என் மலர்tooltip icon

    மேஷம் - வார பலன்கள்

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    25.12.2023 முதல் 31.12.2023 வரை

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் பாக்கிய அதிபதி குருவின் பார்வையில் சஞ்சரிப்பதால் மிகப் பெரிய யோகமான பலன்களை பெறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். வருமானம் பலவித வழிகளில் வந்து கொண்டே இருக்கும். செல்வாக்கு உயரும்.எதிர்ப்புகள் அகலும். வழக்குகள் வெற்றியாகும்.

    பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும் அரசு வகை யில் மேற்கொண்ட முயற்சிகளில் இருந்து தடைகள் விலகும். சொத்துச் சேர்க்கை அதி கரிக்கும். குடும்ப விருந்துகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உரு வாகும். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனைக்கு மதிப்பு கொடுப்பார்கள்.குடும்பப் பிரச்சினைகள் விலகும். திருமணம், மறுமணம் முயற்சிகள் வெற்றி தரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள். துர்க்கை வழிபாடு நன்மை தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    18.12.2023 முதல் 24.12.2023 வரை

    நல்ல செயல்கள் நடைபெற வழி பிறக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் பாக்கிய அதிபதி குருவின் பார்வை யில் சஞ்சரிப்பதால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறு கிறது. நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் வாய்ப்புகள் உருவாகும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். புத்திர பாக்கியம் கைகூடும். திருமணத் தடை அகலும். மறுமண முயற்சி வெற்றி தரும். சுப செய்திகள் தேடி வரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சுமூ கமான சூழல் நிலவும்.

    அடமானச் சொத்துக்களை மீட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் கூடிவரும்.பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு சொல்வாக்கு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் சீராகும். மாமனாரால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் சீராகும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும்.வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். உடலும் உள்ளமும் மகிழும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். சொத்துக்கள் வாங்க விற்க உகந்த நேரம். உயர்கல்வி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏகாதசியன்று நெய்தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    11.12.2023 முதல் 17.12.2023 வரை

    பண நெருக்கடி விலகும் வாரம். 2,7-ம் அதிபதி சுக்ரன் 7-ல் ஆட்சி பலம் பெறுவதால் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில் சிறப்பாக நடக்கும்.சில உடன்பிறப்புகள் இணைந்து புதிய கூட்டுத்தொழில் துவங்கலாம். வாடிக்கை யாளர்கள் அதிகரிப்பார்கள். பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அதி கரிக்கும். உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப்பார்கள். வெளிநாடு செல்ல தடையாக இருந்த விசா பிரச்சினை சீராகும். புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். ராகுவால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும்.

    கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும்.13.12.2023 அன்று காலை 11.05 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆசைகளால் மனம் அலைபாயும். விரயங்களும் ஏற்படும். எனவே கவனத்துடன் செயல்பட்டு வெற்றியைக் காணுங்கள். விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை அணிவித்து வழிபட வினைகள் விலகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    4.12.2023 முதல் 10.12.2023 வரை

    சுபகாரிய முயற்சியில் வெற்றி உண்டாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாயும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனும் அஷ்டம ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் புத்திர பாக்கியத்திற்கான வைத்தியம் பலன் தரும். கருத்தரிப்பு உண்டாகும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.வீண் மனசஞ்சலம் அகலும். தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும்.உங்களது செயல்களை யாரும் குறை கூறக்கூடாது என்பதில் கவனமாக இருப்பீர்கள். தான, தர்மம் செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். 7ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் திருமணத் தடை அகலும்.

    மறு விவாகத்திற்கு நல்ல வரன் அமையும்.வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். அரசியல் பிரமுகர்களுக்கு தொகுதிப்பணியால் அலைச்சல் அதிகமாகும். வேலையில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பெண்களுக்கு நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் விலகும்.தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    26.11.2023 முதல் 3.12.2023 வரை

    மங்களகரமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சனி பார்வையில் ஆட்சி பலம் பெறுவதால் நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும்.வீடு, மனை என சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல் என உங்கள் சிந்தனை எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். எதிர்பார்த்த அனைத்து வழிகளிலும் வரவுகள் இருக்கும். சுய தொழிலில் நிலவிய சங்கடங்கள், குறுக்கீடுகள் விலகும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.அலுவலகத்தில் உங்கள் மீது ஏற்பட்ட வீண் பழி விலகும்.

