என் மலர்
மகரம் - வார பலன்கள்
மகரம்
இந்தவார ராசிபலன்
12.2.2024 முதல் 18.2.2024 வரை
நன்மையும் தீமையும் கலந்த வாரம். ராசியில் 4,11-ம் அதிபதி செவ்வாய் உச்சம். தன ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியன் சில கிரகங்கள் சாதகமாகவும் சில கிரகங்கள் பாதகமாகவும் உள்ளதால் ஏற்ற இறக்கம் கலந்த பலனே நடக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறக்கும். கவனத்துடன் செயல் பட்டால் தொழில், உத்தியோகத்தில் வெற்றியடைய முடியும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் இயன்ற வரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். பெரிய மூலதனம் போடுவதற்கு ஏற்ற காலம் அல்ல.
மகளின் திருமணத்திற்கு எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். உடன் பிறந்த வர்களின் சந்திப்பு, அனுசரனை மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தந்தை வழி சுற்றத்தால் நற்பயன் மற்றும் உதவி கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி யால் ஆதாயம் உண்டாகும். அரசியல் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பீர்கள். தினமும் விநாயகர் அகவல் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
5.2.2024 முதல் 11.2.2024 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். 4, 11-ம் அதிபதி செவ்வாய் அஷ்டமாதிபதி சூரியன் மற்றும் 6,9ம் அதிபதி புதனும் ராசியில் சஞ்சாரம். இதையே மாற்றி பலன் கூறினால் ராசியில் அஷ்டமாதிபதி சூரியன், பாதகாதிபதி செவ்வாய், 6ம் அதிபதி புதன். இதுபோன்ற கூட்டு கிரகங்களால் சில அசவுகரியங்கள் ஏற்படலாம். அடுத்த வாரம் அதாவது மாசி பிறந்தவு டன் சூரியன் ராசியை விட்டு விலகிவிடுவார். அதுவரை சிந்தித்து செயல்பட வேண்டும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஏற்பட்ட மன சங்கடம் தீரும். பணி யில் கவுரவம் நிலைத்தி ருக்கும். திருமண முயற்சி கள் சித்திக்கும். சிலர் எதிர்பாராத இடமாற்றத் தால் குடும்பத்துடன் இணைவார்கள். இந்த காலகட்டத்தில் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும்.
ஏழரைச் சனியின் காலம் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். சிறு உடல் உபாதைகள் தோன்ற லாம். குடும்ப உறவுகளிடம் சிறு சிறு கருத்து வேற்றுமை வரலாம். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். தை அமாவாசையன்று சாலையோரம் வசிப்ப வர்களுக்கு இயன்ற அன்ன தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
29.1.2024 முதல் 4.2.2024 வரை
தெய்வீக எண்ணம் மேலோங்கும் வாரம். ராசியில் 6,9-ம் அதிபதி புதன் மற்றும் அஷ்டமாதிபதி சூரியன். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும்.
அஷ்டமாதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல், வாங்கல் மற்றும் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. காசி, ராமேஸ்வ ரம், கயா போன்ற தலங்களுக்கு புனித யாத்திரை செய்வீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோக அதிர்ஷ்ட பொருள் வரவு உண்டு. 30.1.2024 அன்று நள்ளிரவு 1.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் இழுபறிக்கு பின் முடியும். சிறு சிறு வார்த்தைகள் கூட மனக்கசப்பை ஏற்படுத்தும். பித்ருக்களை வழிபடுவது சிறப்பு.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
22.1.2024 முதல் 28.1.2024 வரை
மங்கலத்தையும் புது மாற்றத்தையும் வழங்கும் வாரம். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். முடங்கிக் கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். செலவு குறையும். சேமிப்பு கூடும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தாய், பிள்ளை உறவில் பாசமும் உற்சாகமும் பெருகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும்.
சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும்.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தம்பதிகளிடம் சுமூக உறவு நிலவும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். தைப்பூசத்தன்று லட்சுமி நரசிம்மரை வழிபட மனக்கவலைகள் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
15.1.2024 முதல் 21.1.2024 வரை
விபரீத ராஜயோகம் உண்டாகும் வாரம். அஷ்டம ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் திட்ட மிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு என்று எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள். இரண்டாம் திருமணத்தால் எற்பட்ட மனச் சங்கடங்கள் சீராகும். வயோதிகர்களின் ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும். வராக்கடன் வசூலாகும். அஷ்டமாதிபதி சூரியன் ராசியில் நிற்பதால் பண விசயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. முக்கிய பணிகளில் தடை தாமதம் ஏற்படலாம். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். குல தெய்வத்தை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
8.1.2024 முதல் 14.1.2024 வரை
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். தன ஸ்தான சனிபகவானால் பொருள் வரவில் சீரான, சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.தன வரவால் குடும்பத்தில் மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை,திருமணம் போன்ற சுப பலன்கள் உண்டு. குருவின் 9-ம் பார்வை அஷ்டமாதிபதி சூரியன் மற்றும் 6,9-ம் அதிபதி புதன் மீது பதிவதால் அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மூத்த சகோதர, சகோத ரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து, பணம் வரும். விரும்பிய கல்வியை கற்க வெளியூர், வெளிநாடுகளில் உள்ள நினை த்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும்.
பேச்சில் நிதானத்துடன் இருந்து உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் சென்றால் நிம்மதி நீடிக்கும். முறையான திட்டமிடுதலும் வழிநடத்தலும் தங்களுக்கு நல்ல பலன் தரும். அமாவாசையன்று பித்ருக்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
1.1.2024 முதல் 7.1.2024 வரை
கடனால் ஏற்பட்ட அவச்சொல், அவமானம் மறையும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பற்றாக்குறை வருமானத்தால் கவலை அடைந்தவர்களுக்கு உபரி வருமானம் உண்டு. திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மனபாரம் குறையும். பூர்வீகச் சொத்தை கொடுத்து விட்டு புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படலாம். மழையால் பாதித்தவர்களுக்கு அரசின் நிவாரண தொகை கிடைக்கும். இடப்பெ யர்ச்சிக்கு வாய்ப்புள்ளது. திருமணம், புத்திர பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதம் விலகும்.
சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். மூத்த சகோதரர், சித்தப்பா, இளைய மனைவியால் நன்மைகள் நடக்கும். விரும்பிய படி பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல மருமகன், மருமகள் அமைவார்கள். 2.1.2024 மாலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வும், நிம்மதியான உறக்கமும் உங்களுக்கு அவசியம். பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அமாவாசையன்று சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
25.12.2023 முதல் 31.12.2023 வரை
மனக்கவலைகள் அகலும் வாரம். ஏழரை சனியின் தாக்கத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் குறையும். தடை தாம தங்கள் விலகி நல்லதொரு முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த பொருத்தமான வேலை கிடைக்கும். உப ஜெய ஸ்தான ராகு பகவானால் இடமாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என அவரவரின் வயதிற்கு ஏற்ற . மாற்றம் உண்டாகும். கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் குறையத் துவங்கும். தன வரவில் நில விய தடை தாமதங்கள் விலகும். பொருளாதாரத்தில் மிகப் பெரிய சம்பள பாக்கிகள் வசூலாகும். சேமிப்புகள் அதிகமாகும். தடைபட்ட சொத்துக்கள் மீதான வாடகை மற்றும் குத்தகை பணம் கிடைக்கும். உடல் நிலைதேறும்.பண விசயத்தில் நிலவிய கெட்ட பெயர்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும்.
குடும்ப உறவுகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க்கவும். திருமணத் தடை அகலும். குழந்தை பேறு கிட்டும்.அரசாங்கத்தின் ஆதரவால் தொழில் மாற்றம் செய்வீர்கள். 31.12.2023 அதிகாலை 5.42-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வேலைப்பளு, அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகமாகும். இயன்ற உணவு தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
18.12.2023 முதல் 24.12.2023 வரை
குரு சாதகமாக இருப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். 5,10-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி. 4,11-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி. ராசி அதிபதி சனி ஆட்சி.சாதகமான கிரக அமைப்பால் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். குழந்தை பாக்கி யத்தில் நிலவிய தடைகள் அகலும்.சில்லரை வணிகம் செய்தவர்கள் மொத்த வியாபாரம் செய்வார்கள். இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். தந்தை வழியில் சில பொருள் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.கடன் தொல்லைகள் குறையும்.
சேமிப்பு உயரும். வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டு. பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தை பெற்றுத்தரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டு வீர்கள். காலம் தாழ்த்தாமல் நிச்சயித்த திரும ணத்தை உடனே நடத்த வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். ஏகாதசி யன்று தொழிலாளிகளுக்கு இயன்ற உதவிகள் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
11.12.2023 முதல் 17.12.2023 வரை
தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். 5,10-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி, 4, 11-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி. ராசி, தன ஸ்தான அதிபதி சனி ஆட்சி என கோட்சார கிரகங்கள் மகர ராசிக்கு சுப பலன்கள் வழங்கவுள்ளது. பய உணர்வு நீங்கி வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். அனுபவப்பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். தடைபட்ட பூர்வீகச் சொத்து பாகப்பி ரிவினை பேச்சு வார்த்தையில் சுமூகமாகி உங்களை நாடி வரும். கவுரவப் பதவிகள் கிடைக்கும்.நிலையான தொழிலோ, உத்தியோகமோ இன்றி அவதியுற்ற வர்களுக்கு மனதிற்கு பிடித்த தொழில் அல்லது உத்தியோகம் அமையும். குல தெய்வ அனுகிரகம் ஏற்படும். குல தெய்வம் தெரியாத வர்களுக்கு குல தெய்வம் பற்றி அறியும் காலம் வந்து விட்டது. அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள், எல்லைத் தகராறிற்கு தீர்வு பிறக்கும்.
வீடு மாற்றிச் செல்வீர்கள். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். உடல் பெருக்கம் ஏற்படும். வாயுத் தொல்லை உருவாகும். தம்பதிகளிடையே புரிதல் ஏற்படும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். அமாவாசையன்று பட்சிகளுக்கு உணவிடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
4.12.2023 முதல் 10.12.2023 வரை
மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம்.தன ஸ்தானத்திற்கு செவ்வாய், சனி சம்பந்தம். தொழிலில் பிறர் ஆச்சரியப்படும் வகையில் கணிசமான லாபம் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் நிலவிய சங்கடங்கள் சீராகும். வேலை தேடுபவர்களுக்கு மன நிறைவான வேலை கிடைக்கும். பணவரவு சரளமாகும். திருமண முயற்சி சாதகமாகும். 40 வயதைக் கடந்தும் திருமணத் தடை இருப்பவர்களுக்கு கூட ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் நடந்து விடும். உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவ செலவு குறையும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். 6.12.2023 காலை 10.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் இருப்ப வர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். மன சஞ்சலத்தை தவிர்க்க ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்தவார ராசிபலன்
26.11.2023 முதல் 3.12.2023 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். அஷ்டமா திபதி சூரியன் லாப ஸ்தானத்தில் லாபாதிபதி செவ்வாயுடன் சனி பார்வையில் இருப்பதால் வெளி நாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். பணம் சம்பாதிக்க கடுமையாக உழைக்க நேரும். சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன் நெருக்கடிகள் சற்று குறையும். துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும்.
வீடு, வாகன யோகம் உண்டாகும். அவசி யமற்ற கடனைத் தவிர்க்கவும்.சிலரது காதல் பிரிவில் முடியும். சிலருக்கு சளி, இருமல் காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம்.தம்பதிகள் அமைதி கடைபிடித்தால் ஒரிரு வாரங்களில் நிலமை சீராகும். மகாலட்சுமி அஷ்டகம் படிப்பது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






