என் மலர்tooltip icon

    மகரம் - வார பலன்கள்

    மகரம்

    வார ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை

    உங்கள் திட்டங்களிலும், செயல்களிலும் நிலவிய தடை தாமதங்கள் விலகும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கருதிய காரியங்கள் கைகூடும். அபரிமிதமான சக்தியுடன் இருப்பீர்கள். அரசு, அரசு சார்ந்த பணிகளில் வேலை செய்யும் அமைப்பு ஏற்படும். 5-ம் அதிபதி சுக்ரன் தனது சொந்த வீடான ரிஷபத்தில்ஆட்சி பலம் பெறுவதால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட சந்தர்ப்பம் கிடைக்கும். தம்பதிகள் மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவார்கள்.

    பாக்கிய ஸ்தானத்தை ஆட்சி பலம் பெற்ற குரு பார்ப்பதால்தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பூர்வீக சொத்து மீதான வழக்குகள் சமாதானமாக பேசி முடிக்கப்படும்.பெண்களின் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைவேறும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். திருமண முயற்சிகள் கைகூடும்.பிள்ளைகளால் பெருமை சேரும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். சொத்துச் சேர்க்கை உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசி பலன்கள்

    6.6.2022 முதல் 12.6.2022 வரை

    எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு, கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். போட்டிகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும். வாகனங்களுக்கு பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அண்டை, அயலாருடன் இருந்த தகராறுகள் முடிவிற்கு வரும்.

    உங்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.குடும்பத்தினரின் நிம்மதிக்காக கோபத்தை வெல்லும் சூட்சமத்தை கற்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். சக ஊழியர்களுடன் பொறுமையுடன், பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். சிலருக்கு தடைபட்ட பதவி உயர்வு கைகூடும்.சிலர் வீட்டை மாற்றலாம்.

    அல்லது வேலையில் மாற்றம் உண்டாகும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். 5.6.2022 அன்று காலை 12.24 முதல் 8.6.2622 காலை 10.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். பிரதோஷத்தன்று சிவனுக்கு விபூதி அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசி பலன்கள்

    30.5.22 முதல் 5.6.22 வரை

    ஜென்மச் சனியால் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். சகோத ரருக்கு எதிர் பாலினத்தவரால் நிம்மதி குறையும். 6ம் அதிபதி புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு வர வேண்டிய பதவிகள், சலுகைகள், பெயர், புகழ் அனைத்தும் தேடி வரும்வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். அரசு பணியாளார்கள் வீண் பழியிலிருந்து விடுபடுவார்கள்.

    வீடு, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்சியும் உண்டாகும். இந்த கால கட்டத்தில் புதிய வீடு, மனை வாங்கும் அமைப்பும் , பழைய சொத்துக்களில் இருந்து வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தந்தை மகன் முரண்பாடு முடி விற்கு வரும்.

    சிலர் போலியான விளம்பரங்களை நம்பி நல்ல வேலையை தவறவிடுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரத்தில் திருமணம் நிச்சயிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. செவ்வாய் கிழமை அஷ்ட லட்சுமிகளையும் வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22

    ராசி அதிபதி சனி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். அவ்வப்போது சில சங்கடங்கள் தோன்றினாலும் யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வார்கள்.

    சகோதர சச்சரவுகள் விலகும். உடன் பிறந்தவர்களின் சுப காரியங்களை முன்னின்று நடத்தும் கடமையும், பொறுப்பும் உங்களைத் தேடி வரும்.புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்த தேவையான தொழில் கடன் கிடைக்கும்.அஷ்டமாதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிற்பதால் பூர்வீகம் தொடர்பான சில தடைகள், தாமதங்கள், மனக்குழப்பம் ஏற்படலாம்.

    திருமண வயது ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் கூடிவரும். நோய்த் தாக்கம் குறையும். வார ஆரம்பத்தில் சில அசவுகரியங்கள் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி உண்டு. அமாவாசையன்று காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    வார ராசிப்பலன்

    இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை

    பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் உச்சம் பெற்றதால்உ ங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். அஷ்டமாதிபதி சூரியன் ரிஷபத்திற்கு பெயர்ந்ததால் வழக்குகளின் வெற்றி செய்தி கிட்டும். நீண்ட நாள் மனக்குறைகள் விலகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும். இதுவரை புரிதலின்றி பிரிந்த தம்பதிகளிடம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

    6-ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றதால் சிலருக்கு செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். ஆனால் எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதமாகும். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஜென்மச் சனியால் பணி நீக்கமானவர்களுக்கு மீண்டும் பணி நியமன உத்தரவு வரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தினமும் சிவ கவசம் கேட்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×