என் மலர்
மகரம் - வார பலன்கள்
மகரம்
வார ராசி பலன்கள்
4-7-2022 முதல் 10-7-2022 வரை
அதிர்ஷ்டமான வாரம். 5-ம் அதிபதி சுக்ரன் 5-ல் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் அதிர்ஷ்டத்தை விரும்பாதவர்களைக் கூட அதிர்ஷ்டம் விரும்பும். பங்குச் சந்தை, திடீர் அதிர்ஷ்ட ஆதாயம் உண்டு. இதுவரை கருத்தரிக்காத பெண்களுக்கு பூர்வ புண்ணிய பலத்தால் கரு உருவாகும்.
கருத்தரிப்பில் சிரமம்உள்ளவர்களுக்கு வைத்தியம் பலன் தரும். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். வீட்டில் மேளச் சத்தம் கேட்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் திரும ணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். பூர்வீகம்தொடர்பானபிரச்சினைகள் குறையும்.
குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனை களை நிறைவேற்றஏற்ற காலம். ஆடம்பரத்தை, அந்தஸ்த்தைதக்க வைத்துக்கொள்ள அதிக செலவு செய்ய நேரும். பருவ வயது பிள்ளைகள் பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார்கள். வேலையாட்க ளால் உருவாகிய பிரச்சினை சீராகும்.ஆரோக்கிய குறைபாடு அகலும்.
5.7.2022 மாலை 4.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பயணங்களை ஒத்தி வைக்கவும். கால பைரவரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசி பலன்கள்
27-6-2022 முதல் 03-7-2022 வரை
வேலைபளு மற்றும் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும் வாரம். அஷ்டம ஸ்தான அதிபதி சூரியன் மற்றொரு மறைவு ஸ்தானமான 6ல் சஞ்சரிப்பதால் கெட்டவன், கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம்கிடைக்கப் பெறுவீர்கள். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். சிலருக்கு ராணுவம், போலீஸ் மற்றும் பொதுப் பணித்துறையில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். வழக்கத்தை விட பொருளாதாரம்சிறப்பாக இருக்கும். தாய் வழிச் சொத்து, தாய் வழி உறவினர்களின்அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ,மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள் 6-ல் செவ்வாய் ராகு இருப்பதால் சக பணியாளர்களால் தொல்லைகள் உருவாகலாம்.நோய்க்கு சிகிச்சை செய்பவர்கள் தினமும் மகா மிருத்யுஞ்ச மந்திர பாராயணம் செய்து துளசி தீர்த்தம் அருந்தினால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை
நிம்மதியான வாரம். தொழில் வளம் சிறக்கும். நிம்மதியாக தொழிலை நடத்துவீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். குடும்ப ஸ்தான அதிபதி சனி குடும்ப ஸ்தா னத்தில் ஆட்சிபெற்றதால் குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வாக்கு வன்மை லாபம் பெற்றுத் தரும். 3, 12-ம் அதிபதி குருவுடன் 4, 11-ம் அதிபதி செவ்வாய் சேர்க்கை இருப்பதால் பணம், ஜாமீன் அல்லது சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புரிதலுடன் செயல்பட்டால் இழப்பையும் லாபமாக மாற்றலாம். 4-ல் ராகு இருப்பதால் மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர்கால த்துக்கு திட்டமிடுவது முக்கியம்.பொருளாதார மந்த நிலை நீங்கும். கடன்களைக் குறைக்க புதிய முயற்சி எடுப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை மிக நல்ல வாரம்.
தாய், தந்தையால் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். கற்ற கல்வியால் பயன் உண்டு.சிலருக்கு சொத்து விற்பனையில்மா மனாரிடம் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.வயோதிகர்களுக்கு ஆயுள் பயம் அகலும்.பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமிநரசிம்மருக்குமுல்லை பூ சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை
உங்கள் திட்டங்களிலும், செயல்களிலும் நிலவிய தடை தாமதங்கள் விலகும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கருதிய காரியங்கள் கைகூடும். அபரிமிதமான சக்தியுடன் இருப்பீர்கள். அரசு, அரசு சார்ந்த பணிகளில் வேலை செய்யும் அமைப்பு ஏற்படும். 5-ம் அதிபதி சுக்ரன் தனது சொந்த வீடான ரிஷபத்தில்ஆட்சி பலம் பெறுவதால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட சந்தர்ப்பம் கிடைக்கும். தம்பதிகள் மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவார்கள்.
