என் மலர்tooltip icon

    மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

    மகரம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    எதிர்கால சிந்தனையில் மூழ்கி இருக்கும் மகர ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகி பலம் பெற்று சஞ்சரிக்கின்றார். எனவே உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கடன் சுமை குறையும். கவலைகள் அகலும். திடமான நம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். வாங்கல் கொடுக்கல்கள் சீராகும். வளர்ச்சி அதிகரிப்பின் காரணமாக இதைச் செய்வோமா, அதை செய்வோமா என்று சிந்திப்பீர்கள். அர்த்தாஷ்டம குரு ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதுமே குரு பகவான் மேஷ ராசியில் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

    சகோதர ஒற்றுமை குறையும். பாகப்பிரிவினைகள் பாதியிலேயே நிற்கும். பயணங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்குமே தவிர ஆதாயத்தைக்கொடுக்காது. உடல் உபாதைகளைச் சந்திக்க நேரிடும். இதுபோன்ற நேரங்களில் வியாழன் விரதமும், குரு கவசமும் பாடி குருவை வழிபடுவது நல்லது.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எனவே பிள்ளைகளாலும், தொழில் ரீதியாகவும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். தொழில் பங்குதாரர்கள் தொழிலைப் பிரித்துக்கொள்ள நினைப்பர். ஆயினும் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வந்த பின்னால் எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலும். நிலைமை சீராகும். தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர். வாகனம் வாங்கும் முயற்சி கை கூடும்.

    தனுசு-புதன்

    உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் கார்த்திகை 14-ம் தேதி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்துமுடிக்க இயலும். கடன் சுமை குறையும். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர் களுக்கு அது கைகூடும். ஆன்மிகப் பயணங்களால் புகழ் பெற்ற ஆலயங்களில் வழிபட்டு வருவீர்கள். பெற்றோர்களின் மணி விழா, முத்து விழா போன்ற விழாக்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பு உண்டு.

    மகரம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே!

    ஐப்பசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனியும், அர்த்தாஷ்டம குருவும் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார்கள். அஷ்டமாதிபதி சூரியன் நீச்சம் பெற்றுவிட்டார். எனவே நன்மையும் தீமையும் கலந்தே நடைபெறும் மாதமிது. ராசிநாதன் வக்ரம் பெறுவதால் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். ஆயினும் ஆகாரக் கட்டுப்பாட்டின் மூலம் அதை சரிசெய்து கொண்டு செயல்படுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் இம்மாதம் உங்களுக்குத் துணையாக இருக்கும்.

    சனி வக்ர நிவர்த்தி!

    ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு அதிபதி வக்ர நிவர்த்தியாவது யோகம் தான். எனவே உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரியும் சூழ்நிலை ஏற்படும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையக்கூடிய நேரமிது. பொன், பொருள் சேர்க்கை, பூமி யோகம் போன்றவைகள் உண்டு. அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அரைகுறையாக நின்ற பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெறும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் நேரமிது. உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவர்.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டம குருவாக விளங்குபவர் இப்பொழுது வக்ரம் பெற்றுச் சஞ்சரிப்பது யோகம் தான். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும். கண்ணியமிக்க நண்பர்களின் சேர்க்கையால் கடமையைச் சரிவரச் செய்வீர்கள். விரயங்கள் அதிகரித்தாலும் அதற்குரிய வரவு உண்டு. வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளால் சில பிரச்சினைகளும், விரயங்களும் ஏற்படும். தொழில் கூட்டாளிகள் இணக்கமாக நடந்து கொள்ளமாட்டார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். மனப்பயம் அதிகரிக்கும்.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    பொது வாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வரலாம். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்குப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். வாங்கல்-கொடுக்கல்களில் சரள நிலை ஏற்படும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கை கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 20, 21, 22, 27, 28, நவம்பர் 1, 2, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    18-09-2023 முதல் 17-10-2023 வரை

    நிதானத்தோடு செயல்பட்டால் நிம்மதி கிடைக்கும் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே ராசிநாதன் சனி சஞ்சரிக்கிறார். ஆனால் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே ஆரோக்கியக் குறைவு உருவாகலாம். அமைதியான வாழ்க்கையில் மற்றவர்களின் குறுக்கீடுகள் வந்து மனக்கலக்கத்தை உருவாக்கும். காரிய தாமதங்களும், கடன்சுமை அதிகரிப்பும் ஏற்படும் மாதம் இது. விலகிய ஏழரைச் சனி மீண்டும் வக்ர இயக்கத்தில் வந்திருப்பதால் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய மாதம் இது.

