என் மலர்
மகரம் - வார பலன்கள்
மகரம்
இந்த வார ராசிப்பலன்
07.08.2023 முதல் 13.8.2023 வரை
சாதாரண வாரம். 5,10-ம் அதிபதி சுக்ரன் வக்ர கதியில் அஷ்டமாதிபதி சூரியனுடன் சேர்ந்து ராசியை பார்ப்பதால் தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் நிறைவேறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்கு தாரர்கள் வெளியேறலாம்.வேலை இல்லாமல் திணறியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம். பொருளாதாரத்தில் யாருடைய கட்டுப்பாட்டிலாவது இருக்க நேரும். பொருளாதாரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும்.
தேவையில்லாத எண்ணங்கள், நிறைவேறாத செயலால் மன சஞ்சலமும் அமைதியற்ற நிலையும் ஏற்படும். உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியாக மாறும். சகோதர்களிடம் ஒத்துப் போக முடியாத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மருத்துவச் செலவு குறையும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சிந்தனையில் இருந்து விடுபட ஆடி வெள்ளிக்கிழமை சமயபுரம் மாரியம்மனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
அறிவாற்றலும், திறமையும் கூடும் வாரம். ராசிக்கு சூரியன் பார்வை இருப்பதால் உங்களின் முயற்சியும் விருப்பங்களும் நிறைவேறும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுடைய புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி அனைத்தையும் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் தென்படும். நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் அமையப் போகின்றது. உங்களின் செயலில் வேகமும் மனதில் புத்துணர்ச்சியும் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் சக்தியும் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் சுமூகமான உறவு உண்டாகும்.
இதுவரை நிலவிய மந்த நிலை மாறும். எங்கு சென்றாலும் உங்களுக்கு முதலிடம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகளை இந்த வாரம் நிறைவு செய்து மகிழ்வீர்கள். ராசிக்கு எட்டில் செவ்வாய் நிற்பதால் கோட்சார ரீதியான செவ்வாய் தோஷத்தால் திருமண வாய்ப்பு தடைபடலாம். மாணவர்கள் பெற்றோர்களின் அறிவுரையை மதிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆடிப் பெருக்கன்று சலவைத் தொழிலாளிகளுக்கு உதவவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
24.7.2023 முதல் 30.7.2023 வரை
அனுகூலமான வாரம்.ராசி அதிபதி சனிக்கு சுக்ரன், செவ்வாய் பார்வை இருப்பதால் பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களை ஒத்தி வைப்பது நல்லது.வாழ்க்கைத் துணை நண்பர்களின் உதவியால் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வி.ஐ.பி.க்கள் தொடர்பால் சில பிரச்சினைகள் முடிவுக்கு வரும். என்றோ, எப்போதோ வாங்கிப் போட்ட இடத்தில் இப்பொழுது கடன் பெற்று வீடு கட்டுவீர்கள். தொழிலில் ஏற்றம் அதிகரிக்கும். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலை தேடலாம்.அஷ்டமாதிபதி சூரியன் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.
நண்பர்கள் கூட்டாளிகளிடம் கொடுக் கல், வாங்கலில் நிதானமாக செயல்பட வும். சிலருக்கு கோட்சார ரீதியான திருமணத் தடை நீடிக்கும். நோய், போட்டி பொறாமை பாதிப்பு, கண் திருஷ்டி தோஷம் கூடும். அம்மன் கோவில் சூலாயுதத்தில் எலுமிச்சைப் பழம் குத்தி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
17.7.2023 முதல் 23.7.2023 வரை
திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும் வாரம். ராசிக்கு 7-ம்மிடத்தில் 6,9-ம் புதனும் அஷ்ட மாதிபதி சூரியனும் இணைந்து ராசியைப் பார்ப்பதால் திறமையை வெளிப்படுத்து வீர்கள். கவலைகள் விலகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் ஒத்து ழைப்பு உண்டாகும். தொழில் ரீதியான தொடர்பு அதிகரிக்கும்.
மனோதைரியம் அதிகரித்து எதையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள்.பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகமாகும்.புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய தொழில் துவங்கும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் விரைவில் கனிந்து வரும். ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். திருமணப் பேச்சுக்கள் நடக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். நிம்மதியான உறக்கம் உண்டாகும்.
