என் மலர்
மகரம் - வார பலன்கள்
மகரம்
இந்தவார ராசிபலன்
8.7.2024 முதல் 14.7.2024 வரை
மகிழ்ச்சியான வாரம். ராசிக்கு சுக்ரன், புதன், குரு பார்வை. இது மகர ராசிக்கு மிக உன்னதமான வாழ்வியல் மாற்றம் ஏற்படுத்தும் அமைப்பாகும். அனைத்து கிரகங்களும் நல்ல சாதகமான கிரக அமைப்பில் இருப்பதால் மகர ராசியினருக்கு உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என அனைத்தும் சாதமாக உள்ளது. வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும்.வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பு உயரும். வாழ்நாள் லட்சியமாக எதிர்பார்த்த பதவி தேடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சிய ளிக்கும்.
பெண்களுக்கு சகோதரர் வகையில் வரவு உண்டு. சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும்.வீடு கட்டும் பணி துரித மடையும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகமாகும். இந்த வாரத்தில் சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். 9.7.2024 அன்று காலை 7.52 மணி முதல் 11.7.2024 அன்று இரவு 7.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதி இன்மை ஏற்படும். ஸ்ரீ நடராஜரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
1.7.2024 முதல் 7.7.2024 வரை
சகாயங்கள் மிகுந்த வாரம். ராசி அதிபதி மற்றும் தன அதிபதி சனி வக்ரம். ஏழரைச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும்.பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பங்குச் சந்தை, அதிர்ஷ்டப் பணம் என உபரி வருமானம் கிடைக்கும். பொருளா தாரத்தில் தன்னிறைவு உண்டாகும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். கடன் சுமை குறையும். பேச்சில் தெளிவு இருக்கும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்யும் ஆர்வம் உண்டாகும். தொழில், உத்தியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் திருமண முயற்சி வெற்றி தரும்.
வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆன்மீக நாட்டம் மத நம்பிக்கை அதிகரிக்கும்.மனைவி, மக்கள், பேரன், பேத்திகள், சொத்து சுகம் என அனைத்து பாக்கிய பலன்களையும் அடைவீர்கள். இனம் புரியாத நோயின் தன்மை தாக்கம் சிகிச்சையில் சீராகும்.பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசியல் ஆர்வம், ஆதாயம் உண்டு. பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
24.6.2024 முதல் 30.6.2024 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சனி வார இறுதியில் வக்ரம் பெறுகிறார்.வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். தேவை யற்ற நட்புகள், உறவுகளின் தொல்லைகள் ஏற்படலாம். சொத்துக்களாலும் சொந்தங்களாலும் சில பிரச்சினைகள் தலை தூக்கும். உறவினர்களுக்கு செய்யும் உதவி உபத்திரமாக முடியும். சிலருக்கு விற்பனையான சொத்தால் வில்லங்கம் வரலாம். வழக்குகள் விசாரணை தள்ளிப்போகும். மூத்த சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நிச்சயம்.
சிலருக்கு மருத்துவச் செலவு உண்டாகலாம்.சிலர் கவுரவம் அல்லது பெருமையை நிலைநாட்ட வீண் செலவு செய்வார்கள். வாரிசுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.சிலர் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம் படிப்பு போன்ற சுப செலவிற்காக கடன் வாங்கலாம். சில எதிர்மறை யான பலன்கள் நடைபெற்றாலும் ராசியை குரு பகவான் பார்ப்பதால் எதையும் எதிர் கொள்ளும் தைரியமும் உண்டாகும் நரசிம்மரை வழிபட நன்மைகள் நடக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
17.6.2024 முதல் 23.6.2024 வரை
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். அஷ்டமாதிபதி சூரியன் 6ம்மிடமான மறைவு ஸ்தானத்தில் மறைவு ஸ்தான அதிபதி புதனுடன் சேருகிறார். மகர ராசிக்கு கெட்டவன் சூரியன் மற்றொரு மறைவு ஸ்தானம் செல்வது ராஜயோகமாகும். பொருள் வரவு அதிகரிக்கும். வராக்கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். அடமானப் பொருட்களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும்.கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். திட்டமிட்ட செயல்களால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
தொழிலில் விரும்பத்தகுந்த மாற்றம் கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பர்கள்.உத்தியோகத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.மன மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் இருப்பீர்கள்.ஆடம்பர குடும்ப விருந்து உபசாரங்கள், விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சிலருக்கு வீடு, வாகன பராமரிப்பு செலவால் விரயம் உண்டாகும். கணவன் மனைவி உறவு திருப்தியாக இருக்கும். சம்பந்தி சண்டைகள் முடிவுக்கு வரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாலிப வயதினரின் திருமணக் கனவுகள் நனவாகும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். பவுர்ணமியன்று குல தெய்வத்தை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
10.6.2024 முதல் 16.6.2024 வரை