    புதன் வக்ரம்

    புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. 'கடன் சுமை கூடுகிறதே' என்று கவலைப்படுவீர்கள். இடமாற்றம், வீடுமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். 9-க்கு அதிபதியாகவும் புதன் விளங்குவதால் இந்த வக்ர காலத்தில் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் சில பிரச்சினைகள் உண்டு. புரட்டாசி 17-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்த நேரத்தில் தொழில் ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தொழில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேர்ந்து பொருளாதார நிலை உயர வழிவகுக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. 'வாங்கிய இடத்தில் வீடு கட்ட எப்பொழுது நல்ல நேரம் வரும்' என்று காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. சனியின் வக்ரம் நிவர்த்தியான பிறகு எதையும் துணிந்து செய்ய இயலும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு அதிபதி புதன் 10-ம் இடத்திற்கு வரும்பொழுது தொழில் முன்னேற்றம் உண்டு. தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன்தரும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறவிருக்கும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திவைப்பீர்கள். சேமிப்பு உயரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமை பளிச்சிடும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ- மாணவிகளுக்குக் கல்வி தொடர்பான பயணங்கள் உண்டு. பெண்களுக்கு சுபவிரயங்கள் அதிகரிக்கும். பொருளாதாரம் சகஜ நிலைக்கு வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 18, 19, 20, 21, 27, 28, அக்டோபர்: 1, 2, 13, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    மகரம்

    தமிழ் மாத ராசிபலன்கள்

    18-08-2023 முதல் 17-09-2023 வரை

    எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க விரும்பும் மகர ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் ராசிக்கு வரப்போகிறார். அஷ்டமத்தில் ஐந்து கிரகங்கள் இருக்கின்றன. எனவே மிக மிக கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உடல் ஆரோக்கியம், உள்ளத்தில் அமைதி, இல்லத்தில் பொருளாதார நிலை குறையும். கடன்சுமை மட்டும் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    தசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை செய்தால் திருப்தியான வாழ்க்கை அமையும். கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்தில் வரும்போது பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். அவர்களின் கல்யாண முயற்சி கைகூடும். 'தொழில் நிலையத்தை மாற்றி அமைக்கலாமா? அல்லது தொழில் நிலையத்தை வீட்டிலேயே வைத்து நடத்தலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

    கன்னி - செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு செல்லும் பொழுது எதிர்பார்த்தவை எளிதில் நடைபெறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும். பெற்றோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்த அதிகாரிகள் விலகுவர்.

    பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் வருகிறார். ஜென்மச் சனியாக இப்பொழுது வருவதால் மனநிம்மதி குறையும். உடல்நலக் குறைவு உருவாகும். உற்சாகமிழந்து காணப்படுவீர்கள். நண்பர்கள் திடீரென விலக நேரிடலாம். தொழிலில் பணியாளர்கள் பிரச்சினை தலைதூக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சனம் செய்ய வேண்டாம். இக்காலத்தில் முறையான வழிபாடுகள் உங்களுக்குத் தேவை.

    புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு'. எனவே தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டே இருக்கும். திடீர், திடீரென புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். சேமிப்பு உயரும்.

    உத்தியோகத்தில் இடமாற்றம், ஊர் மாற்றம் விரும்பத்தக்க விதத்தில் வந்து சேரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு, பங்குதாரர்களால் தொல்லைகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்காது. கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களால் பிரச்சினைகள் உருவாகலாம்.

    மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பயிற்சி வகுப்புகளில் பங்குகொள்வது நல்லது. பெண்களுக்கு குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தட்டுப்பாடுகள் அகல, புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். இம்மாதம் அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 23, 24, 25, 31, செப்டம்பர்: 1, 4, 5, 16, 17.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.7.23 முதல் 17.8.23 வரை

    மனதில் உள்ள வருத்தங்களை மறைத்துக் கொண்டு பேசும் மகர ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் இருந்தே சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே இந்த வக்ர இயக்க காலத்தில் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். செலவு நடைகள் கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். செயல்பாடுகளில் தேக்க நிலை ஏற்படும். ஊக்கமும், உற்சாகமும் குறையலாம். செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதால் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது.

