என் மலர்tooltip icon

    மேஷம் - வார பலன்கள்

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    23.1.2023 முதல் 29.1.2023 வரை

    மாற்றங்களைப்பற்றி சிந்திக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய பிணக்குகள் நீங்கும். மறைமுக வருமானம் பெருகும். லாப அதிபதி சனியின் 3-ம் பார்வை ராசிக்கு கிடைப்பதால் கடன்கள் வசூலாகும். கடந்த கால வம்பு வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும்.சிக்கல்கள் முழுமையாக குறையும். பெரிய முதலீடுகளை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டமிடுவீர்கள். கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். நிலையான வருமானம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். புது விதமான தேடல்கள் மற்றும் அது சார்ந்த செயல்களில் ஈடுபாடுகள் அதிகமாக இருக்கும். மனைவி மூலம் செல்வாக்கு உயரும்.

    போட்டித் தேர்வுகளில் வெற்றிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. வீடு, மனை, பூமி தொடர்பான நெடுநாள் கனவுகள் நிறைவேறும். திருமண தடைகள் நீங்கி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். சுப நிகழ்ச்சிகளால் அலைச்சல் அதிகமாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகாதவர்களுக்கு பணிநிரந்தரம் உண்டாகும். பெண்களுக்கு சிறு தொழில், சுய தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    16.1.2023 முதல் 22.1.2023 வரை

    உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.சனி பகவான் பெயர்ச்சியாகி லாப ஸ்தானம் செல்கிறார். லாபஅதிபதி சனியின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் திட்டமிட்ட காரியங்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும்.தொழில், உத்தியோகத்தில் நிலவிய தொய்வுகள் அகலும்.

    பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கூட பணி நீட்டிப்பு வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு, கவுரவப் பதவிகள் தேடி வரும். திருப்தியான நல்ல வருமானம் கிடைக்கும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடும்.

    விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்பனை ஆகும்.ஒரு பெரும் பணம் சொத்து விற்பனையில் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நடைபெறும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    17.1.2023 மதியம் 1மணி முதல் 19.1.2023 மதியம் 3.17 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக் குழப்பங்கள் கூடும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    9.1.2023 முதல் 15.1.2023 வரை

    தடை தாமதங்கள் விலகும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி செவ்வாய் வக்ர நிவர்த்தி பெறுவதால் சுணங்கி கிடந்த பணிகள் விறுவிறுப்படையும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். அடமான நகைகள் மீண்டு வரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் படியான நிரந்தர வருமானத்திற்கான வழி பிறக்கும்.

    தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும். மைத்துனரால் ஏற்பட்ட மனச் சங்கடம் தீரும். வேற்று மதத்தினர், இனத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் இலக்கை அடைய முடியும்.

    பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.பாதியில் நின்ற வீடு கட்டும் பணி மீண்டும் தொடரும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். மறுமண முயற்சி பலிதமாகும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். செவ்வாய் கிழமை வீர பத்திரரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    2.1.2023 முதல் 8.1.2023 வரை

    சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். ஐந்தாம் அதிபதி சூரியன் ஒன்பதாம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் நிற்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் ஒருங்கே வலிமை பெறுகிறது. இதனால் குடும்பத்தில் நிம்மதி கூடும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். தலைமைப்பதவி தேடி வரும். 

    பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை இனி இல்லை.சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் அதிகரிக்கும்.உயர் கல்வியால் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். நீண்டநாளாக தீராத, தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

    சிலருக்கு கடல் கடந்து வேலை செய்யும் யோகம் உண்டாகும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். சுப கடன் வாங்கி பூமி, வீடு,வாகன, வசதியை பெருக்குவீர்கள். திருமண யோகம் கை கூடி வரும். ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பீர்கள். ஏகாதசியன்று பால் பாயாசம் படைத்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    19.12.2022 முதல் 25.12.2022 வரை

    முன்னோர்களின் நல்லாசிகள் நிறைந்த வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் 2,7-ம் அதிபதி சுக்ரன் மற்றும் 3,6-ம் அதிபதி புதனுடன் செவ்வாயின் 8-ம் பார்வையில் சேர்க்கை பெறுவதால் தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும்.

    பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை பலன் தரும். வெளிநாட்டு பயணம் சாதகமாகும். எடுக்கும் முயற்சியில் தடையில்லாத வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகளால் லாபம் உண்டா கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்தி ருக்கும். தம்பதிகளிடம் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். 

    21.12.2022 அன்று காலை 2.57 மணி முதல் 23.12.2022 அதிகாலை 4.02 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நெருக்கமானவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கவும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    12.12.2022 முதல் 18.12.2022 வரை

    தடைகள் தகரும் வாரம். 2,7-ம் அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானம் சென்றதால் குடும்பத்தில் நிலவிய உட்பூசல் குறைந்து அமைதிப் பூங்காவாகும். தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குறையும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

    கைவிட்டுப் போனது எல்லாம் கிடைக்கும். தன ஸ்தான அதிபதி சுக்ரன் 3,6ம் அதிபதி புதனுடன் சேர்க்கை பெறுவதால் வளர்த்த கடா மார்பில் பாயும் என்பது போல் உங்களின் சகோதரர் அல்லது உங்களின் உதவியைப் பெற்றவர்களே போட்டியாக, எதிரியாக மாறுவார்கள். எனினும் உங்கள் திறமையால் சாமர்த்தியத்தால் எதிரிகளை வெல்வீர்கள். திருமணத் தடை அகலும்.புத்திரப் பிராப்தம் கிடைக்கும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    தந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை திருப்தியான வாரம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம். மேலும் நன்மையை அதிகரிக்க குல தெய்வம், முன்னோர்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    5.12.2022 முதல் 11.12.2022 வரை

    சகாயங்கள் நிறைந்த வாரம். ராசிக்கு 9-ல் 2,7-ம் அதிபதி சுக்ரனும் 3,6-ம் அதிபதி புதனும் இணைவதால் பூர்வீகச் சொத்து தொடர்பான உயில் எழுத பேச்சுவார்த்தை நடத்த உகந்த நேரம். எல்லைத் தகராறு, நிலத்தகராறு, வாய்க்கால் தகராறு, பட்டா சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

    ஜாமின் வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.ராசி அதிபதி செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

    சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களால் அலைச்சல் மிகுதியாகும். உயர் கல்விக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்யலாம். மாற்று முறை வைத்தியத்தில் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஐயப்பனுக்கு துளசி சாற்றி வணங்க மனச் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    28.11.2022 முதல் 4.12.2022 வரை

    புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். தொழில் ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் லாப ஸ்தானத்தை நோக்கி முன்னேறி வருவதால் எதிர்காலம் பற்றிய நல்ல சிந்தனைகள் உண்டாகும்.கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

    இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனி போல் விலகும். தொழில் ரீதியான ஏற்றம், அபிவிருத்தி ஏற்பட்டு லாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறும். எதிரிகளால் உண்டாகிய தொல்லைகள் விலகும். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.வீட்டில் மங்கள ஓசையும், மழலை குரலும் ஒலிக்கப் போகிறது.

    பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாவதுடன் பூர்வீகச் சொத்துக்களும் உங்கள் கைக்கு வந்து சேரும். 12-ம் இட குருவால் மனம் அலை பாய்ந்து வீண் விரயங்கள் ஏற்படலாம். எந்த செயலையும் பல முறை யோசித்து செயல்பட விரயத்தை சுபமாக்க முடியும். சிலருக்கு சிறு சிறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம். சிவனுக்கு செந்நிற மலர்கள் சூடி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    21.11.2022 முதல் 27.11.2022 வரை

    விரயங்கள் மிகுதியாகும் வாரம். 9,12-ம் அதிபதி குரு வக்ர நிவர்த்தி பெறுவதால் சிலர் தொழில், உத்தியோகம் அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம். 5ம் அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையை ஒத்தி வைப்பது நல்லது. பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம்.