விபரீத ராஜயோகம். எட்டாமிடம் எனும் மறைவு ஸ்தான அதிபதி சூரியன் மற்றொரு மறைவு ஸ்தான மான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் மறைவது மகரத்திற்கு விபரீத ராஜ யோகத்தை அதி கரிக்கும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். திருமணத்தடை அகலும். இரண்டாவது குழந்தை பிறக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை, பிறந்த வீட்டு சீர் என மகிழ்சியான விசயங்கள் நடந்து மகிழ்விக்கும். புதிய மருத்துவத்தின் மூலமாக நோய் விலகுவதை உணர முடியும். பழைய வீட்டை புதுப்பித்தல் இருக்கின்ற மனையில் வீடு கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவீர்கள். பிரபலமான வர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அரசு வகையில் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். குடும்ப உறவுகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.11.6.2024 அன்று இரவு 11.38 முதல் 14.6.2024 அன்று காலை 11.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் பிறரின் தலையீட்டால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். மனம், வாக்கை கட்டுபடுத்திக் கொள்ள வேண்டும். நில ராசியில் பிறந்த நீங்கள் வராகரை வழிபட மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
3.6.2024 முதல் 9.6.2024 வரை
புண்ணிய பலன்கள் மிகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி.4ல் செவ்வாய் ஆட்சி. 2-ல் சனி ஆட்சி என முக்கிய கிரகங்கள் மகரத் திற்கு சாதகமாக உள்ளது. புண்ணிய காரி யங்கள் செய்வீர்கள். புனித யாத்திரை செல்வீர்கள். பூர்வீகச் சொத்து வழக்குகள் முடிவிற்கு வரும். சிலர் வீட்டை பழுது பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சிலர் வாகனத்தை மாற்றலாம். சிலர் புதிய சொந்த தொழில் துவங்க வாய்ப்புள்ளது. விற்பனையும் லாபமும் சாதகமாகவே இருக்கும். சொத்துச் சேர்க்கை உண்டாகும்.3ல் ராகு இருப்பதால் சகோதரர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
வாழ்க்கைத் துணையால் பொருள் சேர்க்கை ஏற்படும். சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்லவும். சிலருக்கு மறுமணம் நடக்கும். வெளிநாட்டு வேலை முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும். பொருளாதார மந்த நிலை நீங்கும். கடன்களைக் குறைக்க புதிய முயற்சி எடுப்பீர்கள். கணவர் தீய நட்பில் இருந்து விடுபடுவார். பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் மேல் ஆர்வம் காட்டுவார். ஆரோக்கியம் சீராகும். அமாவாசையன்று காவல் தெய்வங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசி பலன்
27.05.2024 முதல் 02.06.2024 வரை
உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் வாரம். ராசியை குரு பார்ப்பதால் கவுரவமான தோற்றம், கடமை தவறாமல் நீதி, நேர்மையுடன் வாழ்வதில் விருப்பம் ஏற்படும். தொட்டது துலங்கும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. பேச்சுக்களில் அனுபவ அறிவும், முதிர்ச்சியும் வெளிப்படும். தாமதமான நிலுவையில் உள்ள பணம் வசூலாகும். தன வரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சிறிய அளவிலான தொழில்களைச் செய்பவர்கள் அதிக முதலீட்டில் தொழிலை விரிவுபடுத்தலாம். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு சொந்த தொழில் துவங்கலாம். புதிய நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். இதுவரை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் மறக்க வைக்கும் எதிர்பாலின நட்பு கிடைக்கும். மாற்றுமுறை மருத்துவத்தால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். தடைபட்ட கல்வியை தொடருவீர்கள். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை புனித நீரால் அபிஷேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
20.5.2024 முதல் 26.5.2024 வரை
அதிர்ஷ்டமான வாரம்.5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி. 5-ல் அஷ்டமாதிபதி சூரியன். 5ல் குரு என பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. 5-ல் நிற்கும் கிரகங்கள் எப்பொழுதும் நன்மையைச் செய்யும்.ராசியை குரு பார்ப்பதால் ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில் தொடர்பான நீண்ட நாள் பிரச்சினைகள் தீர்ந்து வளமான எதிர்காலம் அமையும். உழைக்காத அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் லாபகரமாக இருக்கும். தடைபட்ட காதல் திருமணம் நடந்து முடியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும்.
சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. பாகப் பிரிவினைகள் துரிதமாகும்.தந்தைவழி சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் கூட்டாளிகளில் சிறிய மாற்றம் நடக்கும். நல விரும்பிகளின் ஆலோசனையின் படி தொழிலை திருத்தி அமைப்பீர்கள். திறமைக்கும், தகுதிக்கும் தகுந்த வேலை கிடைக்கும்.குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஆடம்பர விருந்துகளில் கலந்து பயனடைவீர்கள். சனிபகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
13.5.2024 முதல் 19.5.2024 வரை
தொட்டது துலங்கும் வாரம். ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. எடுத்த முயற்சியில் எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெறும் ஆற்றல் உண்டாகும். உங்களின் பெயர், புகழ், உயரும். இழந்த இன்பங்களை குருபகவான் மீட்டுத்தரப் போகிறார். தொட்டது துலங்கும். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை, ஒத்துழைப்பு ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். புதிய சொத்துச் சேர்க்கை உண்டாகும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும், வருகையும் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும்.
