என் மலர்
மகரம் - வார பலன்கள்
மகரம்
இந்த வார ராசிப்பலன்
26.9.2022 முதல் 2.10.2022 வரை
குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியுமான சூழ்நிலை காணப் படும் வாரம். ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். வேலை செய்யுமிடத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டு. அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும்.பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம்.லஞ்சம் கொடுத்து அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும்.
குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை கவர்ந்து வியாபாரத்தை பெருக்குவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும்.
பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்சியைத் தரும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் திருமணத் தடை நீங்கும். அரசு வேலைகள் அனுகூலமாக நடக்கும். வீடு கட்ட இடம் வாங்கி பத்திரப்பதிவு செய்வீர்கள். அரசியல் பிரமுகர்கள் அதிக நன்மை பெறுவார்கள்.மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும்.சனிக்கிழமை ராகு வேளையில் துர்க்கையை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
19.9.2022 முதல் 25.9.2022 வரை
வெற்றி மேல் வெற்றி தரும் அற்புதமான வாரம். இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்க ளுக்கு ஏற்றமான வாரம்.பொருளாதார பற்றாக்குறை அகலும். உழைப்பிற் கேற்ற ஊதியம் உண்டு. கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் நன்மதிப்பு, பெருமை உண்டாகும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். வீடு கட்டப் போட்ட பட்ஜெட் திட்டமிடுதலை விட எகிறும். தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செய்ய நேரும். வாரிசுகளின் திருமண முயற்சி வெற்றியாகும். செயற்கை கருத்தரிப்பிற்கான முயற்சியை சிறிது காலம் ஒத்தி வைக்கவும்.
23. 9.2022 அன்று காலை 2.03 மணி முதல் 25.9.2022 அன்று காலை 11.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும். அமாவா சையன்று இட்லி, எள்ளுச் சட்னி தானம் தரவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
12.9.2022 முதல் 18.9.2022 வரை
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். 5, 10-ம் அதிபதி சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் முக்கியமான முடிவுகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அதிக முதலீடு செய்ய வேண்டிய புதிய தொழில்ஒப்பந்தங் களை ஒத்தி வைப்பது நலம்.
அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். வேலை இல்லாதவர்களுக்குபுதிய வேலை கிடைக்கும். சிலருக்கு புதியசொந்த தொழில் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்சியை அதிகரிக்கும். வைத்தியச் செலவு குறையும்.
சிலர் உடன் பிறப்புகளுக்காக சொத்தை விட்டுக் கொடுப்பார்கள் அல்லது மூத்த சகோதரம், சித்தப்பாவால் சொத்துப் பிரச்சினை அதிகரிக்கும். 8-ம் அதிபதி சூரியன் வக்ரம் பெற்று 9-ம் அதிபதி புதனுடன் கூடுவதால் தந்தைக்கு ஆரோக்கிய குறைபாடு வந்து அகலும். ஆன்லைனில் பணத்தை இழக்க வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். சனிக்கிழமை ஸ்ரீ வீரபத்திரரை வணங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
5.8.2022 முதல் 11.9.2022 வரை
நன்மையும் தீமையும் கலந்த வாரம்.4-ல் உள்ள ராகுவால் குடியிருப்பில் உள்ள வாடகைதாரர்கள் மாறலாம் வீடு சீரமைக்கும் பணியில் பட்ஜெட் கையை பிடிக்கும்.பரம்பரை சொத்தின் மீது உள்ள வில்லங்கத்திற்காக சித்தப்பா வுடன் அவ்வப்போது வாக்கு வாதம் உண்டாகலாம். வரவிற்கு மீறிய செலவும் விரயமும் உண்டாகும்.
மதிக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்திய மருமகள் உங்களை புரிந்து கொள்வார். ராசி மற்றும் தன அதிபதி சனி வக்ரம் பெற்றதால் உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கணவன், மனைவி உறவுகளில் அன்பு அதிகரிக்கும். ஜென்மச் சனியால் பிரிந்தவர்கள் இணைவார்கள்.பெண்கள் பணிபுரியும் இடத்தில் மகிழ்சியுடன் வேலை செய்யும் அமைப்பு நிலவும்.
அஷ்டம சூரியனால் கடந்த சில வாரங்களில் தொழில் நஷ்டம் வேலையிழப்பு போன்றவைகளை சந்தித்தவர்களுக்கு தொழில் ஏற்றம், நல்ல வேலைகள் கிடைக்கும். சிலருக்கு எதிர் பாலினரால் அசவுகரியங்கள் ஏற்படலாம். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
29.8.2022 முதல் 4.9.2022 வரை
தடை தாமதங்கள் விலகும் வாரம். 6, 9-ம் அதிபதி புதன் 9-ல் உச்சம் பெற்றதால் தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். வேலையாட்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தொழிலில் நிலவும் எதிர்ப்பு, போராட்டங்களை எதிர் நீச்சலடித்து வெற்றி பெறுவீர்கள். உங்களின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் உரிய பலன்கள் வந்தடையும். திருமணத் தடை அகலும்.
