என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். எதிர்காலம் இனிமையாக அமையத் திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசுவழிச் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். பயணத்தை மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024
விருப்பங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளின் தொடர்பு அனுகூலம் தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024
பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். இட மாற்றச் சிந்தனைகள் உருவாகும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபார விருத்தி கருதி புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும். வியாபார நலன்கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024
இறைவழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும். இடம், பூமி வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024
வெளிவட்டார பழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். எதிர்பார்த்தபடியே தன லாபம் கிடைக்கும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தக்க விதத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றி பெறும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024
இனிய செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும் நாள். நண்பர்கள் வழியில் விரயம் உண்டு. சொத்து, இடம் வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளால் செலவு ஏற்படலாம். உத்தியோக மாற்றம், இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. திட்டமிட்ட காரிமொன்றில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணம் ஏற்படும்.