    மேஷ - குரு சஞ்சாரம்

    நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான், இப்பொழுது உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே அர்த்தாஷ்டம குரு ஆரம்பிக்கிறது. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பயணங்களால் விரயம் உண்டு. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு உண்டு. குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து அலைமோதும். ஒருகடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவீர்கள்.

    குருவின் பார்வை 10, 12 ஆகிய இடங்களில் பதிவது யோகம்தான். தொழில் வளம் சிறப்பாக அமைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். ஒரு சிலருக்குப் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தை பொறுத்தவரை கேட்ட சலுகைகள் கிடைக்கும். இலாகா மாற்றங்கள் இனிமை தரும். வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வசூலாகும். கட்டிடப் பணி பாதியில் நிற்கின்றதே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது அது முழுமை அடையும். புகழ்மிக்க தலங்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.

    சிம்ம - புதன்

    ஆடி மாதம் 7-ந் தேதி சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கப் போவது யோகம்தான். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். எனவே நிதிப் பற்றாக்குறை அகலும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டுப் புதிய சொத்துகளை வாங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். பெற்றோரின் மணிவிழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.

    பொதுவாழ்வில் உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. வியாபாரம், தொழில் செய்பவர்கள் பழைய தொழிலை விட்டுவிட்டுப் புதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலத் தொல்லை உருவாவதன் காரணமாக அடிக்கடி விடுமுறை எடுக்கும் சூழ்நிலை உருவாகும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ -மாணவிகளுக்கு எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. குடும்ப விவகாரத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது. கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 23, 24, 26, 27, 28, ஆகஸ்டு: 4, 5.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்நீலம்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    நண்பர்களால் நல்வாழ்வு அமையும் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. முதல் சுற்றா? இரண்டாவது சுற்றா? மூன்றாவது சுற்றா? என்பதை பொறுத்துப் பலன்கள் நடைபெறும். மேலும் ஆனி 12-ந் தேதி சனி வக்ரம் பெறுவதால், அதன் பிறகு நற்பலன்கள் படிப்படியாக வந்துசேரும். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் இருந்த தடைகள் அகலும். தேவைக்கேற்ற பணம் தேடி வரும்.

    மிதுன - புதன்

    ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது, ரோக ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கடன்சுமை ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. தன்னம்பிக்கை குறையும். தடைகளைத் தாண்டி முன்னேற வழிபாடுகள் உங்களுக்கு கைகொடுக்கும்.

    சிம்ம - செவ்வாய்

    ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 4, 11-க்கு அதிபதியானவர். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். பூர்வீக சொத்துகளில் பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் இணக்கம் குறையும். முன்னேற்றப் பாதையில் சறுக்கல் ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

    சிம்ம - சுக்ரன்

    ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு விருப்பப்பட்ட இடத்திற்கு மாறுதல் அடைவர். கடன் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது பதிவதால் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன் கூடிய வாய்ப்புகள் வரலாம். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாங்கிய சொத்துக்களால் லாபம் உண்டு.

    கடக - புதன்

    ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சி கைகூடும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். செய்தொழிலில் புதிய பணியாளர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். தேசப்பற்று மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வெற்றி நடைபோடும். வாசல் தேடி வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் தாமதமாகக் கிடைக்கும். கலைஞர்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம். மாணவ-மாணவிகள் மிகுந்த கவனத்தோடு படித்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பிறருக்கு பணப்பொறுப்பு சொல்வதை பெண்கள் தவிர்ப்பது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 16, 26, 27, 30, ஜூலை: 1, 2, 7, 8, 11, 12.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தாநீலம்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.5.23 முதல் 15.6.23 வரை

    பொறுமையோடு செயல்பட்டு பெருமையைக் குவிக்கும் மகர ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் இருக்கிறார். 4-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். அர்த்தாஷ்டம குருவாக இருப்பதால் அடிக்கடி ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதும், அலைச்சலைக் குறைத்துக்கொள்வதும் நல்லது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும். காரணம் ஏழரைச் சனி நடைபெறுகிறதல்லவா? எனவே எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள். தினந்தோறும் ஒரு பிரச்சினையை சந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். என்றாலும் தைரியத்தோடு எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும்.

