என் மலர்tooltip icon

    மேஷம் - வார பலன்கள்

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    10.6.2024 முதல் 16.6.2024 வரை

    தெளிவுகள் பிறக்கும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் சனி பார்வையில் ஆட்சி. எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பலம் பெறுவதால் செயல்பாடுகளில் பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களின் வழியில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

    பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திருமணத்தடை அகன்று மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும்.பொன்,பொருள் சேர்க்கை கூடும். வீடு, வாகன யோகம் கிட்டும். வாழ்வாதார உயர்வால் மனதில் இருந்துவந்த கவலைகள் விலகும். எதிர்கால முன்னேற்றம் பற்றிய தெளிவு பிறக்கும். சேமிப்புகளை மேம்படுத்து வதற்கான மார்க்கம் தென்படும். எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் அனுகூலமான திருப்பம் ஏற்படும். முருகன் வழிபாட்டால் நிம்மதி நிலைக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    3.6.2024 முதல் 9.6.2024 வரை

    களிப்பான வாரம். ராசியில் செவ்வாய் ஆட்சி.தன ஸ்தானத்தில் சுக்ரன் ஆட்சி.லாப ஸ்தானத்தில் சனி ஆட்சி முக்கிய கிரகங்கள் சாதகமாக உள்ளது. மனக்குழப்பம், சங்கடங்கள் விலகும். நினைத்ததை சாதிப்பீர்கள். மூளை பலமே மூலதனம் என்று திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு வியாபாரத் தொழில் சம்பந்தமான பிரச்சினைகள் அகலும். மனைவியால் பணவரவு பல மடங்காக அதிகரிக்கும். பங்குச் சந்தை, பங்கு பத்திர முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

    ராசிக்கு சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் முறையான பாகப் பிரிவினை சொத்துக்கள் கிடைக்கும். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ சொத்து, பங்குபத்திரம் வாங்குவீர்கள். வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வெளிநாட்டில் சென்று செட்டிலாகும் வாய்ப்பு ஏற்படும். இடது கண்ணில் சிறு உபாதைகள் தோன்றி மறையும் அல்லது அறுவை சிகிச்சை செய்ய நேரும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசி பலன்

    27.05.2024 முதல் 02.06.2024 வரை

    மாற்றம் நிறைந்த வாரம். ராசி அதிபதி செவ்வாய் வார இறுதியில் ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். இதுவரை உங்களுக்கு எதிராக இருந்த பிரச்சனைகள் வலு இழக்கும். தொழில், வேலையில் சாதகமான பலன் நடைபெறும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வைராக்கியம், விடாமுயற்சியுடன் செயல்பட்டு லட்சியத்தை அடைவீர்கள். பணவரவு நீர்வீழ்ச்சி போல் கொட்டும். செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள். வீடு, மனை, வாகனம் என சுப விரயச் செலவுகள் ஏற்படும். இடமாற்றம் மன நிம்மதியை அதிகரிக்கும். போட்டி, பொறாமை, எதிரி, கடன் இவற்றின் பாதிப்புகள் குறையும். ஆரோக்கியம் சிறக்கும். தான, தர்மம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களால் மனதில் நிம்மதி குடிபுகும். இளம்பெண்களுக்கு மனம் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு மத மாற்ற சிந்தனை மேலோங்கும். காதல் விசயங்களால் மன உளைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகளில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பங்காளிகளால் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை செவ்வரளி மாலை அணிவித்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    20.5.2024 முதல் 26.5.2024 வரை

    பொருளாதாரப் பற்றாக்குறை அகலும் வாரம். தன ஸ்தானத்தில் சூரியன், குரு, சுக்ரன் என தன, லாபத்தை வழங்கும் கிரக கூட்டணி இருப்பது மேஷத்திற்கு சுபபலனை மேம்படுத்தும் அமைப்பாகும். இதனால் உங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்ற பாதையை நோக்கி பயணிப்பீர்கள். அன்றாட தேவையை சமாளிக்க திணறியவர்களுக்கு தாராள தன வரவால் மகிழ்ச்சி ஏற்படும்.குடும்ப ஸ்தான சுக்ரனால் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். தொழில். உத்தியோகம் லாபகரமாக இருக்கும். கரைந்த சேமிப்புகள் உயரும். கடன் சுமை குறையும்.அரசு உத்தியோக முயற்சி சித்திக்கும்.