20.7.2023 காலை 10.55 முதல் 22.7.2023 இரவு 11.40 வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. ஆடி வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
புத்தியை தீட்ட வேண்டிய வாரம். 6,9-ம் அதிபதி புதன் சம சப்தம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்க்கிறார். அஷ்டமாதிபதி சூரியன் 6ல் மறைவு. அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சுக்ரன் சேர்க்கை என கிரக சம்பந்தங்கள் சாதகத்தையும், பாதகத்தை யும் சேர்த்து வழங்குவதால் விழிப்புடன் செயல்பட வேண்டும்.பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.
சிலர் குடும்ப உறவுகளுக்காக கடன் பட நேரும். சிலர் ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைக்கலாம்.பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தொடரும். அரசு ஊழியர்களுக்கு விரும்பத்தகாத ஊருக்கு வேலைமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள்.
காதல் விவகாரங்கள் வம்பு, வழக்கை ஏற்படுத்தலாம். வெகு சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட ஆதாயம் உண்டு. தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார்கள். உடல் நிலை சற்று மந்தமடையும். அமாவாசையன்று புனித நீர் நிலைகளில் நீராடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
3.7.2023 முதல் 9.7.2023 வரை
தொழில் வளம் சிறக்கும் வாரம். ராசிக்கு 7-ம் இடத்தில் நிற்கும் 4, 11-ம் அதிபதி செவ்வாய் குரு பார்வை பெறுவதால் சந்திர மங்கள யோகம் உண்டாகுகிறது. சமூக அந்தஸ்து ராஜ மரியாதை கிடைக்கும். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றி யும் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். அலுவலக டென்ஷன் குறையும்.
குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும். புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். சிறு கடன் சுமை இருந்தாலும் கடன்கா ரர்களின் கெடுபிடி குறையும். வராக்க டன்கள் வசூலாகும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நிறைவேறும். திருமணத் தடை அகலும்.
தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. வாழ்க்கையை பாதிக்கும் தடாலடியான முடிவு களை எடுப்பதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தன்வந்திரி பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
26.6.2023 முதல் 2.7.2023 வரை
உற்சாகத்தோடு செயல்படும் வாரம். 5, 10-ம் அதிபதி சுக்ரன் ராசியைப் பார்ப்பதால் கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும்.
பொருளாதார பற்றாக்குறை அகலும்.சுய ஜாதகத்தின் தசைபுக்திக்கு ஏற்ப தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம். அரசுப் பணியாளர்களின் உத்தியோகம் தொடர்பான வழக்கு களில் திருப்பம் ஏற்படும் .நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும்.
அரச பதவி, அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் அடிக்கடி வேலை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
4, 11-ம் அதிபதி செவ்வாய் ராசி மற்றும் தனாதிபதி சனியைப் பார்ப்பதால் சொத்துக்கள் விற்பனை மூலம் நல்ல தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. சிலர் புதிய சொத்து மற்றும் வாகனமும் வாங்கலாம்.
தாய் மற்றும் மூத்த சகோ தரத்தின் ஆதரவு, ஆதாயம் உண்டு.ஆரோக்தியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஜனன ஜாதகத்தில் எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் ஏழரைச் சனியின் காலம் என்பதால் திருமணம் நடந்துவிடும். குருவாயூரப்பனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
19.6.2023 முதல் 25.6.2023 வரை
சங்கடங்கள் நீங்கும் வாரம். 4-ம் அதிபதி செவ்வாய் 5-ம் அதிபதி சுக்ரனும் இணைந்து ராசியைப் பார்ப்பதால் தாய் மற்றும் நண்பர்கள் உதவியால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரித மடையும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி நிறைவேறும். தனித்திறமை வெளிப்படும். சிலர் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிப்பார்கள்.
வியாபாரத்தில் நிலவிய எதிர்ப்புகள் சீராகும். உணவுப் பொருட்கள், கேட்டரிங், ஓட்டல்கள் தொழில் நடத்துபவர்களின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். ராசி அதிபதி சனி வக்ரம் பெறுவதால் கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுக ரியங்கள் இருக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.
