என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
இந்தவார ராசிபலன்
18.3.2024 முதல் 24.3.2024 வரை
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்.மேஷ ராசிக்கு 3,6-ம் அதிபதி புதன் நீசம்.கெட்டவனான புதன் பலம் குறைந்ததால் உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும்.பாகப்பிரிவினை சுமூகமாகும். ஜாமீன் வழக்கு ரத்தாகும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் மாறும். காது, மூக்கு, தொண்டை பிரச்சினை வைத்தியத்தில் சீராகும். நோய் தாக்கம் குறையும். எதிர்பார்த்த அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். 5-ம் அதிபதி சூரியன் 12-ல் ராகுவுடன் மறைந்ததால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும். பூர்வீகம், குழந்தைகளால் மன சஞ்சலம் கூடும். பங்குச் சந்தை காலை வாரும். காதல் கசக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
சில வாரங்களில் குருப் பெயர்ச்சியானவுடன் புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம் துவங்கிவிடும். தொழிலுக்கு அரசு வகை ஆதாயம் உண்டு. சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பணி மீண்டும் உங்களையே வந்தடையும். பிரதோஷ நாட்களில் பச்சரிசி மாவால் நந்திக்கு அபிசேகம் செய்து வழிபட கடன் உங்களை அண்டாது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
11.3.2024 முதல் 17.3.2024 வரை
லாபகரமான வாரம். வார இறுதியில் ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் லாப அதிபதி சனியுடன் சேருவதால் பூமி சம்பந்தமான பிரச்சினை கள் முடிவிற்கு வரும். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். மூத்த சகோதர, சகோதரி சித்தப்பாவால் ஏற்பட்ட சங்கடங்கள் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உதயமாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மேல் விழுந்த வீண் பழி விலகும். பெண்களுக்கு மாமியார், நாத்தனார் வரவால் வேலைப்பளு அதிகமாகும். திருமண வயதினரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமையும். அதே நேரத்தில் இது அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சேர்க்கை என்பதால் எந்த செயலையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
4.3.2024 முதல் 10.3.2024 வரை
சுபமான அனுகூலம் உண்டாகும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரனுடன் இணைந்து ராசியில் உள்ள குருவை பார்ப்பதால் கம்பீரமான வசீகரமான தோற்றம் ஏற்படும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். குடும்ப சுமை குறையும். மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும். இருளடைந்த உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒளிபிறக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும்.
லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகள் நடக்கும். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். சிலருக்கு பணிக்காலம் முடிந்த பிறகும் பதவி நீட்டிப்பு கிடைக்கும். உடல் உபாதைகள் அகலும். 4.3.2024 அன்று மாலை 4.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு வீண்செலவுகள், விரயங்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் அவசியம். சிவராத்திரியன்று மாதுளை சாறினால் சிவனை வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
26.2.2024 முதல் 3.3.2024 வரை
புதிய நல்ல மாற்றங்கள் உண்டாகும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் ராசியில் உள்ள குருவைப் பார்ப்பது குரு மங்களயோகம் .சொத்து வாங்குவது அல்லது விற்பனையால் லாபம் உண்டு. முக்கிய வழக்குகள் வாபஸ் பெற்று மத்தியஸ்தர்கள் முன்னி லையில் பேசி தீர்க்கப்படும்.உத்தியோகஸ் தர்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் கவுரவம் நிலைத்திருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல சிறப்பாக இருக்கும். வாய்ப்புகளை பயன்படுத்தி இருப்பதை தக்க வைத்துக் கொள்வதும் நல்லது. திருமணத் தடை அகலும்.
புத்திரப்பேறு கிடைக்கும். தாய், தந்தையின் நல்லாசியும் ஆதரவும் மனதில் குதூகலத்தை அதிகரிக்கும். வீண் விரயங்கள் ஏற்படுவதை உணர்வீர்கள்.விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அகலக்கால் வைப்பதைத் தவிர்ப்பீர்கள். சேமிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் மனதை வாட்டும்.2.3.2024. காலை 8.17க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் காலதாமதம் ஏற்படுவதால் தன் கையே தனக்கு உதவி என்று உணர்வீர்கள். வெள்ளிக்கிழமை பசுவிற்கு அகத்திக்கீரை தானம் வழங்க நன்மைகள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
19.2.2024 முதல் 25.2.2024 வரை
லாபகரமான வாரம். லாப ஸ்தானத்தில் பூர்வ.புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன், புதன் சனி சேர்க்கை.பொதுவாக ஒரு ஜாதகத்தில்.லாபஸ்தானத்தில் அதிக கிரகங்கள் சேர்ந்து நிற்பது லாபம் தரும் அமைப்பாகும். லாப ஸ்தானம் பலம் பெறுவதால் உங்களின் திட்டங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான கடன் உதவி கிடைக்கும். தொழிலுக்கு நம்பிக்கையான புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கும் தகுதிக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். அலைச்சல் மிகுந்த பய ணங்கள் அதிகரிக்கும். அரசு உத்தியோக அனுகிரகம் உள்ளது.
