என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025

    விரோதங்கள் விலகும் நாள். விடிகாலையிலேயே வரவு வந்து சேரும். உறவினர் தொடர்பான காரியங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்வது நல்லது. உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு அகலும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2025

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வீட்டை சீரமைக்கும் பணியில் அதிக ஆர்வம் ஏற்படும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 18 ஜனவரி 2025

    கவனத்துடன் செயல்படவேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த காரியம் தாமதப்படும். திடீர் செலவுகளை சமாளிக்க அடுத்தவர்களிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டு. 

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் வம்பு வழக்குகள் வீடு தேடி வரலாம். விரயத்தைச் சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழல் உண்டு. நட்பு பகையாகும். உடல்நலக் குறைபாடு உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025

    மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. வீண் வாக்குவாதங்களால் உறவினர் பகை உருவாகும். உடல்நலத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலை தூக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும் நாள். வெளியூர் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 14 ஜனவரி 2025

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். நேற்று நடைபெறாத காரியமொன்று இன்று நடைபெறும். கொடுத்த தொகை வசூலாகும். உத்தியோக மாற்றம் செய் யலாமா என்று சிந்திப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025

    யோகமான நாள். அரசு வழி சலுகைகள் கிடைப்பதற்கான அமைப்பு உண்டு. முன்னோர் சொத்துகளில் இருந்த பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் தடைப்பட்ட உயர்வு தானாக வந்து சேரும். 

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 12 ஜனவரி 2025

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். திருமணத்தடை அகலும். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரிக்கலாம். குடும்பப் பெரியவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025

    ஆலய வழிபாட்டில் அக்கறை காட்டும் நாள். செல்வநிலை உயரும். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.தொழில் சீராக நடைபெறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜனவரி 2025

    வாய்ப்புகள் வாயில்தேடி வரும் நாள். மனதில் தைரியமும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். பால்ய நண்பர்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 9 ஜனவரி 2025

    அலைபேசிமூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். வரவு திருப்தி தரும்.

    ×