கள் பெருமளவு இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமை சப்த கன்னிகளை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    15.7.2024 முதல் 21.7.2024 வரை

    அனுகூலமான வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி பகவான் வக்ரம் அடைகிறார். இது வரை உங்களை ஆட்டிப்படைத்த இனம் புரியாத மன சஞ்சலம் விலகும். கிட்டச் சென்றாலும் எட்டிச் சென்ற உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள். ஆடம்பர விழாக்கள், விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் நிலைத்து நிற்க முடியுமா? என்ற மன பயத்துடன் இருந்தவர்களுக்கு திருப்புனையான நேரம். பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை திருப்தியான காலம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம்.

    மலைபோல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகும். பாகப்பிரிவினையில் உடன் பிறப்புகள், பங்காளிகள், சித்தப்பாவிடம் நிலவிய மனக்கசப்புகள் மறைந்து பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகும். வீடு கட்ட வாகனம் வாங்க உகந்த நேரம். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.வாழ்க்கைத் துணையின் மூலம் தக்க உதவிகள் கிடைக்கும்.திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பும் உள்ளது. புத்தாடை தங்கம் வெள்ளி நகைகள் வாங்கும் யோகம் கிடைக்கும். பெரிய மாரியம்மனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    8.7.2024 முதல் 14.7.2024 வரை

    மகிழ்ச்சியான வாரம். ராசிக்கு சுக்ரன், புதன், குரு பார்வை. இது மகர ராசிக்கு மிக உன்னதமான வாழ்வியல் மாற்றம் ஏற்படுத்தும் அமைப்பாகும். அனைத்து கிரகங்களும் நல்ல சாதகமான கிரக அமைப்பில் இருப்பதால் மகர ராசியினருக்கு உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என அனைத்தும் சாதமாக உள்ளது. வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும்.வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பு உயரும். வாழ்நாள் லட்சியமாக எதிர்பார்த்த பதவி தேடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சிய ளிக்கும்.

    பெண்களுக்கு சகோதரர் வகையில் வரவு உண்டு. சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும்.வீடு கட்டும் பணி துரித மடையும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகமாகும். இந்த வாரத்தில் சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். 9.7.2024 அன்று காலை 7.52 மணி முதல் 11.7.2024 அன்று இரவு 7.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதி இன்மை ஏற்படும். ஸ்ரீ நடராஜரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    1.7.2024 முதல் 7.7.2024 வரை

    சகாயங்கள் மிகுந்த வாரம். ராசி அதிபதி மற்றும் தன அதிபதி சனி வக்ரம். ஏழரைச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும்.பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பங்குச் சந்தை, அதிர்ஷ்டப் பணம் என உபரி வருமானம் கிடைக்கும். பொருளா தாரத்தில் தன்னிறைவு உண்டாகும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். கடன் சுமை குறையும். பேச்சில் தெளிவு இருக்கும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்யும் ஆர்வம் உண்டாகும். தொழில், உத்தியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் திருமண முயற்சி வெற்றி தரும்.

    வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆன்மீக நாட்டம் மத நம்பிக்கை அதிகரிக்கும்.மனைவி, மக்கள், பேரன், பேத்திகள், சொத்து சுகம் என அனைத்து பாக்கிய பலன்களையும் அடைவீர்கள். இனம் புரியாத நோயின் தன்மை தாக்கம் சிகிச்சையில் சீராகும்.பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசியல் ஆர்வம், ஆதாயம் உண்டு. பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    24.6.2024 முதல் 30.6.2024 வரை

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சனி வார இறுதியில் வக்ரம் பெறுகிறார்.வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். தேவை யற்ற நட்புகள், உறவுகளின் தொல்லைகள் ஏற்படலாம். சொத்துக்களாலும் சொந்தங்களாலும் சில பிரச்சினைகள் தலை தூக்கும். உறவினர்களுக்கு செய்யும் உதவி உபத்திரமாக முடியும். சிலருக்கு விற்பனையான சொத்தால் வில்லங்கம் வரலாம். வழக்குகள் விசாரணை தள்ளிப்போகும். மூத்த சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நிச்சயம்.

    சிலருக்கு மருத்துவச் செலவு உண்டாகலாம்.சிலர் கவுரவம் அல்லது பெருமையை நிலைநாட்ட வீண் செலவு செய்வார்கள். வாரிசுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.சிலர் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம் படிப்பு போன்ற சுப செலவிற்காக கடன் வாங்கலாம். சில எதிர்மறை யான பலன்கள் நடைபெற்றாலும் ராசியை குரு பகவான் பார்ப்பதால் எதையும் எதிர் கொள்ளும் தைரியமும் உண்டாகும் நரசிம்மரை வழிபட நன்மைகள் நடக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    17.6.2024 முதல் 23.6.2024 வரை

    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். அஷ்டமாதிபதி சூரியன் 6ம்மிடமான மறைவு ஸ்தானத்தில் மறைவு ஸ்தான அதிபதி புதனுடன் சேருகிறார். மகர ராசிக்கு கெட்டவன் சூரியன் மற்றொரு மறைவு ஸ்தானம் செல்வது ராஜயோகமாகும். பொருள் வரவு அதிகரிக்கும். வராக்கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். அடமானப் பொருட்களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும்.கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். திட்டமிட்ட செயல்களால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

    தொழிலில் விரும்பத்தகுந்த மாற்றம் கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பர்கள்.உத்தியோகத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.மன மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் இருப்பீர்கள்.ஆடம்பர குடும்ப விருந்து உபசாரங்கள், விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சிலருக்கு வீடு, வாகன பராமரிப்பு செலவால் விரயம் உண்டாகும். கணவன் மனைவி உறவு திருப்தியாக இருக்கும். சம்பந்தி சண்டைகள் முடிவுக்கு வரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாலிப வயதினரின் திருமணக் கனவுகள் நனவாகும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். பவுர்ணமியன்று குல தெய்வத்தை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    10.6.2024 முதல் 16.6.2024 வரை

    விபரீத ராஜயோகம். எட்டாமிடம் எனும் மறைவு ஸ்தான அதிபதி சூரியன் மற்றொரு மறைவு ஸ்தான மான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் மறைவது மகரத்திற்கு விபரீத ராஜ யோகத்தை அதி கரிக்கும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். திருமணத்தடை அகலும். இரண்டாவது குழந்தை பிறக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை, பிறந்த வீட்டு சீர் என மகிழ்சியான விசயங்கள் நடந்து மகிழ்விக்கும். புதிய மருத்துவத்தின் மூலமாக நோய் விலகுவதை உணர முடியும். பழைய வீட்டை புதுப்பித்தல் இருக்கின்ற மனையில் வீடு கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவீர்கள். பிரபலமான வர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    அரசு வகையில் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். குடும்ப உறவுகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.11.6.2024 அன்று இரவு 11.38 முதல் 14.6.2024 அன்று காலை 11.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் பிறரின் தலையீட்டால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். மனம், வாக்கை கட்டுபடுத்திக் கொள்ள வேண்டும். நில ராசியில் பிறந்த நீங்கள் வராகரை வழிபட மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    3.6.2024 முதல் 9.6.2024 வரை

    புண்ணிய பலன்கள் மிகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி.4ல் செவ்வாய் ஆட்சி. 2-ல் சனி ஆட்சி என முக்கிய கிரகங்கள் மகரத் திற்கு சாதகமாக உள்ளது. புண்ணிய காரி யங்கள் செய்வீர்கள். புனித யாத்திரை செல்வீர்கள். பூர்வீகச் சொத்து வழக்குகள் முடிவிற்கு வரும். சிலர் வீட்டை பழுது பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சிலர் வாகனத்தை மாற்றலாம். சிலர் புதிய சொந்த தொழில் துவங்க வாய்ப்புள்ளது. விற்பனையும் லாபமும் சாதகமாகவே இருக்கும். சொத்துச் சேர்க்கை உண்டாகும்.3ல் ராகு இருப்பதால் சகோதரர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

