என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
மனக்கவலைகள் அகலும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 2,7-ம் அதிபதி சுக்ரனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் சமுதாயத்தில் ஒரு கவுரவமான நிலையை எட்டக் கூடிய யோகமும் உயர் பதவி அதிர்ஷ்டமும் உள்ளது. வாழ்க்கைத் துணை, பிள்ளைகளுக்கு ஏற்பட்ட ஆரோக்கிய கேடு சீராகும். அரசுப்பணி, வெளிநாட்டுப் பணி போன்ற விருப்பங்கள் நிறைவேறும்.
தாராள பணவரவால் கடன் பிரச்சினைகள் குறையும். எதிர்காலத் தேவைக்காக அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்ற இடப்பெயர்ச்சிகள் நடைபெறும். ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சினை முடிவுக்கு வரும்.
படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.திருமணத் தடை அகலும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆடிச் செவ்வாய்கிழமை அம்பிகையை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
3.7.2023 முதல் 9.7.2023 வரை
வளமான பலன்கள் நடைபெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானம் சென்று குருப் பார்வை பெறுவதால் சந்திர மங்கள யோகத்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. நினைத்தது நிறைவேறும். அதிர்ஷ்டம் அரவணைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும்.பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
முக்கிய குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்ற பணிகள் லாபகரமாக நடைபெறும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் நிலவிய மந்த நிலை மாறும். புதிய முதலீடுகள் குறித்து சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்திற்கு சற்று அதிக முக்கியத்துவம் தருவது நல்லது. செவ்வாய் கிழமை முருகப் பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
26.6.2023 முதல் 2.7.2023 வரை
மனக்கசப்புகள் மாறும் வாரம். சுக ஸ்தானத்தில் நீசம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் வார இறுதியில் பூர்வ புண்ணிய ஸ்தானம் சென்று லாபஅதிபதி சனியை பார்க்கிறார். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களைச் சூழ்ந்த கஷ்டங்கள் படிப்படியாக குறையத் துவங்கும் .தடைபட்ட சுப காரியங்கள் எளிதில் கைகூடும். புதிய வெளிநாட்டு வேலை, அரசு உதியோகத்திற்கு வாய்ப்புள்ளது. லாப அதிபதி சனி வக்ரமடைவதால் பணப்பரிவர்த்தனை, புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. புத்திர பிராப்த்தம் சித்திக்கும். நிலம், பூமி, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. பங்குச் சந்தை ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். நோய் தாக்கம் குறையத் துவங்கும்.30.6.2023 காலை 10.20 முதல் 2.7.2023 பகல் 1.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமான நிர்வாகப் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது.பேச்சில் நிதானம் தேவை. வெள்ளிக்கிழமை துர்க்கையை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
9.6.2023 முதல் 25.6.2023 வரை
பொறுமையோடு செயல்பட வேண்டிய வாரம்.ராசி அதிபதி செவ்வாய் தன ஸ்தான அதிபதி சுக்ரனுடன் 4-ம்மிடத்தில் சேர்க்கை பெறுவதால் நிறைந்த ஆரோக்கியம், ஆடம்பரமான, அந்தஸ்தான வாழ்க்கை, தாயின் அன்பு, அரவணைப்பு, அதிகப்படியான சொத்து சேர்க்கை, கால்நடை பாக்கியங்கள், சொத்துகள் மூலம் வாடகை, விவசாய வருமானம் ஆகிய சுப பலன்கள் நடக்கும்.
தொழில், லாப ஸ்தான அதிபதி சனி வக்ரம் பெற்றதால் முதலீட்டாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மருமகனால் மன உளைச்சல் அதிகரிக்கும்.முதல் திருமணம் தோல்வியடைந்து வேதனையில் இருப்பவர்களுக்கு மறு திருமணத்தால் வாழ்க்கை வளம் பெறும்.
தள்ளிப் போன வழக்குகள் விசாரணைக்கு வரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சுப பலனை அதிகரிக்க விநாயகரை 11 முறை வலம் வந்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
12.6.2023 முதல் 18.6.2023 வரை
சிறப்பான வாரம். 5-ம் அதிபதி சூரியன் சகாய ஸ்தானம் செல்வதால் செயல்களில் கீர்த்தி, புகழ், பெருமை வெற்றி மிளிரும். சகோதர சகாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்கள் மீதான பிரச்சினைகள் முற்றுப்புள்ளியாகிசொத்துக்கள் உங்கள் பெயருக்கு மாற்றலாகும்.