    வார இறுதியில் 7-ம் அதிபதி சுக்ரன் கேதுவின் பிடியில் இருந்து விடுபட்டு துலாத்தில் ஆட்சி பலம் பெறுவதால் திருமணத் தடை அகலும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சுப நிகழ்வுகள் மங்களகரமானதாகவும், அற்புதமாகவும் அமைய உள்ளது. நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு அற்புதமான நேரம். சமூக அந்தஸ்து உயரும்.கணவன் மனைவி ஊடல் கூடலாக மாறும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். உடல் நிலை தேறும். செவ்வரளி மலர்களால் முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    20.11.2023 முதல் 26.11.2023 வரை

    நிதானமாக செயல்பட வேண்டிய வாரம்.ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் மற்றும் 3,6-ம் புதனுடன் ராசிக்கு 8-ல் இணைவது விபரீத ராஜயோகம். திட்டமிட்டு செயல்படுவீர்கள். இதுவரை உங்கள் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி அமைதி நிலவும்.பூர்வீகச் சொத்தை விற்று முழுப் பணமும் வந்து சேரும். சிலருக்கு முறையான ஆவணங்கள் இல்லாத சொத்தால் பிரச்சினைகள் அதிகரிக்கும்.சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்பு முனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும்.ஆண்கள் மனைவி பெயரில் தொழில் ஆரம்பிக்கலாம்.

    சிலர் உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக தாயாரை பிரிந்து செல்ல நேரும். உங்கள் அலுவலக வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். பெண்களுக்கு கணவர் மற்றும் பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும்.பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. திருமண முயற்சி பலன் தரும். ஆரோக்கிய குறைபாடு சீராகும். பவுர்ணமியன்று சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    13.11.2023 முதல் 19.11.2023 வரை

    நிதானமாக செயல்பட வேண்டிய வாரம்.ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் மற்றும் 3,6ம் அதிபதி புதனுடன் ராசிக்கு 8ல் இணைவது விபரீத ராஜயோகம். பூர்வீகச் சொத்தை விற்று முழுப் பணமும் வந்து சேரும். விற்ற பணத்தில் தாயார் சகோதரருக்கு அதிக பங்கு கொடுப்பது மன உளைச்சலை அதிகமாக்கும்.சிலருக்கு முறையான ஆவணங்கள் இல்லாத சொத்தால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்பு முனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும்.ஆண்கள் மனைவி பெயரில் தொழில் ஆரம்பிக்கலாம்.சிலர் உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக தாயாரை பிரிந்து செல்ல நேரும்.

    உங்கள் அலுவலக வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. திருமண முயற்சி பலன் தரும். ஆரோக்கிய குறைபாடு சீராகும்.13.11.2023 இரவு 9.17 முதல் 16.11.2023 அன்று 3am வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் நல்லதாக நினைத்து பேசினாலும் அதை மற்றவர்கள் தவறாக பேசுவார்கள் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. சஷ்டியன்று முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    6.11.2023 முதல் 12.11.2023 வரை

    சங்கடங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி செவ்வாயும், குருவும் சம சப்தமாக பார்ப்பது குரு மங்கள யோகம். தொழில், லாப, ஸ்தான அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தி என பல கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பது மேஷத்திற்கு சிறப்பு.தொழிலில் முன்னேற்றமான போக்கு தென்படும். உத்தியோக மாற்ற சிந்தனை அதிகமாகும்.புதிய வேலை வாய்ப்புகள் சாதகமாகும்.

    அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் பெரிய பொறுப்புகளை சுமக்க நேரும். வீடு, வாகன பராமரிப்புச்செலவுகள் அதிகரிக்கும்.தீபாவளி உற்சாகத்தில் சேமிப்புகள் கரையும்.2,7ம் அதிபதி சுக்ரன் நீசம் பெறுவதால் பணப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கலில் சில தடுமாற்றங்கள் ஏற்படலாம். திருமண முயற்சிகள் இழுபறியாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.பழைய நண்பர்களை எதிர்பாராத விதமாக சந்தித்து மகிழ்வீர்கள். வெளியூரில் வேலை பார்த்த கணவர் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். தெய்வ அருளும், அனுகூலமும் உண்டாகும். தீபாவளியன்று தைரிய லட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    30.10.2023 முதல் 5.11.2023 வரை

    அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும் சாதகமான வாரம். ராசி அதிபதி செவ்வாயின் நேரடிப் பார்வை ராசிக்கு இருப்பதால் தைரியம், தெம்பு பிறக்கும். பய உணர்வு நீங்கும். 5-ம் அதிபதி சூரியன் ராசியை பார்ப்பதால் பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடம் மறையும்.பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி ஆனந்தம் அடைவீர்கள்.தொழில் சங்கடங்கள் நீங்கும். தடைபட்ட தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.பணியில் இருப்பவர்களுக்கு மன நிறைவான போனஸ் கிடைக்கும்.வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளிக்கு பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு ஆண் மகவு பிறக்கும்.எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். பண வரவு சரளமாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும்.

    கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும். ராகு 12-ம்மிடம் செல்வதால் பலர் தீபாவளிக்கு பிறகு பிழைப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்ல திட்டமிடலாம்.ஆரோக்கிய தொல்லைகள் அகன்று வைத்திய செலவு குறையும். மகிழ்ச்சியை அதிகரிக்க காலபைரவருக்கு முந்திரி மாலை சாற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    23.10.2023 முதல் 29.10.2023 வரை

    ஆன்மபலம் பெருகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனும் பாக்கிய அதிபதி குருவும் சம சப்தமாக பார்ப்பது மேஷ ராசிக்கு மிகச் சாதகமான கிரக அமைப்பு. திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். நிறைந்த அறிவு, திறமை இருந்தும் சாதிக்க முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். சிலர் உத்தியோகத்திற்காக இடம் பெயரலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும்.தடைபட்ட சுப காரியங்கள் துரிதமாகும்.திருமணத்தடை அகலும். குலதெய்வம், முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். சிலருக்கு அரசின் இலவச வீட்டுமனை கிடைக்கும். தீபாவளி போனசிற்கான திட்டமிடுதல் துவங்கும்.கிரகணம் முடிந்த பிறகு சிவசக்தியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    16.10.2023 முதல் 22.10.2023 வரை

    தொட்டது துலங்கும் வாரம். ராசியை விட்டு ராகு விலகுவது மேஷ ராசிக்கு மிகப் பெரிய யோகமாகும்.கடந்த ஒன்றரை வருட காலமாக பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். சகோதர சகோதரி மேல் அன்பு அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியம் சீராகும்.கடன் பிரச்சினை குறையும். தந்தையின் அனுசரணை உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள், வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றில் சாதகமான முடிவு வரும்.

    தீர்த்த யாத்திரை சென்று வருவீர்கள். 7-ம் மிடமான களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமணத் தடை நீங்கும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். எதிரிகளை வெல்லும் வலிமை ஏற்படும்.படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். 17.10.2023 மதியம் 2.20 முதல் 19.10.2023 இரவு 9.03 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத் தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வரவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிபலன்

    9.10.2023 முதல் 15.10.2023 வரை

    நீண்ட கால எண்ணங்கள் திட்டங்கள் நிறைவேறும் வாரம் . ராசி அதிபதி செவ்வாய் ராசி யில் உள்ள 9-ம் அதிபதி குருவை சம சப்த மாக பார்ப்பதால் தடைப்பட்ட அனைத்துப் பணிகளும்துரித மாகும்.வாக்கால் தொழில் செய்பவர்க ளுக்கு ஏற்றமான காலம்.பிறரால் சாதிக்க முடியாதவற்றை சாதிக்கும் திறனும் மனதில் பட்டதை தைரியமாக பேசும் தைரியமும், வாக்கு நிறைவேற்றுதலும் உண்டாகும். இது வரை ஐந்துக்கும் பத்துக்கும் அள்ளாடிய வர்களுக்கு கூட கையில் சரளமாக பணம் புரளும்.

    வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.பணியிடத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். சொத்து வாங்குவது விற்பது சுலபமாக நடந்து முடியும்.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.தூக்கமின்மை விலகும். ராசியை விட்டு ராகு விலகுவதால் திருமணத் தடை விலகும். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால், வாடிக்கையாளர்க ளால் ஏற்பட்ட மனச்சங்கடம் குறையும். மாற்று மருத்துவத்தில் ஆரோக்கியம் சீராகும்.மகாளய அமாவாசையன்று பித்ருக்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×