என் மலர்
மகரம்
வார ராசிபலன் 2.11.2025 முதல் 8.11.2025 வரை
2.11.2025 முதல் 8.11.2025 வரை
மகரம்
இடப்பெயர்ச்சி பற்றிய சிந்தனை அதிகரிக்கும் வாரம். ராசிக்கு அதிசார குருவின் பார்வை உள்ளது. வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர்மாற்றம் பற்றிய சிந்தனைகள் கூடும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். பணியில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாங்கும் போது முக்கிய பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம்.
நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பம் அமையும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். கலைத் துறையினருக்குப் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். தாய்வழிச் சொத்தில் இளைய சகோதரத்தால் ஆதாயம் உண்டு. இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். வருமானம் மகிழ்ச்சியை தரும் விதத்தில் இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாட்டால் இன்னல்கள் அகலும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