    ராகு-கேது சஞ்சாரம்

    பின்னோக்கி நகர்ந்து செல்லும் கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 10-ம் இடத்தில் கேது சஞ்சரிக்கிறார். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். என்றைக்கோ வாங்கிப்போட்ட சொத்துக்கள் இப்பொழுது பலமடங்கு அதிக விலைக்கு விற்பனையாகி மகிழ்விக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு மூலதனம் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். பிறரைச் சார்ந்து இருப்பவர்கள் தனித்து இயங்க முற்படுவர். அதற்கு உறுதுணையாக நண்பர்கள் இருப்பர்.

    கடக - சுக்ரன்

    வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள நீச்சம்பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவதால் குடும்பத்தில் மணிவிழா, மணவிழா போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறும். வெளிநாட்டு வணிகம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் வரலாம். தொழில் வெற்றி நடைபோடும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடிவிற்கு வரும்.

    ரிஷப புதன்

    வைகாசி 18-ந் தேதி ரிஷப ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், பஞ்சம ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால், பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். கண்ணியம் மிக்க நண்பர் ஒருவர் நீங்கள் எண்ணிய காரியத்தை எளிதில் முடித்துக் கொடுப்பார். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்பான பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களோடு பணிகளை செய்து முடிப்பீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு கடின உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரித்து மதிப்பெண் கூடுதலாகப் பெறும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு உடல்நலத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சுபநிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 18, 19, 29, 30, ஜூன்: 3, 4, 10, 11.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    14.4.2023 முதல் 14.5.2023

    சிந்தனையை செயலாக்குவதில் வல்லவர்களான மகர ராசி நேயர்களே!

    சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் விரயச் சனி விலகி, ஜென்மச் சனி விலகி, இப்பொழுது பாதச் சனி நடைபெறுகின்றது. ஒருசில மாதங்கள் மட்டுமே இருந்தாலும் இதன் பலன் உங்களுக்கு நற்பலன்களாகவே அமையும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ்மிக்க தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவீர்கள். ஸ்தம்பித்து நின்ற தொழில் இனி தடையின்றி நடைபெறும். வம்பு வழக்குகள் ஓயும். வளர்ச்சி கூடும். கிரக நிலைகள் சாதகமாக இருந்தாலும் ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதிலும் கொஞ்சம் கவனத்தோடு செயல்படுவது நல்லது. புதிய கடன்கள் வாங்கும் சூழ்நிலையும் உருவாகும்.

    சனியின் சஞ்சாரம்

    மாதத் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதை 'குடும்பச்சனி' அல்லது 'பாதச்சனி' என்று சொல்வார்கள். உங்கள் ராசிநாதனாகச் சனி இருப்பதால் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார். இருந்தாலும் அன்றாடம் ஏதேனும் ஒரு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். இனம்புரியாத கவலைகள் இனி மாறும். எதையும் துணிந்து செய்து வெற்றிபெறுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். ஒருசிலருக்கு வீடு மாற்றமும், நாடு மாற்றமும் வரலாம்.

    மேஷ - குரு

    சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கப்போகின்றார். அதற்காக பயப்படத் தேவை யில்லை. குருவின் பார்வை உங்களுக்கு நற்பலன்களை வழங்கும். உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய மூன்று இடங்களையும் குரு பார்ப்பதால், தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். சென்ற சில மாதங்களாகத் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க, முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, பிள்ளைகளுக்கு மங்கல நிகழ்வுகளை நடத்துவது போன்ற சுப காரியங் களைச் செய்யலாம். அதேநேரம் சேமிக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.

    மிதுன - சுக்ரன்

    சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 5-ம் இடத்திற்குச் செல்லும் ேபாது, படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒருவருக்குமேல் சம்பாதிக்க வாய்ப்புக் கைகூடிவரும். அதி நவீனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

    இம்மாதம் வராஹி வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஏப்ரல்: 16, 17, 20, 21, மே: 2, 3, 6, 7, 8, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.3.2023 முதல் 13.4.23 வரை

    அன்பு ஒன்றே மூலதனம் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் சொல்ல முடியாத அளவிற்கு துயரங்களைச் சந்தித்து இருக்கலாம். பங்குனி 14-ந் தேதி வரை ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருக்கின்றது. ஏனெனில் இடையில் 6 மாதம் சனி பகவான் கும்ப ராசிக்கு சென்று மீண்டும் மகரத்திற்குத் திரும்புகிறார். அவர் கும்பத்தில் இருக்கும் 6 மாதமும் பெரியளவில் பாதிப்புகளைத் தரமாட்டார்.