பாக்கிய ஸ்தானத்தை ஆட்சி பலம் பெற்ற குரு பார்ப்பதால்தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பூர்வீக சொத்து மீதான வழக்குகள் சமாதானமாக பேசி முடிக்கப்படும்.பெண்களின் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைவேறும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். திருமண முயற்சிகள் கைகூடும்.பிள்ளைகளால் பெருமை சேரும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். சொத்துச் சேர்க்கை உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசி பலன்கள்
6.6.2022 முதல் 12.6.2022 வரை
எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு, கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். போட்டிகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும். வாகனங்களுக்கு பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அண்டை, அயலாருடன் இருந்த தகராறுகள் முடிவிற்கு வரும்.
உங்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.குடும்பத்தினரின் நிம்மதிக்காக கோபத்தை வெல்லும் சூட்சமத்தை கற்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். சக ஊழியர்களுடன் பொறுமையுடன், பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். சிலருக்கு தடைபட்ட பதவி உயர்வு கைகூடும்.சிலர் வீட்டை மாற்றலாம்.
அல்லது வேலையில் மாற்றம் உண்டாகும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். 5.6.2022 அன்று காலை 12.24 முதல் 8.6.2622 காலை 10.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். பிரதோஷத்தன்று சிவனுக்கு விபூதி அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசி பலன்கள்
30.5.22 முதல் 5.6.22 வரை
ஜென்மச் சனியால் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். சகோத ரருக்கு எதிர் பாலினத்தவரால் நிம்மதி குறையும். 6ம் அதிபதி புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு வர வேண்டிய பதவிகள், சலுகைகள், பெயர், புகழ் அனைத்தும் தேடி வரும்வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். அரசு பணியாளார்கள் வீண் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
வீடு, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்சியும் உண்டாகும். இந்த கால கட்டத்தில் புதிய வீடு, மனை வாங்கும் அமைப்பும் , பழைய சொத்துக்களில் இருந்து வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தந்தை மகன் முரண்பாடு முடி விற்கு வரும்.
சிலர் போலியான விளம்பரங்களை நம்பி நல்ல வேலையை தவறவிடுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரத்தில் திருமணம் நிச்சயிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. செவ்வாய் கிழமை அஷ்ட லட்சுமிகளையும் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22
ராசி அதிபதி சனி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். அவ்வப்போது சில சங்கடங்கள் தோன்றினாலும் யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வார்கள்.
சகோதர சச்சரவுகள் விலகும். உடன் பிறந்தவர்களின் சுப காரியங்களை முன்னின்று நடத்தும் கடமையும், பொறுப்பும் உங்களைத் தேடி வரும்.புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்த தேவையான தொழில் கடன் கிடைக்கும்.அஷ்டமாதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிற்பதால் பூர்வீகம் தொடர்பான சில தடைகள், தாமதங்கள், மனக்குழப்பம் ஏற்படலாம்.
திருமண வயது ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் கூடிவரும். நோய்த் தாக்கம் குறையும். வார ஆரம்பத்தில் சில அசவுகரியங்கள் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி உண்டு. அமாவாசையன்று காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிப்பலன்
இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை
பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் உச்சம் பெற்றதால்உ ங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். அஷ்டமாதிபதி சூரியன் ரிஷபத்திற்கு பெயர்ந்ததால் வழக்குகளின் வெற்றி செய்தி கிட்டும். நீண்ட நாள் மனக்குறைகள் விலகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும். இதுவரை புரிதலின்றி பிரிந்த தம்பதிகளிடம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
6-ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றதால் சிலருக்கு செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். ஆனால் எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதமாகும். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஜென்மச் சனியால் பணி நீக்கமானவர்களுக்கு மீண்டும் பணி நியமன உத்தரவு வரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தினமும் சிவ கவசம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