நீதிமன்ற வழக்குகள் ஒத்திப் போகும். சகோதர, பங்காளி கருத்து வேறுபாடு நீங்கும். நிம்மதியான உறக்கம் உண்டாகும். தாயார் நண்பர் போல் அறிவுரை கூறுவார். கன்னிப் பெண்களுக்கு அழகும், கம்பீரமும் நிறைந்த வாழ்க்கைத் துணை கிட்டும். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்துகுடும்பம் நடத்துவார்கள்.
அஷ்டமாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டு, பங்குச் சந்தை, தொழில் என பல வகைகளில் வருமானம் உண்டாகும்.பெண்களுக்கு கணவர் மற்றும் குழந்தைகளால் நிம்மதி உண்டாகும். சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும். திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
22.8.2022 முதல் 28.8.2022 வரை
விபரீத ராஜயோகம் உண்டாகும் வாரம். ராசி மற்றும் குடும்ப ஸ்தான அதிபதி சனி ராசியில் ஆட்சி பலம் பெற்றதால் குடும்ப நிலையில் மாற்றமும் முன்னேற்றம் உண்டாகும். உழைப்பால் வெற்றிக் கனியை ருசிப்பீர்கள். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும்.
உத்தியோகத்தில் இருப்ப வர்களின் செயல்திறன் அதிகரிக்கும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும். வழக்குகள் சாதகமாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணமும் அதற்கான முயற்சியும் அதிகரிக்கும். தைரிய ஸ்தான அதிபதி குரு வக்ரம் பெற்றதால் அலைச்சல் மிகுந்த பயணத்தால் உடலில் சோர்வு அதி கரிக்கும். அஷ்டமாதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்றதால் விபரீத ராஜ யோகத்தால் நீண்ட காலமாக விற்க முடியாமல் கிடந்த வீடு, நிலம் போன்ற சொத்துக்களை விற்பதன் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
26.8.2022 மாலை 6.32 மணி முதல் 29.8.2022 மாலை 4.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். நெய்தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
15.8.2022 முதல் 21.8.2022 வரை
சுமாரான வாரம். 6, 9-ம் அதிபதி புதன் 8-ல் அஷ்டமாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் வியாபாரத்திற்குப் போட்டியாக புதிய எதிரிகள் தோன்றுவார்கள். கடுமையான உழைப்பால் அவற்றைச் சமாளிப்பீர்கள். கடன்,ஆரோக்கியம், வம்பு வழக்கு தொடர்பான விசயங்களில் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கை ஒத்திப்போடுவது நல்லது.
அஷ்டமாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் மகர ராசிப் பெண்கள் ஆவணி மாதத்தில் மாங்கல்யம் மாற்றுவதை தவிர்க்கவும். திரு மணத் திற்கு முகூர்த்தம் குறிக்கும் போது கவனம் தேவை.சிலர் பழைய வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடுவார்கள். உலவுகின்ற கிரகநிலை வியாபாரத்திற்கு ஒரளவு உதவிகரமாக இருக்கும்.
இடையூறுகள் எத்தனை வந்தாலும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். அடுத்தவர் பேச்சைக் கேட்டு உங்களு டைய மூளை குழப்பாமல் சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. மிகுதியான கோபம், பிடி வாதத்தை தவிர்த்தால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
8.8.2022 முதல் 14.8.2022 வரை
சாதகமும் பாதகமும் கலந்த வாரம். அஷ்ட மாதிபதி சூரியன் 7-ல் நின்று ராசி அதிபதி சனியைப் பார்ப்பதால் சில சாதகங்களும் பல பாதகங்க ளும்உள்ளது. சிலருக்கு சிறப்பான பொது ஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். தொழில் உத்தியோக ரீதியான அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு நிரந்தர பணி கிடைக்கும். சம்பந்திகள் கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் பாதிக்கப்படலாம்.
சிலருக்கு பண முடக்கம் ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச் சல்களும் ஏற்படும். ஏமாற் றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.சிலருக்கு அதிக செலவு காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். சிலர் பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்குவர்.
3-ம்மிட குருவால் ஆன்லைன் வர்த்த கங்கள் அபரிமிதமான லாபத் தைக் கொடுக்கும் பிரிந்திருக்க நேரிடும். பெண்க ளுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைக்கும். திருமண முயற்சியில் தடை, தாமதம் நிலவும். சனிக்கிழமை துப்புரவு தொழிலாளிகளுக்கு இயன்ற உணவு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
1.8.2022 முதல் 7.8.2022 வரை
எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டிய காலம். ராசி, தன வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சனி ராசியில் ஆட்சி பலம் பெறுவது பக்கபலம். என்றாலும் ராசியில் வக்ரம் பெறுவதால் மன அமைதி குறையும். உடல் அசதி இருக்கும். ஓய்வு நேரம் குறையும். மிகப் பெரிய முதலீட்டில் தொழிலில் செய்பவர்கள் இன்சூரன்ஸ் செய்து கொள்வது நலம்.