ஆரோக்கிய கேட்டால் விடுப்பில் இருந்தவர்கள் மீண்டும் பணிக்குச் செல்லும் வகையில் உடல் நலம் சீராகும். சித்தப்பாவின் ஆதரவு கிடைக்கும். வாலிப வயதினருக்கு மணமாகும். புத்திர பிராப்தம் கிட்டும்.
பெண்களுக்கு தங்கம் தங்கும். 15.5.2024 அன்று மதியம் 3.25 முதல் 18.5.2024 அன்று அதிகாலை 4.04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையுடன் செயல்பட வேண்டும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஸ்ரீ வராகி அம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிபலன்
6.5.2024 முதல் 12.5.2024 வரை
சந்தோசமான வாரம். ராசிக்கு குருப் பார்வை. தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். கண் திருஷ்டி மற்றும் சிறு சிறு உடல் உபாதைகள் அகலும். தடைபட்ட அனைத்து செயல்களும் நிறைவேறும். பொருளாதாரப் பற்றாக்குறை ,ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.
இதுவரை சிறு தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். பூர்வீகச் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்க ஏற்ற நேரம். திருமணத் தடை அகலும். கோட்சார சனி பகவான் உங்கள் திட்டம் மற்றும் முயற்சியில் வெற்றி பெற உதவி செய்வார். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். அரசாங்க வேலை, அரசு ஆதரவு உண்டு.
திருமண முயற்சி நிறைவேறும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் பொறுமையாக செயல்படுவது அவசியம். அமாவாசையன்று வயது முதிர்ந்த பெண்களுக்கு ஆடை, இனிப்பான உணவு தானம் தரவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிபலன்
29.04.2024 முதல் 05.05.2024 வரை
கனவுகள் நனவாகும். தனம் வாக்கு குடும்ப அதிபதி சனி ஆட்சி. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு என மகர ராசியினருக்கு முக்கிய கிரகங்கள் சாதகமாக உள்ளது. உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் கண்ட கனவுகள் அனைத்தும் நனவாகும். தொட்டது துலங்கும். விருப்பங்கள், எண்ணங்கள் நிறைவேறும். மேற்கல்வி முயற்சி சாதகமாகும். அரசு வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடங்கள் தீரும். திருமண வயதினருக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும்.
நிம்மதி நிலைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மறையும். மறைந்து கிடந்த உங்களின் அனைத்து திறமைகளையும் வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். மாமியார் மற்றும் மாமனாரால் பொருள் வரவு உண்டாகும். குடும்ப சுமைகள், பொறுப்புகள் பெண்களுக்கு அதிகரிக்கும். இழந்த அனைத்து இன்பங்களும் மீண்டும் கிடைக்கப் போகிறது. அரை குறையாக நின்ற வீடு கட்டும் பணி துரிதமடையும். தொழில் உத்தியோக நிமித்தமாக இடப்பெயர்ச்சி செய்ய நேரும். கடன் கட்டுக்குள் இருக்கும். நோய் தாக்கம் குறையும். வெள்ளிக்கிழமை ஸ்ரீசந்தான லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
22.4.2024 முதல் 28.4.2024 வரை
பல்வேறு விதமான வளமான பலன்கள் சித்திக்கும் வாரம் .இந்த வாரத்தில் சுக்ரன், செவ்வாய் பெயர்ச்சி நிகழப் போகிறது. புதன் வக்ர நிவர்த்தி என முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தில் மாற்றம் உள்ளது.இது மகர ராசிக்கு சாதகமான கிரக மாற்றம் தான். நினைத்தவற்றை உங்கள் முயற்சியால் சாதிப்பீர்கள். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தோடு செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். அத்தியாவசிய தேவைக்கு தடுமாறிய நிலை மறையும். வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அரசு வகை ஆதாயம் கிடைக்கும். திறமையை நிருபிக்க நல்ல சந்தர்ப்பங்கள் தானாக கூடி வரும். பணி நிரந்தரமாகும்.
புதிய வீடு, வாகனம் வாங்குதலில் நாட்டம் அதிகரிக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். உடல் உஷ்ணம் மற்றும் கண் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். மனைவி வழி சொத்தில் நிலவிய கருத்து வேறுபாடு, பகைமை மறைந்து முழு பங்கும் கிடைக்கும்.கணவன், மனைவியிடம் ஒற்றுமை பாதிக்காது. சித்ரா பவுர்ண மியன்று அவல் பாயாசம் படைத்து மகாலஷ்மியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