23.6.2023 அதிகாலை 4.18 முதல் 25.6.2023 மாலை 4.50 சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சலால் மன சஞ்சலம் ஏற்படும். புதிய முயற்சிகள், பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. சனிக்கிழமை ராகு வேளையில் காளியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
12.6.2023 முதல் 18.6.2023 வரை
நன்மைகளே மிகுதியாக நடக்கும் வாரம்.பாக்கிய அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தா னத்தில்சஞ்சரிப்பதால் நம்பிக்கை அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக் கும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும்.மலை போல் வந்த துன்பம் பனி போல விலகும். தந்தை வழி சொத்துக்களில் நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும்.குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
புதிய வியாபார தொடர்புகள் மூலம் வருமானம் பெருகி வாழ்க்கை வளமாகும். குடும்பவெளி வட்டாரங்களில் மரியாதை உயரும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளுஅதிகரிக்கும். மேலதிகாரியின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்க ளைக் காண்பீர்கள். கடன் தொல்லை , சகோதர விரோதம், அரசு வகைச் சிக்கல்கள் அகலும்.
மாணவர்கள் கல்வி தொடர்பான முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ராசியை செவ்வாய், சுக்ரன் பார்ப்பதால் திருமணத் தடை அகலும். ஆரோக்கியம் சீராகும்.வீடு, மனை பற்றிய நீண்ட நாள் கனவுகளும் முயற்சிகளும் நிறைவேறும். புவனேஸ்வரியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
5.6.2023 முதல் 11.6.2023 வரை
புதிய சிந்தனைகள் உதயமாகும் வாரம். தொழில் ஸ்தானத்தை குரு மற்றும் செவ்வாய் பார்ப்பதால் உத்தியோகம் அல்லது தொழிலில் மாற்றங்களை சந்திக்க நேரும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 5ம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசியல் தொடர்புடை யவர்களுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தந்து கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான்.
வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு நடைபெறும். தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். ராசிக்கு இரண்டில் சனி பகவான் நிற்பதால் கண்கள் தொடர்பான சிகிச்சைகளில் கவனம் தேவை.
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். குடியிருக்கும் வீட்டை புனரமைப்பீர்கள். மகிழ்ச்சியை அதிகரிக்க காலபைரவருக்கு முந்திரி மாலை சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
29.5.2023 முதல் 4.6.2023 வரை
சகாயங்கள் நிறைந்த வாரம். ராசியை செவ்வாய் பார்ப்பதால் கம்பீரமான வசீகரமான தோற்றம் ஏற்படும். தனம், வாக்கு குடும்பஸ்தா னத்தில் சனி பார்வையில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். குடும்ப சுமை குறையும் பணம் எனும் தனம்சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தரும்.
ராஜ மரியாதை கிடைக்கும்.கூட்டாளிகள் பக்குவமாக நடந்து லாபத்தை அதிக ரிப்பார்கள்.வெளியூர், வெளிநாட்டு வேலை அல்லது குடியு ரிமை பெற்று செட்டிலாவது போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம். கடன்காரர்களின் கெடுபிடி குறையும். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு.
ராசிக்கு 7-ல்செவ்வாய், சுக்ரன் இணைவதால் தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். திருமணத்திற்குநல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.புதிய நண்பர்கள் கிடைப் பார்கள். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். தாயின் உடல் நலனில்அக்கறை தேவை. பவுர்ண மியன்று கால பைரவரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
இந்த வார ராசிப்பலன்
22.5.2023 முதல் 28.5.2023 வரை
அதிர்ஷ்டமான வாரம்.4,11ம் அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் முன்னேற்றம் தரும் மாற்றங்கள் நடக்கும். இதுவரை வாழ்க்கையில் நிலவிய மந்த நிலை மாறும்.புதிய மனிதனாக மாறுவீர்கள். உங்களின் மதிப்பு அந்தஸ்து உயரும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்தும். ரியல் எஸ்டேட், விவசாயம், கட்டுமானத் துறையில் இருப்பவர்களின் தனித்திறமை மிளிரும்.
இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் நிலவிய தடைகள் விலகும். அடிப்படைத் தேவைக்கு திணறியவர்களுக்கு சிறிய முயற்சியில் பெரிய வருமானம் கிடைக்கும். ஏமாற்றம் மன அழுத்தம் குறையும்.பூர்வீகச் சொத்தில் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்து டன் நிலவிய மாறுபட்ட கருத்து பேச்சு வார்த்தையில் சுமூகமாகும். திருமண முயற்சி வெற்றி தரும்.
வெளிநாட்டு பயணத்தில் நிலவிய தடைகள் விலகும்.26.5.2023 இரவு 8.50 முதல் 29.5.2023 காலை 8.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு உழைப்பு அதிகமாகி களைப்பும், சோர்வும் ஏற்படும்.சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயம் நிலவும். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