கண், காது, மூக்கு மற்றும் சுவாச உறுப்புகள் தொடர்பான பிரச்சினைகள் மாற்று மருத்துவத்தில் குணமாகும். சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாட்டில் வாழும் மகள் வீட்டிற்குச் சென்று வருவார்கள். ஜென்மச் சனியின் காலம் என்பதால் செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுபவர்கள் சுய ஜாதகத்தின் படி செயல்படவும். உறவினர் பகை அகலும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் விரும்பி வந்து சேருவார்கள்.
பெண்களுக்கு தாய் மற்றும் சகோதர வழி அன்பு ஆறுதலாக இருக்கும். ஆரோக்கிய கேடு சீராகும். 1.8.2022 இரவு 10.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவுகளின் நியாயமற்ற நடவடிக்கைகள் உங்கள் மனதில் குழப்பத்தைத் தரும். ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசி பலன்கள்
25.7.2022 முதல் 31.7.2022 வரை
எதிர்கால வாழ்க்கையை திட்டமிடும் வாரம். 4ல் செவ்வாய் ராகு இருப்பதால் ரியல் எஸ்டேட் துறையினருக்கு ஏற்றமான நேரம். சிலர் புதியதாக ரியல் எஸ்டேட் தொழில் ஆரம்பிப்பார்கள்.உங்களின் முயற்சியால் தொழில் உத்தியோகத்தில் சாதகமான பலன் உண்டாகும். கடன் தொல்லை அகலும்.
உடன் பிறந்தவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டியதை முறையாக பிரித்து கொடுப்பீர்கள். சிலர் சொத்துடன் குலத் தொழிலையும் பிரிக்கலாம். கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும். நீண்ட நாள் கனவான சந்தான பாக்கியம் கிடைக்கும். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்குசெல்லும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
சிலர் குடியிருப்புகளை லீசுக்கு விடலாம் அஷ்டமாதிபதி சூரியன் 7ல் நிற்பதால் வாழ்க்கை துணையுடன் தர்க்கம் செய்யாமல் இருப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் எதையும் யோசிக்காமல் முடிவெடுத்தால் அது விவகாரத்தில் முடியும். 30.7.2022 பகல் 12.12க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். பிரதோசத்தன்று சிவனுக்குஇளநீர்அபிசேகம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
18-7-2022 முதல் 24-7-2022 வரை
சுபசெய்திகளால் மனம் மகிழும் வாரம். ராசி அதிபதி சனியின் 3ம் பார்வை குருவின் மேல் பதிவது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஏழரைச் சனியையும் மீறி தடைபட்ட நல்ல விசயங்கள் தாமாகவே நடக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும்.பணம் வரும் வழியும் தெரியாது போகும் வழியும் தெரியாது. தடைபடாத பண வரவு இருந்தாலும் சுபசெலவுகள் மிகுதியாகும். பண விசயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.
திருட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு கல்வியில் நிலவிய தடைகள் நீங்கும். சகோதர, சகோதரிகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு குறையும். சிலர் மன நிம்மதிக்காக வீடு மாறுவார்கள். நோய் தாக்கம் குறையும்.
எனினும்ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். மனைவி ஆரோக்கிய குறைபாட்டை சரி செய்ய தாய் வீடு செல்வார். நிச்சயித்த திருமணத்தை தள்ளிப்போடாமல் ஆவணியில் உடனே நடத்துவது நல்லது. விவசாயிகள் தொழிலுக்கு தேவையான தளவாடப் பொருட்கள் வாங்குவார்கள். மாமனார் மூலம் பூமி வயல், தோட்டம் கிடைக்கும். அல்லது என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும்.சிவன் கோவிலுக்கு தேவையான மின் சாதனங்களை வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
11.7.2022 முதல் 17.7.2022 வரை
யோகமான வாரம்.இதுவரை நீங்கள் அனுபவித்தசங்கடங்கள் அகன்றுநன்மைகளும் ஆதாயங்களும் உண்டாகப் போகிறது. உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் மறையும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை தந்தை வழி ஆதாயம், தொழிலில் முன்னேற்றம், லாபம் மகிழ்ச்சி என்று எல்லா வகையிலும்நன்மைகள் உண்டாகப் போகிறது. செல்வாக்கு அந்தஸ்து உயரப்போகிறது. கடன் சுமை குறையும்.
பொன், பொருள் சேர்க்கை, சேமிப்பு அதிகரிக்கும். ஜாமீன் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகள் பதவிகள்கிடைக்கும்.திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோகத்தில் உயர்வு, புதிய வீடு கட்டுதல், வாங்குதல், என்று இதுவரை எதையெல்லாம் பார்த்தீர்களோஅவற்றையெல்லாம் அடைந்து உயர்வை காணப்போகிறீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும். நோய் தாக்கம் குறையும்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளும் வெற்றியாக மாறும். கட்சி மேலிடத்தின் ஆசி கிடைக்கும். தொண்டர்களிடம் நல்லுறவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம்.சனிக்கிழமை சனி பகவானை வழிபடவு
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






