என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024

    முன்னேற்றம் கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024

    நிதிநிலை உயரும் நாள். நேசம் மிக்கவர்களின் பாசமழையில் நனைவீர்கள். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024

    மலைபோல வந்த துயர் பனி போல் விலகும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் தருவதாக பிற நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024

    நன்மைகள் நடைபெறும் நாள். திடீர் பயணமொன்றால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். பிரியமான நண்பர் ஒருவரோடு இருந்த பிரச்சனை தீரும். தூரத்து உறவினர்களால் உத்தியோக முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024

    நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024

    தொய்வடைந்த தொழிலை துாக்கி நிறுத்த முயற்சிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024

    திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024

    உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கும் நாள். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். ஆசைப்பட்ட பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் இடர்பாடுகள் ஏற்படும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும். வரன்கள் வாயில்தேடி வரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024

    பொருளாதார நிலை உயரும் நாள். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட துயரம் அகலும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சமாளிப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024

    எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உத்தியோகம், சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

    ×