    அரசியல் பிரமுகர்களின் பேச்சு திறமையால் புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். பிள்ளை பேறில் ஏற்பட்ட தடைகள் அகலும். திருமணம் நடைபெறும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் நேரம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. உடல் நிலை சீராகும். 23.5.2024 அன்று அதிகாலை 2.55 மணி முதல் 25.5.2024 அன்று காலை 10.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் போட்டி பந்தயங்களை தவிர்க்கவும். செயல்களில் நிதானம் அவசியம். நவகிரக செவ்வாய் பகவானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    13.5.2024 முதல் 19.5.2024 வரை

    தாராள தனவரவு ஏற்படும் வாரம். ராசியில் தன அதிபதி சுக்ரன். தன ஸ்தானத்தில் குரு, சூரியன் சேர்க்கை என தன ஸ்தானமும், தன கிரகமும் பலம் பெறுவது மேஷத்திற்கு உன்னதமான தனவரவை ஏற்படுத்தும் அமைப்பாகும். கொடுக்கல் வாங்கல் சிரமமின்றி நடைபெறும். பிறரை நம்பி கொடுத்த பணம், வராக் கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிரம்பும். ராசியில் உள்ள புதன் எதையும் ஏfற்றுக் கொள்ளும் தைரியத்தையும் மன வலிமையையும் நல்குவார்.கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது.

    தொழில் போட்டிகளால் ஏற்பட்ட அவஸ்தைகள் சீராகும். கூட்டுத்தொழிலில் இருந்த மாற்றுக் கருத்துகள் மறையும். திருமணத் தடை அகலும். புத்திரப் பேறு உண்டாகும்.புதிய சொகுசு வாகனம் மற்றும் சொத்து வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை வழியில் உள்ள சொத்துப் பிரச்சினைகள் அகலும். பெண்களால் ஏற்பட்ட தேவையற்ற மன உளைச்சல் அகலும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும்.

    மேஷம்

    இந்த வார ராசிபலன்

    6.5.2024 முதல் 12.5.2024 வரை

    முன்னேற்றம் அதிகரிக்கும் வாரம். ராசியில் தன அதிபதி சுக்ரன் சூரியன் மற்றும் புதனுடன் சேருவதால் நன்மைகள் பெருகும். வெற்றிகள் உங்களைத் தேடி வரும். இதுவரை சாதிக்க துடித்த விசயங்களை சாதிக்கும் துணிவும், சந்தர்ப்பமும் உருவாகும்.உங்களது கருத்துக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரம் உங்கள் மன மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். எதிரிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். நிம்மதியும் தைரியமும், தெம்பும் உங்களை வழி நடத்தும். வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்ற இடப்பெயர்ச்சிகள் நடைபெறும்.உடன் பிறப்புகளுடன் இருந்த கோபதாபங்கள் மாறும். புத்திரப் பேறில் நிலவிய தடைகள் விலகும். தாய்மாமன் மூலம் நல்லது நடக்கும். வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். இதுவரை நீங்கள் அனுபவித்த பிரச்சினைகள், சங்கடங்கள், கஷ்டங்கள், குறைந்து, வாழ்க்கையில் சுபிட்சம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகள் சுமூகமாகும். ஆயுள் ஆரோக்கியம் சீராகும்,திருமண வாய்ப்புகள் கூடி வரும். அமாவாசையன்று உணவு தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிபலன்

    29.04.2024 முதல் 05.05.2024 வரை

    பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். ராசியில் சூரியன் சுக்ரன் சேர்க்கை. தன ஸ்தானத்தில் குரு. விரய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராகு என கிரகங்களின் சஞ்சாரம் இருப்பது மேஷத்திற்கு ஏற்றமான பலன் தரும் அமைப்பாகும்.

    சங்கடங்கள் விலகி வாழ்க்கை வளமாகும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கிய தொல்லைகள் சீராகும். சுய தொழில் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலர் கோபத்தால் நல்ல வாய்ப்புகளை தவற விட்டு பின் வருந்துவார்கள்.

    சிலருக்கு ஊர் மாற்றம் அல்லது வேலை மாற்றம் நடக்கும். முக்கிய பொறுப்புகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. வழக்குகளை வாபஸ் பெறலாம் அல்லது ஒத்தி வைக்கலாம். வாடகை வீட்டுத் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். திருமண வயது ஆண், பெண்களுக்கு இந்த வாரத்தில் சாதகமான பலன் உண்டு. நன்மையும், தீமையும் சேர்ந்தே நடைபெறும் என்பதால் தைரிய லட்சுமியை வழிபட மேன்மை உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    22.4.2024 முதல் 28.4.2024 வரை

    சுபகாரியங்கள் கைகூடும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனும் பாக்கியாதிபதி குருவும் ராசியில் சஞ்சரிப்பதால் திருமணம், பிள்ளைப்பேறு, உயர்கல்வி, வீடு, வாகன யோகம் என தடைபட்ட அனைத்து சுப காரியங்களும் கை கூடி வரும்.

    மனோதைரியம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நோய், பிணி, மூப்பு உங்களை அண்டாது. வழக்குகளின் தீர்ப்புகள் சாதகமாகும். சிலருக்கு அரசின் இலவச வீடு மனை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள் தேடி வரும். சம்பள உயர்வு உண்டு.