    இருப்பினும் மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் கொஞ்சம் விழிப்புணர்வு தேவை. மந்தன் எனப்படும் சனி மந்த கதியில் இயங்குவார் என்பார்கள். எனவே பல காரியங்கள் துரித கதியில் நடைபெறாமல் மந்த கதியிலேயே நடைபெறும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அமைதி கிடைக்க அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதே நல்லது.

    மேஷ - புதன்

    பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான புதன், சுக ஸ்தானத்திற்கு செல்கிறார். இக்காலம் இதயத்தை மகிழ்விக்கும் காலமாகும். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நடைபெறும். உறவினர்கள் உற்ற துணையாக விளங்குவர். வரவு அதிகரிக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வீடு வாங்கும் யோகம் உண்டு. விருப்பம் போல வீட்டைப் பழுது பார்க்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். கையில் இருந்த பணம் கரைந்தாலும் பையில் பணம் இருந்து கொண்டேஇருக்கும் விதத்தில் புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். தூரத்து ஊர்களுக்கு மாற்றலாகிச் சென்று துணிந்து பணிபுரிய முற்படுவீர்கள்.

    ரிஷப - சுக்ரன்

    பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கே செல்வதால் அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். அதிகச் செலவில்லாமலேயே சில காரியங்கள் முடிவடைதல், ஆதாயம் தரும் தகவல்களை அன்றாடம் கேட்டல் போன்றவை நடைபெறும் நேரமிது. பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட சோதனைகள் மாறும். மேலிடத்து ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழிலில் உள்ளவர்கள், நவீன யுக்திகளைப் பயன்படுத்தி முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வீர்கள். பணியாளர் மாற்றம் பலன் தரும். கலைஞர்களுக்கு இடையூறுகள் அகன்று இனிய பலன் கிடைக்கும். மாணவ - மாணவிகள், தங்களின் பெற்றோர், ஆசிரியர் சொற்கேட்டு நடப்பதன் மூலம் கற்ற கல்வியால் பெருமை சேரும். பெண்கள் பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய நேரம் இது. சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும். இல்லறம் நல்லறமாக, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

    இம்மாதம் சனீஸ்வரர் வழிபாடு சந்தோஷத்தை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 20, 21, 24, 25, ஏப்ரல்: 4, 5, 6, 9, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்நீலம்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    13.2.2023 முதல் 14.3.2023 வரை

    முயன்றால் முடியாதது இல்லை என்று எடுத்துரைக்கும் மகர ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி புதனுடன் கூடி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். வெற்றிகள் ஸ்தானத்தில் குரு வீற்றிருக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே வரவு வருவதற்கு முன்னரே செலவு காத்திருக்கும். அஷ்டமாதிபதி சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். எனவே கவன மாக செயல்படுங் கள்.

    உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் அடிக்கடி ஆரோக்கியத்தில் தொல்லை உண்டாகும். மருத் துவச் செலவு கூடும். ஜென்மச் சனியின் ஆதிக்கத்தால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. சகாய ஸ்தானத்தில் இருக்கும் குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி விடும். சனியின் பலத்தால் காரியத்தடை ஏற்படாமல் இருக்க அதற்குரிய பிரத்யேக வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

    உச்ச சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது யோகம்தான். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அவர்களின் கல்வி மேற்படிப்பு, உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகளில் சாதகமான சூழல் அமையும்.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நன்மையைத்தரும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் கேட்ட சலுகைகள் கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். முன்னோர்கள் கட்டி வைத்து சிதிலமடைந்த கோவில்களை சீரமைக்கும் வாய்ப்பு சிலருக்கு வாய்க்கும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். 6-க்கு அதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். 'படித்து முடித்தும் வேலையில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரலாம். மனக்குழப்பம் அகல நண்பர்கள் வழிகாட்டுவர்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 29-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்ரன், 4-ம் இடத்திற்கு வரும்பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வங்கிகளின் ஒத்துழைப்பு, வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைத்து தொழிலை வளப்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி கைகூடும். பணியாளர்களின் தொல்லை அகலும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். இடமாற்றம் மகிழ்ச்சி தரும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அங்கிருந்து கொண்டு மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகள் வந்து அலைமோதும். வீண் விரயம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. ஆரோக்கிய தொல்லையும், வைத்தியச் செலவும் ஏற்படும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பணி நீக்கம் செய்யப்படும் அளவிற்குகூட பிரச்சினைகள் வரலாம்.