ஆரோக்கியம் மேம்படும். சரியாக இரண்டு மாதத்தில் குரு உங்கள் ராசியை விட்டு விலகி தன ஸ்தானம் செல்லப் போகிறார். மேஷ ராசியினர் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி வெற்றி நடை போடப்போகிறீர்கள். குடும்பத்தில் நிலவிய சிறு சிறு குழப்பங்கள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண முயற்சி வெற்றி தரும். மறு விவாக யோகம் உள்ளது. மாசி மகத்தன்று சிவனுக்கு விபூதி அபிசேகம். செய்து ஆத்மார்த்தமாக வழிபட சாதகமான பலன்கள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
12.2.2024 முதல் 18.2.2024 வரை
லாபகரமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் லாபாதிபதி சனியுடன் சேர்க்கை. லாப ஸ்தானம் பலம் பெறுவதால் நிதானமாக லாபம் கொடுத்த தொழில் நிலையான லாபத்தை வழங்கும். உச்ச செவ்வாயால் தொழில், வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறும்.உடலும் உள்ளமும் குளிரும். மன சங்கடம். இனம் புரியாத கவலை நீங்கும். அதிர்ஷ்டம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள். மருமகன், மரும களால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். புத்திர பிராப்தம் சித்திக்கும்.பெற்றோர்களின் நல்லாசி கிடைக்கும். அரசு பணியை எதிர்பார்த்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும். கண் அறுவை சிகிச்சை வெற்றி தரும். பூர்வீகம் சென்று வர திட்டமிடுவீர்கள். மேஷ ராசியினர் தாத்தா, பாட்டியாகும் பாக்கியம் உள்ளது. திருமண முயற்சி தாய் மாமாவின் ஆதரவால் சித்திக்கும். ஆரோக்கியத்தால் நிலவிய கவலைகள் சீராகும். தினமும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
5.2.2024 முதல் 11.2.2024 வரை
விருப்பங்கள் நிறைவேறும். வாரம். ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடி வேலைப் பளு குறையும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை, அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். சுப காரியங்கள் கைகூடும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீரும். ஆன்ம பலம் பெருகும். தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் திருமணம், புத்திரபாக்கியம், உயர் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து விதமான சுபபலன்களும் கைகூடும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.
கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். அடமான நகைகள் மீண்டு வரும். பெண்களுக்கு குடும்பத்தாரின் அன்பும் அனுசரணையும் கிடைக்கும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். 6.2.2024 அன்று காலை 7.35 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தை அமாவாசையன்று வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
29.1.2024 முதல் 4.2.2024 வரை
அமைதி நிறைந்த வாரம். குருவுடன் பரிவர்த்தனை பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தனாதிபதி சுக்ரனுடன் பாக்கிய ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் செயல்களில் திறமைகள் வெளிப்படும். தைரியத்துடன் செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு உண்டாகும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கும் வேலை இழந்தவர்களுக்கும் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சிலர் புதிய தொழில் துவங்கலாம். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். ஸ்திர சொத்துக்கள் சேரும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட சங்கடம் தீரும். அழகு, ஆடம்பர பொருட்கள், பொன், பொருட்சேர்க்கை உண்டாகும்.தேக ஆரோக்கியத்தில் பொலிவு கூடும். மனதில் நிலவிய சங்கடங்கள் விலகும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை விலகும். 4.2.2024 அன்று மணி 1.04 நள்ளிரவுக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பலதரபட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். செவ்வாய்க்கிழமை வாராகி அம்மனை வழிபட மகிழ்ச்சி கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
22.1.2024 முதல் 28.1.2024 வரை
சகல சவுபாக்கியங்களையும் அடையும் அதிர்ஷ்டம் உண்டாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட கால திட்டங்களையும் எண்ணங்களையும் நிறைவேற்றக் கூடிய நல்ல வாய்ப்புகள் கூடி வரும். இது வரை தொழில் உத்தியோகத்தில் பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கும். தடைபட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு தானாக வந்து சேரும். தொழிலுக்கு உதவியாக நிரந்தரமான திறமையான வேலையாட்கள் அமைவார்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
