என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025

    முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உருவாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நீண்ட நாளையப் பிரச்சனையொன்று சுமுகமாக முடியும். குடும்பத்தில் இருந்த குழப்பமான நிலை மாறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். சுபச்செலவுகள் வந்து சேரும். குடும்ப நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 5 ஜனவரி 2025

    மனக்குழப்பம் மாறும் நாள். பொருளாதார விருத்தியுண்டு. தொழில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். உத்தியோகத்தில் இனிமை தராத இடமாற்றம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025

    இனிய பேச்சால் எதிரிகளை வெல்லும் நாள். இனத்தார் பகைமாற எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜனவரி 2025

    கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 2 ஜனவரி 2025

    பிள்ளைகள் வழியில் பெருமைப் படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீகள். பொருளாதார நிலை உயரும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பற்றாக்குறை அகலும். வாகன யோகம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024

    வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. கட்டிடம் கட்டும் பணி தொடரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை தேடித்தரும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 29 டிசம்பர் 2024

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத்தேவைகள் பூர்த்தியாகும். ஊக்கத்தோடு பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 28 டிசம்பர் 2024

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று சிந்திப்பீர்கள். வந்த வரவுகள் மற்றொரு வழியில் செலவாகலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ×