என் மலர்
மகரம் - வார பலன்கள்
மகரம்
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
பொருளாதார பற்றாக்குறை அகலும் வாரம்.இதுவரை ஜென்ம ராசியில் நின்ற ராசி அதிபதி சனி பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை நோக்கி நகர்கிறார். எனவே வாக்கால் உறவுகளிடம் மன சங்கடம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் புரிதல் குறையும். 5-ம் அதிபதி சுக்ரன் 6-ம் அதிபதி புதனுடன் ராசிக்கு 12-ல் சேர்க்கை பெறுவதால் கடன் தொல்லை குறையும்.
வர வேண்டிய கடன் வசூலாகி கொடுக்க வேண்டிய கடனும் ஓடி அடையும்.விரும்பிய வேலைக்கு சோதனை தேர்வில் வெற்றி பெற்றாலும் விஐபி சிபாரிசுக்கு அலைய நேரும். தொழில் வாழ்க்கை முறையில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் சனிக்கு ராகு சம்பந்தம் ஏற்பட போவதால் இனம் புரியாத குறை, கவலை தோன்ற லாம். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். சொந்த இன, உறவுகளில் வரன் அமையும். சொத்து வாங்கும் முயற்சிகள் சித்திக்கும்.
14.12.2022 அன்று காலை 2.32 மணி முதல் 16.12.2022 மதியம் 2.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஓயாத உழைப்பால் அசதி மன உளைச்சல் ஏற்படும். காரிய சித்தி பெற கால பைரவரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
5.12.2022 முதல் 11.12.2022 வரை
முன்னேற்றம் உண்டாகும் வாரம். முயற்சி ஸ்தான அதிபதி குரு ஆட்சி பலம் பெறுவதால் சுறுசுறுப்பும் செயல்திறனும் கூடும். தொழிலில் நிலவிய போட்டி, பொறா மைகள் விலகும். கடந்தகால உழைப்பிற்கான பலன் இப்பொழுது கை கொடுக்கும். முன்னோர்களின் நல் ஆசியும் குலதெய்வ கடாட்சமும் உண்டாகும்.
இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த தீராத சிக்கல்கள் தீரும். உடல் ஆரோக்கியம் சீராகும். தடைபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும். பிள்ளைகள் கல்விக்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். உத்தியோ கஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.கூலித் தொழிலாளிகளுக்கு தொழில் நெருக்கடி விரைவில் சீராகும்.
தாய்மாமாவுடன் ஏற்பட்ட மன வருத்தம் மாறும். தம்பதிகளின் கருத்து வேற்றுமை குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட அனைத்து வழிகளும் திறந்து உங்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். சனிக்கிழமை சனி பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
28.11.2022 முதல் 4.12.2022 வரை
அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம். ஓரிரு வாரங்களில் ஜென்மச் சனியின் தாக்கம் குறைவதால் தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும் தொழில் போட்டிகள் குறையும். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள்.பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.
வாக்கு ஸ்தானத்தை சனி நெருங்குவதால் அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். சிவனுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
21.11.2022 முதல் 27.11.2022 வரை
சேமிப்பு, சிக்கனத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலம். 3, 12-ம் அதிபதி குரு வக்ர நிவர்த்தி பெறுவதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.இளைய சகோதரரால் தொழில் விரயம், முடக்கம், வில்லங்கம் ஏற்படலாம். பெண்களின் ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும்.வீண் விரயம் அல்லது வைத்தியச் செலவு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.
வருமானத்தில் பெரும் பகுதி கடனுக்கு செல்லும். அடிப்படை தொழிலா ளிகளுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். வீடு கட்ட போட்ட பட்ஜெட் எகிறும். புதிய கடன் தொகைக்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகுவீர்கள்.தொழில் முன்னேற்றம், உத்தி யோகத்தில் உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பகை உணர்வு மேம்படும்.
குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு உண்டாகும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். இளம் பெண்கள் கருத்தரிப்பார்கள். சற்று சுமாரான காலமாக இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். காளியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
14.11.2022 முதல் 20.11.2022 வரை
மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம். ராசி அதிபதி சனி 10ம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் சில அசவுகரியங்கள் அதிகரித்தாலும் அதை பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவீர்கள். புதிய நட்பு வட்டாரம் உருவாகும்.
நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். 5-ம் அதிபதி சுக்ரன் தன் வீட்டை தானே பார்ப்பதால் ஆத்ம ஞானம் கிடைக்கும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். தடைபட்ட குல தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும்.
குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். திருமண முயற்சி வெற்றி தரும்.
16.11.2022 மாலை 6.58 முதல் 19.11.2022 காலை 5.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது. உடன் இருப்பவர்களால் மனக்குழப்பம், பணியில் சோர்வு ஏற்படும். கால பைரவ அஷ்டகம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிப்பலன்
7.11.2022 முதல் 13.11.2022 வரை
எதையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும் வாரம். ஜென்மச் சனியால் தடைபட்ட பணிகள் விரைந்து செயல் வடிவம் பெறும். கடன், நோய் எதிரி தொல்லை நிவர்த்தியாகும். பார்த்துச் சென்ற வரனின் முடிவு ஒரு வாரத்திற்குப் பின்புதான் தெரியும். திருமண முயற்சியை ஒரு வாரம் ஒத்தி வைக்கலாம்.வீட்டு வாடகை உயரும். விவசாயிகள் பருவ காலத்திற்கு ஏற்ற பயிரை விளைவிப்பது நலம். சிலருக்கு பணியாளர்களால் சவுகரியம் உண்டாகும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும்.
