என் மலர்tooltip icon

    மேஷம் - வார பலன்கள்

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    24.10.2022 முதல் 30.10.2022 வரை

    பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும் வாரம். 5-ம் அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்ற சுக்ரனுடன் இணைவதால் நீச்சபங்க ராஜ யோகம் பெறுகிறார். இதனால் தேங்கி கிடந்த பணிகள் துரிதமாக நடைபெறும். பிள்ளைகளின் திருமணம், உயர் கல்வி, வேலை வாய்ப்பில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். பூர்வீகத்தில் புதிய வீடு கட்டிக் குடியேறும் யோகம் உண்டாகும்.

    குல தெய்வ அருள் கிடைக்கும். சிலர் பழைய தொழில் கூட்டாளிகளை விலக்கி விட்டு புதிய தொழில் கூட்டாளிகளை சேர்க்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெற்று சுய தொழில் தொடங்கலாமா என்று சிந்திக்கக் கூடிய நேரம். நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கு நிரந்தர வருமானத்திற்கான வழி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சிறிய முயற்சியில் பணியை முடித்து பாராட்டு பெறுவீர்கள். சிலரின் காதல் திருமணத்தில் முடியும்.

    27.10.2022 காலை 6.30 முதல் 29.10.2022 காலை 9.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சக பணி யாளர்களின் விவகாரங் களில் தலை யிடாமல் இருப்பது நல்லது. சூரிய கிரகணத்தன்று சிவப்பு துவரை தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    24.10.2022 முதல் 30.10.2022 வரை

    பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும் வாரம். 5-ம் அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்ற சுக்ரனுடன் இணைவதால் நீச்சபங்க ராஜ யோகம் பெறுகிறார். இதனால் தேங்கி கிடந்த பணிகள் துரிதமாக நடைபெறும். பிள்ளைகளின் திருமணம், உயர் கல்வி, வேலைவாய்ப்பில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். பூர்வீகத்தில் புதிய வீடு கட்டிக் குடியேறும் யோகம் உண்டாகும். குலதெய்வ அருள் கிடைக்கும். சிலர் பழைய தொழில் கூட்டாளிகளை விலக்கி விட்டு புதிய தொழில் கூட்டாளிகளை சேர்க்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெற்று சுய தொழில் தொடங்கலாமா என்று சிந்திக்கக் கூடிய நேரம்.

    நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கு நிரந்தர வருமானத்திற்கான வழி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சிறிய முயற்சியில் பணியை முடித்து பாராட்டு பெறுவீர்கள். சிலரின் காதல் திருமணத்தில் முடியும்.27.10.2022 காலை 6.30 முதல் 29.10.2022 காலை 9.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சக பணியாளர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சூரிய கிரகணத்தன்று சிவப்பு துவரை தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிபலன்

    17.10.2022 முதல் 23.10.2022 வரை

    வேகத்துடன், விவேகத்தையும் கடைபிடிக்க வேண்டிய வாரம். தன ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் இந்த வாரம் தீபாவளிக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். பெண்கள் இரண்டாவது குழந்தைக்கு கருவுர உகந்த நேரம். இளம் பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சுக்ரன் கேதுவுடன் இணைவதால் ஆண்களுக்கு திருமண ஏற்பாடுகள் தடைபடும்.

    ஆடு, கோழி வளர்ப்பவர்களுக்கு அமோகமான வருமானம் உண்டு. தொழில் ஸ்தான அதிபதி சனி வார இறுதியில் வக்ர நிவர்த்தி பெறுவதால் தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். ராசி அதிபதி செவ்வாய் மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்திற்குச் செல்வதால் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.

    வீடு, வேலை மாற்றம் அல்லது திடீர்ப் பயணங்கள் உருவாகும். சிலருக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல் உருவாகும். செவ்வாயின் 8ம் பார்வை சனி மீது பதிவதால் தொழில், உத்தியோகத்தில் சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நவகிரகங்களில் அங்காரகனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    10.10.2022 முதல் 16.10.2022 வரை

    மனச் சங்கடம் குறையும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். தீபாவளி முடிந்தவுடன் வேலையை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது புத்திசாலித்தனம். வீட்டில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும்.திருமணத் தடை அகலும்.

    உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க முயற்சிப்பவர்களுக்கு நல் வாய்ப்பு உண்டாகும். பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். தந்தை தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வார்.

    சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். முருகனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    3.10.2022 முதல் 9.10.2022 வரை

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆறாம் அதிபதி புதன் உச்சம் பெறுவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறையும். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும்.

    தொழிலில் அடுத்த கட்டம் செல்வீர்கள்.

    தந்தையின் ஆதரவு கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பொறுமையாக கையாளவும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நண்பர்களுக்காக கடன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். குடும்ப நிர்வாகச் செலவு மற்றும் உறவுகளின் இல்ல சுபச் செலவு என செலவுகளின் பட்டியல் கூடும்.

    பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் முன்னேற்றம் தரும். வெளிநாட்டு பயணம் திட்டமிட்டபடி கைகூடும். துர்க்கை அம்மனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    26.9.2022 முதல் 2.10.2022 வரை

    உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொரு ளாதார பற்றாக்குறை அகலும்.ஏற்றுமதி, இறக்கு மதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான வாரம்.புதிய தொழில் வாய்ப்புகள், முயற்சிகள் மன நிறைவு தரும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அப்பா யின்மென்ட் ஆர்டர் வரும். சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும்.

    நீண்ட காலமாக விற்க முடியாத சொத்துக்கள் விற்பனை ஆகும். இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். 5-ம் அதிபதி சூரியன் 3,6ம் அதிபதி புதன் மற்றும் 2,7ம் அதிபதி சுக்கிரனுடன் 6ல் சேர்க்கை பெற்று இருப்பதால் காதலர்கள் பெற்றோரின் நல்லாசியுடன் திருமணம் செய்வது உத்தமம்.

    சில தம்பதிகள் தொழில் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம்.சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தோன்றும். 29.9.2022 இரவு 11.25 முதல் 2.10.2022 அதிகாலை 3.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் மனக்கவலை, முக்கிய பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் தடை, தாமதம் போன்ற அசவுகரியங்கள் இருக்கும். விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    19.9.2022 முதல் 25.9.2022 வரை

    விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். 5-ம் அதிபதி சூரியன் 6-ம் அதிபதி புதனுடன் இணைவதால் பூர்வீகச் சொத்தால் வம்பு வழக்கு உண்டு. உயர் கல்வியில் தடை உண்டாகலாம். குழந்தைகளால் சிறு மன வேதனை ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு இருக்காது. நான்காம் இடத்தை வக்ரம் பெற்ற சனி, குரு பார்ப்பதால் வீடு, வாகனம் சொத்து, படிப்பு சார்ந்த விஷயங்களில் இழப்பு, விரயம், ஏமாற்றங்கள், தர்மசங்கடங்கள் உண்டாகலாம்.

    வாரத்தின் இறுதி நாட்களில் நிலைமை சீராகும். பெரிய பாதகம் எதுவும் நடக்காது என்பதை உறுதியாகக் கூறலாம். மனைவிக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். தாய்,தந்தையின் நல்லாசிகள் உங்களை காக்கும். காதல் திருமணம் நடக்கும். விரய அதிபதி குருவால் புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும்.

    ஆறாம் அதிபதி புதன் பலம் பெற்று இருப்பதால் கடன் வாங்குவது,ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். வர வேண்டிய தொகையில் காலதாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான சூழல் நிலவும். அமாவாசையன்று பட்சிகளுக்கு தானியம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    12.9.2022 முதல் 18.9.2022 வரை

    முழுமையான அனுகூலம் கிடைக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் ஆறு மாத காலத்திற்கு சஞ்சரிக்கப் போவதால் தங்கு தடை இல்லாத பணவரவு ஏதாவது ஒரு வழியில் இருந்து கொண்டே இருக்கும். நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்.

    செவ்வாய் குடும்ப ஸ்தானத்தை கடக்கும் வரை இயற்கை சுபாவமான முன் கோபத்தைக் குறைத்து எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.உத்தியோகஸ்தர்களுக்கு உச்சபுதனால் வேலைப் பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். விரும்பிய கடன் அல்லது உதவித் தொகை தேடி வரும்.

