என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
17.4.2023 முதல் 23.4.2023 வரை
குடும்ப சுமைகள், பொறுப்புகள் அதிகரிக்கும் வாரம். 5-ம் அதிபதி சூரியன் உச்சம் பெற்றாலும் 3, 6-ம் அதிபதி புதன் மற்றும் ராகுவுடன் சேர்க்கை பெற்று கிரகணம் சம்பவிப்பதால் ஆன்ம பலம் குறையும். சிலர் பூர்வீகச் சொத்தை மீட்க கடன் பெறலாம்.சிலர் கடன் பெற்று புதிய சொத்துக்கள் வாங்கலாம். தேவைக்கு பணம் கிடைக்கும். சகோதர, சகோதரி களிடம் ஒற்றுமை குறையும்.
வெளிநாட்டு வேலை முயற்சி குருப்பெயர்ச்சிக்குப் பிறகு வெற்றி பெறும். சிலருக்கு கோட்சார ராகு கேதுவால் திருமணமுயற்சி தள்ளிப்போகும். மாணவர்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க கடின முயற்சி செய்ய வேண்டும்.வேற்று இன மத நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும். சிலரின் மறுமண முயற்சி சித்திக்கும்.
அரை குறையாக நின்ற கட்டிடப்பணி கள் தொடரும். தங்கம் வாங்கும் யோகம் உள்ளது. கிரகணத்தன்று கூலித் தொழிலாளி களுக்கு தண்ணீருடன் உணவு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிப்பலன்
10.4.2023 முதல் 16.4.2023 வரை
சாதகமான வாரம். சில நாட்களில் குரு பெயர்ச்சியானவுடன் விரயத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். ராசி அதிபதி செவ்வாய் 3,6ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுவதால் வரவிற்கு எந்த குறையும் இருக்காது. குணமேன்மை, செயல்திறன் ஆகியவற்றின் மூலம் வாழ்வாதாரம் உயரும். முக்கிய ஆவணங்களை கவனமாக பாதுகாக்கவும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. கடன் பெறும் போதும், கடன் கொடுக்கும் போதும் படித்துப் பார்த்து கையெழுத்து போட வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் பாகப்பிரி வினை ஏற்பட வாய்ப்புள்ளது. இழுபறியாக இருந்த வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். நீண்ட காலமாக தீர்க்க முடியாத சில பிரச்சினைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். 11.4.2023 அன்று பகல் 12.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைப்பதை தவிர்க்கவும். அஷ்டலட்சுமி வழிபாடு சிறப்பு.
பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
3.4.2023 முதல் 9.4.2023 வரை
வேகமும் விவேகமும் நிறைந்த வாரம்.ராசி அதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானத்தில் நிற்பதால் யாருடைய தயவையும் எதிர்பாராமல் நீங்களே நேரடியாக செயல்படுவீர்கள். நினைத்ததை செயல்படுத்தி வெற்றியடைவீர்கள். புது புது சிந்தனைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் குடும்ப தேவைகளை நிறைவேற்றத் தேவையான பண வரவு உண்டாகும்.
உற்றார், உறவினர்களுடன் ஏற்பட்ட மன சங்கடங்கள் விலகும். தடை பட்ட திருமண முயற்சி துரிதமாகும். பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். 3,6-ம் அதிபதி புதனும் ராசி அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை பெறுவதால் வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் செய்ய நேரும். ராசியில் ராகுவுடன் உள்ள புதன் சனி பார்வையில் நிற்பதால் ஜாமீன் மற்றும் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
9.4.2023 காலை 8.01-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆரோக்தியத்தில் கவனம் தேவை. பங்குனி உத்திர நாளில் முருகனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
27.3.2023 முதல் 2.4.2023 வரை
இழந்ததை மீட்டுப் பெறும் வாரம்.2,7-ம் அதிபதி சுக்ரன் ராகுவுடன் இணைந்து ராசியில் பயணிப்பதால் வெளிநாட்டு வருமானம் வரும் அல்லது வேற்று இனத்தவரின் உதவிகள் கிடைக்கும். தனவரவில் தடையில்லாத, தளர்வில்லாத வளர்ச்சி உண்டாகும்.நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் இந்த வாரத்தில் கிடைத்துவிடும். வராக்கடன்கள் வசூலாகும்.