    வியாபாரிகளுக்கு விரயம் குறையும். வெளிநாட்டு வேலை, தொழில் முயற்சிகள் வெற்றி தரும். கிடைத்த வாய்ப்யை பயன்படுத்தக்கூடிய நல்ல நேரமாக இந்த வாரம் அமையும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். தம்பதிகள் ஒருமித்த கருத்துடன் வாழ்வார்கள். 25.4.2024 இரவு 8 மணி முதல் 28.4.2024 அன்று அதிகாலை 4.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் கடன் பெறுவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியத்தில் வெற்றி பெற பவுர்ணமியன்று பராசக்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    15.4.2024 முதல் 21.4.2024 வரை

    சாதகமான வாரம். உச்சம் பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் பாக்கியாதிபதி குருவுடன் ராசியில் சஞ்சாரம். ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனும், பாக்கியாதிபதி குருவும் ஒருங்கே பலம் பெறும் இந்த அமைப்பு மேஷ ராசிக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும் கிரக நிலவரமாகும். ஆழ்மன எண்ணங்கள் மற்றும் ஆசைகள் நிறைவேறும்.

    சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளில் நல்ல விதமான மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். வெளிநாட்டு பயணம் மற்றும் வேலை, புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் விலகும். பெற்ற பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.வீடு கட்டுதல், புதிய வீடு ,வாகனம், புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.குருவின் ஆசியோடும் பெரியோர்களின் ஆசியோடும் ஆடம்பரமாக சீரோடும், சிறப்போடும் திருமணம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் நடைபெறும்.

    பங்குச் சந்தை ஆதாயம், பொருளாதார முன்னேற்றம் உண்டு. தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும். உடல் நிலை சிறக்கும். முருகனை வழிபட இன்பங்கள் இரட்டிப்பாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    8.4.2024 முதல் 14.4.2024 வரை

    ஆரவாரமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் லாப அதிபதி சனியுடன் இணைவதால் உங்களின் திட்டங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறும். அடிமட்ட தொழிலாளார்களின் வாழ்வாதாரம் உயரும். குறைந்த உழைப்பில் நிறைந்த ஊதியம் கிடைக்கும். கடந்த கால இழப்புகளில் இருந்து மீளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். மூத்த சகோதரம், சித்தப்பாவுடன் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறுகள் முடிவிற்கு வரும். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் உணர்வுப் பூர்வமாக செயல்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவி ஒற்றுமையில் அன்பு மிளிரும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும்.

    தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமடையும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.குழந்தைப் பேறுக்கான வைத்தியம் பலன் தரும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும். சிலரின் மறு திருமண முயற்சி நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுப விரயங்கள், சுப செலவுகள் அதிகமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எலும்பு, நரம்பு, வாதம் தொடர்பான சிறு பாதிப்பு இருக்கும். அன்னபூரணியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    1.4.2024 முதல் 7.4.2024 வரை

    கடன் தொல்லைகள் குறையும் வாரம். ராசியில் 3, 6-ம் அதிபதி புதன் வக்ர கதியில் செல்கிறார். உங்களின் வாழ்க்கை முறையிலும் மனோநிலையிலும் முற்றிலும் மாற்றம் ஏற்படும். பேச்சுத் திறமை வெளிப்படும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும். மருத்துவச் செலவு மற்றும் வீண் விரயத்தில் இருந்து மீள்வீர்கள். ஜாமீன் மற்றும் காசோலை வழக்கில் திருப்பங்கள் நடக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நல்ல லாபம் கிட்டும். இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம், விண்ணப்பித்த கடனும் கிடைக்கும்.

    கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். குடும்ப உறவுகளிடம் சாதகமான போக்கு தென்படும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்ப டுத்துங்கள். யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாது. திரும ணத்திற்கு நல்ல வரன் அமையும். கணவன், மனைவி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சித்ரகுப்த வழிபாடு நன்மை தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    25.3.2024 முதல் 31.3.2024 வரை

    மேன்மைகள் உண்டாகும் வாரம். இன்னும் ஒருமாதத்தில் அதாவது மே 1-ந் தேதியன்று குரு ராசியை விட்டு விலகுவதால் ஜென்ம குருவின் ஆதிக்கம் குறையும். வீண் விரயத்தால் ஏற்பட்ட மன சஞ்சலம் குறைந்து தன வரவிற்கான அறிகுறி தென்படும். விட்டதை பிடிப்பீர்கள். இழந்ததை மீட்பீர்கள்.வெற்றிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சுய ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கும் வலிமை குருப் பார்வைக்கு உண்டு. எனவே குருவின் பார்வை கடாட்சத்தால் முடிக்க வேண்டிய பணிகளில் கவனம் செலுத்துங்கள் எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

    கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணவரவால் குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். புத்திர பிராப்தம் உண்டாகும். 29.3.2024 பகல் 2.09 முதல் 31.3.2024 இரவு 10.56 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் வெளியூர் பய ணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். தினமும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவிட முன்னேற்றம் அதிகரிக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×