எதிர்ப்பார்த்த இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் சேர்ந்து வாழும் வாய்ப்புள்ளது. ராசி அதிபதி செவ்வாயும், தன ஸ்தான அதிபதி சுக்ரனும் 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் உண்டு. தேவையற்ற அலைச்சல், டென்ஷன் விலகி சகல விதமான மாற்றங்களும் ஏற்படும்.
அரசு உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வை சந்திக்கலாம். படிப்பை பாதியில் விட்டவர்கள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது. பிள்ளைகள் கல்வி, தொழில், உத்தியோகத்திற்காக இடம் பெயருவார்கள். தம்பதிகள் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவார்கள். கண்திருஷ்டி பாதிப்பு அகலும்.உடல் நலனில் ஏற்பட்ட பாதிப்பு குறையும். தினமும் பால முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
5.6.2023 முதல் 11.6.2023 வரை
நெருக்கடிகள் விலகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தனம் வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிந்தனைகள் பெருகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். லாப ஸ்தான சனியால் பணம் பல வழிகளில் தேடி வரும்.
அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமுதாயத்தில் கவுரவமான நிலையை அடைவீர்கள். வாக்கு வன்மையால் புகழ் பெறுவீர்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். இடமாற்றங்கள் கிடைக்கும்.
உத்தியோ கஸ்தர்களின் தகுதி திறமைக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு உள்ளது. வீடு, வாகனயோகம், குழந்தைப்பேறு, திருமணம் போன்ற பாக்கிய பலன்கள் கைகூடும்.தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். உடல் ஊன முற்ற வர்களுக்கு இயன்ற உதவிகள் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
29.5.2023 முதல் 4.6.2023 வரை
செயல்களில் வெற்றி மிளிரும் வாரம். உபஜெய ஸ்தான அதிபதி புதன் ராசியில் சஞ்சரிப்பதால் மன தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்த வர்க ளுடன் பாகப்பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது. உபரி தொழில் லாபத்தை தொழிலில் மறுமுதலீடு செய்வீர்கள். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும்.உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றத்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.
சிலருக்கு தந்தையின் அரசுப்பணி கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வாடகை வருமானம் தரும் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்கள். திருமண முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் நிலவிய எதிர்மறை விமர்சனங்கள் மாறும்.பெற்றோர்களின் அனுசரணை கிடைக்கும். வீண் செலவுகள், விரயங்கள் அதிகரிக்கும்.
3.6.2023 அன்று 12.28 மணி முதல் 5.6.2023 அன்று 3.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகும். பவுர்ண மியன்று லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
22.5.2023 முதல் 28.5.2023 வரை
அதிகப்படியான வருமானங்கள் கிடைக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையை அடைவீர்கள். ராசி அதிபதி செவ்வாய் 10ம் மிடமான தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழிலில், வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணிச் சுமை அதிகரித்தாலும் கவுரவம் கூடும்.தொழிலில் லாபம் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் சிரமமின்றி கிடைக்கும். இழுபறியான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் கிடைக்கும். பெரிய இடத்து சம்பந்தம், புத்திரப் பேறு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழநி முருகனை வழிபட முன்னேற்றம் கூடும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
15.5.2023 முதல் 21.5.2023 வரை
திட்டமிட்டு செயல்படும் வாரம். 5-ம் அதிபதி சூரியன் தன ஸ்தானம் செல்லுவதால் பிள்ளைகளால் குடும்ப வருமானம் உயரும். கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்புகள் ஒப்படைப்பார்கள்.
குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும். புதிய தொழில்களை தேர்வு செய்து படிப்படியாக உயர்ந்து வெற்றி பெறுவீர்கள். திராசி மற்றும் 8-ம் அதிபதி செவ்வாய் நீசம் பெறுவதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். செவ்வாய் 8ம் பார்வையாக சனியை பார்ப்பதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் கூடும்.
