என் மலர்tooltip icon

    மேஷம் - வார பலன்கள்

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    2.10.2023 முதல் 8.10.2023 வரை

    குருமங்கள யோகத்தால் விருப்பங்கள், கனவுகள், லட்சியங்கள் நிறைவேறும். ராசி அதிபதி செவ்வாயும் குருவும் சமசப்தமாக பார்ப்பது குரு மங்கள யோகம்.கடன் பெற்றாவது சொந்த வீடு வாகன யோகத்தை ஏற்படுத்துவீர்கள். ஏற்கனவே சொந்த வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டை விரிவுபடுத்தலாம். தொழிலில் மிகப் பெரிய ஏற்றம் உண்டாகும். குலத் தொழில் புரிபவர்களின் புகழ் அந்தஸ்து கூடும்.புதிய வாடிக்கையாளர், தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். புதிய முதலீடு செய்ய ஏற்ற காலம். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணி நியமனம் கிடைக்கும். வெளிநாட்டு வேலையை விரும்புபவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய நபர்கள் அறிமுகமா கலாம். 2,7-ம் அதிபதி சுக்ரனை குரு, சனி பார்ப்பதால் இளம் வயதினரின் காதலும் மத்திம வயதினரின் எதிர்பாலின நட்பும் குடும்பத்தில் வில்லங்கத்தை அதிகரிக்கும். அதிகமான மகிழ்ச்சியால் உற்சாகத்தால் நோய் தாக்கம் குறையும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். மகாளயபட்சம் முடியும் வரை சாம்பார் சாதம் தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிபலன்

    25.9.2023 முதல் 1.10.2023 வரை

    விருப்பமும் கனவுகளும் நிறைவேறும் வாரம். 2, 7-ம் அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்தில் நின்று தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். தடைபட்ட சொத்துக்கள் மீதான வாடகை மற்றும் குத்தகை வருமானம் கிடைக்கும்.தொழில் நிறுவ னத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள். சக ஊழியர்க ளால் அதிக நன்மை கிடைக்கும். உங்க ளை வாட்டிய கடன் பிரச்சினை மற்றும் வாழ்க்கைத் துணையின் பிரச்சினை தீரும். விரைவில் ஜென்ம ராகுவால் சந்தித்த சோதனைகள் சாதனைகளாக மாறும். நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் நிறைவடையும்.குடும்ப உறவுகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு ஆனந்தமாக இருப்பீர்கள். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.திருமண பந்தத்திற்குள் நுழையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.மேலும் வளம் பெற காக்கைக்கு எள் கலந்த சாதம் மற்றும் தண்ணீர் வைக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    18.9.2023 முதல் 24.9.2023 வரை

    அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். ராசி அதிபதி செவ்வாயும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனும் உப ஜெய ஸ்தானமான 6ம்மிடத்தில் இணைந்து பலன் தரும் அற்புத வாரம். சூரியன் 3, 6-ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெற்ற கிரக அமைப்பு மேஷ ராசிக்கு மிக யோகமான காலம் எனலாம்.நினைப்பதெல்லாம் நடைபெறும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் தேடி வரும். ரியல் எஸ்டேட், ஒப்பந்த தொழில், விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் உண்டு.தெய்வபக்தி கூடும். ஏழாமிடத்தை விட்டு கேது நகர்வதால் தொழிலில் உங்களை கவிழ்க்க நண்பர்களாக நடித்தவர்கள் ஏமாறுவார்கள்.இது வரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல நேரும்.ராசியில் நிற்கும் குரு 5,9-ம்மிடத்தை பார்ப்பது உங்களுக்கு கவசமாக செயல்படும். 20.9.2023 அன்று காலை 8.45 முதல் 22.9.2023 மதியம் 3.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் வாய் வார்த்தையே உங்களை பதம் பார்க்கும். எனவே பேச்சைக் குறைக்கவும். பழநி முருகனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    11.9.2023 முதல் 17.9.2023 வரை

    பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் நிற்பதால் உங்களின் கற்பனை, கனவுகள் நினைவாகும். தொழில், உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும். சிலர் அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு பயன்படுத்துவீர்கள்.அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. காழ்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த உடன் பிறப்பு உங்களை புரிந்து கொள்வார். பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை அதிகரிக்கும்.புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். ஆரோக்கியத்தை பேணுவது அவசியம்.திருமண முயற்சியில் ஏற்றமான பலன் உண்டு. பிரதோஷத்தன்று சந்தன அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    4.9.2023 முதல் 10.9.2023 வரை