ராசி அதிபதி செவ்வாயும் சாதகமாக இருப்பதால் விரய குருவால் ஏற்பட்ட அனைத்தையும் ஈடு செய்யக் கூடிய நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். கடினமாக உழைப்பும் முயற்சியும் இருந்தால் இலக்கை, லட்சியத்தை அடைய முடியும். தாராள தன வரவால் குடும்பத்தில் சலசலப்பு நீங்கி கலகலப்பு கூடும்.திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும்.சிலருக்கு விருப்ப விவாகம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்குஞாபக சக்தி கூடும். தொழில் போட்டியாளர்களை புறமுதுகு காட்டி ஓட வைப்பீர்கள். சிலர் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பறவைகளுக்கு தானியமும், தண்ணீரும் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
20.3.2023 முதல் 26.3.2023 வரை
சகாயமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ம் இடம் செல்வதால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என விரும்பத் தகுந்த மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் சகாயங்கள் உண்டாகும். தொழிலில் லாபம் வருவதற்கு புதிய முயற்சிகளை, யுக்திகளை கடைபிடிப்பீர்கள். தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும்.
ஏப்ரலில் குரு மீனத்தை விட்டு நகரும் வரை கட்டுப்படுத்த முடியாத விரயங்கள் சற்று அதிகமாக இருக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறரு பல புதிய பெண் தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள். மாணவ மாணவிகள் கவனித்து படித்தால் நல்ல மதிப்பெண் பெற முடியும். படுத்தவுடன் நிம்மதி யான தூக்கம் வரும். செவ்வாய்கிழமை வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
13.3.2023 முதல் 19.3.2023வரை
நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறும் வாரம்.பாக்கிய அதிபதி குரு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து 4,6,8ம் இடங்களைப் பார்ப்பதால் உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மன வலிமை அதிகரிக்கும். கேள்விக்குறியாக இருந்த பல குழப்பங்கள் விலகும்.
வம்பு, வழக்கு விவகாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். செல்வாக்கு, கவுரவம் போன்றவற்றில் ஏற்பட்ட பங்கம் நீங்கும். மண், மனை வாங்குவது, வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, புதிய வாகனம் வங்குவது என சுப விரயங்கள் ஏற்படும். 2,7-ம் அதிபதி சுக்ரன் ராசியில் ராகுவுடன் சேர்க்கை பெறுவதால் தொழில் ஜீவனத்தில் எந்த குறையும் வராது.
வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். திருமண வாய்ப்புகள் தேடி வரும்.சிலருக்கு மறுமணம் நடைபெறும் அமைப்பும் உள்ளது.
13.3.2023 அன்று காலை 2.18 மணி முதல் 15.3.2023 அன்று காலை 7.33 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தப் பொருளையும் அலட்சியமாக கண்ட இடத்தில் வைக்காதீர்கள். தினமும் கந்த சஷ்டி கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
6.3.2023 முதல் 12.3.2023 வரை
புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் வாரம். தொழில் ஸ்தானாதிபதி, லாப அபதி சனி பகவான் ஆட்சி பலம் பெறுவதால் தொழிலில் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் சொல்வாக்கும், கவுரவமும் உயரக்கூடிய வகையில் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்போகிறது. எதிர்பார்த்ததை விட பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். ராசி மற்றும் அஷ்டமாதிபதி செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் நின்று அஷ்டம ஸ்தானத்தைப் பார்ப்பதால் வாக்கில் நிதானம் தேவை. குடும்ப உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
மன நிறைவான வாழ்க்கை, ஆரோக்கியமான உடல் நிலை, லாபகரமான வருமானம் ஆகியவற்றை இந்த வாரத்தில் காணப்போகிறீர்கள். திருமணம், குழந்தைப் பேறு என மனம் மகிழும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும்.மாசி மகத்தன்று செவ்வரளி மாலை அணிவித்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
27.2.2023 முதல் 5.3.2023 வரை
அமைதியான சிந்தனைகளுடன் வாழ்க்கையை நடத்தும் வாரம். 5-ம் அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. தோற்றம் பொலிவு பெறும். ஆன்ம பலம் பெருகும். உங்கள் இனத்தவர் மத்தியில் பெரிய மனிதராக இருப்பீர்கள். முயற்சிகளும், திட்டங்களும் நிறைவேறும். புத்திசாலித்தனமாக பேசுவீர்கள். புத்தி கூர்மையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பீர்கள்.
பிள்ளைகளுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். பிள்ளைப்பேற்றில் இருந்த குறைகள் அகன்று குடும்பம் தழைக்க அடுத்த வாரிசு உருவாகும். ராசிக்கு 11-ம்மிடத்தில் 3,6-ம் அதிபதி புதன் சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகம் பெறு வதால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். ஞாபக சக்தி கூடும். தொழிலுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
சிலருக்கு புதிய தொழில்கள், கிளைகள் துவங்கும் வாய்ப்புகள் உள்ளது. எதிர்பார்த்த பதவி உயர்வால் உள்ளம் மகிழும். குல தெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவு செய்யும் வாய்ப்பு உள்ளது. கணவன், ஒற்றுமை அதிகரிக்கும். சிவ வழிபாட்டால் நன்மைகள் ஏற்படும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
20.2.2023 முதல் 26.2.2023 வரை
விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். லாப அதிபதி சனி பகவான் 5ம் அதிபதி சூரியனுடன் இணைந்து ராசியைப் பார்ப்பதால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ், கவுரவம் யாவும் உயரும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும்.
பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தைகளை பெற்றெடுக்கும் யோகம் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். 2,7-ம் அதிபதி சுக்ரன் 9,12- ம் அதிபதி குருவுடன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள் ஏற்படும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் ஆர்வம் குறைத்து ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
சிலருக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷனால் ஆரோக்கிய குறைபாடு, மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சில அசவுகரி யங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். பணிபுரியும் பெண் களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். அமாவாசையன்று தயிர் சாதம் தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
13.2.2023 முதல் 19.2.2023 வரை
பண நெருக்கடிகள் அகலும் வாரம். ஐந்தாம் அதிபதி சூரியனும் லாப அதிபதி சனியும் லாப ஸ்தானத்தில் இணைவதால் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு உண்டு.தொழிலில் முன்னேற்றமும் லாபமும் பெருகும்.நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிலவிய நெருக்கடிகள் விலகும்.
கடன்கள் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் நிறைவேறும். பூர்வீகத்தில் சொத்து வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். விரய குருவால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய முடியும். வைத்தியச் செலவுகள் குறையும். பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மன உளைச்சல், மனக்குழப்பம் அகலும்.பிள்ளைபேறு உண்டாகும். புத்திரர்களின் தொழில், உத்தியோக முன்னேற்றத்தால் பூரிப்படைவீர்கள். இழுபறியாக இருந்த வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
13-ந் தேதி இரவு 8.37 முதல் 15-ந் தேதி காலை 12.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரின் பிரச்சினைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மகா சிவராத்திரி அன்று செவ்வரளி சாற்றி சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
ஆரவாரமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் விலகி அனைத்து தேவைகளும் நிறைவேறும். தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். கடினமான பணிகளைக் கூட சுலபமாகச் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். கவுரவப்பதவிகள் தேடி வரும். வேலைப் பளு குறைந்து நிம்மதியுடன் இருப்பீர்கள். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் கூடிவரும்.
குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மன நிறைவுடன் இருப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். விவாகரத்து வழக்கில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். ஏழாமிட கேதுவால் பங்குதாரர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்யவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். ஐந்தாம் அதிபதி சூரியன் ஒன்பதாம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் நிற்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் ஒருங்கே வலிமை பெறுகிறது. இதனால் குடும்பத்தில் நிம்மதி கூடும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். தலைமைப்பதவி தேடி வரும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை இனி இல்லை.சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் அதிகரிக்கும்.
உயர் கல்வியால் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். நீண்டநாளாக தீராத, தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.சிலருக்கு கடல் கடந்து வேலை செய்யும் யோகம் உண்டாகும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். சுப கடன் வாங்கி பூமி, வீடு,வாகன, வசதியை பெருக்குவீர்கள். திருமண யோகம் கை கூடி வரும். ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பீர்கள். ஏகாதசியன்று பால் பாயாசம் படைத்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






