என் மலர்tooltip icon

    மகரம் - வார பலன்கள்

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    22.1.2024 முதல் 28.1.2024 வரை

    மங்கலத்தையும் புது மாற்றத்தையும் வழங்கும் வாரம். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். முடங்கிக் கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். செலவு குறையும். சேமிப்பு கூடும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தாய், பிள்ளை உறவில் பாசமும் உற்சாகமும் பெருகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும்.

    சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும்.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தம்பதிகளிடம் சுமூக உறவு நிலவும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். தைப்பூசத்தன்று லட்சுமி நரசிம்மரை வழிபட மனக்கவலைகள் அகலும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    15.1.2024 முதல் 21.1.2024 வரை

    விபரீத ராஜயோகம் உண்டாகும் வாரம். அஷ்டம ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் திட்ட மிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு என்று எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள். இரண்டாம் திருமணத்தால் எற்பட்ட மனச் சங்கடங்கள் சீராகும். வயோதிகர்களின் ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும். வராக்கடன் வசூலாகும். அஷ்டமாதிபதி சூரியன் ராசியில் நிற்பதால் பண விசயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. முக்கிய பணிகளில் தடை தாமதம் ஏற்படலாம். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். குல தெய்வத்தை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    8.1.2024 முதல் 14.1.2024 வரை

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். தன ஸ்தான சனிபகவானால் பொருள் வரவில் சீரான, சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.தன வரவால் குடும்பத்தில் மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை,திருமணம் போன்ற சுப பலன்கள் உண்டு. குருவின் 9-ம் பார்வை அஷ்டமாதிபதி சூரியன் மற்றும் 6,9-ம் அதிபதி புதன் மீது பதிவதால் அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மூத்த சகோதர, சகோத ரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து, பணம் வரும். விரும்பிய கல்வியை கற்க வெளியூர், வெளிநாடுகளில் உள்ள நினை த்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும்.

    பேச்சில் நிதானத்துடன் இருந்து உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் சென்றால் நிம்மதி நீடிக்கும். முறையான திட்டமிடுதலும் வழிநடத்தலும் தங்களுக்கு நல்ல பலன் தரும். அமாவாசையன்று பித்ருக்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    1.1.2024 முதல் 7.1.2024 வரை

    கடனால் ஏற்பட்ட அவச்சொல், அவமானம் மறையும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பற்றாக்குறை வருமானத்தால் கவலை அடைந்தவர்களுக்கு உபரி வருமானம் உண்டு. திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மனபாரம் குறையும். பூர்வீகச் சொத்தை கொடுத்து விட்டு புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படலாம். மழையால் பாதித்தவர்களுக்கு அரசின் நிவாரண தொகை கிடைக்கும். இடப்பெ யர்ச்சிக்கு வாய்ப்புள்ளது. திருமணம், புத்திர பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதம் விலகும்.

    சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். மூத்த சகோதரர், சித்தப்பா, இளைய மனைவியால் நன்மைகள் நடக்கும். விரும்பிய படி பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல மருமகன், மருமகள் அமைவார்கள். 2.1.2024 மாலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வும், நிம்மதியான உறக்கமும் உங்களுக்கு அவசியம். பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அமாவாசையன்று சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    25.12.2023 முதல் 31.12.2023 வரை

    மனக்கவலைகள் அகலும் வாரம். ஏழரை சனியின் தாக்கத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் குறையும். தடை தாம தங்கள் விலகி நல்லதொரு முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த பொருத்தமான வேலை கிடைக்கும். உப ஜெய ஸ்தான ராகு பகவானால் இடமாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என அவரவரின் வயதிற்கு ஏற்ற . மாற்றம் உண்டாகும். கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் குறையத் துவங்கும். தன வரவில் நில விய தடை தாமதங்கள் விலகும். பொருளாதாரத்தில் மிகப் பெரிய சம்பள பாக்கிகள் வசூலாகும். சேமிப்புகள் அதிகமாகும். தடைபட்ட சொத்துக்கள் மீதான வாடகை மற்றும் குத்தகை பணம் கிடைக்கும். உடல் நிலைதேறும்.பண விசயத்தில் நிலவிய கெட்ட பெயர்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும்.