    நல்ல மனநிலை நீடிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 6-ல் நிற்பதால் உத்தியோகஸ்தர்களின் திறமைக்கு ஏற்ற பாராட்டுகள் உண்டு. ராகு கேது பெயர்ச்சி இன்னும் 2 மாதத்தில் நடக்க இருப்பதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். 9,12-ம் அதிபதி குரு வக்ரம் பெறுவதால் பொருளாதார ரீதியாக சில சங்கடங்கள் ஏற்படும். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு. தொழில் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் திடீர் அதிர்ஷ்டம் யோகம் தேடி வரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். இளம் பருவத்தினருக்கு திருமண வாய்ப்பு கைகூடி வரும். உயர் கல்வியில் நிலவிய தடைகள் விலகும்.பெண்கள் செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். ஆன்மீக பயணம் அதிகரிக்கும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவு மனக்க வலைக்கு மருந்தாக அமையும். ஆரோக்கிய குறைபாடு அகலும். தினமும் முருகரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிபலன்

    28.8.2023 முதல் 3.9.2023 வரை

    பெரும்பான்மையான பலன்கள் சாதகமாக அமையும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 8ம் பார்வையால் ராசியில் உள்ள குருவை பார்ப்பதால் அதிர்ஷ்டம் அரவணைக்கும்.எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். அரசு வேலை, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும். குறைந்த வட்டிக்கு நீண்ட கால தவணையில் கடன் கிடைக்கும். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் என உங்கள் கையில் தாராளமாக பணம் புழங்கும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும்.வாழ்நாள் லட்சியமாக எதிர்பார்த்த பதவி தேடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும் பெண்களுக்கு ஓய்வு நேரத்தில் தையல், அழகுகலை போன்ற தொழில் தொடர்பான கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும். உங்கள் மனதை குடைந்த சில முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க தந்தையின் ஆலோசனையை நாடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரதோஷத்தன்று சிவனுக்கு பசும் பால் அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிபலன்

    21.8.2023 முதல் 27.8.2023 வரை

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலம்.ராசி அதிபதி செவ்வாய் 6-ம் இடம் செல்வதால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். 2,7-ம் அதிபதி சுக்ரன் வக்ரம் பெறுவதால் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு உண்டாகும். கடன் விஷயத்தில் நிறைய மாற்றம் ஏற்படும்.கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். சிலர் பழைய கடனை அடைத்து விட்டு புதிய கடன் வாங்குவார்கள். சிலர் பூர்வீக சொத்தின் மூலம் கடன் பெறலாம். இந்த வாரம் புதிய சொத்துக்கள், வாகனம் வாங்க அட்வான்ஸ் தொகை செலுத்துவார்கள்.நெருங்கிய உறவில் மகளுக்கு வரன் அமையும். ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. பயணங்களால் ஆதாயம் மற்றும் இடமாற்றம் உண்டாகும்.தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள். 24.8.2023 அன்று 2.54 மணி முதல் 26.8.2023 காலை 8.37 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். கருட பஞ்சமியன்று கருடரை மஞ்சள் அபிசேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    14.08.2023 முதல் 20.8.2023 வரை

    முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் பாக்கிய அதிபதி குருவின் பார்வையில் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு. இதுவரை உங்களின் மனதில் இருந்த நிறைவேறாத பெரிய ஆசைகள், திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் ஞானம் அதிகரிக்கும். தொழிலில் நிலவிவந்த மந்தநிலை மாறும்.

    அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் நம்பிக்கை அதிகரிக்கும். பணவரவில் நிலவிய தடைகள் விலகி வருமானம் இரட்டிப்பாகும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும்.புத ஆதித்ய யோகத்தால் நல்ல தலைமைப் பண்பும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். குலதெய்வ அருளால் புத்திர பிராப்த்தம் உண்டாகும். பிள்ளைகளின் சுப காரியத்தில் நிலவிய தடைகள் அகலும். புதிய காதல் உருவாகும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். குல தெய்வ அனுகிரகமும் முன்னோர்களின் நல்லாசியும் பரிபூரணமாக கிடைக்கும். ஆடி அமாவாசையன்று தயிர் சாதம் தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    07.08.2023 முதல் 13.8.2023 வரை

    ஆரவாரமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் 5-ம்மிடத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் திட்டவட்டமான, தீர்க்கமான வழி நடத்தல் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத்தரும். வக்ரம் பெற்ற தன அதிபதி சுக்ரனுடன் 5ம் அதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் தாய் வழி உறவுகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும். தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து, பணம் தேடி வரும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

    வீட்டிலும் பணிபுரியும் இடத்திலும் சாதகமான சூழல் நிலவும். தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். ஆனால் லாபம் குறையாது. கணவன்- மனைவி உறவில் அன்பு மிளிரும். அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மேலிடம் மற்றும் குடும்ப பகைமை மறையும். ஆரோக்கியம் சீராகும். கண் திருஷ்டி பாதிப்பு குறையும். ஆடி வெள்ளிக் கிழமை காமாட்சியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    31.7.2023 முதல் 6.8.2023 வரை

    தைரியம் பிறக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாயும் தைரிய ஸ்தான அதிபதி புதனும் 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் மனதில் உற்சாகம், தைரியம் பிறக்கும். உங்களை சர்வ சாதாரணமாக நினைத்தவர்கள் வியக்கும் படி தடைகளைத் தாண்டி வெற்றி நடை போடுவீர்கள். பாராமுகமாக இருந்த உறவுகள் மீண்டும் இணைந்து அன்பு பொழிவார்கள். தந்தைவழி உறவினர்களால் லாபம் கிடைக்கும். இதுவரை வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். மதிப்பும், மரியாதையும் காப்பாற்றப்படும்.

    10,11-ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படலாம். பண வரவில் ஏற்ற இறக்கம் நீடித்தாலும் தேவைகள் பூர்த்தியாகும் என்பதால் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. குழந்தைபேறு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ஆடி பெருக்கு அன்று புனித நீராடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    24.7.2023 முதல் 30.7.2023 வரை

    வாழ்க்கையில் செட்டிலாகும் வாரம். 9,12-ம் அதிபதி குரு ராசியில் சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிநாடு வேலை தொழில் முயற்சியில் சாதகமான பலன் உண்டு. எதிர்காலத்தில் மிக அதிகப்படியான சுப பலன்களை அனுபவிக்க இது திருப்பு முனையாக அமையும். நிலையான தொழில் வேலை அமையும்.தாழ்வு மனப்பான்மை குறையும்.

    2,7-ம் அதிபதி சுக்ரன் வக்ரமடைவதால் தம்பதிகள் தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். சொந்த வீடு வாங்க அல்லது கட்டக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. ராகு/கேதுவின் மையப்புள்ளியில் 5-ம் அதிபதி சூரியன் நிற்பதால் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். மறுதிருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.

    பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பீர்கள். வழக்கு, விசாரணைகள் சாதகமாகும். 27.7.2023 இரவு 7.29 முதல் 29.7.2023 இரவு 11.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற வாக்குவாதம், வாக்குறுதியை தவிர்ப்பது நல்லது.ஆடி வெள்ளிக் கிழமை சிவப்பு நிற மலர்கள் சாற்றி அம்பிகையை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    17.7.2023 முதல் 23.7.2023 வரை

    மாற்றங்கள் நிறைந்த வாரம். ராசி அதிபதி செவ்வாயும் தன ஸ்தான அதிபதி சுக்ரனும் குருப் பார்வையில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் எளிதாக வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகும். கோர்ட், கேஸ், கடன்பிரச்சினைகளில் சிக்கித் தவித்தவர்களுக்கு நல்ல விதமான முடிவு கிடைக்கும்.

    போதிய நிதியின்மையால் தடைபட்ட வீடு கட்டும் பணி தொடர தேவையான பண வசதி ஏற்படும். தொழில் வேலை போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும் எதிர்ப்புகளும், விலகும்.புத்திரப் பிராப்தம், உயர் கல்வியில் நிலவிய தடை தாமதம் விலகும்.சுபகாரியம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும்..

    சகோதரர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் நிலவியபிரச்சினைகள் தீரும். ஆடி செவ்வாய்க்கிழமை பால் அபிசேகம் செய்து அம்பிகையை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×