தவறாக புரிந்த உறவுகள் உங்களின் நல்ல பண்பை புரிந்து கொள்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து நிம்மதி கூடும்.வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். வீடு, வாகனம் போன்ற புதிய சொத்துக்களை வாங்க, பழைய சொத்துக்களை விற்க ஏற்ற காலம். திருமண வயதை அடைந்த ஆண், பெண்களுக்கு நல்ல வரன் அமையும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோர்கள், பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தைப் பூசத்தன்று சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
15.1.2024 முதல் 21.1.2024 வரை
இடமாற்றம் உண்டாகும் வாரம். ராசிக்கு 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன். ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய அதிபதி குருவுடன் பரிவர்த்தனை என முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் மேஷ ராசியினருக்கு சாதகமாக உள்ளது. மிக உன்னதமான சுப பலன்கள் ஏற்படும். தடைபட்ட பணி மாற்றம், ஊதிய உயர்வு, இடமாற்றம் இப்பொழுது சாத்தியமாகும்.தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். குருமங்கள யோகம் ஏற்பட்டுள்ளதால் உள்ளத்தில் அமைதி குடிபுகும். சொத்துக்களின் மதிப்பு கூடும். புதிய சொத்துக்கள் சேரும். வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இடப்பெயர்ச்சிகள் நிகழும். உபரி வருமானத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். தாயாரின் சொத்துக்களைப் பிரிப்பதில் சகோதர சகோதரிகளால் ஏற்பட்ட இடையூறு மன உளைச்சல் சீராகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்துவது பற்றி சிந்திப்பீர்கள். ராசிக்கு சனி பார்வை பதிவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முருகனை வழிபட மேன்மையான பலன் உண்டு.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
8.1.2024 முதல் 14.1.2024 வரை
அபரிமிதமான லாபம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுவது மிக சிறப்பான அமைப்பு. சுய தொழிலில் வளர்ச்சி உண்டு. சிலருக்கு புதிய தொழில் துவங்கும் ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு. குடும்ப பிரச்சினைகள் குறையத் துவங்கும். நினைத்ததை நிறைவேற்றும் வகையில் அபரிமிதமான லாபம் உண்டாகும்.
வீடு கட்டுதல், வீடு வாங்கி குடியேறுதல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடைபெறும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். .பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கையால் நிம்மதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். உடலை அச்சுறுத்திய நோய்கள் விலகி மருத்துவ செலவுகள் குறையும். வயோதிகர்களுக்கு ஆயுள் பயம் விலகும். 9.1.2024 இரவு 9.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிலைமையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுவது நல்லது.அரச மரத்தடி விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்தவார ராசிபலன்
1.1.2024 முதல் 7.1.2024 வரை
குடும்ப பிரச்சினைகள் தீரும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் தொழில், உத்தியோக அபிவிருத்தி உண்டு. புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும். தாராள தன வரவால் குடும்பத்தில் குதூகலம் கூடும். இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டக் கூடிய புதிய வாய்ப்புகள் கைகூடி வரும். குடும்பத்தில் நிலவிய மனகசப்பான சம்பவங்கள் முற்றுப்புள்ளியாகும். பிள்ளைகள் தொழில் உத்தி யோகத்திற்காக இடம் பெயரலாம். பாக்கிய அதிபதி குரு வக்ர நிவர்த்தி பெறுவதால் ஆத்ம ஞானம் அதிகரித்து உடலுக்கும் ஆன்மா வுக்கும் புத்துணர்வு உண்டாகும். குல
தெய்வ வழிபாடு பித்ருக்கள் நல்லாசி பெற உகந்த காலம். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும். சுப விசேஷ நிகழ்வுகள் நடக்கும்.7.1.2024 மாலை 4.03க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்ப தால் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினை, தேவையற்ற பழிச்சொற்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கவனம் தேவை.கிருத்திகையன்று அங்காரகனை வழிபட முத்தாய்பான முன்னேற்றம் உண்டு.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






