என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலை யொன்று முடியாமல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024
யோகமான நாள். நாணயமாக நடந்து கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காலையில் செய்ய மறந்த வேலை ஒன்றால் மாலையில் அவதிப்படலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. உடல் நலத்தில் அக்கறை தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கை பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக்கொள்ள நேரிடும். உடல்நலனில் கொஞ்சம் அக்கறை தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024
சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள். திருமணத் தடை அகலும்
கடகம்
இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024
இடமாற்றங்களால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024
வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024
விரயங்கள் அதிகரிக்கும் நாள். விருந்தினர் வருகையால் தொல்லைகள் உருவாகலாம். சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு குறையும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024
லாபம் கிடைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. கண்ணியம் மிக்க ஒருவர் தொழிலுக்கு கைகொடுத்து உதவ முன்வருவார். பொருளாதார நிலை உயரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும். உறவினர்களின் ஒத்துழைப்பு உள்ளத்தை மகிழ்விக்கும். நீண்டதூர பயணமொன்றால் கையிருப்பு கரையலாம்.






