என் மலர்tooltip icon

    மகரம் - வார பலன்கள்

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    13.3.2023 முதல் 19.3.2023வரை

    காரியத் தடை நீங்கும் வாரம். 6, 9ம்- அதிபதி புதன் முயற்சி ஸ்தானத்தில் நீசபங்க ராஜ யோகம் பெறுவதால் முயற்சிக்கான பலன்களை உடனடியாக காண முடியும். ஆரோக்கிய குறைபாடு அகலும். விண்ணப்பித்த வீட்டு, வாகன கடன் இந்த வாரத்திற்குள் கிடைத்து விடும். உத்தி யோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும்.பழைய பாக்கிகள் வசூ லாகும்.

    திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும்.தந்தை, மகன் கருத்து வேறுபாடு அகலும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் உதவியும் உண்டு உபத்தி ரமும் உண்டு. மாணவர்க ளுக்கு விடா முயற்ச்சி நிச்சயம் பலன் தரும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

    சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். பங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு தொழில் முன்னேற்றம் மேலும் அதிகரிக்கும். சனிக்கிழமை சிவபுராணம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    6.3.2023 முதல் 12.3.2023 வரை

    தடைபட்ட பணிகள் துரிதமாகும். ஆட்சி பலம் பெற்ற முயற்சி ஸ்தான அதிபதி குருவுடன் உச்சம் பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி , தொழில் ஸ்தான அதிபதி சுக்ரன் சேர்க்கை பெறுவது மிகச் சிறப்பான கிரகச் சேர்க்கை. செல்வாக்கு சொல்வாக்கு உயரும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர்நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு.

    வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும்.தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம்.எதிரிகள் ஒதுங்குவார்கள். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

    8.3.2023 காலை 8.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தகவலை நம்பி வங்கிக் கணக்கு எண்களை மாசி மகத்தன்று சிவ கவசம் படித்து சிவனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    27.2.2023 முதல் 5.3.2023 வரை

    சுமாரான வாரம். ஏழரைச் சனியின் ஆதிக்கம் உள்ளதால் முதலீட்டா ளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். கையில் பணம் புரள்வ தால் கவர்ச்சியான விளம்ப ரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம்.

    வாக்கு ஸ்தானத்தில் சனி அஷ்டமாதிபதி சூரியனுடன் நிற்பதால் அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கை யாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.தொழில் பங்குதா ரர்களால் சிலருக்கு வம்பு, வழக்கு உருவாகலாம். உத்தியோ கத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் தடைபடும். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக அல்லது கருத்து வேறுபாட்டால் பிரியலாம். திருமணத் தடை அகலும்.

    மனரீதியான குழப்பங்கள் வந்து விலகும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். அன்னையின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆறுதலாய் இருக்கும். திருமண முயற்சியில் நல்ல தகவல்கள் கிடைக்கும். சிலரின் மறுமண முயற்சி வெற்றி தரும். புத்திர பாக்கியம் உண்டாகும். சனிக்கிழமை காகத்திற்கு அன்னம் வைத்து சனிபகவானை வழிபாடு செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    20.2.2023 முதல் 26.2.2023 வரை

    மாற்றங்களால் ஏற்றம் பெறும் வாரம். 3-ம் அதிபதி குரு 3-ல் ஆட்சி பலம் பெறுவதால் சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும். தொழில் செய்வோருக்கு முன்னேற்றத்திற் கான ஆரம்பங்கள் தெரியும்.

    வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். சிலரது வாரிசு களுக்கு திருமணம் நடக்கும். பணப்புழக்கம் சற்று குறைவது போல் தோன்றினாலும் உடனிருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். இளம் பருவத்தினருக்கு திருமண காலம் நெருங்கி விட்டது. பெண்கள் யாரையும் நம்பி மனதில் உள்ளகுடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது.

    வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். தம்பதிகளிடம் ஒற்றுமை மேலோங்கும். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது சந்தர்ப்பம் அமையும், அமாவாசையன்று பெற்றோர்கள், வயது முதிர்ந்தவர்களிடம் ஆசி பெறுவது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    13.2.2023 முதல் 19.2.2023 வரை

    சூப்பரான வாரம். 2-ம் அதிபதி சனியுடன் அஷ்டமாதிபதி சூரியன் இணை வதால் விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்டம் அதிக ரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குறைந்த முயற்சியில் நிறைவான வருமானம் உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். வேலை தேடுபவர்களுக்கு நேர்மு கத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

    உத்தியோகத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உங்களின்திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.தொழிலில் புதிய திருப்பங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு விற்காமல் தேங்கி கிடந்த பொருட்கள் விற்றுத் தீரும். எதிரிகள் விலகுவார்கள்.

    திருமணம் போன்ற சுப காரியங்களில் இருந்த தடைகள் அகலும். 3-ல் குரு இருப்பதால் கண் மறைவாக இருந்த, காணாமல் போன நகைகள் மீண்டும் கிடைக்கும். அடமான நகைகள் மீண்டு வரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.சிவராத்திரியன்று பஞ்சகவ்ய அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டிய வாரம்.அஷ்டமாதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். நம்மை உதவி செய்து கை தூக்கி விட யாருமில்லை என்ற எண்ணம் மிகைப்படுத்தலாக இருக்கும். அதிர்ஷ்டம் என்னைத் தேடி வருமா என அதிர்ஷ்டத்தைத் தேடி காலம் தள்ளுவீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டாகும். சிலர் தொழில், உத்தியோகம் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். குல தெய்வம் பூர்வீகம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்ள முயல்வீர்கள். உங்கள் முயற்சி புகழ், அந்தஸ்தை நிலை நிறுத்த கடின உழைப்பு அவசியம்.

    பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த மகர ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் , நகை சீட்டு , ஏலச் சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் உபரி பணத்தை சேமிக்க வேண்டும். 6.2.2023 மதியம் 3.03 முதல் 9.2.2023 அன்று 2.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சால் வீண் பிரச்சினை ஏற்படும் என்பதால் தேவை யில்லாத பேச்சினைத் தவிர்க்கவும். கற்பக விநாயகரை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    மகிழ்ச்சியான வாரம். 6-ம் அதிபதி புதனும் அஷ்டம அதிபதி சூரியனும், 12-ம் இடத்தில் மறைகிறார்கள். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம். பொருளாதார நெருக்கடி, கடன் படிப்படியாக குறையும். பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். பெரிய மனிதர்களின் தொடர்பு அரசியல் செலவு ஏற்படலாம். எதிர்பாராத தன வரவும், அதற்கேற்ப செலவும் உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து எண்ணிய பலனை அடைவீர்கள். உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும்.

    தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். வட்டிக்கடையில் அடமானம் வைத்த பொருளை மீட்பீர்கள். தந்தையுடன் கருத்து வேறுபாடு அல்லது தந்தையால் நஷ்டம் உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும் வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு. தம்பதிகளிடம் புரிதல் உண்டாகும். ஏகாதசியன்று லட்சுமி நாராயணரை கோதுமை பாயசம் படைத்து வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    23.1.2023 முதல் 29.1.2023 வரை

    சுமாரான வாரம். அஷ்டமாதிபதி சூரியன் ராசியில் நிற்பதால் தொழில் சீராக நடந்தாலும் லாபம் நிற்காது. கூட்டம் களைகட்டும் கல்லா களை கட்டாது. நம்பிய வேலையாட்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை கடைபிடிப்பது அவசியம். விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அகலக்கால் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும். தாய் வழியில் மனக்கவலை கருத்து வேறுபாடு உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்கள் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும். திருமண முயற்சி கைகூடும்.