    பணம் கொடுத்து அரசு வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்க்கவும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும். சேமிப்பு கரையும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. ஜாமீன் பொறுப்பு ஏற்கக் கூடாது. சிலருக்கு திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடத்தில் பிறர் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    23.11.2022 மாலை 4.03 மணி முதல் 25.11.2022 மாலை 5.20 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. விரயமும் இழப்பும் எந்த விதத்தில் வேண்டுமானலும் இருக்கலாம் என்பதால் விழிப்புடன் செயல்பட வேண்டும். விநாயகர் வழிபாடு சிறப்பு.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    14.11.2022 முதல் 20.11.2022 வரை

    முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன் நெருக்கடிகள் சற்று குறையும். துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும்.வாக்கு வன்மையால், பண பலத்தால் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள்.

    பங்கு வர்த்தகர்களுக்கு மிகச் சாதகமான காலம். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். அரசு உத்தியோக முயற்சி கைகூடும். உத்தி யோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும் அற்புதமான நேரம்.

    விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் சட்டச் சிக்கல் ஏற்படலாம். கணவன்- மனைவி ஊடல் கூடலாக மாறும். வீடு, வாகன யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிப்பலன்

    7.11.2022 முதல் 13.11.2022 வரை

    தொழிலில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் வாரம். தன ஸ்தான அதிபதி சுக்ரன் 7ல் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் சிலர் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்களால் ஏற்பட்ட கவுரவக் குறைவு அகலும். 5ம் அதிபதி சூரியன் 7ம் அதிபதி சுக்ரனுடன் ராசிக்கு 7ல் சேர்க்கை பெறுவதால் காதல் திருமணம் சிறு தடைக்குப் பிறகு கைகூடும். ராசி அதிபதி செவ்வாய் வக்ர கதியில் தன ஸ்தானம் செல்வதால் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை இனி இல்லை என்ற நிலை இல்லை. பெற்றோருடன் ஏற்பட்ட மனத் தாங்கல் மாறும்.

    ராசியில் உள்ள ராகுவுடன் சந்திரன் சேர்ந்து கிரகணம் நிகழ உள்ளதால் மனசஞ்சலம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அன்றைய தினம் தேவையற்ற வெளியூர் பயணங்களையும் வெளி உணவுகளையும் தவிர்த்தல் நலம். மவுன விரதம் இருப்பதுடன் தாயாரிடம் ஆசி பெறுவது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிப்பலன்

    31.10.2022 முதல் 06.11.2022 வரை

    ஆன்ம பலம் பெருகும் வாரம். 5-ம் அதிபதி சூரியன் ராசியை கேதுவுடன் இணைந்து பார்ப்பதால் ஆன்ம பலம், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் தேஜஸ் கூடும். கவுரவப் பதவிகள் கிடைக்கும்.

    இளவயதினருக்கு இரண்டாவது குழந்தை கருவுருவாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். இடப்பெயர்ச்சியால் சில நன்மைகள் ஏற்படும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். சிலர் புதிய தொழிலில் கிளைகள் துவங்கலாம். தொழிலுக்கு தேவையான பணத்தை திரட்டுவதில் வெற்றி பெறுவீர்கள்.

    நோய் தொந்தரவுகள் அகலும். இழுபறியாக கிடந்த பணிகளை அறிவாற்றலால் சரி செய்வீர்கள். ஆறாம் அதிபதி புதன் ஏழாமிடம் செல்வதால் நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனமாக பழகவும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். ராசியை சுக்ரன் பார்ப்பதால் பெண்களுக்கு அழகிய நவீன பொருட்கள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட்டால் அனைத்தும் சுபமாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×