சிலருக்கு வருமானம் தரக் கூடிய புதிய சொத்துக்கள் சேரலாம். பழைய கூட்டாளிகள் விலகி புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். கோட்சார சர்ப்ப தோஷத்தால் ஏற்பட்ட திருமணத் தடை குரு பார்வையால் விலகும். சுப செலவிற்காக விண்ணப்பித்த கடன் தொகை இந்த வாரத்தில் கிடைத்து விடும்.ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அமாவாசையன்று பட்சிகளுக்கு உண விடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
8.5.2023 முதல் 14.5.2023 வரை
புத்திக்கூர்மை பளிச்சிடும் வாரம். 5-ம் அதிபதி சூரியன் ராகுவின் பிடியில் இருந்து விடுபடுவதால் குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு கரு உருவாகும். பிள்ளைகளால் பெருமையும் நன்மையும் உண்டாகும்.எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். புத்திக் கூர்மையுடன் புதிய திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள்.
அலுவலகத்தில் மகிழ்ச்சி யான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும். வீடு வாகன செலவுகள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும்.திருமணம் கூடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும்.விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள்.
பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் வேலைப்பளு பொறுப்பு கள் அதிகரிக்கும். 8.5.2023 இரவு 7.30 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய விசயங்கள் தாமதமாகும். சங்கட ஹர சதுர்த்தியன்று அருகம்புல் சாற்றி விநாயகரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
1.5.2023 முதல் 7.5.2023 வரை
முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். 2,7ம் அதிபதி சுக்ரன் 3-ம்மிடம் சென்று ராசி அதிபதி செவ்வாயுடன் சேருவதால் தைரியம், சுறுசுறுப்பு அதிகரிக்கும். தன வரவு தாராளமாகும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தி னரின் வருமானம் உயரும். இதுவரை சண்டை போட்ட உறவினர்கள் பகைமை மறப்பார்கள்.
பாகப்பிரிவினைக்கு உடன் பிறப்புகள் சம்மதிப்பார்கள். கடுமையாக முயற்சித்தும் வெற்றி பெறாத காரியங்கள் கூட தற்போது சித்தியாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள்.குல தெய்வ கடாட்சம் கிடைக்கும். பங்குச்சந்தை ஆர்வம்அதிகரிக்கும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முன்னோர்களின் நல்லாசி கிட்டும்.திருமணத் தடை அகலும். திருமணமான இளம்பெண்கள் கருத்த ரிப்பார்கள். ஆரோக்கிய தொல்லை குறையும். வழக்குகள் வெற்றியடையும்.
6.5.2023 மதியம் 3.22க்கு சந்திராஷ்டமம் துவங்குவதால் புதிய முயற்சிகளை தவிர்த்து அன்றாட பணியில் மட்டும் ஈடுபடவும். பவுர்ணமியன்று 9 செவ்வாழைப்பழம் தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
24.4.2023 முதல் 30.4.2023 வரை
மேன்மையான வாரம். ராசியில் 5-ம் அதிபதி சூரியன் உச்சம் பெற்று, 9, 12-ம் அதிபதி குருவுடன் அமர்ந்து இருப்பதால் செயல்களில் வெற்றி மிளிரும். தோற்றம் பொழிவு பெறும். ஆளுமைத்திறன், புகழ், பெருமை செயலாக்கம் அதிகரிக்கும்.வேலையில் திறமை கூடும். புரமோஷன் மற்றும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல காரியங்கள் கைகூடி வரும். இதுவரை தயங்கிக் கொண்டு இருந்த பல செயல்களில் அதிரடியாக இறங்கி செயலாற்றுவீர்கள்.சிலருக்கு திடீர் பண வரவும் ஜாக்பாட் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கும். சிலர் மாடி வீடு கட்டலாம். வழக்கு விவகாரங்கள் ஒத்திப் போகும்.
தொழிலும், வாழ்க்கையிலும் திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டு உறவினர்களின் ஆதரவு உண்டு. சிலர் வெளிநாடு செல்லலாம். ராசிக்குள் குரு வந்து விட்டதால் அரசியல்வாதிகளுக்கு ஒரு அதிர்ஷ்ட நிகழ்வு உண்டு. ஸ்ரீ ரமண மகரிஷியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






