என் மலர்
மகரம்
வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை
28.9.2025 முதல் 4.10.2025 வரை
பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். பாக்கியாதிபதி புதன் உச்சம் பெறுவதால் மகர ராசிக்கு வாழ்க்கையில் நடைபெற வேண்டிய அனைத்து சுப பலன்களும் நடக்கும். தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல் மேலோங்கும். எதிர்பாராத புதிய திருப்பங்கள் உண்டாகும். புதிய முயற்சியில் ஈடுபட்டால் நல்ல அனுகூலமான பலன்களையும் ஆதாயங்களையும் பெற முடியும்.
வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். வருமானம் பெருகும். பணப்புழக்கம் சரளமாகும். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும்.
வீடு கட்ட, அல்லது புதிய தொழில் துவங்க கடன் கிடைக்கும். வேலையில் நிலவிய நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணிபுரிய முடியும். சிலர் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். வரவுக்கு மீறிய செலவை தவிர்க்க வேண்டும். புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவை வழிபட மகத்தான மாற்றங்கள் வந்து சேரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






