என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்-27 செப்டம்பர் 2025
வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
கடகம்
இன்றைய ராசிபலன்-26 செப்டம்பர் 2025
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. திருமண பேச்சுகள் முடிவாகலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2025
கனவுகள் நனவாகும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2025
முட்டுக்கட்டைகள் அகன்று முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2025
விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2025
பராசக்தி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சிக்கு அதிகாரிகள் உறுதுணைபுரிவர்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2025
குழப்பங்கள் அகலும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2025
விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாகன பராமரிப்புச்செலவு உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2025
மனக்குழப்பம் அகலும் நாள். பயணம் பலன்தரும் விதம் அமையும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சகோதரர் வழியில் இனிய செய்தி கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2025
சேமிப்பு அதிகரிக்கும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2025
வளர்ச்சி கூடும் நாள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். பயணம் பலன் தரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2025
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.