    இம்மாதம் கண்ணன் வழிபாடு கவலையைப் போக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 13, 14, 21, 22, 25, 26, மார்ச்: 8, 9, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    16.12.22 முதல் 14.1.23 வரை

    மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன் ஆகிய 3 கிரகங்களும் இருக்கின்றன. சுகாதிபதி செவ்வாய் வக்ரம் பெற்றிருக்கிறார். எனவே திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லாமல் இருக்க வழிபாடுகள் தேவை.

    புதன் வக்ர இயக்கம்

    உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். 6-க்கு அதிபதி 12-ம் இடத்தில் வக்ரம் பெறுவது நன்மைதான். விபரீத ராஜயோக அடிப்படையில் திடீர் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்பால் இதயத்தில் மகிழ்ச்சி கூடும். அதே நேரத்தில் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் புதன் விளங்குவதால் சொந்தங்களாலும், சொத்துக்களாலும் சில பிரச்சினை தலைதூக்கும். சொத்துத் தகராறுகளால் சொந்தங்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடும்.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் அகலும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். கேட்ட சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். படித்து முடித்த பிள்ளைகளின் வேலைக்காகச் செய்த முயற்சி கைகூடும்.

    புதன் வக்ர நிவர்த்தி

    மார்கழி 24-ந் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உறவினர் பகை அகலும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினை அகலும். 'வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படுகின்றதே, புதிய வாகனம் வாங்கலாமா?' என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மார்கழி 29-ந் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வக்ர நிவர்த்தியாவது மிகுந்த யோகம்தான். வருமானப் பற்றாக்குறை அகலும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் மும்முரம் காட்டுவீர்கள். வர்த்தகம் சார்ந்த துறைகளில் நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் வந்து சேரலாம். தடைப்பட்ட காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.

    லாபாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கும், மேல் முதலீடு செய்ய நினைத்தவர்களுக்கும், வங்கிகளின் உதவி கிடைக்கும். தங்கு, தடைகள் அகலும். இந்த நேரத்தில் சம்பள உயர்வுடன் கூடிய உத்தியோக வாய்ப்புகள் தேடி வரலாம். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும்.

    இம்மாதம் தினந்தோறும் கணபதி வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 21, 22, 28, 29, ஜனவரி: 1, 2, 13, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    17.11.21 முதல் 15.12.21 வரை

    மற்றவர்களைப் பார்த்த மாத்திரத்தில் எடை போடும் மகர ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. விரயாதிபதி குரு தன ஸ்தானத்தில் இருக்கின்றார். உங்கள் ராசியிலுள்ள சனியைச் செவ்வாய் பார்ப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும் மாதமாகும். விரயங்கள் கூடுதலாக இருக்கும்.

    செவ்வாய்-சனி பார்வைக் காலம்

    மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனியின் பார்வை இருக்கின்றது. இக்காலத்தில் மிகமிக கவனத்தோடு செயல்பட வேண்டும். குறிப்பாக உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பகை கிரகமாக இருக்கும் அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் பிரச்சினைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கியத் தொல்லைகள் வரலாம். பணிபுரியும் இடத்திலும் வேலைப்பளு அதிகரிக்கும்.

    விருச்சிக புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 6, 9 க்கு அதிபதியான புதன் 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது 'புத-ஆதித்ய யோகம்' உருவாகின்றது. எனவே அரசு வழியில் அனுகூலங்கள் கிடைக்கும். என்றாலும், ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் அது கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறலாம். சேமிப்புகள் கரையும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.

    தனுசு புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து புத-சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன் ஆவார். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது அங்குள்ள சுக்ரனோடு இணைவதால் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை பார்த்த பிள்ளைகள் வேலையை விட்டு விலகும் சூழ்நிலை கூட உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காது.

    மகர சுக்ரனின் சஞ்சாரம்

    கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்குச் சுக்ரன் வரும் நேரம் நல்ல நேரமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது உங்களுக்கு வரவேண்டிய யோகங்கள் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பிள்ளை களின் வெளிநாட்டு முயற்சிக்கு ஆதரவு கொடுப்பீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

    விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்!

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஓர் அற்புதமான நேரமாகும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். தகராறுகள் தானாக விலகும். வெளிநாட்டிலிருந்து உறவினர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கலாம். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். சனி பகவான் வழிபாடு சந்தோஷத்தை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 17, 18, 30, டிசம்பர்: 1, 3, 4, 5, 10, 11.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    ×