    கடன் தொல்லை , சகோதர விரோதம், அரசு வகைச் சிக்கல்கள் அகலும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலர் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். வாழ்க்கைத் துணை, நண்பர்களின் உதவியால் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும்.விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை அணிவித்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    5.8.2022 முதல் 11.9.2022 வரை

    யோகமான வாரம். குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் பூர்வ புண்யாதிபதி சூரியனுடன் ராசிக்கு 5-ல் நிற்பதால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். தொலை நோக்கு சிந்தனையோடு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

    வருமானம் திருப்தி தரும். வறுமை நீங்கும்.

    துரத்திய அவமானங்கள் விலகும். தொழில் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை கூட்டாளியின் உதவியால் பேசித் தீர்ப்பீர்கள். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேருவார்கள். மகன், மகளின் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கும். எதிர்காலம் குறித்த கவலைகள் அகலும்.ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகளால்செலவுகள் அல்லது கடன் வரலாம்.

    உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்ற சிந்தனை மேலோங்கும்.கடுமையாக உடலால் உழைக்க வேண்டிய தொழிலில் இருந்தவர்கள் நிம்மதியாக மூளைக்கு வேலை தரும் வேலைக்கு மாறுவார்கள்.நிலம், தோட்டம், வீடு போன்ற சொத்துக்கள் விற்பனையில் பெரிய லாபத்தை அடைவீர்கள்.

    பெற்றோர்கள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். கணவன்-மனைவி உறவில் அன்பு மிளிரும்.கற்பக விநாயகரை வழிபட்டால் முன்னேற்றங்கள் விருட்சமாக வளரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    29.8.2022 முதல் 4.9.2022 வரை

    பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரம் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் நிறைவு பெறும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணம் வரும். பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக மன நிறைவுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்களால் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் குறையாது.

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்று அதிகரிக்கும். 3, 6-ம் அதிபதி புதன் உச்சம் பெற்றதால் கடன் பெறுவதையும், கொடுப்பதையும் தவிர்க்கவும். இளம் மங்கையர்கள் மணாளனைக் காணும் நாள் நெருங்கிவிட்டது. 2.9.2022 மாலை 5.55 முதல் 4.9.2022 இரவு 9.42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் கட்டுப்படுத்த முடியாத ஈகோ மற்றும் கோப உணர்வினால் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பகையை வளர்ப்பார்கள். எனவே பேச்சில் நிதானம் தேவை. திருமணத் தடை இருப்பவர்கள் ஸ்ரீ காளஹஸ்திக்கு சென்று வரவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    22.8.2022 முதல் 28.8.2022 வரை

    குடும்ப ஸ்தானம் வலுப்பெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் லாபம் அதிகரிக்கக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் தாமே உருவாகும். உணவு சார்ந்த தொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு கடல் கடந்து வாணிபம் செய்ய நல்ல யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தி கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    வரவிற்கு ஏற்ற செலவும் இருந்து கொண்டே இருக்கும். வாரிசுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் சரியாகும். இளம் வயதினருக்கு குடும்ப உறவுகளின் ஆசிர்வாதத்தால் திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். பூர்வ புண்ணியாதிபதி சூரியனால் ஆண் வாரிசு பிறக்கும். ஆன்ம பலம் பெருகும்.

    உயர் கல்வியில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். அலுவலகத்தில் நிலவிய சிக்கல்கள் தீரும். ஜென்ம ராகுவால் தேவையற்ற சிந்தனையும் பயமும் தோன்றி மறையும். சகோதர சகோதரிகள் மனக்கசப்பை மறைத்து வெளியில் பாசத்தை வெளிப்படுத்துவார்கள். வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானை நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    15.8.2022 முதல் 21.8.2022 வரை

    புதிய முயற்சிகளால் வருமானம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்திலும், தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் முயற்சி ஸ்தான அதிபதி புதனுடன்பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் என கிரக நிலைகள் மேஷத்திற்கு மிகச் சாதகமாக உள்ளது.

    இதனால் உங்கள் புதிய முயற்சிகள் அனைத்தும் செயலாக்கம் பெறும். மன பாரம் குறைந்து நிம்மதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞான தன்மைஅதிகரிக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருகும்.சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

    உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×