    வாழ்க்கைத் துணையால் பொருள் சேர்க்கை ஏற்படும். சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்லவும். சிலருக்கு மறுமணம் நடக்கும். வெளிநாட்டு வேலை முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும். பொருளாதார மந்த நிலை நீங்கும். கடன்களைக் குறைக்க புதிய முயற்சி எடுப்பீர்கள். கணவர் தீய நட்பில் இருந்து விடுபடுவார். பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் மேல் ஆர்வம் காட்டுவார். ஆரோக்கியம் சீராகும். அமாவாசையன்று காவல் தெய்வங்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசி பலன்

    27.05.2024 முதல் 02.06.2024 வரை

    உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் வாரம். ராசியை குரு பார்ப்பதால் கவுரவமான தோற்றம், கடமை தவறாமல் நீதி, நேர்மையுடன் வாழ்வதில் விருப்பம் ஏற்படும். தொட்டது துலங்கும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. பேச்சுக்களில் அனுபவ அறிவும், முதிர்ச்சியும் வெளிப்படும். தாமதமான நிலுவையில் உள்ள பணம் வசூலாகும். தன வரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சிறிய அளவிலான தொழில்களைச் செய்பவர்கள் அதிக முதலீட்டில் தொழிலை விரிவுபடுத்தலாம். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு சொந்த தொழில் துவங்கலாம். புதிய நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். இதுவரை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் மறக்க வைக்கும் எதிர்பாலின நட்பு கிடைக்கும். மாற்றுமுறை மருத்துவத்தால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். தடைபட்ட கல்வியை தொடருவீர்கள். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை புனித நீரால் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    20.5.2024 முதல் 26.5.2024 வரை

    அதிர்ஷ்டமான வாரம்.5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி. 5-ல் அஷ்டமாதிபதி சூரியன். 5ல் குரு என பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. 5-ல் நிற்கும் கிரகங்கள் எப்பொழுதும் நன்மையைச் செய்யும்.ராசியை குரு பார்ப்பதால் ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில் தொடர்பான நீண்ட நாள் பிரச்சினைகள் தீர்ந்து வளமான எதிர்காலம் அமையும். உழைக்காத அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் லாபகரமாக இருக்கும். தடைபட்ட காதல் திருமணம் நடந்து முடியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

    சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. பாகப் பிரிவினைகள் துரிதமாகும்.தந்தைவழி சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் கூட்டாளிகளில் சிறிய மாற்றம் நடக்கும். நல விரும்பிகளின் ஆலோசனையின் படி தொழிலை திருத்தி அமைப்பீர்கள். திறமைக்கும், தகுதிக்கும் தகுந்த வேலை கிடைக்கும்.குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஆடம்பர விருந்துகளில் கலந்து பயனடைவீர்கள். சனிபகவானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    13.5.2024 முதல் 19.5.2024 வரை

    தொட்டது துலங்கும் வாரம். ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. எடுத்த முயற்சியில் எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெறும் ஆற்றல் உண்டாகும். உங்களின் பெயர், புகழ், உயரும். இழந்த இன்பங்களை குருபகவான் மீட்டுத்தரப் போகிறார். தொட்டது துலங்கும். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை, ஒத்துழைப்பு ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். புதிய சொத்துச் சேர்க்கை உண்டாகும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும், வருகையும் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும்.

    ஆரோக்கிய கேட்டால் விடுப்பில் இருந்தவர்கள் மீண்டும் பணிக்குச் செல்லும் வகையில் உடல் நலம் சீராகும். சித்தப்பாவின் ஆதரவு கிடைக்கும். வாலிப வயதினருக்கு மணமாகும். புத்திர பிராப்தம் கிட்டும்.

    பெண்களுக்கு தங்கம் தங்கும். 15.5.2024 அன்று மதியம் 3.25 முதல் 18.5.2024 அன்று அதிகாலை 4.04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையுடன் செயல்பட வேண்டும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஸ்ரீ வராகி அம்மனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×