    சிலருக்கு மறுமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச் சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். பழநி முருகனை ஆத்மார்த்தமாக வழிபட்டால் சாதகமான பலன்கள் அதிகரிக்கும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    16.1.2023 முதல் 22.1.2023 வரை

    புத்தியைத் தீட்ட வேண்டிய நேரம். ஜென்மச் சனியின் ஆதிக்கம் குறைவதால் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும்.கடந்த கால மனக்க சப்புகள் விலகி நிம்மதி பிறக்கும். இதுவரை எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்தவர்கள் சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும். விரோதிகள் கூட நண்பர்க ளாக மாறி நன்மை செய்வார்கள்.

    குடும்பத்தில் மகிழ்ச்சி யான சூழ்நிலை நிலவும். சனி பகவான் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நிற்பதால் பேச்சாற்றலால் லாபம் சம்பாதிக்க முயல வேண்டும். குடும்ப உறவுகளிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்க வேண்டும். மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமையும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள்.

    தந்தையின் அன்பும் ஆசியும் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.சங்கடத்தில் ஆழ்த்திய நோய் வைத்தியத்திற்கு கட்டுப்படும். அதிக சம்பளத்திற்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்று மன நிம்மதியை அதிகரிப்பீர்கள். சனிக்கிழமை கால பைரவரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    9.1.2023 முதல் 15.1.2023 வரை

    முட்டுக்கட்டைகள் அகலும் வாரம். ஜென்ம ராசியை விட்டு சனி பகவான் அகல்வதால் ஆன்ம பலம் உண்டாகும். நினைத்ததை நினைத்தபடியே முடிப்பீர்கள். சில நல்ல மாற்றங்கள் வரலாம். தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சீராகும். உறவு களின் பகை மறையும். அதிக முதலீட்டு டன் புதிய தொழில் தொடங்கு வதை தவிர்க்கவும்.

    வேறு வேறு ஊர்களில் பணிபுரிந்த தம்பதிகள் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் இடமாறுதல் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கி யத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடிக் கொண்டு இருந்தவர்க ளுக்கு  நல்ல வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் நிலவிய சங்கடங்கள் மறையும். உங்கள் திற மைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பெண்களின் முயற்சிக்கு கணவரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். திருமணத் தடை அகலும்.

    10.1.2023 காலை 9 மணி முதல் 12.1.2023 இரவு 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். சனிக்கிழமை நவகிரக சனி பகவானை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    2.1.2023 முதல் 8.1.2023 வரை

    மகிழ்ச்சியான வாரம். 6-ம் அதிபதி புதனும் அஷ்டம அதிபதி சூரியனும், 12-ம் இடத்தில் மறைகிறார்கள். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம். பொருளாதார நெருக்கடி, கடன் படிப்படியாக குறையும். பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். பெரிய மனிதர்களின் தொடர்பு அரசியல் செலவு ஏற்படலாம்.

    எதிர்பாராத தன வரவும், அதற்கேற்ப செலவும் உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து எண்ணிய பலனை அடைவீர்கள். உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும்.

    வட்டிக்கடையில் அடமானம் வைத்த பொருளை மீட்பீர்கள். தந்தையுடன் கருத்து வேறுபாடு அல்லது தந்தையால் நஷ்டம் உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும் வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு. தம்பதிகளிடம் புரிதல் உண்டாகும். ஏகாதசியன்று லட்சுமி நாராயணரை கோதுமை பாயசம் படைத்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    19.12.2022 முதல் 25.12.2022 வரை

    உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாரம்.ஜென்மச் சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவ தால் இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். 

    புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் அதிகரிக்கும். தடைபட்ட உரிமைகள் துளிர் விடும். குலத் தொழில் செழித்து வளரும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை மேலோங்கும்.

    6,9-ம் அதிபதி புதன், அஷ்டமாதிபதி சூரியன் சம்பந்தம் பெற்றதால் வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். சிலர் கடன் பெற்று வசதி, வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வார்கள். பெண்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டு. சகோதரர்களுடன் இணைந்து முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த காலம்.

    வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி ஆட்சி பலம் பெறப் போவதால் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். தாய், தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சீராக இருக்கும். மூல நட்சத்திரத்தன்று பால் அபிசேகம் செய்து ஆஞ்சநேயரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×