சிலர் கண்புரைக்காக அறுவை சிகிச்சை செய்யலாம் .பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்து உரிய முறையில் வந்து சேரும். பத்தில் அஷ்டமாதிபதி சூரியன், கேது சேர்க்கை இருப்பதால் தொழில், உத்தியோகத்தில் நிதானம் முக்கியம். ராசிக்கு 4ம் இடமான சுக ஸ்தானத்தில் சந்திர கிரகணம் உருவாகிறது. சொத்து தொடர்பான முக்கிய முடிவு, பத்திரப்பதிவுகளைத் தவிர்க்கவும். தாய் ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்வதால் அன்னையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அன்றைய தினம் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம். தாத்தா, பாட்டியிடம் ஆசி பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
வார ராசிப்பலன்
31.10.2022 முதல் 06.11.2022 வரை
சாதகமான வாரம். ஜென்மச் சனியால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். எதிரி, போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறன் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு ஊர் மாற்றத்தால் சில முன்னேற்றங்கள், மாற்றங்கள் உண்டாகும். இது வரை சுணங்கி கிடந்த யோசனைகள் விறுவிறுப்படையும். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய இடர்பாடுகள் குறையும். அரசியல் பதவியில் இருந்த முட்டுக் கட்டை விலகும்.
ராசி அதிபதி சனிக்கு செவ்வாயின் 8-ம் பார்வை பதிவதால் குறுகிய காலம் தம்பதிகள் தொழில், உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். சிலரின் காதல் தோல்வியில் முடியும். சிலருக்கு தொழில் கூட்டு பிரியும். அல்லது நம்பிக்கையானவர்களால் ஏமாற்றம், மன வருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் கவனம் தேவை. வயோதிகர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். திருமண முயற்சிகள் நடந்தேறும். விரும்பிய வரன் தேடி வரும். பல் சீரமைப்பு செய்ய ஏற்ற காலம். வீரபத்திரரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
புத்தி சாதுர்யத்துடன் செயல்பட வேண்டிய காலம். ஜென்மச் சனியால் ஏற்பட்ட தம்பதிகள் கருத்து வேறுபாடு மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். தைரியம், தெம்பு அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். செவ்வாயின் எட்டாம் பார்வை ராசியில் பதிவதால் பேச்சில் நிதான மும் கவனமும் தேவை. காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும்.
காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். பெரிய அளவில் முக்கிய முடிவு கள் எடுப்பதை தவிர்த்து விடவும். பெண்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். அதற்குத் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த வராக்கடன் பணம் வீடு தேடி வரும். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும்.
மன வேதனையைத் தந்த மகள் உங்க ளைப் புரிந்து கொள்வார். வீட்டில் சுப நிகழ்விற்கான அறி குறிகள் தென்படும். அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கிர கணத்தன்று செருப்பு, குடை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
புத்தி சாதுர்யத்துடன் செயல்பட வேண்டிய காலம். ஜென்மச் சனியால் ஏற்பட்ட தம்பதிகள் கருத்து வேறுபாடு மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். தைரியம், தெம்பு அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். செவ்வாயின் எட்டாம் பார்வை ராசியில் பதிவதால் பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும். காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். பெரிய அளவில் முக்கிய முடிவு கள் எடுப்பதை தவிர்த்து விடவும்.
பெண்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். அதற்குத் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த வராக்கடன் பணம் வீடு தேடி வரும். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். மன வேதனையைத் தந்த மகள் உங்களைப் புரிந்து கொள்வார். வீட்டில் சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கிரகணத்தன்று செருப்பு, குடை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிபலன்
17.10.2022 முதல் 23.10.2022 வரை
தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதியாக பணிபுரிய முடியும். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு அழகான ஆடம்பரமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள்.
தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். வீடு, வாகன யோகம் உண்டாகும். இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமணம் மற்றும் சுப வைபவங்களை எதிர்பார்க்கலாம்.
சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். 20.10.2022 காலை 10.30 முதல் 22.10.2022 இரவு 8.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகளில் தடை ஏற்படும். நெருங்கியவர்களிடையே மன வருத்தம் ஏற்படலாம். நவகிரகங்களில் சனி பகவானை நீல நிற பூக்களால் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
10.10.2022 முதல் 16.10.2022 வரை
நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாரம். 6-ம் அதிபதி புதன் உச்சம் பெறுவதால் அரசுப் பணியாளர்களுக்குத் தங்கள் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். அரசியல் வாதிகளிடமும், அரசாங் கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.
பெண்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும். திருமணத் தேதி குறித்து விட்டு பணத்தை எதிர்பார்த்து இருப்ப வர்களுக்கு பண உதவி தேடி வரும். நீண்ட நாட்களாக உங்கள் எதிர்பார்ப்பிற்கு கிடைக்காத வரன் இப்பொழுது கிடைக்கும். சில விவாகரத்து தம்பதிகள் மீண்டும் சேரும் வாய்ப்பு உருவாகும்.
ஜென்மச் சனியால் சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். இதனால் சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி நிச்சயம். ஸ்ரீ சனி பகவானை வணங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
3.10.2022 முதல் 9.10.2022 வரை
சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் வாரம். பாக்கியஸ்தான அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுவதால் வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே காணப்படும். சக வியாபாரிகளால் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சி களை சற்று தள்ளிப் போடுவது நல்லது.
அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோக ரீதியான இடமாற்றம் சற்று ஆறுதலாக இருக்கும். சிலர் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவார்கள்.போட்டி பந்தயங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும்.
கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். காயத்திரி தேவியை வழிபடவும்.
வேளையில் துர்க்கையை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