    குடும்ப உறவுகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க்கவும். திருமணத் தடை அகலும். குழந்தை பேறு கிட்டும்.அரசாங்கத்தின் ஆதரவால் தொழில் மாற்றம் செய்வீர்கள். 31.12.2023 அதிகாலை 5.42-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வேலைப்பளு, அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகமாகும். இயன்ற உணவு தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    18.12.2023 முதல் 24.12.2023 வரை

    குரு சாதகமாக இருப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். 5,10-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி. 4,11-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி. ராசி அதிபதி சனி ஆட்சி.சாதகமான கிரக அமைப்பால் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். குழந்தை பாக்கி யத்தில் நிலவிய தடைகள் அகலும்.சில்லரை வணிகம் செய்தவர்கள் மொத்த வியாபாரம் செய்வார்கள். இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். தந்தை வழியில் சில பொருள் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.கடன் தொல்லைகள் குறையும்.

    சேமிப்பு உயரும். வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டு. பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தை பெற்றுத்தரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டு வீர்கள். காலம் தாழ்த்தாமல் நிச்சயித்த திரும ணத்தை உடனே நடத்த வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். ஏகாதசி யன்று தொழிலாளிகளுக்கு இயன்ற உதவிகள் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    11.12.2023 முதல் 17.12.2023 வரை

    தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். 5,10-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி, 4, 11-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி. ராசி, தன ஸ்தான அதிபதி சனி ஆட்சி என கோட்சார கிரகங்கள் மகர ராசிக்கு சுப பலன்கள் வழங்கவுள்ளது. பய உணர்வு நீங்கி வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். அனுபவப்பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். தடைபட்ட பூர்வீகச் சொத்து பாகப்பி ரிவினை பேச்சு வார்த்தையில் சுமூகமாகி உங்களை நாடி வரும். கவுரவப் பதவிகள் கிடைக்கும்.நிலையான தொழிலோ, உத்தியோகமோ இன்றி அவதியுற்ற வர்களுக்கு மனதிற்கு பிடித்த தொழில் அல்லது உத்தியோகம் அமையும். குல தெய்வ அனுகிரகம் ஏற்படும். குல தெய்வம் தெரியாத வர்களுக்கு குல தெய்வம் பற்றி அறியும் காலம் வந்து விட்டது. அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள், எல்லைத் தகராறிற்கு தீர்வு பிறக்கும்.

    வீடு மாற்றிச் செல்வீர்கள். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். உடல் பெருக்கம் ஏற்படும். வாயுத் தொல்லை உருவாகும். தம்பதிகளிடையே புரிதல் ஏற்படும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். அமாவாசையன்று பட்சிகளுக்கு உணவிடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    4.12.2023 முதல் 10.12.2023 வரை

    மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம்.தன ஸ்தானத்திற்கு செவ்வாய், சனி சம்பந்தம். தொழிலில் பிறர் ஆச்சரியப்படும் வகையில் கணிசமான லாபம் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் நிலவிய சங்கடங்கள் சீராகும். வேலை தேடுபவர்களுக்கு மன நிறைவான வேலை கிடைக்கும். பணவரவு சரளமாகும். திருமண முயற்சி சாதகமாகும். 40 வயதைக் கடந்தும் திருமணத் தடை இருப்பவர்களுக்கு கூட ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் நடந்து விடும். உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவ செலவு குறையும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். 6.12.2023 காலை 10.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் இருப்ப வர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். மன சஞ்சலத்தை தவிர்க்க ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    26.11.2023 முதல் 3.12.2023 வரை

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். அஷ்டமா திபதி சூரியன் லாப ஸ்தானத்தில் லாபாதிபதி செவ்வாயுடன் சனி பார்வையில் இருப்பதால் வெளி நாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். பணம் சம்பாதிக்க கடுமையாக உழைக்க நேரும். சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன் நெருக்கடிகள் சற்று குறையும். துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும்.

