என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுநல ஈடுபாட்டில் ஆர்வம் ஏற்படும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். உங்கள் முன்னேற்றத்தைக்கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். பழுதான வீடுகளை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். வியாபார விரோதம் அகலும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருந்த நீண்ட நாளையப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள நண்பர்கள் வழிகாட்டுவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். நண்பர்கள் நல்ல யோசனைகளைச் சொல்வர். பொதுநலத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி கடன்வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
முயற்சி கைகூடும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். எதிர்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் இல்லம் தேடி வரலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வரலாம். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் பல பணிகளை விட்டு விடும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. வெளிவட்டாரத்தில் இருந்து விமர்சனங்கள் வரலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மனக்கசப்பு தரும் சம்பவம் நடைபெறும் நாள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. மறதி அதிகரிக்கும். உடல் நலனுக்காக செலவிடுவீர்கள். சகோதர சச்சரவு உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
காசு பணப் புழக்கம் அதிகரிக்கும் நாள். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். ஆடை, ஆடம்பரப் பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும்.