    வீடு, வாகன யோகம் உண்டாகும். அவசி யமற்ற கடனைத் தவிர்க்கவும்.சிலரது காதல் பிரிவில் முடியும். சிலருக்கு சளி, இருமல் காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம்.தம்பதிகள் அமைதி கடைபிடித்தால் ஒரிரு வாரங்களில் நிலமை சீராகும். மகாலட்சுமி அஷ்டகம் படிப்பது நல்லது.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    20.11.2023 முதல் 26.11.2023 வரை

    அதிர்ஷ்டம் பேரதிர்ஷடமாகும் வாரம். 1,2-ம் அதிபதி சனியும் 4, 11-ம் அதிபதி செவ்வாயும் ஒன்றையொன்று பார்ப்பதால் பொருளாதாரத்திற்கு பிறருடைய கட்டுப்பாட்டில் இருந்த நிலை மாறும்.புதிய சொந்த வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம். புதிய வாகனம் வாங்கலாம்.சிலர் கடன் பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள். வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும் அஷ்டம ஸ்தானத்தை சனி பார்ப்பதால் அதிர்ஷ்டம் பேரதிர்ஷடமாகும் வாரம். சிலர் கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம்.

    அதிர்ஷ்டப் பணம் அதிர்ஷ்ட சொத்து, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணத் தடை அகலும்.அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம்.வெளிப்படையான பேச்சால் பிரச்சினையை விலை கொடுத்து வாங்கக் கூடாது. பவுர்ணமி யன்று சிவனடியார்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    13.11.2023 முதல் 19.11.2023 வரை

    அதிர்ஷ்டம் பேரதிர்ஷடமாகும் வாரம். ராசி அதிபதி சனிக்கு 4, 11ம் அதிபதி செவ்வாய் பார்வை. செவ்வாய்க்கு சனி பார்வை. பொருளாதாரத்திற்கு பிறருடைய கட்டுப்பாட்டில் இருந்த நிலை மாறும்.புதிய சொந்த வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம். புதிய வாகனம் வாங்கலாம்.சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள். வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும் அஷ்டம ஸ்தானத்தை சனி பார்ப்பதால் அதிர்ஷ்டம் பேரதிர்ஷடமாகும் வாரம். சிலர் கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம்.

    அதிர்ஷ்டப் பணம் அதிர்ஷ்ட சொத்து, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்த கவலைகள் அகலும். திருமணத் தடை அகலும்.அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம்.வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கக் கூடாது. சஷ்டி திதியில் முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    6.11.2023 முதல் 12.11.2023 வரை

    மனதில் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும். ராசிய அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெற்றதால் அறிவாற்றலும், சாமர்த்தி யமும் வெளிப்படும்.எண்ணங்கள் ஈடேறும். திட்டங்கள் கைகூடும். புதிய தொழில் வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். முன்னேற்றப்பாதையில் நிலவிய தடைகள் தகறும். வாடகை இடத்தில் குடியிருந்தவர்கள் சொந்த கட்டிடத்தில் குடியேறும் அமைப்பு உண்டாகும். வெளிநாட்டு உறவினர்கள் மூலம் அனுகூலமான பதில் வந்து சேரும். தடைபட்ட சுப காரியம் தொடர்பான பேச்சு வார்த்தை கைகூடும்.அடமானத்தில் உள்ள சொத்துக்கள், நகைகள் மீண்டு வரும். உடலில் இருந்த ஆரோக்கிய குறைபாடு அகலும். தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.

    தாய் மாமாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். தீபாவளி போனசில் வீட்டிற்குத் தேவையான அழகு ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் விருப்ப ஒய்வு பெறும் வாய்ப்பு உள்ளது. 6.11.2023 மதியம் 1.22 முதல் 9.11.2023 மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற வீண் கவலை, அதிகமான அலைச்சல் மற்றும் ஏமாற்றம், மன வருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் கவனம் தேவை. அதிர்ஷ்ட லட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×